லு பென்னின் தோல்வியும், பிம் போர்டுயின் கொலையும்

This entry is part [part not set] of 28 in the series 20020518_Issue

சாம்பரன்


கடந்த வாரம் மேற்கு அய்ரோப்பிய அரசியலில் முக்கிய இரு சம்பவங்கள் நடந்துள்ளன. முதலாவதாக ஜந்தாம் திகதி பிரான்சின் சனாதிபதி தேர்தலில் வலதுசாாி சனாதிபதியான சிராக் மீண்டும் தொிவாகியுள்ளது. இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிதீவிர வலதுசாாி, இனவாதி, பொபுலாிஸ்ட் ( popularist) லு பென்னிற்கு 18.2 சதவீதத்தை மட்டுமே பெறவைத்து அமோக வெற்றியீட்டியுள்ளார். மற்றைய சம்பவம் வருகின்ற 15ம் திகதி நடைபெறவுள்ள நெதர்லாந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிதீவிர வலதுசாாி, இனவாத கட்சியான Lisjt Pim Fortuyn இன் தலைவர் 6ந்திகதி சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வாகும்.

பிரான்சில் இதுவரையாருமே பெற்றிராதவகையில் பெரும் வெற்றியீட்டியுள்ள சிராக்கிற்கு கிடைத்த வெற்றியானது, லு பென்னின் இனவெறி அரசியலுக்கெதிராக கட்சிசார்பற்று பிரான்ஸ்மக்கின் எதிர்ப்பைக் காடடுகின்றது. இத் தேர்தலானது வெளிநாட்டவருக்கு ஆதரவான, சகிப்புதன்மையான அரசியலுக்கு ஆதரவாகவா அல்லது வெளிநாட்டவர் எதிர்ப்பு, இனவெறிஅரசியலுக்கு ஆதரவாகவா என்பதே முக்கியமாக இருந்தது. இந்நிலையே சிராக்கிற்கு அவரது வலதுசாாி ஆதரசாளர்களிடமிருந்து மட்டுமல்லாது சகல இடதுசாாிகள், பசுமைக் கட்சியினர், மனித உாிமையமைப்புகள், வெளிநாட்டினர் போன்றோாின் பரந்துபட்ட ஆதரவை பெற்று தந்தது. மறுபுறம் சிராக் மீதுள்ள ஊழல் வழக்ககளிலிருந்து அவரை பாதுகாத்துள்ளது.

ஒருகாலம் எமையாண்டிருந்த நெதர்லாந்தானது இன்று அய்ரோப்பாவில் தாராளவாத முற்போக்கு நாடாக கருதப்படுகிறது. வெளிநாட்டவர் சகிப்புஅரசியல், சமபால் திருமண ஒப்பந்தத்திற்கு அங்கிகாரம், கசிஸ் போன்ற பாதிப்பு குறைந்த போதைவஸ்து பாவனைக்கு அனுமதி போன்ற விடயங்களில் முன்னுதாரணமாக திகழ்ந்தது. இந்நிலையில் கடந்த பெப்ரவாியிலே தொடங்கப்பட்ட பிம் போர்டுயின் என்பவாின் கட்சியான LPF ஆனது இடதுசாாிகளின்(சோசலிஸ்ட் டெமோகிரட்) கோட்டையாகவிருந்த றொற்றடாமில் மிகக் குறுகிய ஒருமாதகாலத்தில் நடந்த உள்ளுாராட்சி தேர்தலில் 35சதவீத வாக்குகளைப் பெற்று மாபெரும் வெற்றியீட்டியது. அத்துடன் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பானது இம்மாதம் 15ல் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் இக்கட்சியானது மொத்தமுள்ள 150 இடங்களில் 26 இடங்களை பெறும் வாய்ப்பு உள்ளதைக் காட்டியது. அதாவது மூன்றாவது பெரும்கட்சியாக இக்கட்சி உருவாகியுள்ளதை இது காட்டுகிறது. தேர்தல் நடக்க 9நாட்களே இருந்த நிலையில் இக்கட்சியின் தலைவர் கடந்த 6ந் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிகழ்ச்சியானது அய்ரோப்பாவில் அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ளது.

