தீவிர பிரச்னையில் இருக்கும் இந்திய விவசாயம்

This entry is part [part not set] of 30 in the series 20021230_Issue

சூரஜ் பான் தாஹியா


இந்தியாவின் முதல் தலைமுறை பொருளாதார சீர்திருத்தங்கள் தொழில்துறை, தொழிற்சாலைகளை மட்டுமே கவனித்தன. தேவைப்பட்ட விவசாயத்துறை சீர்திருத்தங்கள் கவனிக்கப்படாமல் போயின. இதனால், விவசாயம் 90களில் முழுவதும் சுமார் 3.3 சதவீதமே வளர்ச்சியடைந்ததெள. ஆனால், தொழில்துறையின் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருந்தது.

உலகமயமாதலின் விளைவை தள்ளிவைத்துவிட்டுப் பார்த்தாலும், 100 கோடி மக்களுக்குமேல் இருக்கும் இந்தியர்களுக்கு உணவளிக்க 230 மில்லியன் டன்கள் உணவு உற்பத்தி செய்யவேண்டும் என்ற அடிப்படையை வைத்து நோக்கும்போது, அதற்கு ஈடு கொடுக்க விவசாயத்துறைக்கு சக்தி இருக்கிறதா என சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. உணவு தான்யங்களின் உற்பத்தித் திறன் குறைவு என்பது வருங்காலத்தில் வெறும் வயிறுக்களைத்தான் அதிகரிக்கும். ஆகவே இந்த நிலை பிரச்னையானதுதான். உணவுதான்ய வளர்ச்சி விகிதம், மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்துக்குக் குறைவாகவே இருக்கிறது.

‘இந்த நிலையில் இந்திய விவசாயம் உற்பத்தித் திறனுள்ளதாக ஆகவில்லையென்றால், வெளிநாட்டு விவசாயத்தால் கபளீகரம் செய்யப்பட்டுவிடும். ‘ என்று எச்சரிக்கிறார் எம் எஸ் சுவாமிநாதன். இவர் இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை. ‘இந்திய நாட்டிற்கு விவசாயமே பதுகாப்பு. அரசுக் கொள்கைகளும், தொழில் நுட்பமும் ஒன்றுடன் ஒன்று இயைந்து செயல்பட வேண்டும். துரதிர்ஷ்டவசமாக இப்படி நடக்கவில்லை. ‘ என்று அவர் வருத்தம் தெரிவிக்கிறார். இன்று இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை விவசாயமே. இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 26 சதவீதம் விவசாயம் அளிக்கிறது. தொழிற்துறை 22 சதவீதமே அளிக்கிறது. இருந்தும் விவசாயத்தில் முதலீடு ஒவ்வோர் ஆண்டும் குறைந்துகொண்டே போகிறது.

இந்தியாவின் விவசாயத் துறை 51 வித்தியாசமான பயிர்களை உற்பத்தி செய்கிறது. விவசாயத்தை அடிப்படையாய்க் கொண்டுள்ள தொழில்களுக்கு கச்சாப் பொருளை அளிக்கிறது. ஏற்றுமதி வருமானத்தில் ஆறில் ஒரு பங்கு விவசாயத்தால் கிடைக்கிறது. இந்தியாவின் தயார்நிலை உணவுப் பொருட்களின் சந்தை விரிவு பெற்று வரும் இந்த நேரத்தில், வெளிநாட்டுஇ உணவுப் பண்டங்கள் குவிகின்றன. உலக வர்த்தக நிறுவனம் நம் அடிப்படை தொழிலைத் தாக்கத் ஹொடங்கிவிட்டது.

இது நாள் வரையில் பொருளாதார நிபுணர்கள் உலக மயமாதலின் விளைவு தொழில் துறையில் என்ன என்று தான் ஆராய்ந்து வந்திருக்கிறார்கள். இப்போது விவசாயம் அவர்கள் முக்கிய அக்கறையாய் ஆகி வருகிறது. தாராளமயமாக்கலால், இந்திய விவசாயத்திற்கு பலன் பூஜ்யம் தான். சந்தையை மையப் படுத்திய விவசாய விற்பனை தோல்வியடைந்து விட்டது. ஏற்றுமதியில் போட்டியும் ஏதும் ஏற்பட இது உதவவில்லை.விவசாயம் பற்றிய ஒப்பந்தத்தில் சந்தையை திறந்து விடுதல், ஏற்றுமதி மானியத்தைச் சுருக்குதல் ஆகியவை ஏற்றுக் கொள்ளப்பட்டன. உருகுவே பேச்சு வார்த்தைக்குப் பிறகு, இந்தியா விவசாய மானியங்களை 30 சதவீதம் வெட்டி விட்டது. 714 பண்டங்களின் மீது வர்த்தகத் தடை விதிக்கப் பட்டது . இதில் பாதிக்கப்பட்டவற்றில் 482 பண்டங்கள் விவசாயப் பண்டங்கள்.

வளர்ச்சி பெற்ற நாடுகள் மானியக் குறைப்பை, தம்முடைய விவசாயிகளுக்கு மானிய அதிகரிப்பு ஏற்படும் வகையில் தில்லுமுல்லு செய்துள்ளனர். 1996-லிருந்து அமெரிக்க விவசாயிகளில் 90,000 பேருக்கு 700 மடங்கு மானியம் அதிகரித்துள்ளது. உருகுவே பேச்சு வார்த்தைக்கு முன்னமே, வளர்ந்த நாடுகள் மானியத்தை அதிகரித்து விட்டன – 88 பில்லியனிலிருந்து 177 பில்லியன் ஆகியது. விவசாய உற்பத்திச் செலவில் 56 சதவீதம் மானியமாக ஐரோப்பிய நாடுகள் வழங்குகின்றன. அமெரிக்காவில் இது 28.7 சதவீதம். ஆனால் இந்த மானியங்களை உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகள் பாதிப்பதில்லை. ஆனால் இந்தியாவிலோ இப்படிப்பட்ட ஏற்றுமதி மானியங்கள் வழங்குவதில்லை. அதனால் உலக நாடுகளுடன் நம்மால் போட்டியிட முடியவில்லை.

இந்தியாவின் உணவுப் பதப்படுத்தும் தொழில் உலகின் மிகப் பெரிய தொழில்களுடன் ஒப்பிடத்தக்கது- 70 பில்லியன் டாலர் மதிப்பு என்று கணக்கிடப் பட்டுள்ளது. ஆனால் இந்தியா 15 பில்லியன் டாலர் மதிப்புள்ள உணவுப் பண்டங்களை வீண்செய்கிறது.

உணவைப் பதப் படுத்துதல் உணவு வீணாகாமல் தடுக்கும் ஒரு முக்கிய வழி. இதற்கு ஆனால் முதலீடு தேவை. இந்தத் தொழிலை விரிவாக்க 1.4 லட்சம் கோடி ரூபாய் தேவை. வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நம் பதப்படுத்தும் தொழிலைக் கொண்டு வர இந்த முதலீடு செய்ய நாம் தயங்குகிறோம்.

விவசாயிகள் முக்கியமாக உற்பத்தியாளர்கள் மட்டுமே என்பதால், பதப்படுத்துவதின் லாபம் தொழிலதிபர்களையே சேர்கிறது.

உதாரணமாக இந்திய விவசாயி கோதுமையை குவிண்டாலுக்கு 450ரூ-600ரூபாய்க்கு விற்க வேண்டிய கட்டாயம். ஆனால் பிரிட்டானியா பிஸ்கட் தொழிற்சாலை தயார் செய்யும் பிஸ்கட்டின் இவிலை குவிண்டாலுக்கு 11000ரூ-15000 ரூ வரையில் போகிறது.

விவசாயச் சந்தையில் இது ஒரு பெரிய முரண். விவசாயப் பொருள்களின் சந்தையில் வெளிநாட்டின் பன்னாட்டு நிறுவனங்கள் ஆக்கிரமிக்காமல் தடுக்க வேண்டும். 2005 வரையில் நாம், உலக வர்த்தக அமைப்பின் கட்டுக்குள் வராமல், விவசாயத்தை வலுப்படுத்த நேரம் உள்ளது.

http://www.tribuneindia.com/2001/20011022/agro.htm

Series Navigation

சூரஜ் பான் தாஹியா

சூரஜ் பான் தாஹியா