திசை அணங்கு

This entry is part [part not set] of 31 in the series 20061123_Issue

திலகபாமா,சிவகாசி



இதோ புதை மணலுக்குள்ளிருந்து எடுக்கப் பட்ட அந்த சிலை நாயக்கர் மகாலின் நடுக் கூடத்திற்கு அலங்காரமாய் இன்றி வீற்றிருக்கிறது. .கண்டெடுக்கப் பட்ட சிலை கனவுகள் எல்லாம் தொலைத்து வெற்று சிற்பமாய் இன்று சிரிப்பை மட்டும் ஏந்தியபடி, சுற்றிக் காண்பிக்கும் கைடுகளுக்கு சொல்லப் பட வேண்டிய சுவையான தகவலாய் தரப் பட்டிருந்தது.
அதோடவே நின்று போகிறது மனது.
இடிபாடுகளுக்கிடை இருந்த அந்த மகால் இன்று புதுப்பொலிவு அடைந்திருப்பது கேள்விப்பட்டு நண்பர்களோடு அதை மீண்டும் கண்டு வரத் திட்டமிட்டிருந்தேன். இதுவரை தனித் தனியாக என்னுடன் பொழுதுகளை களித்த , நண்பர்கள் இருவரையும் ஒரு சேரக் கண்டு மகிழப் போகும் நினைப்பு தித்தித்துக் கொண்டிருக்க, சொல்ல முடியா மகிழ்வில் இருக்க, இடம் வந்து சேர்ந்த பின் தான் உணர்ந்தேன் இதுவரை தான் நினைத்திருந்த சூழல் தாண்டி ஒரு அசாதாராண சூழல் அங்கு உருவாகியிருப்பதை. நண்பர்களாய் உணரப் பட்டவர்கள் ண்களாய் எனக்குள் உருவேறத் துவங்கினர். எங்கு நிகழ்ந்த சாபமிது. அகலிகை கல்லாக சாபமிட்ட கௌதமனாய் , இவர்கள் நண்பர்களாக இருந்ததை விட்டு ண்களாக மாற சாபமிட்டது யார்? கேள்விகள் குடைய அன்னியப் பட்ட சூழலில் உடன் நடந்தேன். அவர்கள் எல்லாம் அறிந்தவர்களாகவும் நான் நிறைய கற்றுக் கொடுக்கப் பட வேண்டியவளாகவும் இருப்பதாகப் பட்டது. எனது தாழ்வு மனப் பான்மையா? அவர்களது திக்க மனோபாவம் அப்படியாக நான் உணரும் படி நடக்கச் செய்ததா? உண்மைதானா? தனக்கு தெரியாத விசயங்கள் பேசப் படுவதால் தான் நான் உள் புக முடியாத நிலை வந்ததா? உண்மையில் எனக்கான உலகமும் அவர்களுக்கான உலகமும் வேறாக இ‏ருப்பது தான் நிதர்சனமான உண்மை எனவும் அ‏தை உணர்ந்து கொண்டு மாற்று உலகங்களை அதற்கான புரிதல்களோடு பார்க்கத் தவறி விடுகிறோமோ? கேள்விகள் எனை குறுக்கு விசாரணைக்கூண்டில் நிறுத்த அலுப்பு தொற்றிக் கொண்டது. இவ்வளவு சிந்தனைக்கிடையில் தான் “திசை அணங்கு” எனக்குள் புகுந்தாள் காட்சிகளாக என்னோடு பேசினாள்.
நீ மட்டு மல்லடி காலம் காலமாய் தொடரும் சாபக் கேடிது, சொல்லி விட்டு அந்த வீட்டுக்குள் புகுந்தாள் அவள்.
அந்த வீடுள்ளிருந்து வெளி வரும் ஒலி அது சிற்பக் கூடமா? அல்லது வாத்திய கருவிகள் தாளம் தவறாது இசைக்கும் இசைக் கூடமா? என்று தீர்மானிக்க முடியாத படிக்கு இனிமையான இசையை காலை நேரப் பொழுதின் மேல் போர்த்திக் கொண்டிருந்தது. பனிக்கு இதமாக கதகதப்புக் கொண்ட அன்பான அணைப்புக்குள் உறங்கக் கேட்கும் சுகமாய் சிந்தனைகளின் மேல், கனவுகளின் மேல் கவியத் துவங்கியது. கூடத்தின் வாசலில் இடப் பட்டிருந்த செம்மண் கோலத்தின் மேல் கருங்கள் துகள்கள் இரைந்து கிடக்க சப்தங்கள் நமையும் உள்ளிழுத்துக் கொள்கின்றன. அங்கே நீலாம்பரன் கைகள் கருங்கல்லில் கவிதை எழுதிக் கொண்டிருந்தது. தேர்ந்த கலைஞனின் லாவகம், கற்றுத் தேர்ந்ததை விட அவனுக்குள் பிரவாக மெடுத்த கலையின் வடிவம் நம் முன்னே காணக் கிடைத்தது. அறையெங்கும் இந்திரன் சிவன் பார்வதி, ரதி மன்மதன், விஸ்ணு துர்க்கை நடனப் பெண்மணிகள் என கலை சிந்திக் கிடந்தது. க்¢ழக்குப் பார்த்திருந்த சன்னலில் இருந்து கதிரவன் ஒளியை உள்ளே அனுப்பி அறையை நிரப்பியதாய் பெருமை பேசிக் கொள்ள நினைத்து சிலைகளின் காலடியில் வீழ்ந்த நிழலின் இருள் கண்டு பெருமை பேச முடியாது பயணப் படத் துவங்கினான்.
எங்கோ தூரத்து கோவிலில் இருந்து கசிந்த நாதஸ்வர இசைக்கு நடனமாடத் துடித்திட்ட. பாதி நிறைவடைந்திருந்த அந்த நடனப் பெண்ணின் சிலை. உளியும் கலை நெஞ்சுமாக இருந்தவனை நடையின் ஜதிச் சப்தமும் மணங்கமழும் வாசமும் திசை திருப்பியது. அவள் மீது காற்று மோதியதற்கான அறிகுறிகள் கூட இ‏ல்லாதிருந்தும் அவள் மீதிருந்த எல்லாமே அசைந்து மெல்லிய ‏இனிய இசையை எழுப்பிக் கொண்டிருந்தது. அவளது பார்வை விழிகள் சடாரெனெ நிமிர அதுவும் ஓசை எழுப்பியதோ? ஏதோ உள்ளம் எதிரொலிக்கும் ஓ‏சை கேட்பது போல் இருக்கின்றதே அது பிரமையா? நின்றிருந்தாள் பாகீரதி . மெல்லிய புன்முறுவல் சிந்தி விட்டு மீண்டும் கல்லோடு பேசத் தலைப்பட்டான். தான்‎ நேசிக்கின்ற வாசம் சுவாசமாய் அங்கு வீசத்துவங்க உற்சாகம் பற்றிக் கொண்டது
பாகீரதி அவன் நின்று கொண்டு சிலை வடித்துக் கொண்டிருந்த அதே கோணத்தில் தானும் நின்றபடி ரசிக்கத் துவங்கினாள் .

*
முடிவடையாமல் நீளப் போன முந்தின இரவு நினைவுக்கு வந்தது. ஏன் இரவு நீண்டது.? எத்தனையோ வேலைகளின் அலுப்பு அழுத்திய போதும் தூங்கிப் போன வெளிச்சங்களோடு தூங்கப் போகாது விழித்துக் கிடந்த இ‏ருளி‎ன் விழிப்போடு அவள் மனதும் விழித்துக் கிடந்தது.
சந்தோசமா? வலியா?
எதன் பேரால் உறங்க முடியாது தவித்தது மனது. உள்ளுக்குள் நிகழ்ந்து கொண்டிருந்த தர்க்கங்கள் எனக்கு மட்டும்தானா? அந்த உணர்வைக் கிளப்பியவனுக்குள்ளும் நிகழ்ந்திருக்குமா? சாத்தியமில்லை என்றுதான் தோன்றியது.
வானமெங்கும் வெள்ளிகள் சிதறிக் கிடக்க ஒரே ஒரு வெள்ளி மட்டும் மின்னித் தெரிந்தது காரணம் அருகாமையா இல்லை அது உள் வாங்கிய ஒளியை வெளித் தள்ளிய வேகமா?
நீலாம்பரன், நான் சண்டையிடுவதாய் சொல்லிப் போகிறாய் எவ்வளவுதான் நீ செய்கின்ற காண்பிக்கின்ற விடயங்களுக்கு பின்னால் இருக்கின்ற இருப்பதாய் சொல்லப் படுகின்ற காரணங்களும் சூழலும் நிஜமென்றிருந்த போதும் அந்த நிஜங்கள் என்னுள் நிகழ்த்திய நிகழ்வும் அதன் வலியும் கூட நிஜம் தானே என்று எப்போதாவது உணருவாயா ? நீயும் ஒரு நாள் என் போல் அன்பிற்காய் நீ காரண காரியங்கள் சொல்லித் தவிர்த்து விட்ட உன் அருகாமைக்கு நான் சண்டையிட்டது போலவே நீயும் போடணும் அப்போ தான் நான் பட்ட வலியின் தீவிரம் உனக்கும் புரியும். மீண்டும் இரவுக்குள் இரவின் நினைவுக்குள் நினைவால் நனைந்து பற்றியெரிந்த உணர்வுகள் மீண்டும் மூழ்கிப் போவதை உளியின் ஒளி தட்டி எழுப்பிற்று .
“உன் கோரிக்கை புரியவில்லை “ எனும் ஒற்றை பதிலில் நிராகரிக்குமுன் உணர்ந்து கொள் நான் வைப்பது கோரிக்கையல்ல பரஸ்பரம் உருவாகிப் போகுமென்ற நினைப்பில் எனக்குள் எழும்பிய எதிர்பார்ப்புகளின் கனத்தை சொல்ல வருகின்றேன். புரிகின்ற தருணத்தில் என்னோடு சேர்ந்து சுமக்கத் துணை வருவாயெனும் நினைப்பில். னால் நீயோ பாரம் தாங்காது தாங்க முடியாதென்பதை ஒப்புக் கொள்ள தைரியமில்லாது தவிர்த்துப் போகின்றாய் ஏமாற்றங்களின் ஒப்பாரி அல்ல . ஏமாற்றங்கள் தோற்று வித்த போராட்டங்களின் அலைகளின் மோதல் . அரிப்பைத் தாங்க முடியாது கரையை சுருட்டிக் கொண்டு ஓட நினைக்கின்றாய் சாத்தியமில்லை என்று அறியாது.
எனக்குள் போராட்டம் உன்னால் உன் இயல்பென நீ தீர்மானித்திருந்த உன் செய்கைகளால் நிகழ்த்தப் பட்டது உள்ளிருந்து வந்து எனை உபசரிக்கும் உன் மனைவியின் முன் அன்பை பொத்தி வைக்கின்றாய். மனைவியிடம் “உன் மேல் உள்ள அன்புதானடி பெர்¢து “ என்று உணர்த்தி விட பிரயத்தனம் செய்கின்றாய். இந்த ஒப்பீடு எதற்கு? நான் பெண் என்பதாலா? அப்போ கலைஞனாய் வாழத் தலைப்பட்ட நிகழின் யதார்த்தங்கள் மீறி சிந்திக்க தலைப்பட்ட நமக்குள் தடை நிகழ்த்தியது எது? பால் சார்ந்த வேறுபாடா?
காலம் காலமாய் உன்னை நம்பியிருக்க வேண்டுமென்று தீர்மானித்து வைத்திருக்கும் பெண்ணை பத்திரப்படுத்தும் முயற்சியா? உடல்களி‎ன் எண்ணங்களை தூர எறிந்து விட எனக்கு முடிகிறது.
ஒப்பீடுகள் இல்லாமலே அவரவர்க்கான முக்கியத்துவத்தை உணர்த்துவது எளிதான ஒன்றாக. அப்பவும் கூட அது ஏன் எளிதான தென்று யோசிக்கின்றேன். கிணற்றுநீர் கரை தாண்டி போய் விட முடியாது என காலம் காலமாய் உருவாக்கப் பட்ட நம்பிக்கைகளின் மறு பிம்பம் ண்களூக்குள்ளும், பெண்களுக்குள் அது ‏இல்லாமலிருப்பதும் காரணமாக இருக்கலாம்
ற்று நீராய் நீ மழைக் காலங்களில் கரை மீறுதல் சாத்தியமும் சாதாரணமுமென உணர்த்தப் பட்டு ஒதுங்கிக் கொள்ள பயிற்றுவிக்கப் பட்ட பெண்.ணாய் ‏இங்கு மனைவிகள் . செக்கு மாடாய் உன்னால் பழக்கப் படுத்தப் பெண் நீ ஊர் போக தீர்மானிக்கின்ற போது சுட்டு விரல் நீட்டுகின்றாய் அவளை நகர முடியாது பதியன் போட்டதன் எதிர் விளைவு அது என்று உணராது.
அதே நேரம் பதியனுக்குள் சிக்காத எனையும், உனை விட வேகமாய் தாண்டிப் பயணிக்க துணிந்த பெண்ணையும் அவள் வேகமும் அது இன்னதென்றே உணர முடியாது போனவனாய் நீ இருக்க
அது சரி எப்போது கடக்கப் போகின்றாய் எதிர் வினை இல்லாது.?
நினைவுகளை இடை மறித்தான் நீலாம்பரன்
“எ‎ன்ன பேச்சையே காணோம்”
தலை திருப்பாமலே சிரித்துக் கொண்டாள் பாகீரதி
நானா பேசவில்லை நீ இருக்கும் போதும் இல்லாமல் போன போதும் எல்லா நேரமும் பேசிய படியே தானிருக்க உன் காதுகள் தான் கேட்கக் கூடிய உணர்வுகளையும் புரியக் கூடிய நிலைதனையும் தொலைத்து விட்டிருக்கின்றது
ஏதும் சப்தம் வராமலிருக்கவே திரும்பினான். நீலாம்பரன் உளி ஓய்வுக்குப் போகத் தலைப் பட்டது..
பாகீரதி ஏதோ நினைவுக்குள் கட்டுப் பட்டிருப்பது புரிந்தது. அவளது கால்கள் தானாகவே தாளமிட்டுக் கொண்டிருந்தன. அவளையும் மீறி அவள் கண் வழி வழிந்து கொண்டிருந்த தீட்சண்யம் அறை மூழுவதும் ஒரு சில்லிடலை நிரவ விட்டுக் கொண்டிருக்க அவள் சூடியிருந்த பூக்கள் தாங்களே ஒலி எழுப்புவதாய் தோற்றம் தந்து அவள் மன ரசிப்புக் கேற்றவாறு டிய த;லைக்கு இசைவாக டிக் கொண்டிருந்தன.. மெல்லத் திரும்பி தான் வடிவமைத்திருந்த சிலையை நோக்கினான். அதில் பாகீரதியில் சாயல் இருப்பதாகத் தோன்ற மனதுக்குள் அவள் ழ வெரூ‎ன்றியிருந்ததும், பார்ப்பவரின் சிந்தனை இந்த நட்பின் ழம் நூலிலையில் நடக்கும் இலாவகம் புரியுமா? என்பதை விட அப்படியான நடத்தலை யாரும் தட்டி வீழ்த்தி விடக் கூடாதே எனும் பயமும் கூடவே எழுந்தது.
பாகீரதி அப்படியான கவலை கொண்டிருந்தாளா தெரியாது. அவள் இளங்கன்றாய் தயக்கங்களின்றி துள்ளித் திரிந்தாள் மிக இயல்பாக நட்பை நிகழ்த்தி விடுவாள் பேராச்சர்யம் பற்றி கொள்ளும் எப்படி எல்லாவற்றையும் இயல்பாக நிகழ்த்தி விட முடிகிறது என. நம்மால் முடியவில்லை எனும் தாழ்வு மனப் பா‎ன்மையும் தொற்றிக் கொள்ள அதை மறைத்துக் கொள்ளும் முயற்சிகள் எனக்குள் தொடர்கின்றன.. கூடவே சந்தேகமும். இந்த இயல்பு இன்றைக்கான இயல்பு வாழ்வில் சாத்தியமில்லை அவள் நிகழ்த்தினாளா அல்லது யதேச்சையாக நிகழ்ந்ததா வென நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. வழமையான பெண்ணில்லை யெனும் ச்சர்யம் மட்டும் அவளைச் சுற்றி ஒளியாய் வீசிக் கொண்டிருந்தது. சில நேரம் கண்கூசும் ஒளியில் இறுக விழி மூடிக் கொள்வேன். இருள் சூழும். இருளுக்கு வெளியில் ஒளி இருப்பதாய் உறுதியாய் தெரிந்த போதும் ஒளியின் வலிமை விழி இமை திறக்க விடாததாகவே இருந்திருந்தது
ஒளியை காணத் தவறியவனாகவும் , இருளுக்குள் மூழ்கி இருப்பவனாகவும் குற்றஞ்சாட்டிப் போவாள். .என்ன செய்ய என் விழி தாங்க முடியா ஒளியை பழக தைரியம் எங்கிருந்து பெறுவது, மெல்லத் துழாவும் கைகள் விழிகளுக்குத் துணையாய் வந்த போதும் கூசுதல் குறையவில்லையே. .அவளுக்கு சமமான ஒளியாய் இயல்பாய் நிகழ்த்துதல் எனக்கும் கை வரும் காலங்களி‏ல் கூசுதல் காணாமல் போகக் கூடும், அதை தந்து போவது அவளது நேசமாய் மட்டுமே இருக்க முடியும். அல்லது அவளது நேசம் போல தந்து விடத் தயாராகியிருக்கிற நேசமாய் நானும் இருந்திருக்க வேண்டும்
மனசு தானாகவே பேசிக் கொண்டே போனது. அது அவளுக்கு கேட்டு விடக் கூடுமோ. அல்லது அவள் தன் மனதை படித்து விடக் கூடுமோ தயக்கத்தில் அப்போதைக்கு அங்கிருந்து நகன்றேன்
*
நீலாம்பரன் இடை வரை நிறுத்தி விட்டுப் போயிருந்த நாட்டியப் பெண் சிலை மெல்ல மெல்ல அவளது உணர்வுகளையும் வாசிக்கத் தலைப்பட்டது. பாகீரதியின் சாயலில் தான் இருப்பதை உணர்ந்திருந்த எனக்கு என்னை நானே டியில் பார்த்துக் கொள்வதைப் போல் தோன்றியது. இன்னும் ஏன் இடைக்கு கீழ் பகுதி நிறைவு பெறாமல் இருக்கின்றது அது நிறைவு பெற்றிருந்தால் இப்பொழுது பாகீரதியின் உள்ளத்திற்குள் யாரும் அறியாது நடனமிட்டுக் கொண்டிருக்கின்ற அந்த உருவமாய் நான் பலர் பார்க்க டியிருக்கக் கூடும். அவளுக்குள் இருந்த சமூகத் தயக்கங்கள் எனக்குள்ளும் வந்திருக்குமோ? இதுவரை இல்லை என்றுதான் தோன்றியது பாகீரதியின் கலை உணர்வு வாழ்வோடு சம்பந்தப்பட்டது. இப்பவும் அவளது கவி ஒன்றை நீலம்பரனுடன் பகிர்ந்து கொள்ளவே வலாய் வந்திருந்தாள் தூக்கிக் கொண்டு வந்த கவிதையை ஏனோ பொத்தி வைத்து விட்டாள்.இது அடிக்கடி நேர்வது தான். மொட்டவிழ்வது என்பது அவ்வளவு எளிதான விசயமாக என்றுமே அவளுள் இருந்ததில்லை ஏன் அப்படி நேர்கின்றது? நேர்ந்தது ? கேள்விகள் அவளுள் இருந்து கொண்டே இருப்பதை என்னால் கேட்க முடிகின்றது.
அப்படி ஒன்று நிகழ எத்தனித்து நிகழாது எப்பொழுதும் போய் விடும் போது மெல்ல அவள் தன்னை உள்ளிழுத்துக் கொண்டு கடினமான ஓட்டுப் பகுதியை காண்பித்துப் போகிறாளே அதன் வலி அடுத்தவர் காணக் கிடைத்ததா? அவள் சொல்லி விடாத வார்த்தைகளுக்கு அடிமையாகிப் போகிறாள் அன்பை அன்பாக மட்டுமே பார்க்க நேர்வது நமக்குள் இருக்கின்றதா? அவளுக்குள் கேள்வி. நீரை நீராக எத்தனை பேர் பார்த்திருக்கக் கூடும். அருவியாக நதியாக கடலாக இப்டியாகவே போகின்றதே பார்வைகள் அலை வந்து மோதிய போதும் காற்று வந்து மோதிய போதும் சிற்பியின் கைஉளி மோதிட பெண்ணாய் உருவெடுத்தது எப்படி. கல்லை கல்லாய் காணாது பெண்ணாய் பார்க்க முடிந்த எவர்க்கும் கூட பெண்ணுக்குள் இறுகிப் போன கல் ஒன்று இருப்பதை அதை கல்லாய் மாற்றிய நாம் நிதர்சனமாய் முன் நின்ற போதும் உணர முடிவதே இல்லை.
பாகீரதி ஒவ்வொரு கணமும் அவனை ஈர்த்தாள். வியக்க வைத்தாள் என்பதற்கு கூடத்தில் நின்றிருந்த நானே சாட்சியாக இருந்த போதும் அதை உணர்ந்து பேச ஒரு போதும் தலைப் பட்டதில்லை நீலாம்பரன்.

*
மனிதர்கள் எனும் நிலை தாண்டி கலைஞர்களாய் கலந்து விட்ட போதும் தன்னிடமிருந்த கலையை தனக்குள்ளிருந்த கலைஞனை மதிக்கத் தெரியாத நீலாம்பரன் மேல் எரிச்சல் வந்தது.
நீலாம்பரன் தன்னை திருத்திக் கொண்டு வந்து சேர அவன் நண்பன் யுவன் வந்து சேர்ந்தான்
அவர்களது னந்த அளவளாவலில் பாகீரதி இருந்ததை மறந்து போனார்கள். அவர்கள் மறந்து போனது பற்றி அவள் கவலை கொள்ளவில்லை. முன்பொரு நாள் முதன்முறையாக யுவனை சந்திக்க அறிமுகப் படுத்துகையில் ,’சமையல் இவளுக்கு கை வந்த கலை ‘ என்று சொல்ல இதற்கு அறிமுகமே தேவையில்லையே. ஒரு கலைஞனாக அறிமுகப் படுத்த ஏன் தோன்றவில்லை? எனும் அவளது கேள்விக்கு இன்று வரை பதில் கிடைக்க வில்லை. பாகீரதிக்கு
வெளியேறக் கிளம்பியவளை
“இரேன் பாகீரதி பேசுவோம்” என்று நிறுத்த
இப்பொழுதாவது நினைப்பு வந்ததே என்றபடி மீண்டும் அமர்ந்தாள் பாகீரதி. தொடர்ந்த பேச்சுகளில் பாகீரதியை மீண்டும் தொலைத்தார்கள் அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பை தொலைத்து அவர்களே நினைத்தாலும் தொலைக்க முடியா தூரத்திற்கு பயணமாகியிருந்தாள் பாகீரதி. வண்ணங்கள் கண்களுக்குள் வந்து கவிதை சொல்லிப் போயின. ச்¢வப்பிற்குள் நுழைந்து நீலமாகி வெளுத்து மஞ்சளாகி மூழ்கிய போது முத்தெடுத்த வார்த்தைகளோடு வெளிவந்திருந்தாள் கண்களுக்குள்ளே பச்சையும் நீலமுமாய் மரமும் வானும் . மரங்களுக்கிடை நுழைந்து வானுக்கு போயிருந்தாள். நிலவுக் கவிதை ஒன்று கையிலெடுத்து வந்திருந்தாள். இது சுயம்பு கவிதை. இதில் செதுக்குதல் பற்றி நீலாம்பரன் பேசக் கூடும். வண்ணம் தீட்டுதல் பற்றி யுவன் கதைக்கக் கூடும் அதெல்லாம் தாண்டி சுயம்புவாகவே இருந்து விட தீர்மானித்து விட்ட பொழுதில் எல்லா கட்டுகளும் அறுந்து விழ பால் வெளியில் வீழ்ந்து கொண்டிருந்தாள் முடிவு தெரியும் வரை அடி விழப் போவதில்லை. வீழ்ந்து கொண்டிருந்ததை மிதத்தலாய், நீந்துதலாய் முயற்சி செய்ய சுயச் சார்பு தனக்கு பரிசாய் தந்து போன தனிமையை சுவைக்கத் துவங்கினாள். வெயிலை வெயிலாகச் சுவைக்கவும் கசப்பை கசப்பாக சுவைக்கவும் பழகியிருந்தாள்
இதுவரை நிழலாய் இருந்த அவள் உறவு சுவைத்துக் கொண்டிருந்த நீலாம்பரனுக்கும் யுவனுக்கும் வெயிலின் சுட்டெரித்தலை தான் சுவைக்கப் பழகியதை பழக்கி விட மனம் கங்கணம் கட்டியது
*
தெறித்து விழுந்த கல்துகள்களின் வரவேற்புடன் உள்ளே வந்தாள் பாகீரதி அவள் கங்கணம் கட்டிய அன்று இடைவரை உருவாகியிருந்த சிலை ஒன்று முழுவதுமாய் பிறந்திருந்தது அவளது மனம் போலவே இன்று சிலையாக இருக்கின்ற நாட்டியப் பெண் கல்லாக வெறும் கல்லாக இருந்த அந்த நாளொன்று நினைவுக்கு வந்தது. இவள் கவிதை வாசிக்க கல்லை கலையாக்கும் எண்ண ஓட்டத்தில் சிக்குண்டு குழம்பிய படி தீர்மானத்திற்கு வர முடியாது இருந்த நீலாம்பரன், அதிலிருந்து தப்பி வெளிவர எடுத்த பிரயத்தனத்தில் அவளின் கவிதையோடு மூழ்கிப் போனான்
துக்கங்களின் பிண்ணனியில்
சிரித்தபடி இருப்பதை
ஒத்துக் கொள்ளும் உனக்கு
நேர்மைகளின் பிண்ணனியில்
சீற்றம் கொள்வதை
நிராகரித்து விட உத்தரவிடுகின்றாய்
காத்திருப்பு அழுகை ஏமாற்றம்
எல்லாம்மறைத்து
எத்திசையிருந்து பார்ப்பினும்
சிரித்த படி இருக்க
கல்லிலிருந்து செதுக்கி எடுத்த
திசையணங்கல்ல நான்
போகத்தை தந்து உனக்கு
சக்தியாக இருப்பதை விட
எனக்கு நானே சக்தியாவது எப்படி
தேடி நிறுவிய படி
ஒரு கையில் ஏடும் அதை வாசிக்கும் கவனமும் தாங்கிய படி இருந்த பாகீரதி வலது கையை தரையில் ஊன்றியிருக்க நீலாம்பரன் கவிதையை கவனத்தோடு கேட்டபடி அவன் ஊன்றிய கை விரல்களோடு அளைந்து கொண்டிருந்தான். கவிதையின் இறுதி வரிகளின் இருந்த வலிமை , தன்னை விட்டு தாண்டிப் போய் விடுமோ மனதில் கேள்வி எழும்ப எல்லா விரல்களையும் சேர்த்து அழுத்திப் பிடித்தான் கவ்¢தையில் இருந்த காதல் உறுத்த மெல்ல இழுத்து அணைத்தான் றுதலை உணர்த்த எழுந்த அணைப்பு மெல்ல உடலின் தேவையை விசிறி விட சந்தர்ப்பங்கள் இடமளித்த பொழுதொன்றில் பகிர்தல் நடந்து முடிந்திருந்தது.
