அமலா.. விமலா..கமலா

This entry is part [part not set] of 40 in the series 20031204_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


திருவல்லிக்கேணியில் காலைப் பொழுதுகளில் கையில் மஞ்சள் பையும் நெற்றியில் தி ருமண்ணுமாக, நம்ம சீதாப் பாட்டியின் புருஷர் அப்புசாமி ஜாடையில், தொலைத்துவிட்டுத் தேடும் பார்வையுடன், ஒட்டமும் நடையுமாக சஞ்சரிக்கும் ஒரு பல்லியைப் பார்க்க நேர்ந்தால் எச்சரிக்கையாயிருங்கள். பொத்தாம் பொதுவாக நீங்கள் பார்த்து வைத்தால் போதும். கிழவர் உங்களை நெருங்கிடுவார். நுனிநாக்கு ஆங்கிலத்தில் காவிரித்தண்ணீர், வீரப்பன் என ஆரம்பித்து அப்துல் கலாமுக்கும் தனக்குமுள்ள ஆறுவித்தியாசங்களில் ஆச்சரியப்படவைத்து, பயோகெமிஸ்ட்ரியில் மேல்ஸ்தாயியில் அவர் வலம் வரும்பொழுது அநேகமாக நீங்கள் சரண்டர்.

என்.டி..சி பற்றிக் கேள்விப்பட்டிருக்கீங்களா ? நேஷனல் டெக்ஸ்டைல்ஸ் கார்ப்பரேஷன் இல்லீங்க நியூக்ளியர் டிரான்ஸ்பர் குளோனிங். அதுல ஏற்பட்ட சுவாரஸ்யத்துல இப்படித்தான் ஒருநாள் அந்தக் கிழவரின் அறிவுபூர்வமான சம்பாஷனையில் மயங்கி, அவரோட வீட்டுக்கு அழைக்கப்பட்டேன்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை, மாலை. பாரத்தசாரதி கோவிலைச் சுற்றியிருந்த டப்பாக்கட்டு வீடுகளில் ஒன்றுடன் என்னுடனிருந்த முகவரியைச் சரிபார்த்துக்கொண்டு அழைப்பு மணி யை அழுத்திக் காத்திருந்த பத்தாவது வினாடி நான் சந்தித்ததென்னவோ ஒரு தேவதையை. இன்னொரு உலக அழகியை, இங்கே சென்னையில் திருவல்லிகேணியி ல் ஒரு தீசல் வீட்டில் எதிர்பாராமல் பார்த்து மூர்ச்சையாகாதது ஆச்சரியம்.

‘யெஸ் ? ‘

‘ நான் சுந்தரம். பயோ கெமிஸ்ட்ரியில டாக்டரேட் செய்யறவன். இங்கே நாரயணன்னு ஒரு பெரியவர் இருக்கணும்.. ‘ என்னோட சுயபுராணம் தேவையில்லாதது. இருந்தாலும் என்மீது அவளுக்கு ஒரு ஈர்ப்பு வேண்டுமென்பதற்காகச் சொல்ல வேண்டியிருந்தது.

‘ம்.. கம் இன். உள்ள வாங்க! என்று ஒதுங்கி நின்ற பெண்ணை இரண்டாம் முறையாக நிமிர்ந்து பார்த்தேன். எனக்குள் ‘குபுக் ‘ கென ஒரு வேதியியல் மாற்றம். என்னுடைய செல்களில் சில சேர்ந்தாற்போல அவளது செல்களோடு மயக்கங்கொள்ள ஆரப்பிச்சது அப்போதுதான்.

‘என்ன அப்படிப் பார்க்கறீங்க ? ‘

‘நீங்க.. ? ‘

‘அவசியம் தெரிஞ்சிக்கணுமா ? நீங்க மிஸ்டர் நாராயணனைத்தான பார்க்கணும் ? ‘

‘ஆமா.! ‘

‘அப்ப நேரா பின்வாசலுக்குப் போயிட்டு, உங்களுக்கு வலப்புறமிருக்கும் கதவை அழுந்தத் தட்டுங்க. ‘ சொன்னவள் குரலில் அலட்சியம் 50 டெசிபலில் குதித்தது. கூடத்தைக் கடக்கும் பொழுது, நாசியில் ஐயங்கார் வீட்டு புளியோதரையின் வாசமும், துறி ஞ்சல் வாசமும் சேர்ந்தே நுழைய, கண்களில் அவளிட்டிருந்த குளோரோபார்மின் அரை மயக்கத்தில், அந்தப் பெண் காட்டிய அறையினை அடைந்து, ‘நாராயணன் சார்! ‘ என அழைத்தேன்.

‘வாடா மருமகனே ‘, என்ற குரலைத் தொடர்ந்து கதவினைத் திறந்தால், குரலுக்குரியவர் சோதனைக்குழாயும் கையுமாக வலம் வந்து கொண்டிருந்தார். என்னை ஓரமாக இருக்கச் சொன்ன சில நிமிடங்களில் ‘டா ‘ போட்டுக்கொண்டு வந்தார்.

‘ என்ன பேரு ? சுந்தரம் சரிதானே ? எனக்கு இந்தத் தூளெல்லாம் பிடிக்காது தேயி லைதான். தேயிலை ஒரு நல்ல பானம் தெரியுமோ ? விட்டமீன் ‘ பி காம்ப்ளெக்ஸ ும் ‘, ‘ விட்டமீன் ஈ ‘ யும் நிறைய இருக்குது. கொலஸ்ட்ரால கூட குறைக்கலாம். உனக்கு டாக்டர் வில்மட் தெரியுமோ ? ‘

தெரியாதா என்ன ? 97ல முதல் குளோனிங் ட்டுகுட்டியைக் கொண்டுவந்தவராயிற்றே ? ‘

‘கிழிச்சான். அய்யோக்கியன். என்னை முழுசா ஏமாத்தினவன். எல்லாமே என்னோட உழைப்பு.. பாஸ்ட்டர்ட், . கடைசியில பிரஸ்மீட்ல என்னைப் பத்தியேப் பேசல. உன்னைப் போல ஒருத்தனத்தான் தேடிக்கிட்டிருந்தேன். யு காண்ட் டிசீவ் மி. நம்பகமா இருக்கணும். வில் யூ ?

‘யெஸ்.. யெஸ்… இப்ப இதுக்கு என்ன பதில் சொல்றதுண்ணு தெரியலை மிஸ்டர்.. நாராயணன் ‘

‘ மருமகப் பையா… யூ கேன் கால் மீ `ஓல்ட் கை ‘ ‘ சொல்லிவிட்டுக் கிழம் கெக்கேபி க்கெ என்று சிரித்தது.யோசித்தேன். கிழத்திடம் என்ன பதில் சொல்வதென்ற தயக்கம். சற்றுமுன் என்னை வரவேற்ற பெண் நினைவை இறுக அணைக்க, அந்தப் பரவசத்தில்

‘ ‘ஐ திங்க், ஐ வில். நம்பகமானவனாயிருப்பேன். சத்தியம் செய்யட்டுமா ? ‘ என்றேன்.

‘. நாட் நெஸ்ஸசரி. நான் நம்பறேன்.. உன்னைப் போன்றவனுக்காகத்தான் காத்தி ருந்தேன். அதோஅந்த அறை முழுக்க எனது இருபது ஆண்டுகால உழைப்பிருக்கிறது. எல்லாமே டா.என்.ஏ. ஆர்.என்.ஏ. பற்றிய சுவாரஸ்யமான சங்கதிகள் ‘.

பார்த்தேன். பழுப்பேறிய தாள்களிலிருந்து எலிப் புழுக்கை வாசனைதான் வந்தது.

‘இன்றைய தேதியில் அமெரிக்கக் கம்பெனியான அட்வான்ஸ்டு செல் டெக்னாலஜியோடு ஒப்பந்தம் செய்துக் கொண்டால் மில்லியன் கணக்கில் டாலர் பார்க்கலாம். இனி எல்லாவற்றிற்கும் நீ தான். என் பெண்ணையும் சேர்த்துதான் சொல்கிறேன் ‘. கண்சிமி ட்டினார்.

டாலரைவிட அவர் உபயோகித்த பெண் என்ற வார்த்தை பரவசப்படுத்தியது..

‘புரியலை. ‘.

‘சற்று முன் பார்த்தாயே அவள் என்னோட டாட்டர் அமலா. அவள் சுயம்வரத்திற்கு உன் ஒருவனோட அப்ளிகேஷன் மட்டுமே ஏற்கப்படும். என்ன சொல்ற ? ‘

என் சந்தோஷத்தை கிழத்திடம் மறைக்க முடியாமல் அசடு வழிந்தேன். அதற்குப்பிறகு நடந்ததெல்லாம் அமலாவுக்காக. கிழவானாரிடம் இருந்த பயோகெமி ஸ்ட்ரி அறிவுக்காக அல்ல என்பது என்சிற்றறிவுக்கு எட்டியே இருந்தது.

அந்த முதல் நாளுக்குப் பிறகு அனேக காலைகள் எனக்கு திருவல்லிக்கேணியில்தான் வி டிந்திருக்கிறது.கிழவர் நாராயணனோடு சேர்ந்து ‘பாபோகம் பாபக் கன்மோகம் ‘ என ஆரம்பித்து பிரார்த்த ஸ்நான மந்திரம் சொல்லியிருக்கிறேன். துளசியைக் கையில் அடக்கி க்கொண்டு பார்த்தசாரதியை வலம் வந்திருக்கிறேன். பகல் நேரங்களில் கிழவரோட லாபி லும் மற்ற நேரங்களில் கிழவருக்குத் தெரிந்தும் தெரி யாமலும் அமலாவை அணைத்துக்கொண்டு காதல் செய்திருக்கிறேன்.

ஆரம்பம் என்று ஒன்றிருந்தால் முடிவு என்று ஒன்றிருக்கணும் இல்லையா. அமலாவோட ஏற்பட்ட காதலும் சரி, கிழவனோட நான் செய்த டி..என்.ஏ வும் சரி அநி யாயத்துக்கு ‘வீரப்பன் வேட்டை ‘ யாகிவிட்டது. முடிவுக்கு வராதோ என்ற எரிச்சலி ல் அமலாவை ஒருவாறு கன்வின்ஸ் செய்து, ஒரு சுபயோக சுபதினத்தில் எனது நண்பர்களைச் சாட்சிக்கு வைத்து, பதிவுத் திருமண அலுவலகத்தில், அவளும் நானும் மாலை மாற்றிக்கொண்டோம். அசீர்வாதத்திற்காக கிழவன் நாராயணிடம் வந்தோம். ‘வாடா மருமகனே.. அவசரப்பட்டுவிட்டாயே ? என்றார்.

‘புரியலை ‘

‘இரவுக்குப் புரியும்.. ஜமாய்.. கிழம் மறுபடியும் அசட்டுத்தனமாகக் கண்ணடித்தது. சொந்தப் பெண்ணை இழுத்துக் கொண்டுபோய் மாலையும்கையுமா வந்து நிக்கறேன். ஏதோ ஓட்டலிலிருந்து பலகாரப் பார்சலோடு வந்திருப்பதுபோல ‘ஜமாய் ‘ ன்னு சொன்னா கோபம் வராதா ? வந்தது. இருந்தாலும், இரவுக்காக காத்திருந்தேன். கி ழந்தான் எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தது. முதலிரவுக் கட்டிலில் உஷ்ணத்தோடு காத்தி ருந்தேன்.

‘என்னடா மருமகனே ? ரெடியாயிட்டயா ? ‘நான் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.

‘என்ன விஷயம் ? எங்க வந்தீங்க ? ‘

‘பி நார்மல். முதல் இரவுல பரபரப்பில்லாம நிதானமா நடந்துக்கணும். ‘மையோசிசம் ‘ இயல்பா செயல்படனும் (புரியலைன்னா விடுங்க. இப்படித்தான் கிழம் தன் அறிவை பீத்தி க்கும்). அதுக்குமுன்ன இதைக் குடிச்சிடு! ‘

‘என்னது ? ‘

‘புளிக்காத மோர். குடிச்சதுக்குப்பிறகு வெண்பூசணிப் பூவையும், முட்டைக் கோசையும் சாப்பிட்டுக்கோ. பேயன் வாழைப்பழமும் வாங்கி வச்சிருக்கன் ‘

‘மிஸ்டர் நாராயனன்!.. நீங்க போயிட்டு அமலாவை அனுப்பிவைக்கிறீங்களா ? ‘

‘ அவசரப்டாதே மருமகனே! அமலா..! மை லவ்.. கம் இன்.. ‘ ஏதோ வீட்டில் வளர்க்கும் நாய்க்குட்டியைக் கூப்பிடுவதுபோல.. பெண்ணைக் கூப்பிட்டது கிழம்… இங்கேதான் பத்திருந்தது. ஒரு அமலா அல்ல மூன்று அமலாக்கள் வரிசையாக அச்சில் வார்த்தது போல வந்து நின்றார்கள். நான் மூர்ச்சையாகாத குறை.ஆச்சரியமாயிருக்கா ? மூன்று பேருமே என்னோட படைப்புகள். நேர்த்தியான ஜெராக்ஸ் படிவங்கள் இறப்பதற்குமுன்ன என் மனைவியோட, ஒரு செல்லிலிருந்து அமலாவை உண்டுபண்ணேன். அவளிடமிருந்து விமலா பிறகு கமலான்னு. அதற்கப்புறம் வரிசையா இன்னும் இரண்டுபேர். என்ன பார்க்கிற ? மற்றவங்க இரண்டுபேரும் எங்கன்னு பார்க்கறி யா ? அதுகள் இரண்டும் அதிக நாட்கள் உயிர் வாழல. ‘

‘ மிஸ்டர் நாராயனன், நான் காதலிச்சுக் கல்யாணம் செய்துகொண்ட அமலா இதுல யாரு ? ‘

‘ நீ நேற்று கல்யானம் செய்துக் கொண்டது விமாலாவை. காதலிச்சதுண்ணு சொன்னா. மூன்று பேரையும்ந்தான் ‘

‘என்ன உளர்றீங்க ?

‘ஆமான்டா மருமகனே, திங்கள் புதன்னா அமலாவோட இருந்திருப்ப, செவ்வாய் வி யாழன்ல விமலா, வெள்ளி சனின்னா கமலா. ஞாயிற்றுகிழமைகள்ல பிளானிங்கப் பொறுத்தது ‘

‘ அய்யயோ! எனக்குத் தலையைச் சுற்றுது ‘

‘மை டியர் மருமகனே! இனி மூன்றுபேரையும் சமாளிக்கவேண்டியது உன் பொறுப்பு. கூடவே ரீஜெனரேஷன் பற்றிிய ஆய்வுக்கு நீ உதவணும். விடிஞ்சதும் பிச்சி இலையில் கஷாயம் செய்துதரேன். சமர்த்தா இருந்துக்கோ! வரட்டுமா ? ‘

கிழவர் நாராயணன் கதவை சார்த்திக்கொண்டு புறப்பட்டார்.

சுபம்

http://www.thinnai.com/st1120035.html

http://www.thinnai.com/st0822031.html

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா