ரவை –1கப்
வாழைப்பழத்துண்டு –1கப்
பால் –1கப்
சர்க்கரை –1கப்
நெய் –அரைகரண்டி
ரவையை நெய்யில் சிவக்க வறுத்து, பிறகு அரைகப் தண்ணீர், ஒருகப் பால் இவற்றைக் கலந்து ஊற்றி, வாழைப்பழத்தையும் போடவும். வெந்ததும் சர்க்கரையைப் போட்டு சிறிது நெய்விட்டு கிளறவும். சுருள ஒட்டாமல் வந்தவுடன் இறக்கி வைக்கவும். வேண்டுமானால் கேசரிப் பவுடர் போட்டுக் கொள்ளலாம்.