வரதன்
இதோ, நடிகர் சங்கத் தலைவர் நாடாளும் ஆசைக்கு அச்சாரம் இட்டுவிட்டார்.
அவர் பற்றிய சில விஷயங்களைப் பரிமாறிக் கொள்வோவோம்:
இவர் கண்டது அரசியல் இயக்கமல்ல. பின் என்ன … ? அவரது சினிமா ரசிகர்கள் கூட்டத்தை அரசியல் கூட்டமாக மாற்றியுள்ளார்.
தனக்கு போலீஸ் , வாத்தியார் என வேஷம் போட்டவர், தன் ரசிகர்களுக்கும் அரசியல் கூட்டமாக அரிதாரம் பூசியுள்ளார்.
இது ‘விசய ‘ ஞானத்தால் வந்த விஜயம் அல்ல… ‘விஷ ‘ எண்ணங்களால் விழுந்த வித்து.
கொஞ்சம் யோசிப்போம்…
ராஜ அரசாங்கங்கள் மாறி மக்களாட்சி வந்த போது, முதலாளித்துவம், கம்யூனிஷம், சோஷலிஷம், என்று மனித ஏற்றுத் தாழ்வு மற்றும் சமூக சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு இயக்கங்களும் கட்சிகளும் தோன்றின.
அது தாண்டி, மண்ணின் மைந்தர்களை, சமூக இயங்களின் பொறுப்பிலுள்ளவர்கள் மொழி இனம் இவற்றால் எதேச்சிகார மனநிலையுடன் ஆளுமை செய்ய முயன்றபோது, மொழி, இனம் சார்ந்த அமைப்புகளும் தோன்றின.
இதில் எண்ண ஓட்ட மாறுதல் மற்றும் அமைப்பை நிர்மாணிக்கத் துடிக்கும் வேகத்தில், மிதவாதம், தீவிரவாதம் என்றும், தலைவர்களின் குணநலன்களால் ஜனநாயகம் , எதேச்சிகாரம் என்ற சூழல்களும் தோன்றின.
இவற்றில் அந்த இயக்கங்களுக்குள் மாற்றத்தையோ, இல்லை பிரிவோ வருவது புரியக்கூடியதே…
ஆனால், இப்படி சமூகச் சித்தாந்தங்கள் இன்றி, தனக்கு கூடிய கூட்டத்தை வைத்து தன்னை முதுமை தழுவுகிறது என்பதற்காகவும் மாற்று பணிபோலும் தனது கூட்டத்தை வேறு ஒரு பரிமாணத்திற்கு எடுத்துச் செல்லும் சுயநல முயற்சியே விஜயகாந்தின் அரசியல் அவதாரம்.
சில எண்ணங்கள்:
விஜயகாந்த் சொல்வதும் அதற்கான சில கேள்விகளும்:
::: சொன்னது : ‘நான் அறிவாளிகள் – அனுபவம் மிக்கவர்கள் என்பதற்காக புதிதாக கட்சிக்கு வருபவர்களுக்கு பொறுப்பு கொடுக்க மாட்டேன்.. எல்லா பொறுப்புகளும் என் மன்றத்து ஆட்களுக்குத் தான்… ‘
– நம் பதில்::: இது தனது ரசிகர் கூட்டம் தன்னை விட்டு ஓடிவிடாமல் இருப்பதற்கான அறிக்கையே தானே தவிர வேறொன்றுமில்லை…
– இல்லை, இவர்தான் தனது திரைப்படம் பார்க்க வரும் கூட்டத்தைப் பார்த்து , இப்படம் என் ரசிகர்களுக்குத் தான்… உங்களுக்கில்லை எனக் கதவடைத்திருப்பாரா.. ? அப்படியெனில் அது எத்தகையத் தோல்வியைத் தழுவும்..
– அது போல் அவரின் இந்த அறிவிப்பு…
மேலும், இவரின் கட்சியின் பொதுச்செயலாளர் ராமு வசந்தன் பின்புலம் பார்ப்போம்.
– அவர் விஜயகாந்திடம் நிர்வாகத் தயாரிப்பு உதவியாளராகப் பணியாற்றியவர். அவரின், படித்தறிதலும், பேசுமுறை அறியாமையும் திரையுலகு அறியும்.
தமிழகத்தில் மாற்றம் கொண்டு வரத் துடிக்கும் விஜயகாந்திற்கு கிடைத்த பொதுச் செயலாளரின் நிலை பாருங்கள்.
விஜயகாந்திற்கு பொதுச்செயலாளராக தேவைப்படுபவர் தன் மற்றும் தன் குடும்பத்திற்கு ஒரு கடைநிலை சேவகன் தானே தவிர, அரசியல், சமூகச் சிந்தாந்தங்கள் புரிந்தவரோ இல்லை மனிதநலமிக்க சமூக சேவகரோ அல்ல.
இட்ட பணி கொண்டு கைகட்டி வாய்மூடி பணி செய்யும் ஒரு வேலைக்காரர் தான்.
அதும் போக, சிலவருடங்களுக்கு முன் இந்தப் பொதுச் செயலாளர் உற்சாகப் பானத்திற்கு மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டதன் காரணம் அறிந்ததே..
நிலை இப்படியிருக்க பின் ஏன் இவர் பொதுச் செயலாளராக….
உங்களுக்கும் உங்கள் ரசிகர் கூட்டத்தில், சமூக சிந்தாந்த, சமூக நல அக்கறை , வழிநடத்தும் தளபதிகள் ஒருவர் கூடவா கிடைக்கவில்லை… ?
ராம்தாஸைக் கடுமையாகச் சாடும் விஜயகாந்த் , அவரின் பாணியில் தான் ஒரு தலையாட்டியை பொதுச்செயலாளராக நியமித்துள்ளார்.
—-
சொன்னது: அரசியல் என்ற பெயரில் குடும்பநலன் பற்றி மற்றுமே சிந்திக்கிறார்கள். தங்கள் குடும்பத்தினரை மட்டுமே வளப்படுத்துகிறார்கள்.
நம்பதில்: முதலில் திமுக-வை எடுத்துக் கொள்வோம்.
– திராவிட கழகமும் , அது தொடர் திமுக-வும் தோன்றிய காலத்தில் எல்லா ஊருமே, வீடுமே சமூக சிந்தாந்தம் பற்றியோ, மொழிவளம், இனப்பற்று ஏற்றத் தாழ்வுகள் பற்றி கலந்துரையாடி விவாதித்துக் கொண்டிருந்தன.
இப்போது, மெட்டி ஒலி, பற்றியும் சந்திரமுகி, சிவாஜி பற்றியும் பேசும் காலமின்றி அது மனித மேம்பாடு, வர்க்கபேதங்கள் வடவர் ஆதிக்கம் பற்றிய பேச்சுக்கள் அதிகமிருந்த காலம்.
– அதில் கருணாநிதி, முரசொலி மாறன் தொழில் ரீதியாக கலைத்துறையில் பணியாற்றிய போது, பின் அது மொழி இனப்பற்றாக இயக்கங்கில் சேர்ந்த போது கட்சியிலும் தொடர்ந்தது.
அதுவன்றி கருணாநிதி முதல்வரகாவோ இல்லை திமுகழகம் தோற்றுவித்த போதோ, குடும்ப சகிதமாக ஜிகினா மாநாடுகளும், பெருத்த உருவங்கள் கூட்ட சூழ நானும் என் மனைவியும் தான் கட்சி சொந்தக்காரர்கள் என்று பிரகடனப்படுத்தி குடும்ப சொத்தாக கட்சியை அறிவிக்கவில்லை.
– கால ஓட்டத்தில் கருணாநிதி குடும்பத்தினரை முன்னிலைப் படுத்தியும், குடும்பச் சொத்தாக கழகம் மாறிப் போனது தனியாக நாம் பேச வேண்டிய ஒன்று.
ஆனால், விஜயகாந்த் மாதிரி உலகில் குடும்பத்தினர், அதுவும் செல்வச் செழிப்பு உடலிலும், அலங்காரத்திலும் மின்ன அரசியல் கண்டவர்கள் என நினைத்தால் இடிஅமீன், சதாம் ஹூசேன் தான் ஞாபகத்திற்கு வருகிறார்.
விஜயகாந்த் கட்சி கருணாநிதி, ஜெயலலிதாவை விட மிக மிக ஆபத்தான தலைமை ஆதிக்க மற்றும் இறுமாப்பு எண்ணம் கொண்ட இயக்கமாக தோன்றியுள்ளது.
—-
சொன்னது:
தமிழ் மொழியை வளர்ப்போம். அதே சமயம் வர்த்தகத்திற்காக ஹிந்தியை பயிற்றுவிப்போம்.
நம் பதில்:
இதோ பார்ரா…
தமிழ் மொழி பற்றிய முக்கியத்துவமும் , ஹிந்தி மொழிக்கான எதிர்ப்பும் பற்றிய விஷய ஞானம் இல்லா ஒரு சிந்தனை…
– ஹிந்திக்காரர்களுடன் ஹிந்தியில் அளவளாவாமல் விட்டால் நமக்கு வர்த்தக ரீதியாக மிகப் பெரிய பலமும் பாதுகாப்புமே உண்டு. இன்று, ஆங்கிலம், சீனம், ஜப்பானிய மொழி தான் வர்த்தகத்தில் தேவைப்படும் ஒன்றாகக் கொள்ளலாம்.
அதிலும் ஆங்கிலம் உலக வர்த்தக மொழியாக வருவதற்கு நாம் நிலைப்பாடு எடுப்பதே புத்திசாலித்தனமான ஒன்று.
– விஜயகாந்த் சொல்வதைக் கேட்டால், பின் ஹிந்தி கம்ப்யூட்ட்ர், ஹிந்தி மொழி பரிமாற்றம் என நாம் கீழ்நிலை நோக்கிச் செல்வோம்.
நாம் ஹிந்தி மற்றும் எந்த மொழிக்கும் எதிரியில்லை. ஹிந்தியை பேச , புரிய படிப்பது நல்லது. ஆனால், நம் குழந்தைகள் நமது திருக்குறளையும், பாரதியையும், இராமனுஜத்தையும் அறியாமல் LKG-வகுப்பிலேயே.. ‘ஜாரே ஜகாச் சே அச்சா… ‘ என்பது மிகப் பெரிய தீங்கைத் தான் ஏற்படுத்தும்.
ராம்தாஸ் பேத்திகளை இந்தி முழுநேர வகுப்பிற்கு அனுப்பினால் , அவருக்கும் நம் பதில் இது தான்.
மேலும், தமிழ்மொழி தொடர்பான இவரின் சிந்தனை தற்போதைய சில சுயநல அரசியல்வாதிகளின் சிந்தனைத் தடத்தில் தான் இருக்கிறது… அன்றி வேறு நிலையில் இல்லை.
தமிழுக்கு இவர் எதுவும் செய்ய வேண்டாம் ஆனால் தமிழர்களுக்கு ஏதாவது இவ்விஷயத்தில் செய்யட்டம்,
போஸ்ட் ஆபிஸிலும், பல விண்ணப்ப வடிவுங்களிலும் இவர் ஆங்கிலம் அன்றி அந்த அந்த ஊர் மாநில மக்களின் மொழி இடம் பெற முதலில் முயலட்டும்.
50 -6-70 வயதில் விண்ணப்பம் பூர்த்தி பெற பிற மொழி படிக்கச் சொல்லும் இவரின் பார்வை ‘தொல்லை ‘ நோக்கு கொண்டதே அன்றி ‘தொலை ‘ நோக்கு கொண்டதல்ல….
மேலும் தமிழுக்காக இவர்தன் கல்வி இழந்தாராம்.
அட ராமா…. ரைஸ் மில்களில் வந்த செல்வச் செழுப்பினால் இவர் மதுரை நகர் தெருக்களில் போட்ட கெட்ட ஆட்டம் நான்மாடக்கூடல் அறியும். அவரின் செழிப்பே அவர் படிக்காமல் விட்டதன் காரணமேயன்றி.. தமிழ் அல்ல..
அப்படி இவரும் தண்டவாளத்திலோ,,, பஸ் டயர் அடியிலோ படுத்தது பற்றி எதுவும் இருந்தால்… சொல்லட்டும்.. அப்புறம் தான் இவரின் தமிழ் மொழி போராட்ட முயற்சியின் வண்டவாளம் தெரியும்…
இனியாவது, உங்களின் வெற்றிப்பட வசனகர்த்தாகளின் வசனங்களை எடுத்து விடுவதை நிறுத்துங்கள். இயல்பாக பேசுங்கள்..
—-
சொன்னது:
நான் அதுக்கு 5 இதுக்கு 2 இன்னொன்றுக்கு 3 லட்சம் கொடுத்திருக்கிறேன்….
நம் பதில்:
உண்மைதான். உங்களின் இந்தக் குணம் பாராட்டுதலுக்குறியது. யார் இல்லையென்றது.
ஆனால், ரோஸ்பவுடர் அப்பிய குஷ்புவிற்காக திரிக்கப்பட்ட தங்கர்பச்சானின் நிலையின் உண்மை வெளிப்பாட்டிற்கு களம் அமைக்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்தீர்களே…. அதே நீங்கள் உடலெல்லாம் தீந்து போன் கும்பகோணக் குழுந்தைகளுக்காக வாய்க்கு வந்தபடி, ‘இந்தா புடி பத்து லட்சம், இருபது லட்சம்.. ‘ என்றி டிவி காமிராவிற்கு முன் வார்த்தைகளை அள்ளி சூப்பர் புருடா விட்டு பின் தராமல் விட்ட நடிை
‘b8 நடிகையரை அழைத்து இது மாதிரி கேட்டதுண்டா.. ?
சொல்லுங்கள்..
சரி அதைத் தான் விடுங்கள், ‘இனிக்கும் இளமை ‘ படத்தில் உங்களுக்கு வாய்ப்பு தந்து உங்களை வாழ வைத்த அந்த இஸ்லாமிய சகோதரர் எம்.ஏ.காஜா குடும்பம் இன்ஜினியரிங் ‘ இடத்திற்கு உங்கள் வாசல்வந்தபோது கதவு அடைக்கப்பட்டதே… அவர்கள் இன்று பிச்சையெடுக்கும் நிலையில் உள்ளது கண்டும் பாராமுகமாய் இருக்கிறீர்களே.. இதுதான்.. உங்கள் நிலையா..
வாழவைக்கும் தமிழ்மக்களுக்கு சேவை செய்யும் முன்… வாழ வைத்த அந்த குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டுங்கள். உங்கள் வார்த்தைகளை பின் நம்புவது பற்றி யோசிக்கிறோம்…
—-
இப்படி பல சொல்லிக் கொண்டே போகலாம்.. நிச்சயம் நிறைய கருத்துப்பரிமாறிக் கொள்வோம் இது தொடர்பாக.
விஜயகாந்த ஒரு அரசியல் ஆபத்து.
விஜயகாந்த் அவர்களே…. பல பத்து வருடங்களுக்கு முன், முதிய காலத்தில் மூன்று பாத்திரம் கொண்ட 175 நாள் தாண்டி ஓடிய குப்பைப்படம் ‘திரிசூலம் ‘ படத்திற்கு மதுரை தமுக்கம் மைதானம் குலுங்க சிவாஜி மன்றத்தினரும், காங்கிரஸ்காரர்களும் நடத்திய விழா அறிவோம்… அதில் மூப்பனார், ‘சிவாஜிக்கு முன் – சிவாஜிக்குப் பின் ‘ என திரை வரலாறு எழுதப்பபட வேண்டும் என்று சூளுரைத்ததும் அறிவோம்..
ஆனால், அதே சிவாஜி கட்சி கண்டபோது கண்ட விடை யாவரும் அறிவோம்….
சொன்னால், நீங்கள் வெற்றி பெற்ற, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா- என்கிறீர்கள். அவர்கள் சினிமாவைத் தொழிலாக கொண்ட அரசியல்வாதிகள்:
காங்கிரஸீடனும் பின் திராவிட இயக்கத்துடனும் தன்னை பிணைத்துக் கொண்டு அதற்காக ஊர் ஊராக பயணித்து அரசியலில் பலநிலை கண்டவர் எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆரின் வெற்றி 70களில் கருணாநிதியின் பயமுறுத்திய அராஜக ‘Political Terrorism ‘ செயல் கண்டு மக்கள் பயந்ததால் வந்தது.
