மாறித்தான் போயிருக்கு.

This entry is part [part not set] of 43 in the series 20110117_Issue

ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸன்


ஏர் பஸ் ஸ்லோவா தாமம் ஏர்போர்ட் வந்து நின்றது.

எஸ் க்யூஸ் மீ சார். வி ஆர் ஜஸ்ட் லெண்டடு இன் தாமம் ஏர்போர்ட் என தோளில் தட்டி பள்ளி யொழுப்பிள்ளாள்,

நல்ல ஒரு சோம்பல் முறித்து , எழுந்தேன்.

கூடவே ஒரு டிஷ்யூ டவல் , ஒரு நல்ல காபியும் கொடுத்து
என்னை ஏர் ஹோர்டர்ஸ் வழியனுப்பினாள்.

அப்படி என்னத்தான் கோட்டை பிடிக்கப்போகிறோர்களோ, அப்படி ஒரு அவசரம்.
ஏர் ஹோர்டர்ஸ் பிசினஸ் கிளஸ் பயணிகள் போகும் வரை பின் வழியில் அடைத்து க் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தாள் ..

நான் மெதுவா எழுந்துக் கொண்டு வெளியே வந்தேன்.

பின்னால் வெள்ளம் போல மக்கள் வேகமாக இம்மிக்ரேஷன் கெளண்டருக்கு , போகிறார்கள்..

10 கேட் இருந்தது. இரண்டு சவுதி ஆபிசர் தான் , இருந்தார்கள் ,
ஏதோ கரமுரவென்று பேச்சு , எனக்கு எதிலுமே நாட்டம் இல்லை.

பதின்ஞ்சு வருஷம் கழிச்சு அவனை பார்க்க போகிறேன்.
ரொம்பத்தான் மாறி இருப்பனோ ??

இம்மிக்ரேஷ்னில் அந்த பேப்பரும் , பாஸ் போட்டை கொடுத்தேன்…

நேம் நேம் என கேட்டான்….
பாலசுப்ரமணியம் நடராஜன் ணு… பதில் சொன்னேன்.

சாரிக்கா? ஷர்ரிக்கா? என்று கேட்டான்..
எனக்கு ஒன்னும் புரியல்லை..முழிச்சேன்.

பின் ஜாப் ஜாப் என கேட்டான்…
ஐடி ஐடி என்றேன்.

டக் டக் என் பாஸ்போர்ட் மேலே குத்தி ,
என்னைஅனுப்பினார்கள் .

எனக்கு ஒன்னும் லக்கேஜ் இல்லை .
லாப்டாப் பேக், மற்றும் தள்ளு வண்டி சூட்கேஸ் தான். ,

கஸ்டம்ஸ் ஸ்கேன்ரில்… போட்டேன்,

கம்யூட்டரில் என் சூட்கேஸ்சின் அந்தரங்கம் எல்லாம் தெரிந்தது ,
என் போர்ட்டப்பிள் ஹார்ட்டிஸ்க் காட்டி

What what ன்னு க் கேட்டான்..
நான் டாக்குமெண்ட்ஸ்ன்னு சொல்லி,
என் சூட்கேஸ்ஸை திறக்க முற்பட்டேன்.

தால் தால் என்று கூறி, கொயிஸ், கொயிஸ் என்று சொல்லி

என் போட்டிங் பாஸில் ஸ்டாம்ப் அடித்து அனுப்பி விட்டான்.

எனக்கு ஒன்றிலும் அதிகம் கவனம் இல்லை.

ஏதோ ஒரு தனி உலகத்துக்கு வந்தமாறி மெதுவாக வெளி வந்தேன்.

அந்த கம்பி தடுப்புக்கு வெளியே அவன்…

முடி கொட்டி போய்,
அரை கெரவுண்டு வித்துட்டான் போல இருக்கு,
நல்ல தொந்தி,

டேய் ஐயரே , அதே குரல் , , என கூப்பிட்டான்…
என்னட்டா இளங்கோ, எப்படி இருக்கே ?

எங்கள் இருவருக்கும் வேகமாக காலம் பின்னோக்கி ப் போய்க்
கொண்டு இருக்கிறது.

அண்ணாமலையில் சிதம்பரம் ரயில்வே ஸ்டேசன் விட்டு இறங்கி காலேஜ் போகிறேன்….

பின்னாடி நாலு குரல்.. கூப்பிட…

ஹேய்… நில்லுடா?

சார், First இயர்…

பெயர் சொல்லுட்டா நாய்யய ….

பாலசுப்ரமணியம் நடராஜன்…

பின்னாடி ஒரு சத்தம்… ஐய்ரா…

ஆமாம் மாம்… தலையாட்டினேன்..

பட்டையா,,, நாமம்மா ? சொல்லுட்டா..

வேறு ஒரு சத்தம் … பட்டை தான் பார்த்தாலே தெரியுல்ல..

ஹோய்… உனக்கு என்ன தனியா கேப்பங்களா? சொல்லுட்டா ஒ…

இளங்கோணு சொன்னான்..

ஒங்க அப்பன் பேர் அப்பன் வந்து சொல்லுவான் ?.. வேறு ஒரு குரல்..

இளங்கோ பெருஞ்சித்தரானார்.

என்னது, சித்ரகுப்தனா ??? ஒரு கேலி தொனி எதிரொலித்து.…

எங்கப்பா தி.க

அது தான் பேரை மாத்தி வெச்சிகின்னாரு..

அப்படியா , சரி சரி போ…

ஒரு குரல் என்னை பாத்து…

ஐயரே, சாயந்தரம் நம்ம கச்சேரி வைச்சிக்கலாம் , இப்போ உள்ளே போ…

எனக்கு ஒரே உடம்புல திகில் எடுத்தது..

இவனே பார்த்து நான் உன்ன இளங்கோ நான் கூப்பிட்டலாமா?

அதுக்கு அவன் , ஐயரே என் பெயர் இளங்கோ தான்…

இப்படித்தான் எங்கள் அறிமுகம்..

எப்படியொ ஒரு வருஷம் போச்சு , அதுக்கு அப்புறமா ,

இந்த இளங்கோ ராஜ்ஜியம் தான். ..மஜாதான்..

எனக்கு என்னோவோ , எப்போதும் நாளைய நோக்கி பயம் தான்…
ஏதோ ,அப்படி , இப்படி சுற்றுவோம். மலையாள படம் நைட்ஷோ போவோம்.
பிறகு நான் வந்து ராத்திரியில்லாம் ஹாஸ்டல் படிப்பு…
இவன் எப்பொழுது, ஜாலி ,ராகிங், போராட்டம், ஸ்டிரைக்,எலெக்ஷன் என..
ஒரே எண்ட் ர்டென்மெண்ட் தான்.

படித்து முடித்ததும் எனக்கு ரயில்வே வேலை கிடைத்தது ,
இவன் திருச்சி பிஹசிஎல்க்கு போனான்.
அதோட சரி ..

காண்டக்ட்க்ஸே இல்லை..

எனக்கு ரயில்வே பிடிக்காம.. CAT எழுதி IIM ,போய் , வொல்டாஸ் சேர்ந்து , பட்ட்னி கம்பொனிக்கு போய் , நியுஜெர்சி போய்,கல்யாணம் பண்ணி , கிரின்கார்டு வாங்கி , திரும்பி பெங்களுர், நியுஜெர்சி, துபாயி,சிங்கப்பூர் ஒரே டிராவல்தான்…

மை ஸ்பேஸ், ஃவேஸ்புக்குங் எகத்துக்கு ஒரு அமர்க்களம் பட்டுது,
எல்லாம் காலேஷ் பசங்களும் ஒரேடியா சொரிந்துண்டிருந்தார்கள்.

அப்போது கூட இளங்கோ மாட்ட இல்லை.

அப்புறமா ஜுனியர் எவனோ, ஏர்போர்ட் பார்த்து , இவன் மெயில் ஹைடி வாங்கி வச்சிருந்த்து , அவன் சொல்லி , இவனை கண்டுபிடித்தேன்.

என்னட்டா ஒரே சிந்தனையில் இருக்கேணு. கேட்டான்..
என்னட்டா.. மச்சி ….வாடா ஒரு காபி சாப்பாட்டலாமா? …
காபி சொல்லிடு,,,
ஒரு தம் போட்டேன்… …

எங்கடடா மீட்டிங் கேட்டான்..
ஜிபைல் சபிக் ஹெட் ஆபிஸில…

எனக்கு இடம் தெரியும், நாளைக்கு நானே உன்னை அங்கு கொண்டு போய்விடறேன்.. கம்பெனிகார் வேண்டாம் சொல்லிவிடு என்றான்.

இம்தியாஸ்க்கு போன் பண்ணி சொன்னேன்.
ஏர் போர்ட்க்கு வரவேண்டாம்
டுமாரோ மார்னிங் வில் மிட் அட் சாபிக் ஹெட் ஆபிஸ் ஷராப்.. சொன்னேன்.

சரி சரி கிளம்பு , நாமெ போகானும்,…
Honda Accord பொறுமையா ஒட்டிக்கு வந்தான்.
ஏதோ பேசி பேசி டயார்டா ஆய்யிட்டோம்.

பெட்ரோல் போட நிறுத்தினான்.. உள்ளே போய் எதோ வாங்க போனாம்..
நான் ஒரு ரொத்மான்ஸ் எடுத்துக் கொண்டேன்.

சிகரெட் என்றேன்..

இல்லேட … என்றான்..

வேகமா ரெண்டு பஃவ் இழுத்தேன்.

இளங்கோ காரை கிளப்பினான்..

சிக்ரெட் கிழே போட்டு மிதித்து வண்டியில் ஏறினேன். .

டேய் , ரேடியோ எதாவது போடு என்றேன்.. ..

இங்க ரேடியோல்லாம் போர்… காசெட் போட்றேன்னு. , செருகினான்…

“புல்லாங்குழல் கொடுத்த முங்கில்கலெ எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்.

வண்டாடடும் மலர் சோலைகளே எங்கள்
மதுசூதனன் புகழ் பாடுங்களேன்”

என டி.எம்.ஸ் பாட ஆரம்பித்தார்…

இந்த பாலைவன மண்ணு இவனை ரொம்பத்தான் மாத்தியிருக்குபோல இருக்கு…
எல்லோரும் ரொம்பத்தான் மாறி போய் இருக்கிரோம்…
என புரிந்துக்கொண்டேன்.

நன்றி

ரவிசந்திரன்.

Series Navigation

ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸன்

ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸன்