சுரேஷ் கண்ணன்
சமீபத்தில் ஒரு வாரப் பத்திாிகை தனது பத்திாிகையின் விற்பனை பத்து லட்சத்திற்கும் அதிகமாக உள்ளதென்று தினப் பத்திாிகைகளில் முழுப்பக்க விளம்பரம் கொடுத்து ஜம்பமடித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் எத்தனை லட்சம் இளிச்சவாயர்கள் உள்ளனர் என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது. பங்களாவில் திருடப் போகிறவர்கள் காவல் நாய்களுக்கு மயக்க மருந்து பிஸகட் கொடுத்து தன்வயப்படுத்திக் கொள்கிற அதே தந்திரத்தை சில பல மசாலா, சிப்ஸ் பாக்கெட்டுகளையும் வாசகர்களுக்கு தந்து இந்தப் பத்திாிகை பயன்படுத்தி இதை சாதித்துள்ளது. இதை வெறும் வணிக உத்தி என்று ஒதுக்கி வைத்துவிடுவது அபாயகரமானது. கலாச்சார சீரழிவின் அடையாளமாக இதைப் பார்க்க வேண்டும்.
சாி இந்தப் பத்திாிகையின் உள்ளடக்கம் என்னவென்று பார்ப்போமா ?
தமிழக இலக்கியச் சிற்பிகளின் சாகாவரம் பெற்ற படைப்புகளோ, நம்பிக்கை தரும் புதிய எழுத்தாளர்களது இலக்கியப் படைப்புகளோ, தமிழ் செம்மொழியாக அங்கீகாரம் பெறுவதின் அவசியம் குறித்த கட்டுரைகளோ இருக்குமென்று பார்த்தால் ஏமாந்துதான் போக வேண்டும். எந்தெந்த நடிகர், நடிகையர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள், எந்த நடிகையுடன் எந்த நடிகருக்கு பாலியல் தொடர்பு இருக்கிறது போன்ற வாசகனுக்கு அத்தியாவசியமான (!) தகவல்களின் தோரணங்களையே நாம் பார்க்க முடியும். அடுத்த வேளை சோற்றுக்கான உத்தரவாதமில்லாவிட்டாலும் கூட குறிப்பிட்ட நடிகாின் திரைப்படம் ஏன் வெளியாகவில்லை என்று விசனப்படுகிற கூட்டத்திற்கு இது தேவையான ஒன்றுதான்.
சமீபத்தில் ஒரு முடிதிருத்தகத்தில் காத்திருக்க நோிட்ட போது இது சம்பந்தமான ஒருவர் தன் நண்பருடன் நடத்திய உரையாடலை கேட்க நோிட்டது. (முடிதிருத்தகத்தில் காத்திருக்கும் போதெல்லாம் எனக்கு நினைவுக்கு வருவது இதுதான். ஒரு காலத்தில் ஜாதிவெறி பிடித்த சில உயர்ஜாதிக்காரர்கள் முடிதிருத்துபவர்களை வீட்டின் புழக்கடை வழியாக வரவழைத்து காத்திருக்க வைத்து அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் சர்வாங்க ஷவரம் செய்துக் கொள்கிற நிலை மாறி இன்று அவர்களின் நிலையங்களில் காத்திருக்க வேண்டிய நிலையை நோக்குகிற போது காலச் சக்கரம் மிக நியாயமான முறையில்தான் சுற்றுகிறதென்கிற ஆத்ம திருப்தி எனக்கு ஏற்படுகிறது)
இனி அந்த உரையாடலுக்கு வருவோம்.
‘ஏம்ப்பா அந்தப் பத்திாிகைய வாங்கினா அதுக்கு ஈடா சில பொருள்களை கொடுத்துடறாங்களாமே. அப்ப நமக்கு லாபம்தானே ? ‘
‘ஆமாம்ப்பா. ‘
இதைக் கேட்ட எனக்கு நகைப்பாக இருந்தது. பொருட்கள் வாங்குவதால் பத்திாிகையா ? பத்திாிகை வாங்குவதால் பொருட்களா ? எதற்கு எது ஆதாரம் ? இன்று மசாலா பாக்கெட்டுகளை வாங்க மளிகைக் கடைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை போலும். பத்திாிகைக் கடைக்கு சென்றால் போதும். நாம் எந்தப் பத்திாிகையை படிக்க வேண்டும் என்பதையும் எந்தப் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பதையும் மற்றவர்கள் தீர்மானிக்க, சில லட்சம் பேர் வாய்ப்பு கொடுத்திருப்பது துரதிர்ஷ்டம்தான்.
O
முன்பு தினமலர், தினபூமி போன்ற தினப்பத்திாிகைள்தான் இந்த விளையாட்டை ஆரம்பித்து வைத்தது. தீபாவளி நேரங்களில் மலர் கொண்டு வந்து கூடவே 15 விதமான கச்சடா பொருட்களையும், ஓரு கூப்பனையும் கொடுத்து முதற்பாிசு கார் என்றெல்லாம் விளம்பரப்படுத்தி பத்திாிகையை லாட்டாிச்சீட்டுக்கு இணையாக மாற்றியது. இந்த மலர்களில் பெரும்பான்மையான விளம்பரங்களும் மூன்றாந்தர எழுத்தாளர்கள் எழுதிய குப்பைகள் மட்டுமே காணக்கிடைக்கும். பின்னர் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இந்த மாதிாியான இலவச பொருட்கள் வழங்கப்படுவதற்கு தடைவிதித்தது.
O
இன்று எந்த வெகுஜன பத்திாிகைக்கும் சுயமுகமோ, அடையாளமோ இல்லை. தினப் பத்திாிகைகளின் நீட்சியாகவே இவை விளங்குகின்றன். மலத்தின் மீதும் பிணத்தின் மீதும் மொய்க்கிற ஈக்களை போல ஒரு குறிப்பிட்ட செய்தியின் மீது அனைத்து பத்திாிகைகளும் மொய்க்கின்றன. சமூக விரோதிகளின், விபச்சாரம் செய்கின்றவர்களின் அன்றாட நடவடிக்கைகளே இன்று தலைப்புச் செய்தியாகின்றன். அப்துல் கலாம் சம்பந்தப்பட்ட செய்திக்கு தரப்படாத முக்கியத்துவம் கூட சிவகாசி ஜெயலட்சுமி சம்பந்தப்பட்ட செய்திகளுக்கு தரப்படுகிறது. வம்பு பேசுகிற மனோபாவம் உடைய வாசகர்களின் எண்ணங்களுக்கு தீனி போடுகிற வகையில் செய்திகளை பதிப்பித்து காசு பார்க்கிற உத்தியையே இந்த பத்திாிகைகள் கடைப்பிடிக்கின்றன.
வாசகர்களும் பத்திாிகைகளின் இந்த கேவலமான உத்தியை புரிந்து கொண்டு வாங்காமல் ஒதுக்குவதுதான் நலமாக இருக்கும். ஆனால் அதற்கான விழிப்புண்ர்வு ஏற்படும் வரை அது சாத்தியமில்லை என்றுதான் தோன்றுகிறது.
O
sureshkannan@vsnl.net
- உரத்த சிந்தனைகள்- 6
- வீரப்பன் மட்டும்தான் கிரிமினலா ?
- நுால் அறிமுகம் : ‘எ ன் று ம் இ ரு ப் பே ன் ‘ -மகாகவி பாரதியார் வாழ்க்கை -கவிதைநாடகம் :ஆசிரியர் – சேதுபதி
- தமிழின் மறுமலர்ச்சி – 4
- தமிழின் மறுமலர்ச்சி – 5
- அஞ்சலி: இயக்குனர் வான் கோ – நிறைவேற்றப்பட்ட ஃபட்வா
- அ.முத்துலிங்கம் பரம்பரை – 7
- அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்
- மெய்மையின் மயக்கம்-24
- கவிபாரதிகள்
- பெண் தெய்வ வழிபாடுகளின் பின்னணியில்…:அமெரிக்க ஆய்வாளரின் தமிழ்-நூலுக்கு ஒரு அணிந்துரை
- பாரதி இலக்கிய சங்கம் – நிகழ்ச்சி
- மக்கள்தெய்வங்களின் கதைகள் 8
- ‘இஸ்லாம் எளிய அறிமுகம் ‘ பற்றி – பேராசிரியர் ரூமிக்கு பிரியமுடன்
- வெகுஜன இதழ்களின் வியாபாரத் தந்திரங்கள்
- ப. சோழ நாடனின் ‘வீணை அதன் பேர் தனம் ‘ : ஒரு பார்வை
- ஓவியப்பக்கம் – ஐந்து – நளினி மலானி – கருத்தாழம் மிக்க நிர்மாணக் கலை
- கடிதம் நவம்பர் 4,2004 – அன்பின் நாகூர் ரூமி அவர்களுக்கு
- தமிழம் டாட் நெட்
- பி பி ஸி செய்திக் குறிப்பு- தென் ஆப்பிரிக்காவில் இந்தியர் பற்றிய ஆய்வு
- அவசர உதவி வேண்டுகோள்!
- கடிதம் நவம்பர் 4,2004 – இரா.முருகனின் மொழியாக்கம்
- கடிதம் நவம்பர் 4,2004 -இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் பேசிய உரை
- கடிதம் நவம்பர் 4, 2004 – முனை மழுங்கிய ஈட்டிகள்!
- கடிதம் நவம்பர் 4, 2004 – வளமான பாதையில் திருமாவளவன்
- மனுஸ்மிருதியை நிலைநாட்ட பட்டப்பெயர்கள்….
- பாரதி இலக்கிய சங்கமும் காவ்யா அறக்கட்டளையும் இணைந்து நடத்திய சி. கனகசபாபதி நினைவுப் பரிசுப் போட்டி முடிவுகள்
- அவளோட ராவுகள் -1
- நீண்ட இரவு தொடர்கிறது…
- ஷேக்ஸ்பியரும் வெங்காயமும்
- கிறுக்குப் பிடித்தாலும் ஆம்பிளைதானே…
- நிலவுக்குப் பயந்து பரதேசம் வந்த மான்குட்டிகள்
- கங்கவரம்
- மனித அறிவியலின் பரிணாமம்
- பாசத்தைத்தேடி
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 44
- சும்மா இருடா
- ஆத்திரக் கும்மி
- நெஞ்சில் மின்னிய கீதம் (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- உறவென்றால்…
- மழைப் பயிர்
- குடை பிடிக்கும் நிழல்
- நித்யா
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 1-உன் கூந்தல் தோட்டமும் சில பட்டாம்பூச்சிகளும்
- அம்மாவின் சமையல்
- அருண் கொலட்கரின் ‘ஜெஜூரி ‘ கவிதைகள்
- பெரியபுராணம் – 16 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம்)
- என் அழகும் மாறும்
- காத்திருப்பு
- பேப்லோ நெருதா கவிதை- 3 : துன்பரசம் பிழிந்து ஒரு கவிதை ( ‘Saddest poem ‘ )
- 21 ஆம் நூற்றாண்டில் எழுந்த இந்திய நீர்வளப் புரட்சி! இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (7)
- நீர்வளம் காக்க போராடும் வெள்ளியூர்
- ஆவிகள் புசிக்குமா ?!
- பொதுச்சிவில் சட்டத்துக்கு ஆதரவாக…
- வாரபலன் நவம்பர் 4,2004 – குஞ்ஞாலுக்குட்டியின் பெண்குட்டி விவகாரம், அமோக விளைச்சல், அந்தத் தெரு, எழுதுங்க , கம்யூனிஸ்ட் கால் பந்த