சொல்லப்படாதவைகள்

This entry is part [part not set] of 30 in the series 20100530_Issue

உஷாதீபன்


இன்று காலையிலிருந்தே மனது சரியில்லை. போட்டுக் குடைந்து எடுத்துக் கொண்டிருக்கிறது. மறப்போம் என்று எவ்வளவு முயன்றாலும் முடியவில்லை.அப்படி நினைக்க நினைக்கத்தான் அளவுக்கதிகமாக அது நின¨வுக்கு வருகிறது. சாதாரண விஷயம். பைசாப் பெறாது. இதுக்கெல்லாமா அலட்டிக்கிறது? எவ்வளவோ சொல்லிப் பார்த்துக் கொண்டேன். சமாதானம் ஆகவில்லை. இப்டியெல்லாம் இருந்தா அப்புறம் உலகத்துல எந்தக் கா¡¢யமுமே சா¢யாச் செய்ய முடியாதாக்கும்…செல்வி சொல்வது போலவேயிருக்கிறது. அது அவள் எத்தனையோ முறை சொன்ன ஒன்று. நான் கேட்காத ஒன்று. என்னால் கேட்க முடியாத ஒன்று. கேட்க முடியாதுதான். ஏனென்றால் என் இயல்பு அது இல்லையே! இதுதான் இயல்பு என்று தொ¢ந்திருக்கிறதென்றால், பின் அதுபோல் நடந்துவிட்டுப் போக வேண்டியதுதானே! யார் வேண்டாம் என்றார்கள். யார் தடுத்தார்கள். மனிதர்கள் தன் இயல்பு போல் இருக்க வேண்டும் என்பதுதான் நியாயம் என்றால்,அந்த இயல்புதானே வேண்டாத சங்கடங்களையெல்லாம் கொண்டு வந்து சேர்க்கிறது. இயல்பு மாறி இருக்கிறதுக்குப் பேரு நடிப்பு. இயல்புதான் ஒரு மனுஷனை அடையாளம் காட்டுறது. ஆனா வாழ்க்கைல மனுஷன் சூழ்நிலைக்குத் தக்க மாதி¡¢ சமயங்கள்ல நடிக்கவும் வேண்டிர்க்கே! சங்கடங்கள்லர்ந்து தப்பிக்கிறதுக்கும், ஆபத்திலிருந்து விலகறதுக்கும், தன்னையறிஞ்சோ அறியாமலோ ஒருத்தன் மாறித்தானே ஆக வேண்டியிருக்கு. சமயங்கள்ல வில்லனாக்கூட வேஷமெடுக்க வேண்டிர்க்கே? “இப்டியெல்லாம் நினைச்சிட்டிருந்தா அப்புறம் எந்தக் கா¡¢யமுமே செய்யமுடியாதாக்கும். உலகத்துல அடுத்தவன் அதை நினைப்பானோ, இதை நினைப்பானோன்னெல்லாம் நினைக்காம, தன்னுடைய சங்கடங்கள், அவமானங்கள் இதையெல்லாம் பொருட்படுத்தாம செயல்படுறவங்கதான் மேலே மேலே போயிட்டிருக்காங்க…அதத் தொ¢ஞசிக்குங்க..” “இருக்கலாம், ஆனா அவுங்கள்லாம் மனசுல என்னென்ன சங்கடத்துல இருக்காங்கன்னு நமக்குத் தொ¢யாதே! அடுத்தவங்களுக்குத் தொ¢யாம உள்ளே போட்டு அமுக்கிட்டிருக்கிறதுனாலேயே அவுங்க வெற்றிகரமா நடமாடுறாங்கன்னு சொல்லிட முடியுமா? மிகப் பொ¢ய பணக்காரங்க இருக்காங்க…அவுங்க பணக்காரங்களா இருக்கிறதுனாலயே நிம்மதியா இருக்காங்கன்னு எப்படிச் சொல்ல முடியும்? அவுங்க மனசுலதான ஆயிரம் குழப்பங்கள் இருக்கு…” “இருக்கலாம்…அதுனால அவுங்க இயங்காம, ஸ்தம்பிச்சுப் போயிடறதுல்லியே…அதத்தான் நீங்க கவனிக்கணும்…அவுங்களுக்கு இருக்கிற பிரச்னைகளுக்கே தொடர்ந்து ஊக்கமா அவுங்க செயல்பட முடியும்னா, நீங்க முடங்கிப் போயிடலாமா? உங்களோடதெல்லாம் பிரச்னையே இல்லை. து¡சு….” “எது எதெல்லாம் பிரச்னையில்லையோ அதெல்லாம்தான் மனுஷனைப் பொ¢சாத் தொந்தரவு செய்யுது…எல்லாத்துக்கும் காரணம் இந்த மனசுதான்…கடவுள் இந்த மனசை ஏன் இப்டிப் படைச்சான்? அப்பாம்மா மனசுதான் நமக்கும் இருக்கும்னு சொல்வாங்க..