பொல்லாதவன்

This entry is part [part not set] of 35 in the series 20100305_Issue

உஷாதீபன்


‘திருட்டு மணி’ வந்திருக்கிறான் என்று சொன்னார்கள். தெருவில் பராபரியாய்ப் பேச்சு அடிபட்டது. இவனெதுக்கு வந்தான் என்று சிலர் வாய்விட்டு முனகினார்கள். யார் அது? என்ற கேட்டனர் வேறு சிலர். ஆனால் எங்களுடன் படித்தவனான கோபால கிருஷ்ணன் என்ற மணி (பின்னால்தான் திருட்டு மணி) தான் வந்திருக்கிறான் என்று நாங்கள் சட்டெனப் புரிந்து கொண்டோம்.
அவன் ஊரை விட்டுப் போய் வருஷங்கள் பலவாயிற்று. எங்கு போனான்? என்ன ஆனான்? என்று எதுவும் தெரியாது யாருக்கும். அவன் அப்பாவைக் கேட்டால் சென்னையில் இருப்பதாகச் சொன்னார். என்ன வேலை? என்று நீட்டினால் ஒரு Nஉறாட்டலில் மானேஜராக இருக்கிறான் என்றும் முதலாளி அவனிடமே பொறுப்பை ஒப்படைத்து விட்டதாகவும், மொத்த நிர்வாகமும் அவன் கையில்தான் என்பதாகவும் கூறினார். நாங்கள் எதையும் நம்பவில்லை.
இவருக்கு இப்படியெல்லாம் கூடப் பொய் சொல்லத் தெரியுமா? என்றிருந்தது எங்களுக்கு.
திருட்டு மணி தன் பாட்டியைக் கொலை செய்துவிட்டுப் போலீஸி;ல் போய் சரண்டர் ஆனபோது அவனுக்கு வயது 20. அப்பொழுது மணி மாலை 6.30. பொழுது மெல்ல இருட்ட ஆரம்பித்திருந்த நேரம்.
அது நான் பள்ளியிறுதி வகுப்பு முடித்து வேலைக்குச் சென்று கொண்டிருந்த காலம். அப்பாவுக்கு மேலும் கஷ்டம் ஏற்படுத்தக் கூடாது என்று ஒரு ரைஸ் மில்லில் பில் போடும் வேலை பார்த்தேன் நான்.
என்னுடன் படித்த பாலு, கிச்சா, நாகராஜன், சுந்தரம் ஆகியோரெல்லாம் கல்லூரியில் படிக்க நகரத்திற்குப் போய் விட்டார்கள். நானும் இன்னும் ஒன்றிரண்டு பேர் மட்டுமே ஊரில் தங்கிப் போனோம். அப்பாவுக்கு அதற்கு மேல் படிக்க வைக்க வசதியில்லை. அதுதான் சொன்னேனே, ஒரு மில்லில் வேலைக்குப் போகிறேன் என்று. அந்த வருமானத்தில்தான் டைப்ரைட்டிங் பயின்றேன். மற்ற நேரங்களில் நூலகத்திற்கும், காசு இருக்கும்போது சினிமாவுக்கும் என்று போய்ப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தேன். ஒரே ஒரு நன்மை. வாசிக்கும் பழக்கம் கைவந்தது அப்போது!
எங்கள் எல்லோருக்குமே திருட்டு மணியை நன்றாகத் தெரியும். அவன் எங்கள் ;பகுதியில்தான் இருந்தான். அந்தச் சின்ன ஊரிலே ரொம்பவும் பிரபலமானவன் அவன். யாரும் அவனைத் தெரியாது என்று சொல்லிக் கேட்டதில்லை. யாரு? என்று யாரேனும் ஒரு நிமிடம் விளித்தால்கூட, “வாய் நிறைய வெத்தலையப் போட்டுக்கிட்டுத் திரிவானே, அவன்தான்…” என்றால் போதும். புரிந்து கொள்வார்கள். அது அவனுக்கான அடையாளம்.
வெத்தலைச் சிவப்பும், கோடிட்ட மீசையும், அம்மைத் தழும்பு தெரியச் சுருட்டி மடக்கிய கையும், கைலியும், கலைந்த தலையுமாக அவன் ஊர் சுற்றுவதைப்; பார்த்தால் “உருப்படாத பய…” என்றுதான் சொல்வார்கள். பார்ப்பவர் எவருக்கும் நிச்சயம் அவனோடு பேசப்பிடிக்காதுதான். ஆனால் அதைப் பற்றியெல்லாம் அவன் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.
திருட்டு மணியின் உண்மைப் பெயர் கோபாலகிருஷ்ணன். அவனுக்கு அப்படியொரு நல்ல பெயர் இருக்கிறது என்று அநேகம் பேருக்குத் தெரியாது. எல்லோரும் அறிந்தது மணி! திருட்டு மணி!
என் பெரிய அண்ணனின் க்ளாஸ் மேட்டாகச் சேர்ந்து, என் அடுத்த அண்ணனோடு படித்து, என்னோடும் வகுப்பில் ஒண்டிக் கொண்டவன் அவன். புரியும் என்று நினைக்கிறேன். அதாவது நான் ஒன்றொன்றாகத் தாண்டி அவன் வகுப்புக்குப் போய்ச் சேர்ந்தேன் என்று சொல்லலாம். தற்பெருமை என்று கருதினால், மணி அதே வகுப்பில் இருந்தான் என்று எளிதாகக் கூறிக் கொள்ளலாம்.
தத்தித் தத்தி முப்பத்தஞ்சு மார்க் எடுத்தால் போதும். அடுத்த வகுப்பில் தூக்கிப் போட்டு விடுவார்கள். இவன் இங்கிருந்து தொலைந்தால் போதும் என்று தள்ளி விடுவதுதான் மூன்றாவது வருஷத்துப் பாஸ்!
………………….2………………..
– 2 –
அப்படித் தாண்டி வந்தவன்தான் இவன். படிப்பில் நாட்டம் இல்லை அவனுக்கு. சுதந்திரமாய்த் திரிவதிலும், ஊரோரக் குன்றுப் பக்கம் சென்று, வாட்டர் டேங்க் பின்னால் மறைந்து, யாருக்கும் தெரியாமல் சிகரெட் அடிப்பதும்தான் அவன் வேலை. சினிமாத் தியேட்டர் பக்கம் திரிவதும் அவனுக்கு ரொம்பவும் பிடித்தமானது. . மணி ஒரு சிவாஜி ரசிகன் என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும். அந்த அளவுக்கான ரசனை அவனிடம் இருக்கத்தான் செய்தது. அந்த வயதிலேயே அவனைப் புரிந்து கொண்டு அவனுக்கு வேண்டியவர்கள் சினிமாப் பக்கம் அவனைத் தள்ளி விட்டிருந்தால் நன்றாக வந்திருப்பானோ என்னவோ?
அந்த வாரம் வெள்ளிக்கிழமை என்ன படம் மாற்றப் போகிறார்கள் என்று பார்த்து, அது சிவாஜி படமாயிருந்தால், ராத்திரி முழுக்க முக்கியமான இடங்களில் தவறாமல் போஸ்டர் ஒட்டுபவனோடு அலைவான்.; . எந்தவொரு குறிப்பிட்ட இடங்களிலும் விடுபட்டுப் போய்விடக் கூடாது என்பதில் ரொம்பவும் கவனமாக இருப்பான். குறிப்பாக எங்கள் தெருக்களில் எந்தெந்த இடம் என்று அவன் வரையறுத்து வைத்திருப்பது மாறவே மாறாது.
மறுநாள் தெருக்களில் வண்டி தள்ளிக் கொண்டு வரும்போது கூடவே நோட்டீஸ் விநியோகித்துக்கொண்டு வருவதும் அவன் வேலையாயிருக்கும். சிவாஜி ரசிகன் என்ற முறையில் இது தன்னின் தலையாய பணி என்று அவனே வரித்துக் கொண்டிருந்தான்.
பெரும்பாலும் தினசரி ரெண்டாம் ஆட்டம் முடியும் வரைக்கும் விழித்திருப்பது அவன் வழக்கமாயிருந்தது. ஜனத்தோடு ஜனமாகப் புறப்பட்டு வந்து ஏதாவது ஒரு வீட்டுத் திண்ணையில் விழுந்து உறங்கிவிடுவான்.
“ராத்திரி எங்கேடா போனே?” என்று கேட்டால் “கோவில் திண்ணைலதானே படுத்திருந்தேன்..” என்பான். கடவுளின் காலடியில்தானே படுத்திருக்கிறான்…அப்படியாவது நல்ல புத்தி வரட்டும்…” என்பதுபோல் விட்டுவிடுவார் அவன் தந்தை. அதற்கு மேல் அவனிடம் எதுவும் யாரும் கேட்டுக் கொள்ள முடியாது. ரொம்பவும் கேட்டு, ஒரு முறை தன் அப்பாவையே பிடித்துத் தள்ளிவிட்டு, அவர் மண்டை காயமாகி, தர்மாஸ்பத்திரிக்குச் சென்று கட்டுப் போட்டு, ஏகக் களேபரமாகிவிட்டது. அதிலிருந்து அய்யா அவிழ்த்து விட்ட மூட்டைதான்.
