வெப்ப இயங்கியலின் (thermodynamics) மூன்று விதிகள் (எளிய தமிழில்)

This entry is part [part not set] of 30 in the series 20020512_Issue


முதலில் வெப்ப இயங்கியலின் மூன்று விதிகள் ஆங்கிலத்திலும் தமிழிலும்

First law of thermodynamics

Energy is neither created nor destroyed, it changes from one form to another.

முதல் வெப்ப இயங்கியல் விதி

சக்தியை உருவாக்கவோ, அழிக்கவோ முடியாது. அது ஒரு வடிவத்திலிருந்து மறுவடிவத்துக்கு மாற்றத்தான் முடியும்

Second law of thermodynamics

இரண்டாம் விதி

‘in all energy exchanges, if no energy enters or leaves the system, the potential energy of the state will always be less than that of the initial state. ‘ This is called entropy. Entropy always increases in universe.

அப்படி ஒரு வடிவத்திலிருந்து மறுவடிவத்துக்கு மாறும்போது, அந்த அமைப்புக்குள்ளிருந்து வேறு சக்தி வெளியேறாமலோ, உள்ளே வராமலோ இருக்கும் பட்சத்தில், உபயோகப்படுத்தக்கூடிய சக்தி எப்போதும் ஆரம்ப சக்தியிலிருந்து குறைவாகத்தான் இருக்கும் (இது எண்ட்ரோபி entropy

எனப்படும். அதாவது இது ஒரு அமைப்பில் இருக்கும் ஒழுங்கின்மையைக் disorder குறிக்கிறது) எண்டோர்பி என்னும் ஒழுங்கின்மை disorder பிரபஞ்சத்தில் எப்போதுமே அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

Third Law of thermodynamics

When all the atoms cease vibration, that will be Zero degree. And that is unattainable.

மூன்றாம் விதி

உலகத்தின் அணுக்கள் எல்லாம் நகராமல் நிலையாக நின்றால் அதுதான் சைபர் டிகிர். அது எப்போதுமே வராது.

***

இதனை எளியதாக விளக்க பலர் முயன்றிருக்கிறார்கள்

முதல்விதி: எதற்காகவும் கஷ்டப்படாமல் ஒன்றையும் பெறமுடியாது

இரண்டாம் விதி: அப்படி வேலைசெய்து கிடைப்பது அதிகபட்சம் செய்த முயற்சியின் அளவுக்குச் சமமாகத்தான் இருக்கும்.

மூன்றாம் விதி: உங்களால் வேலைக்குத் தகுந்த ஊதியம் கூட பெறமுடியாது.

From: John Vinson 74222.2372@CompuServe.COM

முதல்விதி: உங்களால் வெற்றிபெறமுடியாது

இரண்டாம் விதி: வேலை செய்ததற்குச் சமானமாகக்கூட ஊதியம் கிடைக்காது

மூன்றாம் விதி: உங்களால் விளையாட்டை விட்டு வெளியேறமுடியாது

Freeman ‘s Commentary on Ginsberg ‘s Theorem:

நீங்கள் வெற்றிபெற முடியும் என்ற தவறான அனுமானத்தில் தோன்றிய தத்துவம் முதலாளித்துவம்

வேலைக்குத் தகுந்த ஊதியம் பெறமுடியும் என்ற தவறான அனுமானத்தில் தோன்றிய தத்துவம் சோசலிஸம்

விளையாட்டை விட்டு வெளியேற முடியும் என்ற தவறான அனுமானத்தில் தோன்றிய தத்துவம் மதம்.

***

Series Navigation

செய்தி

செய்தி