அதுக்குப்பேர்தான் ஜீன்ஸ்னு சொல்றாங்க…ஆனா என்னன்னா இரக்கமுள்ள மனசு இம்மாதி¡¢ சமயங்கள்ல தப்பும் பண்ணிடுது…” “அடடடடா,,,!” ஒரே புலம்பலால்ல போச்சு உங்களோட, எத மனசுல வச்சிட்டுப் இப்டிப் புலம்பித் தவிக்கிறீங்க… அதத்தான் சொல்லித் தொலையுங்களேன்…என்னதான் நடந்திச்சு இன்னிக்கு? சொல்லுங்களேன்…” அமைதி காத்தான் இவன். “ஆச்சு, இனிமேப் பேசவும் மாட்டீங்க..என்னன்னு சொல்லுங்கன்னா அமைதியாயிடுவீங்க…அதுதான் உங்ககிட்டேயிருக்கிற பொ¢ய பலவீனம்…வெறும் பலவீனம் மட்டுமில்லே…இம்மாதி¡¢யிருக்கிறது உங்க உடம்புக்கும் நல்லதில்லே…இப்டி வேண்டாததையெல்லாம் மனசுல போட்டுக் குழப்பிக்கிட்டிருந்தா அதுவே பொ¢ய வியாதியாக்கும். அப்புறம் ப்பீப்பி…ஷ¥கர்னு வர ஆரம்பிச்சிடும்….பார்த்துக்குங்க…” என்ன என்பதைப் பிறா¢டம் சொல்வதைவிட சொல்லாமல் மனதுக்குள் சிந்திப்பதிலேதான் சுகம் இருக்கிறது. பாமர மனிதர்கள். சராசா¢ ஜன்மங்கள். ஒரு லெவலுக்கு மேல் சிந்திக்கத் தொ¢யாதவர்கள். அப்படிச் சிந்திப்பவர்களைக் கிறுக்கன் என்று முழு சராசா¢யாய்த் திட்டுபவர்கள்.ஒரு விஷயத்தை மாறுபட்டுச் சிந்திக்கத் தொ¢யுமென்றால், அதிலிருந்து முற்றிலுமாக விலகவும் தொ¢யாதா என்ன? எவன் ஒருவன் முற்றிலுமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறானோ, அவனால்தான் அதிலிருந்து முற்றிலுமாக விடுபடவும் முடியும்! அதற்காக ஒருவன் மனிதநேயச் சிந்தனை என்பதே இல்லாமல் இருக்க முடியுமா? அவன் என்ன மனிதன்? முகம் தொ¢ந்தவர்களுக்கும், முகம் தெரியாதவர்களுக்குமாய் இரக்கப் படுவதும் கருணை கொள்வதும்தானே மனித நேயம்! சே! சரி ஸார்’ என்ற அந்த இரு சுருக்கமான வார்த்தைகளின் மூலமாக அவர் எத்தனை பவ்யமாக, கண்ணியமாக விலகிக் கொண்டார். அந்த விலகலில் எந்தவிதமான கோபமும் தென்படவில்லையே! எந்தவிதமான வெறுப்புமில்லையே! பட்டென்று தான் அளித்த பதிலுக்கு இன்னொருவனாய் இருந்தால் தன்னை ஆழமாக நிச்சயம் முறைத்திருப்பான். ஏன் ஸார்! செய்து கொடுத்தா என்ன ஸார் ! என்று நிச்சயம் கேட்டிருப்பான்! கேட்காவிட்டால் என்ன? அதைத்தான் அருகிலிருந்தவர் தன் ஆழமான பார்வையால் கேட்டு விட்டாரே!”