“என்ன மணி, எப்டியிருக்கே?” என்பதோடு சரி. அதைக் கூட எதற்கு அவனிடம் கேட்டு மாட்டிக் கொள்ள வேண்டும் என்று சென்று விடுபவர் பலர்.
அவன் தந்தை ஒரு பாவப்பட்ட ஜன்மம். பாகவதர் மாதிரி தலையை வளர்த்துக்கொண்டு யாதா யாதா என்று வாயில் முனகும் ஏதோவொரு ஸ்வர ராகத்தோடு அலைந்து கொண்டிருப்பார். அவர் முனகுவதே அவருக்குக் கேட்காது. காது டமாரச் செவிடு. அதனாலேயே அவரிடமும் யாரும் எதுவும் பேச்சுக் கொடுக்கமாட்டார்கள். தெருவே அலரும்படி சொன்னால்தான் கொஞ்சூண்டு கேட்கும் அவருக்கு.
திருட்டு மணிக்கு திருட்டுப் புத்தி எப்படி வந்தது? வேறு சகவாசங்கள் சரியில்லாமல் போன பின்னாடிதான்! அப்படித்தானே முளைவிடும்? அதற்குப் பின்தானே அவன் பெயர் இப்படி ஆகியிருக்க வேண்டும்?
விரும்பியோ, விரும்பாமலோ, எல்லோருக்கும் நண்பனாக இருந்தான் அவன். நண்பன் என்றால் இவன் எனக்கு நண்பன் என்று மற்றவர்கள் இவனைச் சுட்டிச் சொல்வதில்லைதான். ஒருவனை அறிய அவன் நண்பனைப் பற்றி அறி! என்கிறவகையில் இவனைப் பற்றிச் சொல்லமுடியுமா?
ஆனால் எல்லோரோடும் கலகலப்பாகவும் விடாப் பிடியாகவும் பழகிக் கொண்டிருக்கிறானே? பிறகு எப்படி உதறுவது?
திருட்டு மணி எங்கள் எல்லோருக்கும் தெரிய முதலில் திருடியது கணக்கு வாத்தியார் கிருஷ்ணசாமி வீட்டில்தான். உதவாக்கரை இதுக்காவது உதவட்டுமே என்று, “தெருக் குழாயிலிருந்து நாலு குடம் தண்ணீர் கொண்டு வாடா, வெட்டி…” என்றார் அவனிடம். அந்த வெட்டி என்ற வார்த்தை உரைத்து விட்டதோ என்னவோ, அன்று பத்துக் குடம் தண்ணீர் கொண்டு வந்து கொட்டி விட்டான் அவர் வீட்டில். மாமியே அதற்குப்பின்தான் குளித்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! கிளம்பும் போதுதான் அந்தச் சபலம் தட்டிவிட்டது அவனுக்கு. அவனென்ன பண்ணுவான்… பழக்க தோஷம்…கை நீண்டு விட்டது. சாமி படத்திற்கு அருகில் உள்ள ப+ஜைப் பிறையில் கழற்றி வைத்திருந்த காதுத் தோட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு நழுவி;னான். இன்னொன்றை வைத்துவிட்டு வந்தது பெரிய புத்திசாலித்தனம் என்ற நினைப்பு அவனுக்கு. …………….3………………
– 3 –
“இன்னொண்ணு இருக்கில்லியா…இங்கே எங்கேயாவது விழுந்து உருண்டிருக்கா பாரு…” இதுதான் கணக்கு சார் முதலில் மாமியிடம் சொன்னது. கொஞ்ச நேரம் கழித்துத்தான் அவர்கள் மூளையே வேலை செய்திருக்கிறது.
“போய் அவனை இழுத்திட்டு வாங்கடா…” என்றார் சார். நாங்கள் திருதிருவென்று முழித்துக்கொண்டு நகர்ந்தோம். எங்கள் முழியே அவருக்கு உறுதிப்பாட்டை வழங்கிவிட்டதோ என்னவோ?
அப்படியும் மாமி வெறுமே அப்படிச் சொல்லவில்லை எங்களிடம். எங்கள் எல்லோருக்கும் ஏழு சுத்து நிலா முறுக்கு கொடுத்தாள் மாமி. சமீபத்தில்தான் சார் வீட்டுக்கு புது மாப்பிள்ளை வந்திருந்தார். அவரது மூத்;த பெண்ணுக்கு அப்பொழுதுதான் கல்யாணம் ஆகியிருந்தது. மொத்தம் மூன்று பெண்டுகளைப் பெற்றுப் போட்டிருந்தார் அவர்!
சிவாஜி படங்களைப் பற்றிப் பேச்சுக் கொடுத்துக் கொண்டே, நாங்கள் மணியை லாவகமாக இழுத்துக் கொண்டு வந்து விட்டோம்.
“பார்றா, நம்ப தெருவுல போஸ்டரே ஒட்டலை. எப்படிடா விட்டே? தெருக்கடைசி கார் ஷெட்ல வழக்கமா ஒட்டுறதுதானே…?” என்று பேசிக் கொண்டே வர, யாரும் எதுவும் சந்தேகப்பட்டுவிடக்கூடாது என்பதிலே மிகவும் ஜாக்கிரதையாக இருந்தான் மணி. எங்களோடு சர்வ சகஜமாக வந்து கொண்டிருந்தவன், தானாகவே சார் வீட்டு வாசல் வந்ததும் நின்றதுதான் எங்கள் எல்லோரையும் அதிசயிக்க வைத்தது. எப்படிக் கண்டு பிடித்தான் இதற்காகத்தான் கூட்டிவந்திருக்கிறோம் என்று?
நின்று நேரே நெடுகக் கண்ணோட்டம் விட்டவன் எதற்கோ எதிர்பார்த்திருப்பதுபோல் இருந்தது. அவன் சுபாவம் நன்கு அறிந்த எங்களுக்கு எந்த இடத்தில் அவன் என்ன செய்வான் என்பதில் சற்றுக் கவனம் இருந்தது.
அந்தக் காலத்திலேயே திருட்டு மணியிடம் விளையாட்டாய் ஒரு பழக்கம் உண்டு.. கை நகங்களை எப்பொழுதும் நீட்டமாய், கூர்மையாய் வளர்ப்பான் அவன். ஏதாவது ஆபத்து என்றால் கட்டைவிரல் நகத்தால் எதிராளி; உடம்பில் ஒரு கீறு கீறி விட்டுத் தப்பி ஓடி விடுவான். இது அவனது திருட்டுப் பழக்கத்திற்கு ரொம்ப உபயோகமாய் இருந்தது. பஸ் ஸ்டான்டில், பஸ்களில் ப்ளேடு போடுவதைப் போல…! அன்றும் அப்படித்தான் தப்பி ஓட முயல்வான் என்று எதிர்பார்த்தோம். அதுதான் இல்லை. எங்கள் கணக்குத் தப்பாய்ப் போனது அன்று.!
யாரும் எதிர்பார்க்காத அந்தக் கணத்தில் சார் வீட்டுக்குள் விடுவிடுவென்று போய் அதே பிறையில் அந்தத் தோட்டைத் திரும்ப வைத்து விட்டு வந்து விட்டான். மாமி அடுப்படிக்குள் மும்முரமாய் இருக்க, புது மாப்பிள்ளை, பொண்ணு மாடியில் ஜாலியாய் சந்தோஷித்திருக்க, கிருஷ்ணசாமி வாத்தியார் அந்நேரம் பார்த்து கொல்லைப் புறம் கக்கூசுக்குள் இருந்து வெளிப்பட்டிருக்கிறார். என்ன ஒரு நேரம் பாருங்கள் அவனுக்கு? கோமணத்துணி மாதிரி நீள நெடுகக் கிடக்கும் வீடு அது. நீண்டு கிடக்கும் பட்டாசாலை வழி கூர்ந்து பார்த்து யார் வந்திருப்பது என்று தெரிந்து கொள்வதே பெரிய துர்லபம்!
ஆனாலும் கிருஷ்ணசாமி சார் என்ன அத்தனை லேசுப்பட்டவரா? நேரே விடுவிடுவென்று வாசலுக்கு வந்தவர், வந்த ஜோரில் பளாரென்று விட்டாரே பார்க்கலாம் ஒன்று! காது கீங்ங்ங் ஙென்று ரீங்கரிக்க ஆரம்பித்திருக்க வேண்டும் மணிக்கு. அப்படியே பொறி கலங்கிப் போனான் திருட்டு மணி.