யாரையும் மதியா ஜெயலலிதாவின் தொடரும் வெற்றியும் அந்த பயத்தின் விளைப்பாடுதான்.
அது புரியாமல், மாற்றுகளைப் பற்றி பேசாமல் நீங்கள் சுற்றம் சூழ கட்சி ஆரம்பித்துள்ளீர்கள்..
எங்களுக்குத் தேவை நிஜமான மாற்றம்.
அதற்கான சரியான தீர்வு அரசியல் சிந்தாந்த்தமுடன். விவேகமுள்ள, அனைவரையும் அரவணைத்து கலந்தாலோசித்து களம் காணும் ஒரு தலைமை தான் .. அதுவரை நாங்கள் காத்திருப்போம். அதே சமயம் அரசியல்வாதிகளை விமர்சித்து நீங்கள் சூளுரைக்கும் அடித்து துவம்சம் பண்ணும் படங்களைப் பார்ப்போம். அது ஒரு அழுத்தமனநிலை மீள எங்களுக்கு ஒரு வடிகால். அதற்காக ராஜா வேஷம் கட்டியவனுக்கே, பரிவட்டம் நடத்துவோம் என்று கனவு காணாதீர்கள்.
மேலும் நீங்கள், உங்கள் ரசிகபலம் காண்பித்து உங்களின் கல்யாணமண்டபம் இன்னும் பல சொத்துக்களை காப்பாற்றிக்கொள்ள கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் சந்தியுங்கள்…
நாங்கள் நல்ல தலைமைக்கு சிந்தனையுடன் காத்திருக்கிறோம்
: வரதன் ::::
varathan_rv@yahoo.com
- மண்வாசம்
- ‘சான்பிரான்ஸிஸ்கோ வளைகுடா தமிழ் மன்றம் ‘ – ‘தில்லானா ‘ இணையும் ‘ தொடுவானம் ‘ ஓர் அறிவிப்பு
- மெல்பேர்ன் தமிழ்ச்சங்கம் வழங்கும் குறும்படவிழா
- கவிஞர் புகாரி நூல் வெளியீடு
- புலம் பெயர்ந்தோர் வாழ்க்கைப் பதிவுக்கான கவிதைப்போட்டி
- 32வது இலக்கியச்சந்திப்பு – பாரிஸ் – 2005 – நவம்பர் 12,13
- சொன்னார்கள்
- மோட்டார் பைக் வீரன்
- அ… ஆ… ஒரு விமர்சனம்
- ஓவியம் வரையாத தூரிகை
- பாறையில் கசியும் ஈரம் ‘பறத்தல் அதன் சுதந்திரம் ‘ -கவிதைத்தொகுப்பு அறிமுகம்
- வங்காளப் படம் : மலைகளின் பாடல்
- சுதந்திரமாக எழுதுதல்
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிட்கள் -2 (The Great Pyramids of Egypt)
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-8)
- வேர்வாசிகள்
- பிறைநிலா அரைநிலா
- இணையம்
- பெரியபுராணம் – 56 – ( திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )
- உயிர் போகும் தருணம் குறித்து
- கீதாஞ்சலி (40) கனிவு மழை பொழியட்டும் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- முதலாளித்துவ சூழலியற் சிக்கல் – (செலவு நன்மைப் பகுப்பாய்வுச் சூழலியல்) – 3 – முருகைக் கற்பாறைகள் (Coral reefs)
- உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பும்….
- ஆண்களுக்கு காது குத்துதல் (தொடர்ச்சி)
- பெண்களும், அறிவியலும்: அன்றைய ஹிப்பேஷியா முதல் இன்றைய ஹார்வார்ட் பல்கலை வரை -1
- ‘விஷ ‘ (ய) காந்த் சூளூரை…
- நஷ்ட ஈடு
- என்றும் காதல்!