மீறி இயல்புக்கு வரும் போதும் உடல் தந்திருந்த சுகம் நினைவில் நில்லாது அவள் தனது கவிதையிலும் அவன் கை உளி பற்றவும் போய் விட கல்லை கலையாக்கும் மனோநிலைக்கு வந்திருந்தான்
வெளியே போயிருந்த நீலாம்பரன் மனைவி உள்வரவும் பாகீரதியின் குழந்தை அவளைத் தேடி வரவும் எல்லாம் மீள் இயல்புக்கு வந்திருந்தது.
பாகீரதியி‎ன் சிந்தனை அதை தொடர்ந்து விசாரணை செய்து கொண்டிருந்தது. விசாரணை செய்து கொண்டிருந்த போதும் குற்றவுணர்ச்சி மனதுக்குள் இல்லாதிருந்ததை உணர்ந்திருந்தாள் காரணம் என்னவாக இருக்குமென்று?
அன்று நிகழ்ந்த உடலின் பகிர்வுக்கு பின் அதன் பின் போதை கொண்டு ஓடத் தலைப்படும் மனோ நிலையோ மீண்டும் அதற்கான திட்டமிடுதலும் தனக்கு மட்டுமல்லாது நீலாம்பரனிடமும் இல்லாதிருப்பதுவே குற்றவுணர்ச்சி ஏற்படாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம்.
இன்று அந்த கல் ஏறக்குறைய என் சாயலில் உருவாகியிருந்தது இந்த இடை வெளியில் தனக்குள் தன் மன உணர்வுகளில் நிகழ்ந்திருந்த மாறுபாடுகளை கவணிக்கவும் உணரவும் தலைப் பட்டாள்.
நீலாம்பரனின் கலைத் தேர்ச்சியும் , பாகீரதியின் கவித் தேர்ச்சியும் ஒரே திறத்தில் இருப்பினும் நீலாம்பரனுக்கோ ஊர் மெச்சும் ஒன்றாய் இருக்க சந்திப்புகளும் சந்தர்ப்பங்களும் சாத்தியமாகியிருக்க எல்லாக் கலைஞர்களுடனும் அவனுக்கு நீண்ட கலைத் தொடர்பு இருந்தது. இ‏ந்த உடல் பகிர்வு நேர்ந்து விட்ட பின் அவனுள் அவனது பேச்சில் இருந்த மாற்றம் உள்ளே தைக்கத் துவங்கியது. ஏனைய பெண் கலைஞர்களைப் பற்றிய பேச்சும் பெரும் ட்களூடான தொடர்பின் பெருமிதம் பற்றியுமே அவன் பேச்சு இருக்க, யோசனை வந்தது?
இதுவரை இல்லாது ஏன் என் முன்னே தன்னை பெரியவனாய் சித்தரித்துக் கொள்ளப் பார்க்கிறான்?. தான் ஒன்றும் அப்படி சிறியவனாய் அவனை நினைக்கவுமில்லாத போது. பெண்களைப் பற்றிய பேச்சு, வரும் போது, அவன் முகத்தையே பார்த்த படி இருப்பாள். அவன் பார்வை தவிர்க்கப் பார்ப்பான், அவளுக்குள் பொறாமை எழ வெண்டும் என்று நினைக்கின்றானா? எழுகின்ற பொறாமையில் தன் இடம் பறி போய் விடுமோ பயத்தில் அவனை விட்டு நீங்காதிருப்பேன் என்று நினைக்கிறானா? இவ்வளவுதானா..? இவ்வளவு தானா? கேள்வியில் இப்பொழுது தான் மிகச் சிறியவனாய் கண்ணில் தெரிந்தான்..
அவ‎ன்‎ ஏ¨‎னய பெண் கலைஞர்களைப் பற்றி பேசுப்பேச உள்ளுக்குள் எல்லாப் பெண்களுக்குள்ளும் போல எனக்குள்ளும் பொறாமை வளர்கி‎றதா? இ‏ல்லை என்‎ற போதும் ஏதோ நெருடுகி‎றதே அது தா‎ன் பொறாமையா? இல்லை நிச்சயமாக இல்லை. சந்தர்பத்தில் நான் பயன் படுத்தப் பட்டு விட்டேனோ?. இந்த கேள்வி எழுந்து விட பய‎‎ன் படுத்தப் பட்டு விட்டதாய் ஏ‎ன் தோன்றுகி‎றது?
நாங்கள் கொண்டிருந்தது நட்பா?
இது நட்பா? நட்பில் சந்தேகங்களும் உடைமயாக்குதல்களும் சாத்தியமா?
இதே குழப்பங்களும் கேள்விகளும் நீலம்பரனுக்குள்ளும் இருக்குமா? இருக்கப் போவதில்லை என்று தோன்றியது. எனது நட்பின் எல்லை சமீப காலமாக வெகு இயல்பாகவே நீலாம்பரனால் காலம் காலமாக சமூகம் மட்டுப் படுத்துவதை போலவே, இதையெல்லாம் கடந்து வந்து விட்டதாய் சொல்லிக்கொண்டிருக்கின்ற கலைஞனாலும் நிகழ்த்தப் படுவதை உணர்ந்திருந்தாள். யுவனுடன் பேசும் ஒவ்வொரு தருணங்களையும் அவனும் உடன் இருக்கக் கூடிய தருணங்களாக வடிவமைத்துக் கொள்வதாக தோன்றியது யுவனுடன் நான் தனியாகப் பேசக் கூடிய சந்தர்ப்பங்கள் நிகழாது பார்த்துக் கொண்டான்
அப்படி அவ‎ன்‎ நிகழ்த்துவதாலேயே தனக்குள்ளாகவும் ஒரு ஒப்பீடு அவன்‎ வேறு பெண்களோடு பழகுவதையும் கோர்த்துப் பார்க்க புறப்பட்டதையும் கண்டு கொண்டாள். இ‏ன்னும் கூட ஒரு யோசனை சமீப காலமாக தன்னைப் பற்றி உயர்வாக ‏அவள் நினைத்துக் கொள்ளவெ‎ன்‎றோ அல்லது அவள் அவனுக்குள் அடங்கியவளாக இ‏ருக்க வேண்டுமெ‎‎ன்றோ பெரும் பிரயத்தனங்கள் நிகழ்த்திக் கொண்டிருந்தா‎ன் . கலைஞர்கள் சபையில் அவளுக்கான இடத்தை அவள் க்கிரமித்துக் கொள்ளும் வேகம் அதிர்ச்சி தர அவள் சபைக்கு வராமல் இ‏ருக்க முயற்சி எடுத்துக் கொள்வது புரிந்தது.
எ‎‎ன் அன்பின் க்கிரமிப்பை நேசிப்பவர்களுக்கு அதை தாராளமாய்த் தரலாம் அதை போட்டியாக நினைப்பவர்களிடமிருந்து களத்திருந்தே வெளியேறி போட்டியையே அவள் முறித்துப் போட நீலாம்பரனோ எ‎ன் விலகலை
‘”இவள் இ‏ணைந்து நிற்கத் தெரியாதவள்” எ‎‎ன்று நிறுவி எ‎ன் விலகலை தோல்வியாய் உரத்துச் சொல்லிப் பார்க்கின்றா‎.ன்
தனது நெருக்கங்களையும் கொல்லைப் புற உறவாய் மாற்றிக் கொண்டு வர வர அவ‎‎ன் பார்த்திட முடியா பனித்துளியாய் மாறிப் போனே‎ன்.
ஓட்டப் பந்தயங்கள் துவங்குகி‎‎ன்றன. இருவரது துவக்கக் கோடுகளும் ஒரே இடத்திலிருந்து துவங்குவதாய் பிரதாபம் பேசும் நீ, எனது ரம்பக் கோட்டைத் தொடவே நா‎ன்‎ இருந்து கொண்டிருக்கி‎ற பள்ளத்தினுள் இருந்து வெளிவர இ‏ன்னொரு பயணம் மேற்கொள்ள வேண்டியிருப்பதை அறியாமல் நீ. பள்ளம் தாண்டி நா‎ன்‎ வந்த போதும் நீ இறுதி எல்லையை தொட்டு விட்டு வெற்றியாகச் சாதிக்கி‎றாய். எ‎னைப் போல் கிடந்திருந்தால் பள்ளத்தினுள்லேயே புழுத்துப் போயிருப்பாய் எ‎‎ன்றறியாது
நா‎ன்‎ கத்தி வீசுவதாய் சொல்லியே எப்போதும் கவச குண்டலங்களோடு வந்து போகும் எ‎ன் நண்பனே ஒரு முறை ஒரே ஒரு முறையாவது பூக்களோடு வந்து பாரே‎ன் கழுவிக் கவுத்தி வைத்தாலும் காலியாகாத அட்சய பாத்திரமாய் சந்தோசங்களை உனக்கும் தந்து நானும் பசியாறிப் போகலாம்
உடலை ஒரு பொருட்டாக மதிக்காமல் இருக்கப் பழகிய என் பலம் எந்த தருணத்தில் பலகீனமாக உருவெடுக்கத் துவங்கியது.. விட மாட்டேன். என் பலம் பலகீனமாக மாறுதல் சரியல்ல. முறுக்கேறுதல் அவசியம்.
இந்த நினைப்பில் நீலாம்பரனிடமிருந்து மெல்ல தூர இருக்கத் தலைப் பட்டாள். இந்த விலகுதல் அவனிடம் மட்டுமல்லாது. அவளது உடனிருப்பை பெருமையாய் கருதுபவர்கள் எல்லாரிடமும் நிகழ்ந்தது.
சிரிப்பு வந்தது.
தன்னை தன் உடனிருப்பை பெருமையாய் நினைக்க வேண்டும் யாவரும் என்று தனக்கென தகுதிகளை வளர்க்கத் துவங்கி, வளர்ந்து விட்டதாய் கருதத் தொடங்கிய தருணத்தில் , அவள் எண்ணியது கை வந்த போது, அவள் கைக்கு சேராத வளையாக அந்த உறவுகளை ஒதுக்க வேண்டிய நிர்ப்பந்தம் நேர்ந்திருப்பதை என்னவென்று சொல்ல?