“நா எடுக்கல சார்…நல்லாத் தேடிப் பாருங்க…ஆம்மாம்….” என்றான். அந்த நேரத்திய அவனின் பதில் ஒரு மாதிரியாய் இருப்பதை எங்களால் உணர முடிந்தது. எப்பொழுதுமே அவன் இப்படிப் N;பசியதில்லையே?
என்ன நடக்குமோ என்றிருந்தது எங்களுக்கு.
“அடுத்தாப்ல உனக்குப் போலீஸ் ஸ்டேஷன்தான்…” என்றார் சார்.
அவனை அடித்தது பற்றி அவன் பெற்றோர் ஒன்றுமே சொல்லவில்லை. அவர்கள்தான் தண்ணீர் தெளித்து விட்டாயிற்றே? ஆனாலும் கூட அந்தக் காலத்தில் வாத்தியார் அடித்தால் அது நல்லதுக்குத்தான் என்ற உறுதியிருந்தது. அந்த நிகழ்வுக்குப் பிறகுதான் மணியின் கெட்ட பழக்கங்கள் அதிகரிக்க ஆரம்பித்தது எனலாம்.
இதை என்னவென்று சொல்வது? ஒவ்வொரு வீட்டிலும் சாமான்கள் வாங்க அவனைக் கூப்பிட்டு அனுப்புகையில் அதில் கமிஷன் அடிப்பதிலிருந்து, வீட்டுக்கு வீடு யாருமறியாமல் நுழைந்து ஏதாவது பொருட்களைக் கையில் அகப்பட்டதைத் தூக்கிக்கொண்டு ஓடி விடுவது அவனின்.வழக்கமானது.
….4………….
– 4 –
பஸ் ஸ்டான்டுக்குப்; பின்புறம் இருந்த காயலாங்கடையில் மணி விற்ற சாமான்களைப் பார்க்கலாம். போபாலகிருஷ்ணன் அவர்களின் ரெகுலர் கஸ்டமர் ஆகிப் போனான்.
பள்ளிக்கூடம் போவது, படிப்பது என்பதைத்தவிர எல்லாமும் செய்தான் மணி. திடீரென்று காலங்கார்த்தால வீட்டுக்கு வீடு பேப்பர் போட்டுக் கொண்டு வருவான். கொஞ்ச நாளைக்கு அது ஓடும். சரி, திருந்தி விட்டான் போலும் என்று நினைத்தால் மாலையில் சினிமாத் தியேட்டரில் டிக்கெட் கிழித்துக் கொண்டு நிற்பான். சரி, அதுதான் கிடக்கட்டும் என்று விட்டால், பஸ் ஸ்டான்டில் பஸ் கம்பெனிகளின் ஏஜென்ட் போல் ஆக்ட் பண்ணிக் கொண்டிருப்பான் ஒரு நாள்!.
பஸ்கள் வரவர அவற்றை அந்தந்த வரிசையில் ஓரமாய் ஒதுக்குவதும், ஒன்று போன பின் ஒன்றை வரிசையாய் ரைட் கொடுத்துக் கிளப்பி விடுவதும், “போடி தேவாரம்; இடைல பண்ணப்போறோம்…”என்று கத்திக்கொண்டு அலைவதும், பண்ணைபுரம் என்பதைத்தான் அவன் அப்படிச் சுட்டினான்; என்பதே வெகுநாள் கழித்துத்தான் எங்களுக்குத் தெரிய வந்தது. கழுத்தில் சுற்றிய துண்டும், வாயில் கடித்த பீடியுமாய் ரொம்பப் பொருத்தமாய் இருந்தது அவனுக்கு அந்த வேஷம்!
“டேய் மாப்ள, எப்டிர்றா இருக்க…?.அ.டேங்…ஙோத்தா….எங்கிட்டயே வித்த காட்டுறேல்ல……வா ஒன்னை வச்சிக்கிறேன்…” என்று முறைப்பதும்…அவன் பாஷையே மாறிப் போனது சில நாட்களில்!. இனிமேல் அவன் சுத்தமாய்த் தேற மாட்டான் என்று தோன்றியது.
இன்னும் கொஞ்ச நாளில் அவனது வேலைகள் இதனினும் வித்தியாசப்பட்டன! ஊரில் எங்கு பிணம் விழுந்தாலும் அதற்கான காரியங்களைச்செய்வதில் முதலாவதாய் நின்றான் திருட்டு மணி. அந்த நேரத்தில் அதன் அவசியத்தை முன்னிட்டு, வேறு எதுவும் பார்க்காமல் அவனை வைத்து முழுதையும் முடித்துக் கொண்டார்கள் எல்லோரும். சூறைக்காட்டிலே கொண்டு சுட்டுவிட்டு வரும்வரை கூடவே இருந்து கோவிந்தாப் போட்டான் மணி.
