வசவுகளும் விஸ்வாமித்ராவும்

This entry is part [part not set] of 39 in the series 20060512_Issue

பரிமளம்


{உங்கள் கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு படியுங்கள். நான் என்னை எதிர்த்து ஆபாச வசவுகள் திண்ணையில் வந்தது என்று எங்கு கூறியுள்ளேன் என்று தயவு செய்து கூற முடியுமா? “கடுமையான வசவுகளுடன் எதிர்கொண்ட நண்பர்களுக்கும்” எழுதியுள்ளேன், திண்ணையில் என்று குறிப்பாக எங்கேனும் சொல்லியுள்ளேனா என்ன? எனக்கு வந்தது, நான் எதிர்கொண்டேன் என்றால் என் தனி மடலுக்கு வந்தது என்று அர்த்தம்.} (5/4/06)
என்று எழுதும் விஸ்வாமித்ரா கூடவே தமிழை நன்றாகப் படித்துவிட்டு பிறகு எழுத வருமாறு எனக்கு (மீண்டும் ஒருமுறை)அறிவுரையும் வழங்குகிறார். இதைப் படித்ததும் ஒரு வேளை எனக்குத் தமிழ் தெரியாதுதானோ என்று சந்தேகம் வந்துவிட்டது. அவர் எழுதியதை மீண்டும் படித்ததுப் பார்த்தேன்.
{ம வெங்கடேசன் அவர்கள் எழுதிய ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் என்ற நூலைப் பற்றிய அறிமுகக் கட்டுரைகளை நான் திண்ணையில் பல வாரங்கள் எழுதியிருந்தேன். அதனை வரவேற்றுப் பாராட்டிய நண்பர்களுக்கும், கடுமையான வசவுகளுடன் எதிர்கொண்ட நண்பர்களுக்கும் எனது காலம் கடந்த நன்றிகள். இந்தப் புத்தகம் எங்கு கிடைக்கும் என்று கேட்டு எனக்குத் தனிப்பட்ட முறையில் பல மின்னஞ்சல்கள் வந்தன. அவற்றிற்கெல்லாம் தனித் தனியாகப் பதில் அளிப்பதற்குப் பதிலாக பொதுவாக இங்கு புத்தகத்தை விற்பனை செய்யும் கடை விபரத்தினை இங்கு இட்டுள்ளேன்…….} (4/14/06)
தனி மடலுக்கு வந்த ஆபாசங்களைப் பற்றித்தான் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது என்று அப்படி ஒன்றும் தெளிவாக இல்லையே! ஒருவேளை என் கண்களில் விளக்கெண்ணெயை ஊற்றிக்கொண்டு படித்தால் கிடைக்கும் போலிருக்கிறது.
{நான் எதிர்கொண்டேன் என்றால் என் தனி மடலுக்கு வந்தது என்று அர்த்தம். ……. எனக்கு மிரட்டல்கள் வந்தன என்றேன்…. எனக்கு ஆபாசமான, படிக்கக் கூசும், கடுமையான வசவுகள் வந்தன என்றேன்.} (04.05.06)
இந்த விவரங்களெல்லாம் எங்கே இருக்கின்றன?
***
தனி மடலில் வந்த ஆபாசங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறாரா அல்லது திண்ணையில் வந்த எதிர்வினைகளைப் பற்றிக்குறிப்பிடுகிறாரா என்று விஸ்வாமித்ரா தெளிவாக எழுதியிருந்தால் ஆதாரங்களைளக்கேட்டு நான் எழுதியிருக்கமாட்டேன்.

திண்ணையில் ஏற்கனவே ஒரு விவாதம் நடந்துள்ள சூழ்நிலையில் “கடுமையான வசவுகளுடன் எதிர்கொண்ட நண்பர்களும்” என்று மொட்டையாக எழுதினால் என்ன என்று பொருள்கொள்வது?

ஒருமுறைக்குப் பத்துமுறை படித்துவிட்டுவருமாறு மற்றவர்களுக்கு விடுக்கும் அறிவுரையைமுதலில் தானே பின்பற்றுவது நல்லது.

தனிமடலில் சொல்லக்கூசும் வசவுகள் எனக்கும்தான்வருகின்றன.
***

(விஸ்வாமித்ரா குறிப்பிடும் விவாதத்தில் வசவுகளுடனும் தனிமனிதத் தாக்குதல்களுடனும் நீக்கங்கள் உண்டு என்ற குறிப்புடனும் வந்தவை விஸ்வாமித்ராவின் படைப்புகளே தவிர அவரை எதிர்கொண்ட என்னைப்போன்றவர்களின் பதில்கள் அல்ல.) (20\4\06)

இவை நான் விஸ்வாமித்ரா மீது சுமத்திய குற்றச்சாட்டுகள்.

நீக்கங்களுக்கு வசவுகள் மட்டுமே காரணமில்லை (மட்டுமே என்பதைக் கவனிக்கவும்) என்று திண்ணைக்குழு அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் மற்ற இரண்டு குற்றச்சாட்டுகளையும் மீட்டுக்கொள்ளும் எண்ணமில்லை.

மற்றவர் தன் மீது வீசும் வசவுகளைப் பற்றிக் கவலைப்படும் விஸ்வாமித்ரா பிறர்மீது வசவுகளை வீசத்தயங்காதவர். இவரது வசவுகளைத் தேடி நீண்டதூரம் போகவேண்டியதில்லை. கடந்த வாரமும் எழுதுகிறார்

{திண்ணை வாசகர்களுக்கும் உங்களுக்குள்ள பிரச்சினைகளைப் பற்றி விலாவாரியாக ஏற்கனவே விளக்கியுள்ளேன்.} (5\4\06)

விலாவாரியாக விஸ்வாமித்ரா என்னைப் பற்றி விளக்கியுள்ளமைக்குச் சான்றுகள் என்ன? ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாவதாக மலர்மன்னனுக்குப் பரிந்து எழுதும் விஸ்வாமித்ரா எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இவ்வாறு என்மீது சேற்றைப் பூசுகிறார்?
***

janaparimalam@yahoo.com

Series Navigation

பரிமளம்

பரிமளம்