பிம் போர்டுயின் (Pim Fortuyn) வயது 54, முன்னாள் சமூகவியல் பேராசிாியா1 முன்னாள் இடது மார்க்சிய அரசியல் ஆதரவாளர், சமபாலுறவாளர், தொலைக்காட்சி அறிவிப்பாளர், பத்திஎழுத்தாளர், பின்னர் 90களின் மத்தியையடுத்து முதலாளிகளுக்கு ஆலோசகராகவும், வெளிநாட்டார் எதிர்ப்பாளராகவும், அதிதீவிர வலதுசாாி அரசியல்வாதியாகவும் மாறினார். அக் காலத்தில் வெளிவந்த இவரது நுாலான- எமது கலாச்சாரம் இஸ்லாமியமயமாதலுக்கு எதிராக- என்பது மிகவும் பிரபல்யமானது. நெதர்லாந்தில் வெளிநாட்டவாில் அரைப்பங்கிற்கும் குறைவாக முஸ்லீம்கள் உள்ளனர். முஸ்லீம்சமயமானது பின்தங்கிவிட்ட மதமென்றும், இது எமது நாகாீகத்திற்கு எதிரானதென்றும், வெளிநாட்டினர் வருகையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அரசியல் அமைப்புச் சட்டத்திலுள்ள பாரபட்சத்திற்கு எதிரான சட்டக் கோவையை (anti-discrimination paragraph) நீக்குவேனென்றும் பிரச்சாரம் செய்து வந்தார். செப்டம்பர் 11ல் நடந்த அமோிக்க தாக்குதலின்பின் இவ்வாறான வாதங்கள் இன்னும் பிரபல்யமடைகின்றன.

இவரைக் கொலை செய்தவர் சூழலியல் ஆதரவாளர் என்பதுவும் ஒரு வெள்ளையினத்தவர் என்பதுவும் வெளிநாட்டவருக்கு எதிராக நடைபெறக் கூடிய வன்முறைகளை தவிர்த்துள்ளது. இக்கொலையானது சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல் என்றும், பேச்சுசுதந்திரத்திற்கு எதிரானதென்றும் இடதுசாாிகள் உட்பட சகல கட்சிகளும் கண்டித்துள்ளன. புிம் போர்டுயின், ஏனைய பீதியைஉருவாக்கும் பாசிசஅரசியல்வாதிகள் போலில்லையென்றும், புத்திஐீவியென்ற கருத்தும் கூட நிலவுகின்றன. இந்நிலைமையிலே அய்ரோப்பாவின் இன்றைய ஐனநாயகம், அரசியல் தொடர்பாக சில கேள்விகள் எழுகின்றன:

1. உலகெங்கும் பேசப்படும் அய்ரோப்பிய சனநாயகமும் அதன் வீழுமியங்களும் முடிவுக்கு வருகின்றனவா ?

2. இவ்வளவு காலமும் மூன்றாமுலகமென பிாிக்கப்பட்ட நாடுகளிற்கு மட்டுமாக இருந்த பொருளாதார சிக்கல்கள் போன்று இன்றையஉலகமயமாதலில் தவிர்க்கமுடியாதவாறு அய்ரோப்பாவிலும் தாக்கத்தை உருவாக்குவதை எவ்விதம் எதிர்கொள்ளப் போகின்றனர் ?

3. இன்றைய அய்ரோப்பாவின் பொருளாதார, அரசியல், சமூக, கலாச்சார நெருக்கடிகளுக்கு இங்குவாழும் வெளிநாட்டினரை அல்லது குடியேற்றவாசிகளை குற்றஞ்சுமத்த போகிறார்களா அல்லது நேர்மையாக எதிாகொள்ளப் போகிறார்களா ?

அய்ரோப்பிய வாழ்வுமறையானது (way of europeanlife) இந்நுாற்றாண்டில் பெரும் மாற்றத்தை வேண்டிநிற்கின்றது. இவ் மாபெரும் சவாலை வெளிப்படையாகவும், உறுதியாகவும் எதிர்கொள்ளாத வரையில் இனவெறி, பாசிச சக்திகளின், பொப்புலாிஸ்டுகளின் எழுச்சியை, வெள்ளை மேலாண்மைவாத கருத்தியல் ஆழ வேருன்றியுள்ள அய்ரோப்பாவில் தடுத்து நிறுத்த முடியாது போய்விடும்.

12.05.02

Series Navigation

சாம்பரன்

சாம்பரன்