1. ஆதலினால் காதல் செய்வீர் – 2. நல்லவர்கள்

This entry is part [part not set] of 26 in the series 20010910_Issue

தி. கோபாலகிருஷ்ணன்1. ஆதலினால் காதல் செய்வீர்

காதலின் வெற்றி
திருமணத்தில் இல்லை

பிாிவு என்பது
தோல்வி இல்லை

ஆதலால் நம் காதல்
வெற்றி தோல்வியின்றி
‘டிரா ‘ வில் முடிவடைகிறது


2. நல்லவர்கள்

சந்தோஷமாக இருப்பதாகக் கூறி
கண்கலங்கினாள்
அதைக் கேட்ட சந்தோஷத்தில்
நானும் கண்கலங்கினேன்

நெருங்கிப் பழகினோமில்லை
பின் பிாிந்தோமில்லை

எங்கெங்கோ சென்று
இன்று சந்தித்தபோது
இப்படிக் கலங்குவதுதான்
அன்போ ?

வீட்டுக்கு வாருங்கள்
அவர் மிக நல்லவர் என்றாள்
இன்னொரு நாள்
வருவதாகக் கூறி விடைபெற்றேன்

அவர் நல்லவர் தான்.

நல்லவன் என்று
மற்றவர்கள் சொல்லவேண்டும் என்பதற்காக
நான் தான்
என்னை மாற்றிக் கொண்டதில்லை

Series Navigation

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி