ஒப்புமை

This entry is part [part not set] of 21 in the series 20020224_Issue

திலகபாமா,சிவகாசி


மனம், அடுப்புக்கும் தொலைபேசிக்குமிடையில் என்னைப்போலவே ஊசலாடிக் கொண்டிருந்தது. விரித்த கூந்தலில் சிக்கெடுக்க முயன்றபடியே எங்கு விழுந்த சிக்கலென்று யோசித்தபடி நான்கு முறை நடந்து விட்டேன் அடுப்படிக்கும்,கண்ணாடி மேசைக்கும். சீப்பு மட்டுமல்ல,சிந்தனைக்குள் பிரச்சனைக்கான காரணங்களும் கண்ணாமூச்சு காட்டியது. நினைவுக்குள் அன்றைய இரவு வந்து போனது.வீடு வந்திருந்த தூரத்துச்

சொந்தங்கள், நல்ல மாப்பிள்ளை உன் தங்கைகேற்றவன் என்று சொல்ல விகல்பமில்லாது, தாமதிக்காது இரவு 9 மனிக்கு மாப்பிள்ளை வீட்டாரின் தொலைபேசி எண் வாங்கி மாப்பிள்ளை பற்றி அவன் தாயாரிடமே விசாரணை.

சந்தோசத்தை சாதித்து காட்டிய நாட்களவை.

கல்யாண சந்தோசக் குளம் நிறைய நாமளும் ஒரு துளியாய் இருந்தோமுன்னு ஒரு சந்தோசம். குளம் நிறைந்த தை கண்டு மகிழ்ந்திருந்த நேரத்தில் அதன் உவர்ப்பு தன்மையை உணராது போய் விட்டிருந்தோம்.

மாமியாரம்மா சொன்ன ஒரு வார்த்தை குத்திக்கிட்டேதான் இருந்தது ‘உங்க வீட மாதிரி நினைச்சிராத.வெறும் மோதிரம் உன் மாப்பிள்ளைக்கு மாதிரி என் பையனுக்கு போடக்கூடாது. வித்தியாசமான பேரம் பேசல்,பதில் பேரம் பேச முடியாதபடி.

உப்பியிருந்த பலூனை ஊசியால் குத்த கைவிட்டகன்று பறந்து மெலிந்து சுருங்கி,மெல்ல ஊசலாடி,தரை தொடுதலாய் சந்தோசத்துள் சிக்கியிருந்த மனம் குத்தல் பட்டு துவண்டாலும் கையிலிருந்த பலூன்ஊயர பறந்த சிறிது நேர சந்தோசத்தை நினைவு கூர்ந்த குழந்தையாய் ‘அவங்க சொல்லறதும் வாஸ்தவம் தான் ‘,மனம் நொண்டிச் சாக்கு தேடிக்கொண்டது

அவங்க குடும்பத்தாரிடம் பெருமையா சொல்றதுக்கு ஆசைப்படுறாங்க தப்பிலே,மத்தபடி, அன்பான வார்த்தைகள்…

அடியிலிருந்த முள் காணாது மலர் கண்டு மலர் மணம் கண்டு….. இதழ்கள் வாடிய பின் அடியிருந்த முட்கள் மட்டுமே நிரந்தரமாய்

காலச்சக்கரம் எனக்குள் தோண்டிய பள்ளத்தை நிறைக்கும் முயற்சியில் உயரும் படிகள் தேடியபடி என் பயணமும்.

