நாவாந்துறைடானியல்அன்ரனி
உள்ளே வந்தான். வீடு முழுவதும் ஒரே இருள். பொிய அறையின் வாசல் நிலைப்படிக்கு மேலாக தொிந்த வெளிக்கூடாக உள்ளே எாிந்து கொண்டிருந்த ‘அாிக்கன் லாம்பின் ‘ மெல்லிய வெளிச்சம் மாத்திரம் மங்கலாக வெளி விறாந்தைக்கு நிழல் விழுத்தியது.
முற்றத்தில் நிற்கும் முருங்கை மரத்துடன் சின்னவன் கட்டிப்போட்ட ‘கறுவல் ‘ ஆள் அரவம் கேட்டதும் விறுக்கென்று எழுந்து கால்கள் இரண்டையும் அகட்டி உடம்பைச் சிலிர்த்து சோம்பல் முறித்துக்கொண்டே ஆக்ரோசத்துடன் குரல் எழுப்பியபடி அங்கும் இங்குமாக ஓடியது.அவன் மெதுவாக அதன் வழுவழுப்பான முதுகுப் புறத்தைத் தடவிக் கொடுத்து விறாந்தைக்கு வந்தான்.
பொிய அறையில் அம்மா, மூத்த தங்கைகள், சின்னஞ்சிறுசுகள் சிலவும் படுத்துக் கொள்ளுவார்கள். தந்தையைக் கட்டிப்பிடித்துக் கொண்டு படுத்தால்தான் நித்திரை கொள்வேன் என்று அடம்பிடிக்கும் சின்னவன், வழமைக்கு மாறாக இன்று உள் அறையில். அவனுடைய விசும்பல் விட்டுவிட்டு உள்ளே கேட்டது. படுத்த பாயிலேயே சலம் பெய்துவிட்டதற்காக அம்மா சற்று நேரத்திற்கு முன் அவனை அடித்திருக்க வேண்டும்.
சாருக்குள் விாித்துக்கிடந்த ஓலைத் தடுக்கில் அவனுடைய தந்தை தான் படுத்துக் கிடந்தார். குறட்டைச் சத்தம் பலமாகக் கேட்டாலும் அவர் அயர்ந்து தூங்குகிறார் என்று சொல்லிவிட முடியாது. சின்ன அரவம் கேட்டாலும் ‘பேய் பிசாசைக் ‘ கண்டவர் போல திடுமென விழித்தெழுந்து விடும் சுபாவம் அவருக்கு.
தகப்பனை நினைத்தால் இவனுக்கு இப்பொழுதும் பயம்தான். இவனுக்கு அம்மாவை எப்படியாவது அரட்டிச் சாப்பாடு கேட்கவேண்டும். அம்மாவை அரட்டும் சத்தத்திலே தகப்பனும் எழுந்து விட்டால் பிறகு என்ன, ஒரே புறு புறுப்புத்தான்.
‘சும்மா இருந்து தின்னுறதும் பத்தாமல் எங்கேயோ ஊர் சுத்திப்போட்டு ஏமஞ் சாமத்தில வந்து இஞ்ச விடியப்புறம் தொழிலுக்குப் போறதுகளட நித்திரையையும் குழப்புறான் ‘.
தந்தையின் பேச்சுக்களை கேட்கும் போது கோபம் கோபமாக வரும். அவமானத்தால் உடம்பெல்லாம் கூசும். வீட்டைவிட்டு எங்கே யாவது ஓடிப்போகவேண்டும்போல ரோசம் வரும். பிறகு ஆறுதலாக இருந்து தனிமையில் சிந்தித்துப் பார்க்கும்போது அவர் சொல்லுவதிலும் கூட நியாயம் இருப்பதுபோல் தென்படும்.
இருபத்தைந்தைக் கடந்தும் படிப்பையும் தொடரமுடியாமல் வேலையைத் தேடிக் கொள்கிற சாமார்த்தியமும் இல்லாத குடும்பத் திற்கு மூத்தபிள்ளையைப் பற்றி முழுக் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்புள்ள தந்தை இப்படி அலுத்துக்கொள் வதில் தவறில்லை என்று தனக்குள்ளேயே மனதைத் தேற்றிக்கொள்வான்.
மற்றவர்களின் உழைப்பில் நின்று கொண்டிருக்க இவனுக்கும் வெட்கமாகத்தான் இருந்தது. அதற்காக அவன்தான் என்ன செய்வான்!
அவனிடமும் தான் ‘பைல் ‘ நிறைந்த ‘சேட்டுவிக்கற் ‘றுகள், வேலை யாராவது கொடுக்க வேண்டுமே! யாரையாவது பிடித்து ‘சாிக்கட்டி ‘ காாியம் பார்க்கலாம் என்றால் கையில் மூவாயிரம் வேண்டும் என்று சொல்கிறார்கள்.
கையில் மூவாயிரம் இருந்தால் மூத்த தங்கையின் கல்யாணம் இரண்டு வருசத்துக்கு மேல் இழுபட்டுக்கொண்டு கிடக்குமா ?
வயிறு பிசைந்தது. பசியினால் விண்…. விண்…. என்று இரைந்தது. பொிய அறைக்கதவு அண்டை சென்றான். மூத்தவள் ராணியை எழுப்பலாம் என்று முதலில் நினைத்தான். அவளை இலகுவில் எழுப்பிவிட முடியாது. அவள் எழும்புவதற்கு முதல் தகப்பனே எழுந்து வந்து விடுவார். அம்மாவை எழுப்புவதுதான் இலகுவான காாியம்.
‘அம்மா….அம்மா….அம்மா ‘
மெதுவாக வாசலில் நின்றபடி கூப்பிட்டான். உள் அறையில் சில நிமிடங்கள் வரை எந்தவித சலனமும் இல்லை. கதவை லேசாகத் தட்டிக்கொண்டே மறுபடியும் குரல் கொடுத்தான். உள்ளே யாரோ அரண்டு எழும் சலனம். அதைத்தொடர்ந்து அம்மாவின் அடைத்த குரல்.
‘புள்ள….புள்ள….தங்கச்சி, அண்ணன் வந்து நிக்கிறான் போல இருக்கு. எழும்பிப் போய் சோத்தைப் போட்டுக் கொடு ‘.
‘போண எனக்கு அலுப்பாயிருக்கு…. சும்மா எல்லாத்துக்கும் என்னத்தான் இந்த மனுசி முறிக்குது. அங்க அவள் மெள்ள பிரண்டு கிடக்கிறாள். அவளை அரட்டிச் சொல்லன் ‘ இது ராணியின் குரல்.
‘எழும்படி. அவள் இப்பதான் வீடி இல வெட்டிப்போட்டு அலுப்பில கிடக்கிறாள். அங்க அந்த இளந்தாாி எவ்வளவு நேரமாகக் காத்துக் கொண்டு நிக்கிறான். எழும்படி. சுனங்கல் ‘.
தங்கை ராணி அலுப்புடன் அம்மாவைத் திட்டிக்கொண்டே லாம்புடன் வெளியே வந்தாள். அவள் கண்களில் நித்திரையின் அழுத்தம். நாள் முழுவதும் வீட்டு வேலைகள் செய்து அலுத்துப்போன சோர்வு முகத்தில்.
இவன் தந்தையின் படுக்கையைத் திரும்பிப்பார்க்கிறான். அவர் மறுபக்கம் புரண்டு படுத்துக்கொள்கிறார்.
‘பாவம் மனுசன். இனி நடுச்சாமத்தில் எழும்பிப்போய் நித்திரை முழிச்சு தூண்டலுக்கு கிடந்துபோட்டு விடிய பஞ்சி அலுப்பில வாறவர். ‘
அவன் எழுந்துபோய் கைகளை நீாில் நனைத்துக்கொண்டு குசினிக்குள் சென்று மரப் பலகையில் குந்திக்கொண்டான்.
ராணி சோற்றைக் கோப்பையில் போட்டுக்கொடுத்துவிட்டு கிணற்றடிப் பக்கம் இருந்த குடத்தில் தண்ணீர் வார்த்து வரச்சென்று விட்டாள்.
முதல்படியை பிசைந்து வாயில் திணித்துக்கொள்ளப்போனபோதுதான் முதல் நாள் இரவு இவனும் நண்பன் யோசப்பும் போய் பார்த்து வந்த ‘வல்மத்துவ ‘ சிங்கள சினிமாப் படத்தின் காட்சிகள் ஒன்றின்பின் ஒன்றாக மனதில் நெருங்கியடித்துக்கொண்டு வந்தன.
வேலையற்ற பட்டதாாி நண்பர்கள், அவர்கள் கிராமத்தில் படும் க~;டங்கள். முகம் கொடுக்கும் பிரச்சினைகள்.
நிலச்சுவாந்தாரன் ஒருவனின் கபடத் தனமான கொடுமையினால் சொந்த நிலத்தைப் பறிகொடுக்கும் அந்த ஏழை வாலிபனின் குடும்பம், தட்டிக்கேட்கச்சென்ற வாலிபன் இறுதியில் துப்பாக்கிவேட்டுக்குப்பலியாகி மடியும் அந்தக் கொடூரமான இரத்தத்தை உறைய வைக்கும் காட்சி….
இறுதியில் எாியும் அவனுடைய சிதைக்கு முன்னால் அழுது புலம்பும் வயோதிபத்தாயின் ஆறாத்துயர்! ‘சை, என்ன கொடுமை ‘.
அவன் இதயத்தில் அவனை அறியாமலே ஒர் அந்தாிப்பு கண்களில் நீர்க் கசிவு. கூடவே எழுந்த பழி உணர்வு. இத்தனை கொடுமைகள் மலிந்த சமூகமா ?
‘அண்ண, அம்மானும் மாமியும் கொஞ்ச நேரத்துக்கு முன்னால வீட்ட வந்திற்றுப் போயினம் ‘. வெகு நேரமாய்த் தலை குனிந்தபடி கோப்பையிலிருந்த சோற்றையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த அவன் தலையை நிமிர்த்திப் பார்த்தான்.
ராணி தன் எதிரே பலகையில் இருந்த இவனையே வெகுநேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கேட்பது கூட இவன் காதுகளில் சாியாக விழவில்லை.
‘என்ன ராணி கேட்டனி ? ‘
‘அம்மானும் மாமியும் வீட்ட வந்திற்றுப் போயினம். இந்த ஆவணிக்குள்ள கல்யா ணத்தைச் செய்து போடட்டாம்.
‘அப்புவும் அம்மாவும் அதுக்கு என்ன சொன்னவியள் ‘.
இவன் அப்படிக்கேட்டதும் ராணி தலையைக் குனிந்துகொண்டாள். அவள் கை விறகுச்சுள்ளி ஒன்றை எடுத்து நிலத்தில் ஏதோ கிறுக்கிக்கொண்டிருந்தது.
மூத்தவனுக்கு வேலை கிடைச்சதுக்குப் பிறகுதான் கலியாணத்தைப் பற்றி யோசிக் கலாம் எண்டு சொல்லிப்போட்டினம்.
‘அதுக்கு அம்மான் ஆக்கள் என்ன சொல்லிச்சினம் ? ‘
‘உனக்கு வேலைகிடைச்சு எனக்குச் சீதனக்காசு சம்பாதிக்கிறதுக்கிடையில் தங்கட மகன் மூண்டு பிள்ளைகளுக்குத் தகப்பனாப் போயிடுவாராம். வசதியில்லாட்டி வேறு இடத்தைப் பார்க்கச்சொல்லிப் போட்டுப் போயிற்றினம். ‘ அவள் குரல் அதற்கு மேல் பேச முடியாமல் தழுதழுத்தது.
இவன் நெஞ்சுக்குழியில் ஏதோ சிக்கிக் கொண்டது. மூச்சு முட்டிக்கொண்டு வருவது போன்ற தவிப்பு. பக்கத்திலிருந்த செம்பிலிருந்து நீரை மடமடவெனக் குடித்துவிட்டு விறுக்கென்று எழுந்து விட்டான்.
அதற்கு மேல் ஒரு பிடி சோறும் தொண்டைக்குள் மறுத்துவிட்டது. செம்பையும் தண்ணீரையும், எடுத்துக்கொண்டு கழுவு வதற்காக வெளியே வந்தான். சில கணங்கள் மெளனத்தால் கரைந்தன.
‘தங்கச்சி சாப்பிட்டிற்றியா…. ‘
‘ஓம் …. ‘
‘பொய் சொல்லாத…. ‘
‘ஓம் அண்ணா, சோறு தண்ணியுக்குள்ள போட்டு பினாட்டோட குடிச்சனாங்க. ‘
‘அம்மா சாப்பிட்டாவா. ‘
‘ஓம்…. ‘
‘இவன் தம்பி எங்க ? படுக்கையில் காணோம். நாளைக்கு சோதனையில்ல தொடங்குது. ‘
‘ஓம் அண்ண, அவன் பள்ளிக்கூடத்தால பின்னேரம் வந்தான். நாளைக்கு ஆரோ மந்திாி மார் கொழும்பில் இருந்து புதுசாக்கட்டின கட்டிடத்தைத் திறக்க வருவினாமாம் எண்டு சொல்லிக்கொண்டு நின்றவன், பிறகு ஆரோ பெடியளோட சைக்கிளில கூடிக்கொண்டு போறான். மத்தியானமும் சாப்பிட வரயில்ல. ‘
தம்பியின் போக்கும் இவனுக்குப் பிடிபட வில்லை. எதற்கு எடுத்தாலும் நியாயம் பேசு வான். ஏதேதோ கூட்டங்களுக்கெல்லாம் போய் வருவதாக ஊாில் உள்ள பலர் இவனிடம் கூறியிருக்கின்றனர். படிப்பிலும் முன்பு போல் அக்கறையில்லை. வீட்டிலும் அதிகம் தங்கு வதில்லை.
இவன் மனதில் பெரும் குழப்பம். நம்பிக்கைகள் தீர்ந்துபோன ஆற்றாமையினால் மனதை அழுத்திக்கொண்டிருந்த துயரங்கள் தூக்கத்தைத் துரத்தி அடித்தன.
அறையைத் திறந்துகொண்டு உள்ளே போய்விட்டான்.
அன்று பெளர்ணமி கழிந்து மூன்றாம் நாள். நிலவு அப்பொழுதுதான் காலித்துக் கொண்டு வந்தது. இதமாக வீசிக்கொண்டிருந்த சீதளக் காற்றின் சிலுசிலுப்பில் கிணற்றடிப் பக்கம் நிற்கும் நெல்லி மரத்திலிருந்து இலைகள் உதிர்ந்து கொண்டிருந்தன.
எங்கேயோ வீட்டிலிருந்து யாரோ ஒருவன் உச்ச சுதியில் நாட்டுக்கூத்துப் பாட்டைப் பாடுகிறான். தகரப்பேணி மிருதங்கமாக முழங்குகிறது.
இரண்டாவது சினிமாக் காட்சி பார்த்து விட்டு வீதியால் செல்வோாின் ஆரவாரங்கள், விமர்சனங்கள். அதிர் வெடிச் சிாிப்புக்கள். அவையும் அடங்கின.
படுக்கையைத் தட்டிப் போட்டு அலுப்புடன் சாய்ந்துகொண்டு சில கணங்கள் தூங்குவதற்கான போராட்டம். படலை திறக்கும் சத்தம் கேட்டது. இவனுடைய தம்பிதான் வியர்த்து விறுவிறுக்க வந்து கொண்டிருந்தான். அவனுடைய கைகளில் சுருட்டப்படட போஸ்டர்கள். தகரப் பேணி, பிறஸ்….
காகிதச் சுருள்களை அவசரமாக மூலையில் எறிந்து விட்டு கிணற்றடிப்பக்கம் சென்று நீரைவார்த்து கைகளை அழுத்தி உழக்கி கழுவிக்கொண்டிருந்தான்.
கைகளில் இரத்த நிறத்தில் சாயம் நீருடன் கழுவுண்டு நிலத்தில் மண்ணுடன் கலந்து செந்நிறமாகி….
அவன் படுக்கையிலிருந்து விறுக்கென்று எழுந்துபோய் காகிதச் சுருள்களை எடுத்து விாித்து ஒவ்வொன்றாக விளக்கு வெளிச்சத்தில் படித்துப்படித்துப் பார்த்தான்.
‘முதலாளித்துவக்கல்வி முறை முற்றாக ஒழிய வேண்டும். ‘
‘வெற்றுக்காகிதங்கள் வேலை தருமா ? ‘
‘தரப்படுத்துதல், இன ஒடுக்குதல். ‘
அவன் மனம் அந்த வெள்ளைத் தாள்களில் சிவப்பு எழுத்தில் பளிச்செனத்தொிந்த வாக்கியங்களின் அர்த்தங்களை முதல் முறையாக பிாியத்துடன் நினைத்துப் பார்க்கின்றது.
இவன் சுமந்த வெற்றுக்காகிதங்கள், வீணான நாட்கள், ‘சின்னத்தனமான ‘ அரசியல்வாதிகளின் பின்னே விவஸ்தை கெட்டு அலைந்துதிாிந்த அந்த நாட்கள். கசப்பான மாத்திரையை விழுங்கிக்கொண்டவன் போல் முகத்தைச் சுளித்துக் கொண்டான்.
இந்த சமூகத்தை, வாழ்க்கையை, இந்தத் தேசத்தை அவனுக்கு முன்பே பூிந்துகொண்டுவிட்ட இவன் தம்பி இவனுக்கு இன்னும் புதிரானவனா….!
தம்பி கிணற்றடியிலிருந்து கை கால்களைத் துடைத்துக் கொண்டே நிமிர்ந்து எழுந்தான். இவன் காகிதக் கட்டுக்களுடன் நின்று அவனை உற்றுப் பார்ப்பதை அவதானித்து விட்டவனாய் கொல்லைப்புறமாக மெதுவாக நகா;ந்தான்.
முற்றத்தில் தந்தையின் மரக்கோல், சவள் பலகை, பறி…. நீர் கோலும் பட்டை….தங்கூசிப் பெட்டி.
‘இந்த ஆவணிக்கு தங்கச்சியின் கல்யாணத்தை எப்படியாவது முடிச்சுப் போடவேணும் ‘.
அவன் அந்த நினைப்பிலிருந்து விடுபடவில்லை. ஒரு கணப்பொறிதான். தெரு நாய்கள் பலத்த சத்தத்துடன் குரைத்தன. அடங்கிப் போயிருந்த வெளிப்புற ஓசைகள், சனங்களின் விழிப்பும், நடமாட்டமும், ஒடுங்கிய குரல்களும் இவனைத் திடுக்கிட வைத்தன….
தெற்குத் தெருவால் உறுமிக் கொண்டு வந்த ஜீப் ஒன்று படலைக்கு முன்னே ‘சடின் பிறேக் ‘குடன் நின்றது. ஜீப்பிலிருந்து ‘தாம்தீம் ‘ என்று பூட்ஸ் கால்கள் நிலத்தில் குதித்தன. படலை திடாரெனத் திறந்தது.
இரண்டு காக்கிச் சட்டைகள் முன்னே பாய்ந்து இவனைப் போஸ்டர்களுடன் இறுகப் பற்றிப்பிடித்துக் கொண்டன. பிடாியில் ஒருத்தனின் அ;டி ஓங்கி இறங்கியது. இரும்புக்குண்டால் அடித்தது போல். இன்னொருவனின் சப்பாத்துக்கால் சினத்துடன் முகத்தில் பதிந்தது. தாடையிலும், மூக்கிலும் வெடிப்பு. இரத்தம் கசிந்தது, நிலத்தில் முத்தமிட்டு எழுந்த அவன் முகத்தில் இரத்தத்துடன் அந்த மண்ணும் அப்பிக்கொண்டது.
தரதரவென இழுத்துக் கொண்டு போய் ஜீப்பில் இவனை எறிந்தார்கள். உள்ளே இருந்தவர்களின் பூட்ஸ் கால்களுக் கிடையில் முகம் கவிழ்ந்து வீழ்ந்தான். ‘போஸ்டர் ஒட்டுறது ? வடுவா றாஸ்கல்! செம்மையாகச் சாத்தினால் தான் திருந்துவீங்கள் ‘.
