மைதா மாவு –2டேபிள் ஸ்பூன்
கெட்டித்தயிர் –1டேபிள்ஸ்பூன்
தண்ணீர் –1டேபிள் ஸ்பூன்
சர்க்கரை –1ஆழாக்கு
முந்திரிப்பருப்பு –8
நெய் –4டேபிள் ஸ்பூன்
முந்திரியை வெண்ணீரில் பத்து நிமிடங்கள் ஊறவைத்து சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். சர்க்கரை, மைதா மாவு, ஒருஸ்பூன் தண்ணிர், தயிர், இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் இவற்றை ஒன்றாக உருளியில் கொட்டி, நிதானமாக எரியும் தீயில் வைத்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். பிறகு, மீதி 2டேபிள் ஸ்பூன் நெய்யையும், நடுநடுவே கொஞ்சம் கொஞ்சமாக விட்டுப் பக்கங்களில் ஒட்டாமல் வரும்போது முந்திரித் துண்டுகளைப் போட்டுக் கிளறி, சிறிது தளர இருக்கும் போதே நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகளாகப் போடவும்.