மாகி ஃபாக்ஸ்
ரிசின் ricin என்று அழைக்கப்படும் விளக்கெண்ணெயில் உள்ள விஷத்துக்கு எதிராக ஒரு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தில் இந்த ரிசின் விஷம் உபயோகப்படுத்தப்படலாம் என்று பேசப்படுவதால், இந்த தடுப்பு மருந்து மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பாக இருக்கிறது.
விளக்கெண்ணெயில் இருக்கும் ரிசின் என்ற மூலக்கூறு உலகத்திலேயே மனித அறிந்த விஷங்களிலேயே மிகவும் அபாயகரமான விஷம். இதுவரை இதற்கு ஒரு விஷ முறி மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
டல்லாஸில் இருக்கும் டெக்ஸாஸ் சவுத்வெஸ்டர்ன் மருத்துவ மையத்தில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள், இந்த விஷத்தை கான்ஸர் குணப்படுத்த உபயோகிக்க செய்த ஆராய்ச்சியின் பக்க விளைவாக இந்த தடுப்பு மருந்தை கண்டுபிடித்து இருக்கிறார்கள். எதிர்காலத்தில் உயிரியல் போர் நடந்தால், இந்த விஷம் அதில் உபயோகப்படுத்தப்பட்டால், இந்த தடுப்பு மருந்து அதனை முறிக்க உபயோகப்படும் என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
ரிசின் என்ற இந்த விஷம், ஆமணக்கு கொட்டையில் இருக்கிறது. இது பயங்கரவாதச் செயல்களுக்கு உபயோகப்படுத்தப்படலாம் என பலர் கருதுகிறார்கள்.
புல்கேரியாலிருந்து நாடு கடத்தப்பட்ட ஜியார்ஜி மார்கோவ் என்பவரை 1978இல் கொலை செய்ய, இந்த விஷத்தை ஒரு குடையில் நுனியில் வைத்த ஊசியில் தடவி அவரை எதேச்சையாக குத்தி கொலை செய்தார்கள் என பலர் நம்புகிறார்கள். டாக்டர் எலன் விடேட்டா என்ற ஆராய்ச்சியாளர், ‘ரிசினில் இருக்கும் பயங்கரம் என்னவென்றால், இது மிக எளிதாக தயாரிக்கப்படக் கூடியது. இதனை எளிதாக சேமித்தும் வைக்கலாம் ‘ என்று கூறினார்.
‘பெரிய நிபுணராக இருக்கத் தேவையில்லை. சும்மா ஆமணக்கு விதைகளை அரைத்து எண்ணெய் பண்ண வேண்டியதுதான். இது உலகத்தில் எல்லா இடங்களிலிலும் எளிதில் வளர்கிறது. இதனை பல வருடங்களாக உலகெங்கும் இருக்கும் உளவுத்துறைகள் பயன்படுத்திவருகின்றன. ‘ என்று கூறுகிறார்.
இந்த விஷத்தை சாப்பாட்டிலோ, தண்ணீரிலோ, ஆவியாகவோ தெளிக்கலாம். இது உடனே உடைந்து உடலில் கலந்துவிடும். இதனை கண்டறிவது கடினம்.
‘மிகக்குறைந்த அளவு ரிசின் கூட மனித உடலுக்கு மிக ஆபத்தானது. கொஞ்ச நாளைக்கு ஃபுளூ சுரம் வருவது போல இருக்கும். அப்புறம் உடனே சாவுதான். ‘ என்று கூறினார் டாக்டர் விடெட்டா.
பலமுறை தடுப்பு மருந்துகள் முயற்சி செய்யப்பட்டன. ஆனால் எவையும் சரியாக வேலை செய்யவில்லை. இந்த ஆராய்ச்சிக்குழுவின் மருந்து பாதுகாப்பானதாக எலிகளில் பரிசோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது.
விஷத்துக்கு எதிரான தடுப்பு மருந்துகள் புதிதல்ல. டெட்டனஸ் தடுப்பு மருந்து மனித உடலை, Clostridium tetani bacteria என்ற பாக்டாரியா உருவாக்கும் விஷத்துக்கு எதிராக எதிர்ப்பொருட்களை உருவாக்கத் தூண்டுகிறது.
Antibodies என்னும் எதிர்ப்பொருட்கள் ஒரு வகைப் புரோட்டான்கள். இவை வைரஸ் அல்லது பாக்டாரியாமீது தொற்றிக்கொண்டு, அவைகளை தீயசெயல் செய்வதிலிருந்து தடுக்கின்றன. இந்த எதிர்ப்பொருட்கள் சற்று நேரம் இந்த வைரஸ் மற்றும் பாக்டாரியாக்களை ஒரே இடத்தில் இவ்வாறு அடைத்து வைக்கும் நேரத்தில், உடலின் நோய்தடுப்பு செல்கள் (immune system cells) இங்கு வந்து இந்த வைரஸ், பாக்டாரியாக்களை அழித்து விடுகின்றன.
விட்டெட்டா அவர்களது குழு இதே போன்றதொரு முறையை ரிசின் விஷத்துக்கு எதிராக பயன்படுத்தி இருக்கிறார்கள். இது செப்டம்பர் 10 ஆம் தேதி ‘வாக்ஸின் ‘ என்ற பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது.
‘உண்மையான விஷம், இரண்டு புரோட்டான்கள் இணைந்தது. B சங்கிலி இதில் B என்பது பைண்டிங் (இணைப்பு) என்பதைக் குறிக்கிறது. இது உயர் உயிரினங்களின் எல்லா செல்களுடனும் இணையக்கூடிய புரோட்டான் என்பதால். இது இவ்வாறு இணைந்ததும், இதில் உள்ள A சங்கிலி செல்களில் உள்ள ரிபோசோம்களை அழிக்கிறது ‘ என்று இவர் கூறுகிறார்.
இந்த வேலை எல்லா புரோட்டான் உற்பத்தியையும் நிறுத்தி, உடலை அழிக்கிறது.
இவர்கள் செயற்கை முறையில் ஒரு A சங்கிலியை உருவாக்கினார்கள். இது செல்களுக்கு ஆபத்தில்லாதது.
ரிசின் விஷத்தில் இந்த சங்கிலியைச் சேர்த்து மரபணு முறையில் மாற்றி அதனை எலிகளுக்குக் தடுப்பு மருந்து போல கொடுத்து, பின்னர் உண்மையான ரிசின் விஷத்தை எலிகளின் உடலில் செலுத்தினார்கள். இந்த எலிகளுக்கு ரிசின் விஷத்தால் பாதிப்பு ஏதுமின்றி இருந்தார்கள் என விட்டெட்டா தெரிவிக்கிறார்.
- ஒரு கடிதம்…
- கலாச்சாரக் கதகளி
- தேவதேவன் கவிதைகள் 5: வானும் ஒளியும்
- இதுவும் உன் லீலை தானா ?
- தோழியரே! தோழியரே!
- திண்ணை அட்டவணை – செப்டம்பர் 6 , 2002
- நாய் வாங்கும் முன்பாக
- கவிதாசரண் பத்திரிக்கை
- பொருளின்மை என்னும் கணம்நோக்கி (எனக்குப் பிடித்த கதைகள் – 26 -தாராசங்கர் பானர்ஜியின் ‘அஞ்சல் சேவகன் ‘ )
- காவிரி நீர் போர்
- அறிவியல் மேதைகள் சர்.சி.வி. இராமன் (Sir.C.V.Raman)
- பாரத நாட்டின் பெளதிக மேதை ஸர்.சி.வி. ராமன் (1888-1970)
- பூமியில் உயிர் தோன்றுதலுக்கு வேற்றுலக பங்களிப்பு
- விளக்கெண்ணெயிலிருக்கும் விஷத்துக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
- புதிய வகையான கடல் அலை கண்டறியப்பட்டுள்ளது
- நான்காவது கொலை!!!(அத்யாயம் ஆறு)
- எழுத / படிக்க
- நடிகர்கள்!
- கவலையுள்ள மனிதன்!
- இரு கவிதைகள்
- பயணங்கள் முடிவதில்லை
- யார்தான் துறவி ?
- புதிய பாலை
- அதுவரை காத்திருப்போம்.
- காவிரி நீர் போர்
- குழந்தைகளை புதைத்து எடுத்த குழிமாற்றுத் திருவிழாவில் தவறேதும் இல்லை
- இருவேறான நீதிமுறை அளவுகோல்களுக்கெதிராக…….. ஆகன் சமாதானப்பாிசு
- இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 6 2002 (காவிரி, முஷாரஃப், ஸ்டாலின், மனீஷா,மேற்கு வங்கம், சீனா)
- வீர நாயகர்களுக்கும் விதியால் பலியானவர்களுக்கும் வணக்கம்
- குப்ஜாவின் பாட்டு