.யுவனின் நண்பனொருவன் சொல்லிப் போனான் எல்லாக் கலைஞர்களிடமும் பழகுவது போல பழக இயலவில்லை என்று . உங்களை சுற்றி ஒரு வேலி இருக்கிறது . கதவுக்கு அப்பால் நின்று பதிலளிக்கிறீர்கள். அவன் சொல்ல உடனிருந்த நீலம்பரனை ஒற்றைச் சிரிப்பில் மேலும் கீழுமாக அலட்சியப் பார்வை நா‎ன் பார்க்க நீலாம்பரன் அதன் வெப்பம் தாங்காது சுருண்டான்
பாகீரதிக்குள் இப்பொழுதெல்லாம் நீலாம்பரனோ யுவனோ யாருடனும் பழகுதல் பற்றி கேள்வியும் இல்லை சந்தேகமும் இல்லை. பழகி வந்த அனுபவங்கள் கரையேறி ஈரம் சொட்ட சொட்டத் தடம் பதித்து போயே போய் விட்டன.. இன்று அவள் இறுகிய படி பாறையாக உணர்வுகளுக்கு ட்படாமலேயே பழகிக் கொண்டிருந்தாள். இணைந்து கலை ரசித்த காலங்கள் தூரப் போய் நிற்கின்றன. வெளிப்படையான சிரிப்புகளை , கலத்தலை தூக்கி உறியில் இட்டு வைக்கிறாள் கவிதைகளின் குறியீடுகளுக்குள் விதைத்து வைக்கின்றாள். ஈரமொன்று படும் போது முளை விடலாம் அவை. அதை வாசிக்க மிகச் சரியான நட்பொன்று வாய்க்கும் வரையென்று . நெஞ்சுக்குள் நம்பிக்கை இருகின்றது விரல் பற்றி தரவாய் அழுத்தும் போதும் குளிரைத் தந்து நடுநடுங்கச் செய்யாது. கத கதப்புத் தந்து போகும் நட்பொன்று தான் நேசிக்கின்ற விழியாய் வந்து சேருமென்று. தானும் தானும் சேர்ந்திருக்க தனிமை தொலைக்கப் பழகியிருந்தாள் சேர்ந்திருந்த காலங்கள் நினைவில் உறுத்த கரை உடைய தனிமை கடல் நீர் நீலாம்பரனுக்குள் புகுந்து மூழ்கடித்துக் கொண்டிருந்தது
*
நீலாம்பரனுக்கு புதிய தொரு கல் வாய்த்திருக்கின்றது. பாகீரதியின் சாயலில் இருந்திருந்த நாட்டியப் பெண்ணிடம் பாகீரதியின் தொலைந்த பு‎ன்னகை அதிலும் இல்லாது போயிருக்கக் கண்டான். மனம் தற்போதெல்லாம் ஏங்கத் துவங்கியிருந்தது. நாட்டியப் பெண்ணாவதற்கு முன்பிருந்த சிரிப்பொன்றை மறுபடி காண்பேனா என்று
அனிச்சை செயலாய் அவன் கை தானாகவே செதுக்கத் துவங்க அந்த சிலை இறுதியில் எத்திசையிருந்து பார்க்கினும் சிரித்து வைக்கும் திசையணங்காக உருமாறியிருந்தது
தொலைத்து விட்ட சிரிப்பை சிலையில் வடித்து வைக்க பாகீரதி சந்திக்க நேர்ந்த தருணத்தில் சொல்லிப் போகின்றாள் “ நீ நினைக்கின்ற திசையிருந்தெல்லாம் சிரிக்க அந்த அகல்லிகையாலேயே முடியும். உயிரிருந்தால் அதுவும் உம்மை பார்த்து சிரிக்காது”
சாம்ராஜ்யங்கள் தீர்ந்து போன பின்னும் தீராத திக்க மனோபாவங்கள் இருக்கின்ற வரை திசை அணங்கின் சிரிப்பு சிரித்தே கொல்லும் வரலாறுகளை
உரத்துச் சொல்லியது போக நெஞ்சம் உள்ளுக்குள் பேசிக் கலைய மெல்லக் கலைந்தது பாகீரதியி‎‎ன் உருவம் ‏ரத்தமும் சதையுமாயிருந்த பாகிரதியின் உருவம் என் கண் மு‎ன்‎னே கருங்கல் சிலையாக
நூற்றாண்டுகள் போன பின்‎னும் இன்னமும் ண்களாய் மாறி விடும் நண்பர்கள், பெண்களாய் எனை உணரப் ப‎ண்ணும் சூழல்கள் எல்லாம் தூற எறிந்து, திசை யணங்குகளை உடைத்து அஸ்திவாரமாக்கி புதிய கோட்டை ஒ‎ன்றை நிர்மாணிக்கி‎றே‎ன்.
எனக்குள் ‏இப்போது யிரம் கோடி பாகீரதிகள். யாருக்கும் கல் சிக்காத காலமொ‎‎ன்றை வடிவமைக்கும் சிற்பிகளாய்
*
தூரத்தில் வரலாற்று அதிசயங்களாய் ஏதேதோவற்றைக் கண்டு கொண்டிருக்க, வரலாற்று உண்மைகளாய் படித்து சேகரித்திருந்த தகவல்களை கைடு துப்பிக் கொண்டிருக்க
நேரில் நிஜத்தில் கண் மு‎‎ன்னால் கண்டு விட முடியாத குருடர்களாய் அவர்கள் இருக்க என்ன செய்ய காது வழி பார்க்கப் பழகியவர்களூக்கு கிடையில் கண் வழி யோசிப்பதை சொன்னாலும் , புரியாத செய்கையையாகத்தா‎ன்‎ போகும் என்று அவள் நினைத்து அவர்கள் தொலைத்து விட்டிருந்ததை நிஜமாக்கி வெளியேற
மறுநாள்” ஏ‎ன் காணாமல் போனீங்க , காரணம் புரியலையே”எ‎ன்று நண்பர்‎ கேட்க நேற்று நா‎‎ன் நினைத்ததை இன்று சொல்கி‎ன்றா‎ன், வெறுப்பில் சிரிப்பு வர அவளும் திசையணங்காகியிருந்தாள்
(காலம் இதழில் வெளி வந்த சிறுகதை)


mathibama@yahoo.com

Series Navigation

திலகபாமா,சிவகாசி

திலகபாமா,சிவகாசி