தமிழ்க் குரல் உள்ளே இருந்து ஒலித்தது. இவன் மெல்ல எழுந்து ‘அம்மா…. ‘ என முனகிக்கொண்டே இருக்கையில் அமர முயற்சித்தான். ஜீப் வண்டி வேகத்துடன் ஓடிக் கொண்டிருந்தது. தூரத்தில் வீட்டோாின் அவலக்குரல்கள் கேட்டன. இப்போது நன்றாக உள்ளே இருந்தவர்களைப் பார்க்க முடிந்தது. சில முகங்கள் வீதிகளில் கண்டவை, உதட்டிலும், தாடையிலும் வழிந்துகொண்டிருந்த இரத்தத்தைக் கையால் அழுத்தித் துடைத்தான். இப்போது வீதியை நன்றாகப் பார்க்க முடிந்தது. நிலவு வெளிச்சத்தில் மதில் சுவர்களில் சிவப்பு மையினால் எழுதப்பட்ட சுலோகங்கள் பளிச்செனத் தொிந்தன. போஸ்டர்களும் தொிந்தன.
இவன் தம்பியை நினைத்துக்கொண்டான். அந்த வேதனைக்குள்ளும் கூடவே சிாிப்பு வந்தது.
(முற்றும்)
( danieljeeva@rogers.com மூலமாக)
- வாரபலன் – ஜூன் 17,2004 – டில்லிக்குப் போன கவுன்சிலரு , ஆயிரம் இதழ் கண்ட கலா கெளமுதி , வாத்துக்களின் வட்டார வழக்கு , அஞ்சலி : காச
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 24
- சாயம்
- தென்னையும் பனையும்
- வெற்றுக் காகிதங்கள்
- மஸ்னவி கதை — 10 :அறிவான அரபியும் ஆசை மனைவியும்
- தனக்கென்று வரும் போது..!
- மலை (நாடகம்)
- பாசமா ? பாசிசமா ?
- விகிதாச்சார முறை பற்றிய விமர்சனங்களும் பதில்களும்
- சித்திரவதை
- டயரி
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 7)
- அஞ்சலைப் பாட்டி
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 9
- மிராண்டாவைப் பார்த்து மிரண்டவர்கள்
- மெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி 4
- நிழல் யுத்தம் பற்றி
- தமிழுக்குப் பெருமை
- என் பொழுதுகளில் இதுவும்..
- வெங்கட் சாமிநாதனுக்கு டொராண்டோ பல்கலைக்கழத்தின் இயல் விருது விழா
- கடிதம் ஜூன் 17,2004
- தெற்காசியத் திரைப்பட விழா – படங்களை அனுப்ப வேண்டுகோள்
- பஞ்சத்தின் உண்மை பேசும் புல்லர்களை பொசுக்கிட பொங்கி எழு தோழா, புறப்படு
- சேதி கேட்டோ..
- ஆட்டோகிராஃப் ‘தலை சாய்ந்து போனால் என்ன செய்யலாம் ‘
- தன்னம்பிக்கை
- அன்புடன் இதயம் – 21 – பிரிகின்றேன் கண்மணி
- கடலைக்கொல்லை
- கவிக்கட்டு – 11 : எங்கே மனிதம் ?
- உறங்கட்டும் காதல்
- நிகழ்வெளியின் காட்சிகள்
- நிழல் பாரங்கள்
- வீடு திரும்புதல்
- ஆயுட் காவலன்
- கவிதைகள்
- தூரம்
- அவர்கள்
- அப்பாவுக்கு…!!!
- இல்லம்
- தீர்மானம்
- தமிழவன் கவிதைகள்-பத்து
- உடன் பிறப்பு…
- குழந்தை மனது
- நம்பிக்கை
- கவிதைகள்
- செல்பேசிகளைத் தெரிந்து கொள்வோம்!
- மின்மினி பூச்சிகள்
- திரைகடல் நாடியும் தேடு மின்சக்தி! [Energy from The Ocean Waves, Tides & Thermal Power]
- நெய்தல் நிலத்துக்காாி!
- பிறந்த மண்ணுக்கு.. – 6 (கடைசிப் பகுதி)