அப்பொழுது ஆரம்பித்ததுதான் அவனின் இந்த வெற்றிலைப் பழக்கம். ஜாதி சம்பிரதாயங்கள் வித்தியாசமில்லாமல் எங்கெங்கு காணினும் நான்தானடா என்று நீக்கமற நிறைந்திருந்தான் அவன்.
அவனின் எல்கை நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டிருந்தது என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டியது.
ஊரில் நீத்தார் நினைவு நாள் நடத்தும் இல்லங்களிலெல்லாம் சவுண்டிக்குக் கூப்பிட்டார்கள் அவனை. இதற்கிடையில் பள்ளிப் பேரேடிலிருந்து அவன் பெயரை நீக்கி விட்டதாகச் சொன்னோம் அதை ஒன்றும் அவன் கண்டுகொள்ளவேயில்லை. சொல்லியே இருக்க வேண்டாம் என்று தோன்;றியது எங்களுக்கு.
எனக்குத் தெரிய எட்டாங்கிளாஸ் வரை அவன் வந்ததே பெரிது எனலாம். தூக்கித் தூக்கிப் போட்டுத்தான், இவன் வேண்டாம், வேண்டாம் என்று உதறியே எட்டு வரை வந்து விட்டான் அவன்.
அப்பொழுது தெருவில் திருட்டுப் பயம் அதிகமிருந்தது. குடியிருப்புப் பகுதிகளிலும், பஜார் வீதிகளிலும், தெருக்களிலும், பரவலாய் இந்த பயம் நிறைந்திருந்தது. மேல மந்தையில் பொதுக்கூட்டம் நடக்கிறதென்றால் ஊர் ஜனம் முச்சூடும் அங்குதான் கிடக்கும்.
அங்கிருந்து ஒரு கிலோ மீட்டருக்கு வொயர் இழுத்து தெரு ஆரம்பத்திலுள்ள லைட் கம்பத்தில் குழாய் கட்டியிருப்பார்கள். மந்தைக்கு வந்து கேட்க முடியாத வயதானோர், வாசலில், தெருவோரத்தில் ஈஸி;சேரைப் போட்டு உறாய்யாகச் சாய்ந்து கொண்டு அரசியல்வாதிகளின் பேச்சை ரசிப்பார்கள்.
இப்படியான ஒரு நாளில்தான் “மேலத் தெருவில திருட்டுப் போச்சு…பஜார் எண்ணெய்க் கடைல கல்லாப் பெட்டியக் காணலையாம்….செட்டியார் அரிசி மண்டில அரிசி மூட்டைகளே குறையுதாம்…” என்று பராபரியாய்ப் பேச்சு வர ஆரம்பித்தது. நாங்கள் விழித்துக் கொண்டோம்.
எல்லோரும் கூடி ஒரு முடிவெடுத்தோம். இரவு பத்து முதல் ரெண்டு வரை ஒரு க்ரூப். ;ரெண்டிலிருந்து ஐந்தரை வரை இன்னொரு க்ரூப். என்று பிரிந்து கொண்டோம். இந்த வாரம் ஒரு ஷிப்ட் பார்த்த கோஷ்டி அடுத்த வாரம் வேறு ஷிப்ட். என்று ஒப்பந்தம்.. முட்டுச் சந்து, முடுக்கு, ஆற்றங்கரை, தென்னந்தோப்பு, என்று ஒன்று விடாமல் அலைந்தோம். அதற்குப் பின்தான் இந்தத் திருட்டுப் பயம் ஓய்ந்தது எனலாம். அப்பாடா..! என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட நேரத்தில் அது நடந்துபோனது எங்கள் தெருவிலேயே…! இந்த அளவிற்குத் துணிந்தது யார் என்று யோசித்தபோதுதான் எங்கள் சந்தேகம் மணியின் மீது பாய்ந்தது.
………………..5…………………
– 5 –
ரெண்டாம் ஆட்டம் சினிமா முடித்து வந்து அசந்து படுத்திருந்த வேளையில் ஒரு வீட்டில் கும்பல் ஒன்று கைவரிசையைக் காண்பித்து விட்டது அன்று. இவர்களையெல்லாம் எப்பொழுது பழகிக்கொண்டான் இவன் என்று நினைத்தோம் பின்னால். அல்லது இவர்களையெல்லாம் எப்பொழுது திருடனாக்கினான் என்றும் கொள்ளலாம்!
நடுஉறால் வரை போய் அங்கே படுத்திருந்த பொம்பளையின் தலைமாட்டில் இருந்த இரும்புப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு பக்கத்து முடுக்கில் புகுந்து ஓட, “என் பொண்ணைத் தூக்கிட்டு ஒடறான்…ஓடறான்.ஃ..” என்று அந்தம்மா பயத்தில் உளறி அலர, விரட்டிக் கொண்டு இருட்டில் போனவரை உருட்டுக் கட்டையால் ஓங்கித் தாக்கியது அந்தக் கும்பல். தாலிக் கொடி அறுந்து போயிருந்தது அந்தம்மாளுக்கு!
விடிகாலையில் தென்னந்தோப்புக்கு அந்தப்புறம், ஆட்கள் விரட்டி வந்தால் எரிவதற்குத் தோதாய் குவித்து வைக்கப்பட்டிருந்த கற்குவியலுக்கு நடுவே அந்தப் பெட்டி கிடந்தது கண்டு பிடிக்கப் பட்டது. வெறும் பெட்டிதான். உள்ளே இருந்ததில் ஒரு குந்துமணி கூட விட்டு வைக்கவில்லை. அந்தக் கும்பல் பிடிபட்டது கொஞ்ச நாளில். மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அந்தப் புறம் பதுங்கியிருந்ததாகவும், போலீஸ் கோஷ்டி ஒன்று துப்புக் கிடைத்து, கையில் ரைபிளோடு சென்று பிடித்து வந்ததாகவும், கேள்விப்பட நேர்ந்தது. அந்தக் கும்பலுக்கு வழிகாட்டியது திருட்டு மணிதான் என்பது அவர்களை அடித்த அடியில் தெரிய வந்தது. இன்ன வீடு, இன்ன இடம், இப்படியிப்படி, என அனைத்து வழி முறைகளும் சொல்லிக் கொடுத்தவன் அவன்தான் என்றார்கள்.
அந்தத் திருட்டில் அதிகவனமாகக் கைதானான் திருட்டு மணி. காரணம் அந்தக் கும்பலின் முன் குற்றங்கள்தான் என அறிய நேர்ந்தது. அவனை அங்கிருந்து டவுனுக்குக் கொண்டு போனார்கள். பிறகு சென்னைக்குப்; போய் விட்டதாகச் சொன்னார்கள். ஒரு முறை மும்பை நகரிலே பெரிய கொள்ளை குறித்த செய்தி வந்திருந்தது தினசரியில். அதன் முக்கியச் சாவியாகச் செயல்பட்டவன் மணிதான் என்பதை அந்தச் செய்தியின்பாற்பட்ட தொடர்ந்த தகவல்களின மூலம் அறிய முடிந்தது எங்களால்! புகைப்படத்தோடு வெளியிட்டிருந்தார்கள் அந்தச் செய்தியை. அந்தக் கும்பலின் நடுவே இருந்தான் அவன். உருவமே மாறித்தான் போயிருந்தது. இந்த அளவுக்கு விடுவிடுவென்று மேலே போவான் என்று யாரும் எதிர்பார்க்கவேயில்லை. பின்னாளில் நாங்கள் எல்லோருமே அவனை மறந்து போனோம்.
காலத்தின் கட்டாயமாகிப் போனது அது!
அந்தக் கோபாலகிருஷ்ணன் என்கிற திருட்டு மணி ஊருக்கு வந்து இப்போது சில மாதங்களாயிற்று. தினமும் காலையில் பத்து மணிக்கு பஸ்ஸ்டான்டுக்கு எதிரேயுள்ள போலீஸ் ;;ஸ்;டேஷனில் போய் (அன்று அவன் பார்த்த போலீஸ் ஸ்டேஷன் வேறு, இன்று பார்ப்பது வேறு!)கையொப்பமிடுகிறான் அவன்! எப்படி மாறிப் போய்விட்டது அது? உள்ளே போனவன்தான்;, ஆளே வரவில்லை என்ற அளவிலான படுபயங்கர இரகசியங்கள் குடி கொண்டிருந்தன அங்கே! ஒரு வேளை இன்று அவன் இருக்கும் நிலைக்குப் பொருத்தமாக இருக்குமோ என்னவோ!
அன்றுதான் அது நடந்தது. மாலை மணி ஆறு முப்பது தாண்டிய பொழுது. கையில் சுற்றிய இரத்தக் கறை படிந்த டவலோடு பிடித்திருந்த ஆக்ஸா பிளேடில் உறைந்தும் வழிந்தும் கொண்டிருந்த குருதியோடு தெரு வழியே இறுகிய முகத்தோடு போய்க் கொண்டிருந்தான் திருட்டு மணி. எங்களையெல்லாம் பார்த்தவாறே வைத்த கண் வாங்காமல் அவன் நிதானமாய் நடந்து சென்ற காட்சி இன்னும் என் கண் முன் அழியாது நிற்கிறது. வீட்டுக்கு வீடு பயம் நிறைந்த பார்வையோடு பலர்.
எல்லோரையும் கடைசியாய் ஒரு முறை பார்த்துக் கொள்கிறேனே என்பதுபோல் போய்க் கொண்டிருந்தான் அவன். ஒருவரைக் கூட அவன் தவறவிடவில்லை. அது ஏன் என்றே தெரியவில்லை. விளையாட்டுத்தனமாய் ஒரு முறை எங்கள் வீட்டுக்குள் ஓடி வந்து, ஜாடியைத் திறந்து, மாவடு ஊறுகாயை எடுத்துக் கடித்துகொண்டே அவன் ஓடியதும், “வாடா இன்னம் ரெண்டு எடுத்துக்கோ…” என்று அம்மா சொன்னதும், “போதும் மாமி” என்றுவி;ட்டு “கொஞ்சம் சாதீர்த்தம் கொடுங்கோ, அது போதும்” என்று வாங்கி மாவடுவை ஒரு கடி, அதில் ஒரு மடக்கு என்று ருசித்து ருசித்து அவன் குடித்துவிட்டுப் போனதும் கண்களில் கண்ணீர் பனிக்க இன்றும் என் நினைவில் அழியாமல் பதிந்து கிடக்கின்றன.
அவன் கால்கள் தயங்கியது கிருஷ்ணசாமி வாத்தியார் வீடு தாண்டிய போதுதான்! அதற்கு நாலு வீடு தள்ளித்தான் அந்த வீடு இருந்தது.
…….6………
– 6 –
திருட்டுமணி நகைகளுக்காகத் தன் பாட்டியின் கழுத்தை அறுத்துக் கொன்ற குற்றத்தில் போலீஸில் போய் சரண்டர் ஆனான். அவன் அந்தத் தெருவைக் கடந்த வேளையில் அந்த அலறல் சத்தம் தெருவே கிடுகிடுக்கும்படி கேட்டது.
“அய்யோ மணி, என்னைத் தனியா விட்டிட்டுப் போறியே, இவா எல்லாரும் சேர்ந்து என்னைக் கொன்னுடுவாளே…இனிமே நா என்ன செய்வேன்….தெய்வமே…! என்னையும் அவனோட கூட்டிக்கோயேன்…”
தெரு முழுக்க அந்தக் குரல் ஒவ்வொருவர் வீட்டிலும் எதிரொலித்துக் கொண்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
நீள நெடுக விரித்துப் போட்ட தலையோடு அலறியடித்துக் கொண்டு ஓடியது அந்தப் பெண்!
நாங்கள் பஞ்சாயத்துப் பார்க்கில் உறாய்யாக உட்கார்ந்து கொண்டு பாட்டுக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தோம் அந்த நேரம்!
என்னவோ வித்தியாசமா சத்தம் கேட்குதே? என்று பதறியடித்துக் கொண்டு எழுந்து காம்பவுண்டு சுவரைத் தாண்டிக் குதித்து தெருவை நோக்கி நாங்கள் ஓடி வந்தபோது, அந்தப் பெண்ணையும் அவள் கோலத்தையும் பார்த்து அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் செய்வதறியாது நின்று விட்டோம்.
அவள் வேறு யாருமல்ல…!
எங்கள் கணக்கு வாத்தியாரின் மூன்றாவது பெண் சியாமளாதான் என்பதை நீவீர் எல்லோரும் அறிவீராக!!
அந்தப் பேதை கோபாலகிருஷ்ணனின் வாரிசையும்; சுமந்து கொண்டிருந்தாள் என்ற கொஞ்சமும் காதில் வாங்க முடியாத கல் மனதும் ஏற்காத கொடுஞ் செய்தியையும் முடியுமானால் ஜீ;ரணிக்க முயல்வீராக!!

Series Navigation

உஷாதீபன்

உஷாதீபன்