சு.செ.வே
தேர்தல் முடிவுகள் வெளி வந்து விட்டன. முதல் நாள் பெய்த கோடை மழையை விட அற்புதமான, னால் வரவேற்கத்தக்க முடிவுகள். குடியரசு தலைவர் (அல்லது தலைவி) மிகவும் கவனத்துடன் மறுபடி படித்த இந்திய அரசியலமைப்புச் சட்டங்களுக்கும், அவர் மாளிகையில் தங்கி லோசனைகள் வழங்குவதற்கு வலுடன் காத்திருந்த சட்ட வல்லுநர்களுக்கும் வேலை இல்லை. தொலைக்காட்சி ‘சேனல்களில்’ காத்திருந்த தேர்தல் நிபுணர்களுக்கும் பெருத்த ஏமாற்றம். ஐந்து நாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக, ஒரே நாளில் முடிந்து போன சோகம். எனக்கு ஒரு பக்கம் வருத்தம், மறுபக்கம் மகிழ்ச்சி. போட்ட கணக்குகள் தவறிப் போனதில் வருத்தம். அலுவலகத்தில் அடுத்த இருக்கையில் அமர்ந்திருக்கும் நண்பரிடம் கட்டிய போட்டியில் தோற்று, இழக்கப் போகும் பணத்தை நினைத்து அதிகமான வருத்தம் . தெளிவான முடிவுகள் வந்ததில் மகிழ்ச்சி. மறுநாள், பங்குச் சந்தையில் வரப்போகும் ஏற்றத்தை நினைத்து மனமெல்லாம் பூரிப்பு.
வழக்கம் போல அனைத்து தேர்தல் அவதானிகள் முகத்திலும் லிட்டர் கணக்கில் அசடு வழிகிறது. நானும் இதில் சேர்த்தி. சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சியில் கருத்துக் கணிப்புகள் வழங்கிய யோகேந்திர யாதவ் மட்டும் இதில் விதி விலக்கு. தலை நகரில் ‘கிச்சடி’ அரசாங்கம் தான் அமையும். யாருக்கும் தனிப்பட்ட பெரும்பான்மை கிடைக்காது என்று உறுதியாகக் கணித்த அனைவரும், துண்டைக் காணும், துணியைக்காணும் என்று ஓடிக் கொண்டிருக்கிறார்கள். முடிவுகள் கூறும் உண்மை என்ன?
மன்மோகன் சிங் என்ற நல்ல மனிதருக்கு, அவருக்கு ‘பெருந்தன்மையுடன்’ பிரதமர் பதவியை விட்டுத்தந்து, கையில் பிரம்புடன் அவர் சொன்னபடி ஒழுங்காக நடக்கிறாரா என்று பள்ளித் தலைமை சிரியர் போல கண்காணித்து வந்த அன்னை சோனியாவிற்கு கிடைத்த வெற்றி என்று காங்கிரஸ் கட்சிக்காரர்கள் தம்பட்டம் அடிக்கலாம். அது உண்மை அல்ல.
-2-
சரியான கட்சிகளுடன் கூட்டணி அமைக்காதது, ஒழுங்காக இருந்த பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகளை கூட்டணியில் இருந்து விரட்டி அடித்தது, வருண் காந்தியின் தவறான பரபரப்புரைகள், மோடி தான் பிரதமர் பதவிக்கு தகுதியான ள் என்று இடையில் போட்ட கோஷங்கள் இவை தான் பாரதிய ஜனதாவை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தி, காங்கிரஸை நோக்கி திசை திருப்பியுள்ளது என்று அக்கட்சியின் ‘சிந்தன் பைதக்கில்” அரை டிராயர் போட்ட வயசாளிகள் தெளிவு படுத்தலாம். இதுவும் உண்மை அல்ல.
இயற்கையின் சீற்றம் அல்லது வறட்சி, அதை ஒட்டிய துன்பங்கள், அண்டை நாடுகளுடன் போர், பெரிய தலைவர் யாரேனும் அகால மரணமடைதல் போன்ற நிகழ்வுகளால் ஏற்படும் ‘அலை’ வீசாத தேர்தல் இது.
எந்தக் கட்சி மாநிலத்தில் அரசு அமைத்து , தங்களுக்கு ஒழுங்காக பணியாற்றி வருவதாக மக்கள் நினத்தார்களோ, அந்தக்கட்சிக்கே மக்கள் பெரு வாரியாக வாக்களித்துள்ளார்கள். அக்கட்சி எந்தக் கூட்டணியில் இருந்தாலும் சரி. தில்லியில் ஷீலா தீட்சித், ராஜஸ்தானில் அஷோக் கெலட், ந்திராவில் ராஜ சேகர ரெட்டி, ஹரியானாவில் ஹ¥டா, இவர்களது அரசினை மக்கள் விரும்பியதால், இம்மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கே பெருவாரியான இடங்கள். காங்கிரஸ் கூட்டணி ளும் மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களிலும் இப்படியே நடந்துள்ளது.
பாரதிய ஜனதா ளும் கர்நாடகா, குஜராத், மத்திய பிரதேசம், சத்திஸ்கர் மாநிலங்களிலும் அக்கட்சி அதிகப்படியான இடங்களை வென்றுள்ளது, மோடி, எடியூரப்பா, சவுகான், ராமண் சிங் அரசுகளின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. பீகாரில் நிதிஷ் குமார், ஒரிஸாவில் நவீன் பட்நாயக், தமிழ்நாட்டில் கருணாநிதி – இவர்கள் கட்சியோ, சார்ந்துள்ள கூட்டணிகளோ இம்மாநிலங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளதும் இப்படியே.
அதே போன்று சரியான அரசு அளிக்கத் தவறிய, மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் இடது சாரிக் கூட்டணி, பஞ்சாப் மாநிலத்தில் அகாலி தளம், ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா போன்றவை இந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவி உள்ளன. மக்கள் விரும்புவது தங்களுக்கு சரியான முறையில் பணியாற்றும் கட்சிகளைத்தான் என்பதை தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
-3-
இந்த தேர்தல் முடிவுகளின் சில பக்க விளைவுகள் (Side Effects). மத்தியில் ஒரளவுக்கு நிலையான அரசு அமையும். உலகமே பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்நேரத்தில், மன்மோகன் சிங் போன்ற ஒரு நேர்மையான, பொருளாதார நிபுணரின் தலைமையில் நிலையான ட்சி அமைவது நாட்டுக்கு நல்லது. அவருக்கு சுதந்திரமாக செயல்பட வாய்ப்பு அளிக்கப் பட வேண்டும். நேரு குடும்பத்திற்கு, காங்கிரஸ் கட்சிக்கு திடீர் திடீரென, சோசலிஸக் காய்ச்சல் வர வாய்ப்பு உண்டு என்பதால் சிறிது பயமாக இருக்கிறது.
உள் நாட்டுப் பாதுகாப்பு, தீவிர வாதிகளின் அச்சுறுத்தல், எல்லை தாண்டிய பயங்கரவாதம் போன்றவற்றில், மேலும் உறுதியுடன் இந்த அரசு செயல் பட வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். தேர்தல் முடிவுகள் வெளி வந்த உடன் நடந்த, முதல் காங்கிரஸ் செயற் குழுக் கூட்டத்தில், இந்த இரண்டு பிரச்சினைகளைப் பற்றித் தான் மன்மோகன் சிங் கவலை தெரிவித்து உள்ளார் என்பது நம்பிக்கை அளிக்கிறது.
மிகவும் நெருக்கடியான இந்த நேரத்தில், குறுகிய கட்சி வட்டங்களை விட்டு வெளியே வந்து, காங்கிரஸ், எதிர்கட்சியான பாரதிய ஜனதாவுடன் ஒருமித்த கருத்து உருவாக்கி (consensus building) செயல் பட்டால் நாட்டுக்கு மிகவும் நல்லது. இந்த இரண்டு பிரச்சினைகளிலும் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா ஒரே பார்வையுடன் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
மற்ற பக்க விளைவுகளைப் பார்ப்போம். அரசர்களை உருவாக்கப்போகும் கனவில் இருந்த முலாயம் சிங், ராம் விலாஸ் பாஸ்வான், லாலு பிரசாத் அடக்க ஒடுக்கமாக மாறியதோடு, அமைச்சர் பதவியாவது கிடைக்குமா என்ற ஏக்கத்தில், காங்கிரஸ் தலைமையில் ன ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்குத் தான் எங்கள் தரவு என்று கூவுகிறார்கள். தாமே அரசாளப் போவதாக பந்தா பண்ணிய மாயாவதி, ஜெயலலிதாக்களை காணவில்லை. தில்லி செல்வதற்காக வாங்கிய விமான டிக்கட்டுகள் ‘கேன்சல்’ செய்யப்பட்டு விட்டதாகக் கேள்வி. வசந்த் விகாரில் வாங்கிய பங்களாக்கள் வாடகைக்கு விடப்பட்டதா என்பது தெரியவில்லை.
-4-
கடந்த நாடாளுமன்றத்தில் ‘பெரிய அண்ணன்’ மனப்பான்மையில், மன்மோகன் சிங் அரசாங்கத்தை ட்டிப் படைத்த இடது சாரிகள் மிகக் குறைந்த இடங்களையே பெற்று, மூன்றாவது அணி எங்கே என்று தேடிக் கொண்டு இருக்கிறார்கள். வெறுப்பில் இருந்த சோம்நாத் சட்டர்ஜி, பிரகாஷ் காரத் தலையை உருட்ட இடது சாரிகளை கொம்பு சீவிக் கொண்டு இருக்கிறார். தமிழகத்தில், தேர்தலுக்குத் தேர்தல் அணி மாறிக் கொண்டு இருந்த பாட்டாளி மக்கள் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வில்லை. காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றாலும், மணி சங்கர அய்யர், இளங்கோவன், தங்கபாலு தோல்வியைத் தழுவி உள்ளனர். ‘தொட்டுக்கோ, தொடைச்சுக்கோ’ என்று சிதம்பரம் சுமார் மூவாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். இது தான் ஜனநாயகம்.
நெருக்கடி நிலை திரும்பப் பெற்ற பின் நடந்த தேர்தலில், ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தியைத் தோற்கடித்தது, வளர்ப்பு மகன் திருமணத்திற்குப் பின் நடந்த தேர்தலில் ஜெயலலிதாவை பர்கூர் தொகுதியில் தோற்கடித்தது, மாறி மாறி ட்டம் காட்டிய கவுடாக்களுக்கு பாடம் கற்பித்து, கர்நாடகாவில் எடியூரப்பாவை வெற்றி பெறச் செய்தது, பீகாரில் லல்லுவும், பாஸ்வானும் காங்கிரஸ் தயவில் தப்பாட்டம் டிய போது, நிதிஷ் குமாருக்கு பெருவாரியாக வாக்களித்து வெற்றி பெறச் செய்தது, ஜார்கண்டில், சிபு சோரனை தோற்கடித்தது, இவை அனைத்தும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில், படிப்பறிவு அதிகம் இல்லாத மக்கள் வழங்கிய தீர்ப்பு.
புதிய நாடாளுமன்றத்தில் பாதிக்கும் அதிகமான உறுப்பினர்கள் ஐம்பது வயதிற்கும் குறைவானவர்கள் என்பது நல்ல செய்தி. நூற்று எழுபத்து மூன்று உறுப்பினர்கள் கோடீஸ்வரர்கள் என்பது என்ன செய்தி என்பது தெரியவில்லை வின்ஸ்டன் சர்ச்சில் கூறியது போல, ‘எத்தனை குறைகள் இருந்தாலும் மக்களாட்சி மட்டுமே, உலகின் மிகச் சிறந்த ட்சி முறையாகும்’. இது தான் உண்மை.
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 4 (காபா ஆலயத்தின் தூண்கள் மற்றும் கறுப்புக் கல்)
- வாழ்க ஜனநாயகம் !
- நவீன தமிழ் இலக்கிய கருத்தரங்கம்
- நர்கிஸ் – மல்லாரி சிறுகதை/ கவிதை போட்டி
- விரைவில் வெளிவரவிருக்கும் கூர் 2009
- நவீனத்தமிழ் இலக்கியம் பற்றிய கருத்தரங்கம் மற்றும் நூல்கள் அறிமுகம்
- கடிதம்
- விமர்சனக் கடிதம் – 2
- மெட்ரோ பட்டாம்பூச்சி கே ஆர் மணி கவிதைகள் – முன்னுரை
- சங்கச் சுரங்கம் – 17: குருதிப் பூ
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! பூமியின் காந்தத் துருவங்கள் திசை மாறுமா ?(கட்டுரை: 59)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << காதலில் ஏகாந்தம் >> கவிதை -10 பாகம் -2
- ஆதமி
- பனித்துளி புகட்டிடும் பாடம்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -39 உன் விழிகள் என் கொடி உயர்த்தும்
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தெட்டு
- செத்தும் கிழித்த கமலா சுரையா
- நினைவுகளின் தடத்தில் – (32)
- விளம்பர இடைவேளைகள்
- வார்த்தை ஜூன் 2009 இதழில்
- சத்தமின்றிப் பூக்கும் பூ
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஆறாவது அத்தியாயம்
- மூன்றாவது நாற்காலியின் வெற்றிடம்
- தகவல்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -5
- அப்பா
- முட்டர்பாஸ் Mutterpass