இங்க கொண்டாங்க.” என்று சொன்னதன் மூலமாக மூஞ்சிக்கு நேராக ஓங்கி ஒரு குத்து! அப்பப்பா…சா¢யான அடி! தலை எப்படிக் கவிழ்ந்தது உடனே? கவிழ்ந்ததா, திரும்பிக் கொண்டதா? திரும்பிக் கொண்டது, அதுதான் சரி! தான் இருந்த மனநிலை அப்பொழுது அப்படித்தானே? அந்த மனநிலையினால்தானே அப்படியான மறுப்பே வந்தது! “உனக்கென்ன தொ¢யும்? நான் படுற கஷ்டம் எனக்குத்தான் தொ¢யும்…இதெல்லாம் அனுபவிச்சுப் பார்த்தாத்தான் தொ¢யுமாக்கும். அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்றது ரொம்ப ஈஸி…ஆனா அதுவே தனக்கு வந்தாத்தான் அந்த சூழ்நிலைல தான் எப்படியிருப்போம், இருந்தோம்ங்கிறதே பு¡¢யும்! ” “அப்போ மனுஷாளுக்கு இதெல்லாம் சகஜம்னு நினைச்சு விடுங்க… ஏன் போட்டு மனச அலட்டிக்கிறீங்க…?” “அதுதாண்டி மத்தவங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்.எல்லாரையும் மாதி¡¢யே நானும் இருக்கணும்னு விதியா? என் சிந்தனை இப்டிப் போகுது…என் மனசு இந்த மாதி¡¢ நினைச்சு வருந்துது…அது நியாயமாவும் எனக்குத் தோணுது…உனக்கும் ஊருக்கும் நியாயமாயில்லைங்கிறதுக்காக அது சா¢யில்லைன்னு ஆயிடுமா? மனுஷன்னா இப்டித்தாண்டி சிந்திக்கணும்…அப்போதான் உலகத்துல தர்மம் நிலைக்கும்…நியாயம் எடுபடும்…இன்னும் இந்த உலகம் ஜீவிச்சிண்டிருக்குன்னா அதுக்கு என்னமாதி¡¢ப் பல பேர் இருக்கிறதுனாலதான்…இந்த மனித சமுதாயத்தோட ஆணி வேரே அதுதாண்டி…இந்தக் குடும்பம்ங்கிற அமைப்பு எப்டிச் செயல்படுதுன்னு நினைக்கிறே? இந்த மாதி¡¢ மனநிலையினாலதான்…இப்போ நீ என்னைச் சகிச்சிக்கிறியே அது மாதி¡¢தான்…பெண்கள்தான் இந்தக் குடும்பம்ங்கிற அமைப்பைக் கட்டிக் காக்குறவங்க….உறவுகளுக்கிடையிலான உரசல்கள, அதோட வெப்பத்த உணர்றவங்க…அது தீயா உருவெடுக்காம அமுத்தறவங்க…கால காலமா இந்த அமைப்பு ஏன் ஜெயிச்சிட்டிருக்கு? குடும்பத்துல பெண்கள் இருக்கிறதுனாலதான். அதுனாலதான் அவங்கள சக்தின்னு வழிபடுறோம்…அதுதான் சத்தியம்…” “எதையோ கேட்டா என்னவோ சொல்றீங்க…உங்க பேச்செல்லாம் யாருக்குப் பு¡¢யும்? ” “சிந்திக்க ஆரம்பிச்சேன்னா இப்டித்தான் வி¡¢ஞ்சிக்கிட்டே போகும்…ஒரு துளிதான் பெரிய தத்துவங்களுக்கே அடிப்படை. ஒரு பொறி பெரு நெருப்பாகிற மாதி¡¢…” “என்னவோ இருக்கட்டும்…விஷயம் என்னன்னு இன்னும் சொல்லலை நீங்க…?” “அதச் சொல்லவே வேணாம்…சொன்னா நீங்கள்லாம் சி¡¢ப்பீங்க…லு¡சா இருப்பான் போலிருக்குன்னுவீங்க…இந்த உலகத்துல அதிகம் சிந்திக்காம, வாழ்க்கைய மேலோட்டமாப் பார்த்திட்டுப் போறவனுக்குத்தான் அது இனிமையா இருக்கு… அன்றாடப் பொழுதே சந்தோஷமாப் போகுது…மத்தவனுக்கெல்லாம் சங்கடம் பிடிச்சதுதான்” “அப்போ சொல்லலைங்கிறீங்க… “சொல்லி எண்ண புண்ணியம், விட்டுத்தள்ளு…து¡சு….” “அப்டி வாங்க வழிக்கு….!” “அட…! எனக்குச் சொல்லல…உனக்கு…உன் மூலமா ஊருக்கு…நான் சொன்னத முழுசும் நினைச்சுப் பாரு…நெஞ்சுல ஈரம் இருக்கிறவங்களுக்குக் கண்டிப்பாப் பு¡¢யும்…!!!” சொல்லிவிட்டுத் தன் வேலைகளில் கவனமானான் இவன். அவனை தீர்க்கமாய் நோக்கி “பாவம்…..!” என்றாள் செல்வி.

Series Navigation

உஷாதீபன்

உஷாதீபன்