வெண்டைக்காய் அவியல்.

This entry is part [part not set] of 24 in the series 20011215_Issue

உமாபுகழேந்தி, நெதர்லாந்நு.


13-12-2001

தேவையானவை;

வெண்டைக்காய் – 250 கிராம்

பெரிய வெங்காயம்- 100 கிராம்

பச்சை மிளகாய் – 2

தக்காளி – 2

தேங்காய் – 1/4 மூடி

மஞ்சள் தூள் – 1/2 டாஸ்பூன்

சீரகம் – 1/2 டாஸ்பூன்

மிளகாய் தூள் -1 டாஸ்பூன்

பூண்டு – 3 பற்கள்

புளி – நெல்லி காய் அளவு.

எண்ணெய் – 3 ஸ்பூன்

கடுகு – 1/4 டாஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை;

தேங்காய், சீரகம், பூண்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் இவற்றை ஒன்றாக சேர்த்து

மிக்ஸியில் சுமாராக அரைத்து கொள்ளவும்.

வெண்டைக்காய், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியையும் நீளநீளமாக நறுக்கவும்.

புளியை ஊர வைத்து கொள்ளவும்.

வாணெலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு ,கறிவேப்பிலை இட்டு தாளிக்கவும்.

வெண்டைக்காய், பெரிய வெங்காயம், பச்சை மிளகாயையும், சிறிது வதக்கவும்.

வதங்கியவுடன் தக்காளி, புளிகரைசல், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

காய் வெந்தவுடன், அரைத்து வைத்து இருக்கும் விழுதை கலந்து சிறிது நேரம் கழித்து இறக்கி விடவும்.

இந்த அவியல் மதிய சாப்பாட்டில் தனி இடத்தை பிடிக்கும்.

Series Navigation

உமாபுகழேந்தி, நெதர்லாந்நு.

உமாபுகழேந்தி, நெதர்லாந்நு.