வேதவனம் –விருட்சம் 84

This entry is part [part not set] of 21 in the series 20100509_Issue

எஸ்ஸார்சி


அமுதத்தின் நிலை அறியும்
கந்தர்வன் எங்களுக்கு
ரகசியம் தெறிவிக்கட்டும்
பிறப்பு காப்பு இறப்பெனும்
மூன்றும் தன்னகத்தே உடைய் அமுதம்
அறிந்தோன் பிதாவின் பிதாவாகிறான்
மங்கலம் தரும் கந்தர்வன்
சுகம் வழங்கி
அப்சரசுகளிடை வாழ்பவன்
குற்றமில்லாதோர் சேர்க்கையவன்
தோன்றிமறையும் கடலே
அவர்கள் உறைவிடம்.
வந்தனம் கந்தர்வ அப்சரசுகட்கு.
மலையினின்று கொட்டும் அருவி
அவுடதம் அது நற்சிகிச்சை
நீரே வருக நோய் நீக்குவோன் நீ
புண் ஆற்றும் நீரை
அசுரர்கள் அழிக்கிறார்கள்
எறும்பு ஒக்கும் உயிரினமொன்று
சமுத்திரத்து செடியொன்று பிறப்பிக்கும்
அதுவே வயிற்றுப்போக்குக்கும்
ரோகத்திற்கும் மருந்து.
சங்கிட மணிஅணியும் எமக்கு
வாதம் குத்தல் வாய்நோய்
மூட்டு இழுப்பு வலிப்பு யென யாவும் நீங்கி
ஆயுள் கூடட்டும்
அக்கினியே நீயே வானாகி
இத்தலைவனை ஔங்கச்செய்
உன்னை வனங்கும் பிராமணர் புகழ் பெறுக
அருகிடுக மற்றோர் புகழ்
அக்கினியே எமது
எல்லாத்துன்பங்களையும்
வெற்றிகொண்டு வீரமக்கள் தருக
தருப்பைப்புல் யாம் பெறும் சாபம் தொலைக்கட்டும்
சகோதரிகளொடு சினமுடை பிராமணர் கொடு
சாபம் தொலைக
தீயோர் எம்மை வெல்லாதிருக்கட்டும்
சபிப்பவனைச் சேர்க எமக்கிடும் சாபம்
கொடுங்கண்ணர் எலும்புகளை
துண்டமாக்குவோம் யாம்
பார்லியின் புல்லாலும்
எள் செடித்தண்டாலும் கொள்ளை நோய் தீர்க்கும்
பணி இவண் வெல்க
கலப்பையே எருது தோளேறும் நுகத்தடியே
வணக்கம் நுமக்கு
அல்லும் பகலும் உழைப்போருக்கு
வணக்கம் தலைவனுக்குமே அது
கொள்ளை நோய் தீர்க்கும் செடியே
தீர்த்திடுக எல்லா நோயும்
பத்து மருந்து மரங்கள்
ஒரு குடும்பத்து வரும் நோயெதுவும் நீக்கிடுக
அவுடதமே அறிஞனே
நாசம் செய்வோனை நாசம் செய்
ஆயுதத்தின் ஆயுதம் நீ
நல்லன போற்று
அக்கினியே பிரமச்சரியனைச் சூழ்ந்திடு
நிறை ஆயுள் தா எமக்கு
மூப்பிலே மரிக்கட்டும் இவன்
பிரகசுபதி சோமனுக்குத்தந்த ஆடையிது
அணிந்துகொள்
கல் மீது நில் நிலை பெறுவாய் நீ
விசுவ தேவர்கள் நூறாண்டு ஆயுள் தருக உனக்கு
வானம் அஞ்சுவதில்லை புவியும் அஞ்சுவதில்லை
இரவு பகல்
சூரியன் சந்திரன்
சத்தியம் அசத்தியம்
பிரமதத்துவம் அரசதிகாரம்
கடந்த காலம் வருங்காலம்
அஞ்சுவதில்லை இல்லை இவை எவையுமே
பிராமணனே நீ அச்சம் தவிர்
மூச்சுக்காற்றே அக்கினியே
நீ யே ஒளி எனக்குத் தா
நீயே வலிமை எனக்குத் தா
நீயே பலம் எனக்குத்தா
என்ஆயுள் செவியொடு கண்ணும் நீ
பெருந்துணையாய் நீ
யாவும் தருவாய் எனக்கு
எங்களை த்தூற்றுவோனை யாம் தூற்றுவோனை
அக்கினியே எரித்துவிடு
வாயுவே கதிரோனே
சந்திரனே சலமே
எங்களைத்தூற்றுவோனை யாம் தூற்றுவோனை
வீழ்த்தி விடு
அசுவினிகளே பெண்ணை
அவள் விரும்வோனோடு சேருங்கள்
அகமே புறம் புறமே அகம்
அவள் பதி விரும்பி
அவன் மக்கட் விரும்பி
முழங்கு குதிரைபோல் செல்வம் சேர்க
நோய் தரும் கிருமிகள்
குடற் புழுக்கள்
நரம்புக்கிருமிகள்
நாசமுறுக
தாவரங்கள் விலங்குகள் விட்டுக் கிருமிகள் நீங்குக
கிருமிகளின் அரசன் கொல்லப்பட்டுள்ளான்
தலைவன் அவன் கொல்லப்பட்டுள்ளான்
கிருமி பெறு தாயும் உடன் பிறந்தோர்யாரும்
சுற்றமும் நட்பும் தொலைந்தன
கிருமியின் பணிஆட்கள் அழிந்தனர்
காச நோய் தொலைக
வாழ் உடலின் எந்த வொறு
அங்கமும் காசநோய் தொலைத்திடுக
விலங்குகளின் நாயகன் பசுபதி
வேள்வியிடம் வருகிறான்
பலியிடப்பட்ட விலங்கு
வான் செல்கிறது தேவ பாதையைக்கடந்துச்
சொர்க்கம் சேர்கிறது
அக்கினியே மணங்கேட்பவன் வருக
சோமனோடு இசைந்து
பிரமத்தால் பொருந்தி
அரியமானால் பக்குவமான பெண்ணே
தாத்ருவால் தன் பதியைக் காண்கிறாள்
அதிர்ஷ்டக்கப்பலில் அவள் ஏறட்டும்
பொன்னும் குங்கிலியமும்
நின்னை அவனிடம் சேர்க்கட்டும்
செடிகொடியே சவிதாவே
அவள் விரும்புவோனை
உடன் அழைத்துவருக இவண் ( அதர்வன் /2)
——————————————————-

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி