வருத்தமுடன் ஓர் கடிதம்

This entry is part [part not set] of 49 in the series 20050225_Issue

மீ.வசந்த்


‘விடை பெறுகிறேன் ‘- வருத்தத்தை தந்தது.இது வரை ஏராளமான நல்ல கட்டுரைகள் படைத்த படைப்பாளி மனம் நொந்து இனி திண்ணை யில் எழுத மாட்டேன் என சொல்வது வருத்தமான விசயம். இது தமிழ் இலக்கியத்தின் சாபக்கேடா ? ?

திண்ணையின் வாசகன் என்ற முறையில்,திண்ணை எல்லோருடைய கருத்துக்களையும் வெளியிிடும் ஒரு நடுநிலையான இனைய இதழ் என்றே அறியப்பட்டுள்ளது.

எழுத்தாளர்களை பொருத்தவரை அவர்களுக்கு தலைக்கனம் அதிகம் என்ற ஒரு கருத்து பரவலாக அனைவரிடமும் இருந்து வருகிறது.அவர்களுக்குள் நடக்கும் எழுத்து யுத்தம் தமிழை காயப்படுத்துவதோடு வாசகர்களையும் பாதிக்கிறது.ஓவ்வொரு மனிதரும்..ஒவ்வொரு எழுத்தாளரும் தனக்கென்று ஒரு தனித்துவம் பெற்றவர்கள்.மற்றவர்களின் படைப்புகளை விமர்சனம் செய்பவர்கள் குரிப்பிட்ட நபரை காயப்படுத்தாமல் ,அந்த படைப்பினில் உள்ள குறைகளை நல்ல முறையில் சுட்டிக் காட்டுதல் நலம்.ஒருவர் மற்றவரையும்,மற்றவர் அவரையும் திட்டுவது ஒரு சுழல் முறை பழக்கமாகி விடக்கூடாது.மற்றவர் சொல்லும் நல்ல கருத்துக்களை துளியளவும் விமர்சிக்காமல் அவரின் தவறான கருதுக்களை மட்டும் பெரிது படுத்துவது வக்கிர புத்தியின் வெளிப்பாடு.

நம் தமிழ் உலகிள் ஒருவருக்கு அரசின் விருதோ தனியார் விருதோ கிடைத்தால் அதை மற்றவர்கள் விமர்சனம் செய்யும் முறையும் ..தங்களை தாங்களே அறிிவாளிிகள் என்றும்,தனக்கு தராமல் அவருக்கு போனது முட்டாள்தனம்,அரசியல்..அது இதுவென்ற ஆயிரம் சொல்லம்புகள் வீசி காயப்படுத்துதலும் கேவலமான பண்பாடு.

நான் திண்ணையின் ஒரு சாதரண வாசகன்.அவ்வப்போது மனது வலிக்கும் சில நேரங்களில் ..வருத்தமோ,கோபமோ ஏதாவது கிறுக்கி சமாதானமாகும் மனிதர்களில் ஒருவன்.சில மாதங்ளுக்கு முன் ஒரு கவிஞர் என்று என்னால் மதிக்கபட்ட ஒருவரை சந்தித்தேன்.அவரின் தற்பெருமை,எனது எழுத்துக்களை விமர்சித்த முறை(சில:..கவிதை ன்னா என்னன்னு தெரியுமா சார் உங்களுக்கு ?,நீங்களாம் ஏன் சார் எழுத முயற்சி செய்றீங்க ?,எனக்கு சரி சமமா உள்ளவங்க… கவிதைகளை பற்றி நான் பேசலாம்.உங்களை மாதிரி கத்துகுட்டிங்கல மதிக்க வேண்டிய அவசியம் இல்லை….,எனக்கு நேற்று தான் அங்க விருது தந்தாங்க..என்னுடய சிறுகதை சிறந்ததாக தேர்ந்தெடுக்க பட்டுருக்கு…).அவரிடம் பதில் பேசாமல் திரும்பினேன்.இது ஒரு நல்ல கவிஞரின் இயல்பு அல்லவே.அவரை பார்க்க போன என்னை நானே திட்டிக் கொள்வதா ?,அவர் மீது எனக்கும் என் மீது அவருக்கும் கோபம் இல்லையே!பின் ஏன் ?,என் எழுத்துக்கள் மேல் அவருக்கு கோபமாய் இருக்கலாம்! ?.அதை வெளிக்காட்டும் விதம் இதுவல்லவே!,அதன் பின் அவர் எனக்குள் சராசரி மனிதர்களுல் ஒருவர் ஆனார்.

பனம் தேடலே வாழ்வென்ற உலகில்,தமிழுக்காய் நேரம் ஒதுக்கி படைப்புகள் படைக்கும் மனிதர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.படைப்புகளின் தரம் அவரவர் பார்வைகளை பொறுத்தது.கொலை,கொள்ளை,கற்பழிப்பு,அரசியல் அநாகரீகம்,பசி,பட்டினி சாவுகள் பற்றிய செய்திகள் படித்து படித்து நொந்து போன உலக தமிழர்களின் சந்தோசம் நமது படைப்பாளிகளின் படைப்புகளும் பார்வைகளும்.நாமோ எழுதுபவர்களின் இதயத்தில் மோசமான விமர்சனங்களால் குத்தி விரல்களை செயல் இழக்கச் செய்கிறோம்.இனியாவது ஆரோக்யமான விமர்சனங்களும்,சின்ன புன்முறுவல் களும் நமக்குள் பரிமாறப் படுவது நலம்.

உணர்வுகளுடன்,

மீ.வசந்த்

vasantham_2000@yahoo.com

Series Navigation

மீ.வசந்த்

மீ.வசந்த்