ஒவ்வொரு நிமிட உழைப்புள்ளும் என் மன உளைச்சல் தொலைக்க முயற்சிக்க தென்றலோடிசைந்து மெல்லிய ஊசலாட்டம் அதிகரித்து உரசி உரசி பற்றிக் கொண்ட

பச்சை மரங்களாய்,பற்றிக் கொள்ளுவோமென யாரும் எதிர்பார்க்காத நேரத்தில்,உப்புக் கரிப்புக்குள் மூழ்க நித்திய பரிசாய் முத்துக்கள் உயிர்க்கும் வாழ்வென் கை பற்றி வந்தழைத்துச் சென்றது நிலவில் என் மனதில் எனக்கும் என் தங்கைக்குமான ஒப்புமை தந்தது வரம்

என் தங்கை மாமியின் மனதிலோ எனக்கும் என் தங்கை வாழ்வுக்குமான ஒப்புமை

சாபமாய், தரிசாய் விரிசல் விடச் செய்ய மனதில் அதன் எதிரொலியாய் எத்தனை கசப்புகள்

முகம் சுளிக்க வைத்த கசப்புகள் கணம் நிறைக்கச் செய்ய கசப்புகள் கண்மூடி நினைவுக்குள் கிடந்தாலும் கழுத்துக்குள் உருளும் கசப்புகள் தொலைபேசி வயர் கருக வந்த கசப்புகள் சோறு போடும் தாயாய் இருந்த மலைமகள் தந்து விட்ட சீதனமாய் வாழைப்பழங்கள்,அம்மா வீடு சென்றிருந்த நான் எனக்கும் தங்கைக்குமென ஆசையோடு தாங்கி வர,

சுற்றிய தொலைபேசி எண்ணில் தொல்லைகள் சுற்றிவருமென அறியாது ‘

அம்மா பழம் கொடுத்து விட்டங்கப்பா, வேலையாள் இருந்தா அனுப்பி விடு கொடுத்து விடறேன் ‘ சொல்லிய தகவலில் சுருக்கிட்டு கொண்ட உறவு

‘நானே வருகிறேனக்கா, அவரும் வீட்டில் இருக்கிறார், சேர்ந்து வருகிறோம்

முடிந்து விட்ட பேச்சு ,முடியாது தொடர்ந்த சிக்கல்

எனக்கும் அவளுக்குமான ஒப்புமை தொண்டைக் குழிக்குள் ஆலகால விசமாய் முழுங்கவும் முடியாது , துப்பவும் முடியாது நிரந்தரமாய் மாட்டிக் கொண்டிருக்க அக்கா வீட்டுக்கெல்லாம் போகக்கூடாது. பொம்பளை சும்மா திரியக்கூடாது.சொன்ன வார்த்தையில் சுண்டியிழுக்கப்ப்ட்ட மீனாய் அவள் தன்மான உணர்வு

‘போனால் என்ன ? ‘ கேட்கச் சொல்ல ‘போய்த்தான் பாரேன் ‘ பேச்சு வளர தென்றலில் அலைந்த கேசத்தில் விழுந்த சிக்கலாய் முறித்து அவள் கிளம்பி வந்து, பழங்களை பெற்றுச் செல்ல …பெற்றுக் கொண்ட பழத்துடன், போனதுக்கு தண்டனையாய்,தொலைத்தாய் உன் தாய் தந்தை சந்திப்பும் தமக்கையின் ஆயுள் உறவுமென விதித்த விதியில் விதிர்த்தபடி இருவேறு மனங்களுக்கிடையில் ஒரெ பொருளுக்கன ஒப்புமை எதனால் தடம் புரண்டது. எப்போது தப்பியது ?

சீப்பு சிக்கில் எசகு பிசகாக சிக்கிக் கொள்ள விரித்த வலையில் நிதர்சனம் கண்டேனா ? தொலைத்தேனா புரியாது. தொலைபேசி சிணுங்களுக்கு காத்திருந்தேன்…பின்னி முடித்த கூந்தலுடன் , சமையல் முடித்து பிள்ளைக்கு சாப்பாடு அனுப்பியிருப்பாள். நிச்சயம் அழைப்பாள்,என்னக்கா ? இன்னைக்கு என்ன சமையலென்றே ? கடந்து போய்க் கொண்டிருந்தன முட்கள் கடிகாரத்தில்

