16-ஜூலை-04

This entry is part [part not set] of 54 in the series 20040722_Issue

தமிழ்மணவாளன்


—-

உச்சபட்ச இழப்பாய் உள்ள

மரணத்தை தான்

எவ்வளவு மலிவாய் எதிர் கொள்ள நேர்கிறது.

இந்த நெருப்புத் தான்

எப்படி பரிகசிக்கிறது பாருங்கள்

நம் நம்பிக்கையின் மீது.

இறந்த குழந்தைகள்

இன்னும் எத்தனை ஆண்டுக் காலம்

உலகின் எஜமானர்களாய்

உலவியிருக்கக் கூடும்.

மரணத்தை

உயிரோடிருந்து பார்க்கிறோம்

எனவேதான்

வாழ்வைச் சாகடித்ததாய் தோன்றுகிறது.

இறந்தவரிடத்தில் இருந்தால் தான்

புலப்படுகிறது

மரணமடைந்தது வாழ்க்கையல்ல

பிரபஞ்சமென்று.

-தமிழ்மணவாளன்
—-
tamilmanavalan@yahoo.co.in

Series Navigation

தமிழ்மணவாளன்

தமிழ்மணவாளன்