***

Series Navigation

திலகபாமா,சிவகாசி

திலகபாமா,சிவகாசி

ஒப்புமை

This entry is part [part not set] of 21 in the series 20020224_Issue

திலகபாமா,சிவகாசி


மனம், அடுப்புக்கும் தொலைபேசிக்குமிடையில் என்னைப்போலவே ஊசலாடிக்
கொண்டிருந்தது. விரித்த கூந்தலில் சிக்கெடுக்க முயன்றபடியே எங்கு விழுந்த
சிக்கலென்று யோசித்தபடி நான்கு முறை நடந்து விட்டேன் அடுப்படிக்கும்,கண்ணாடி
மேசைக்கும். சீப்பு மட்டுமல்ல,சிந்தனைக்குள் பிரச்சனைக்கான காரணங்களும்
கண்ணாமூச்சு காட்டியது.
நினைவுக்குள் அன்றைய இரவு வந்து போனது.வீடு வந்திருந்த தூரத்துச்
சொந்தங்கள், நல்ல மாப்பிள்ளை உன் தங்கைகேற்றவன் என்று சொல்ல விகல்பமில்லாது,
தாமதிக்காது இரவு 9 மனிக்கு மாப்பிள்ளை வீட்டாரின் தொலைபேசி எண் வாங்கி
மாப்பிள்ளை பற்றி அவன் தாயாரிடமே விசாரணை.
சந்தோசத்தை சாதித்து காட்டிய நாட்களவை.
கல்யாண சந்தோசக் குளம் நிறைய நாமளும் ஒரு துளியாய் இருந்தோமுன்னு ஒரு
சந்தோசம். குளம் நிறைந்த தை கண்டு மகிழ்ந்திருந்த நேரத்தில் அதன் உவர்ப்பு தன்மையை
உணராது போய் விட்டிருந்தோம்.
மாமியாரம்மா சொன்ன ஒரு வார்த்தை குத்திக்கிட்டேதான் இருந்தது ‘உங்க வீட
மாதிரி நினைச்சிராத.வெறும் மோதிரம் உன் மாப்பிள்ளைக்கு மாதிரி என் பையனுக்கு
போடக்கூடாது. வித்தியாசமான பேரம் பேசல்,பதில் பேரம் பேச முடியாதபடி.
உப்பியிருந்த பலூனை ஊசியால் குத்த கைவிட்டகன்று பறந்து மெலிந்து
சுருங்கி,மெல்ல ஊசலாடி,தரை தொடுதலாய்
சந்தோசத்துள் சிக்கியிருந்த மனம் குத்தல் பட்டு துவண்டாலும் கையிலிருந்த பலூன்ஊயர
பறந்த சிறிது நேர சந்தோசத்தை நினைவு கூர்ந்த குழந்தையாய்
‘அவங்க சொல்லறதும் வாஸ்தவம் தான் ‘,மனம் நொண்டிச் சாக்கு தேடிக்கொண்டது
அவங்க குடும்பத்தாரிடம் பெருமையா சொல்றதுக்கு ஆசைப்படுறாங்க தப்பிலே,மத்தபடி,
அன்பான வார்த்தைகள்…
அடியிலிருந்த முள் காணாது மலர் கண்டு மலர் மணம் கண்டு….. இதழ்கள் வாடிய பின்
அடியிருந்த முட்கள் மட்டுமே நிரந்தரமாய்
காலச்சக்கரம் எனக்குள் தோண்டிய பள்ளத்தை நிறைக்கும் முயற்சியில் உயரும்
படிகள் தேடியபடி என் பயணமும்.
ஒவ்வொரு நிமிட உழைப்புள்ளும் என் மன உளைச்சல் தொலைக்க முயற்சிக்க
தென்றலோடிசைந்து மெல்லிய ஊசலாட்டம் அதிகரித்து உரசி உரசி பற்றிக் கொண்ட
பச்சை மரங்களாய்,பற்றிக் கொள்ளுவோமென யாரும் எதிர்பார்க்காத நேரத்தில்,உப்புக்
கரிப்புக்குள் மூழ்க நித்திய பரிசாய் முத்துக்கள் உயிர்க்கும் வாழ்வென் கை பற்றி
வந்தழைத்துச் சென்றது நிலவில்
என் மனதில் எனக்கும் என் தங்கைக்குமான ஒப்புமை தந்தது வரம்
என் தங்கை மாமியின் மனதிலோ எனக்கும் என் தங்கை வாழ்வுக்குமான ஒப்புமை

சாபமாய், தரிசாய் விரிசல் விடச் செய்ய மனதில் அதன் எதிரொலியாய் எத்தனை கசப்புகள்
முகம் சுளிக்க வைத்த கசப்புகள்
கணம் நிறைக்கச் செய்ய கசப்புகள்
கண்மூடி நினைவுக்குள் கிடந்தாலும்
கழுத்துக்குள் உருளும் கசப்புகள்
தொலைபேசி வயர் கருக வந்த கசப்புகள்
சோறு போடும் தாயாய் இருந்த மலைமகள் தந்து விட்ட சீதனமாய்
வாழைப்பழங்கள்,அம்மா வீடு சென்றிருந்த நான் எனக்கும் தங்கைக்குமென ஆசையோடு
தாங்கி வர,
சுற்றிய தொலைபேசி எண்ணில் தொல்லைகள் சுற்றிவருமென அறியாது ‘
அம்மா பழம் கொடுத்து விட்டங்கப்பா, வேலையாள் இருந்தா அனுப்பி விடு கொடுத்து
விடறேன் ‘ சொல்லிய தகவலில் சுருக்கிட்டு கொண்ட உறவு
‘நானே வருகிறேனக்கா, அவரும் வீட்டில் இருக்கிறார், சேர்ந்து வருகிறோம்
முடிந்து விட்ட பேச்சு ,முடியாது தொடர்ந்த சிக்கல்
எனக்கும் அவளுக்குமான ஒப்புமை தொண்டைக் குழிக்குள் ஆலகால விசமாய் முழுங்கவும்
முடியாது , துப்பவும் முடியாது நிரந்தரமாய் மாட்டிக் கொண்டிருக்க
அக்கா வீட்டுக்கெல்லாம் போகக்கூடாது. பொம்பளை சும்மா திரியக்கூடாது.சொன்ன
வார்த்தையில் சுண்டியிழுக்கப்ப்ட்ட மீனாய் அவள் தன்மான உணர்வு
‘போனால் என்ன ? ‘ கேட்கச் சொல்ல ‘போய்த்தான் பாரேன் ‘ பேச்சு வளர
தென்றலில் அலைந்த கேசத்தில் விழுந்த சிக்கலாய்
முறித்து அவள் கிளம்பி வந்து, பழங்களை பெற்றுச் செல்ல …பெற்றுக் கொண்ட
பழத்துடன், போனதுக்கு தண்டனையாய்,தொலைத்தாய் உன் தாய் தந்தை சந்திப்பும்
தமக்கையின் ஆயுள் உறவுமென விதித்த விதியில் விதிர்த்தபடி
இருவேறு மனங்களுக்கிடையில் ஒரெ பொருளுக்கன ஒப்புமை எதனால் தடம்
புரண்டது. எப்போது தப்பியது ?

சீப்பு சிக்கில் எசகு பிசகாக சிக்கிக் கொள்ள விரித்த வலையில் நிதர்சனம் கண்டேனா ?
தொலைத்தேனா புரியாது. தொலைபேசி சிணுங்களுக்கு காத்திருந்தேன்…பின்னி முடித்த
கூந்தலுடன் , சமையல் முடித்து பிள்ளைக்கு சாப்பாடு அனுப்பியிருப்பாள். நிச்சயம்
அழைப்பாள்,என்னக்கா ? இன்னைக்கு என்ன சமையலென்றே ? கடந்து போய்க்
கொண்டிருந்தன முட்கள் கடிகாரத்தில்

***

Series Navigation

திலகபாமா,சிவகாசி

திலகபாமா,சிவகாசி