செல்வம் அருளானந்தம்
.
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நவீன தமிழ்ப் புனைகதைகள், கவிதைகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து வெளியிட்டு, தமிழின் சிறப்பை உலகறியச் செய்து வருபவர் திருமதி. லக்ஷ்Ñ;மி ஹோம்ஸ்ரோம்;. மௌனி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ந. முத்துசாமி, அம்பை, பாமா, இமையம் போன்றவர்களின் பதினைந்து படைப்புக்களை மொழிபெயர்த்து, உலக அரங்கில் நவீன தமிழின் வளத்தை அறியச் செய்து வருபவர். தமிழக, ஈழத்துக் கவிஞர்கள் பலரின் தமிழ்க் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்பொன்றும் அவரது உழைப்பின் பயனாக பெங்குவின் மூலம் விரைவில் வெளிவர உள்ளது. இதுபோலவே, சுந்தர ராமசாமியின் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் நாவலையும் லக்ஷ்Ñ;மி ஹோம்ஸ்ரோம் ஆங்கில மொழியாக்கம் செய்துள்ளார்@ அதுவும் விரைவில் பிரசுரமாகவுள்ளது.
இங்கிலாந்து, கனடா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் மொழி பெயர்ப்புப் பட்டறைகளை நடாத்தித் தமிழ் ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்வதற்குப் புதியவர்களை ஊக்குவிப்தில் பெரும் பங்கு ஆற்றி வருபவர். தமிழ்க் கவிதைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும், லண்டனிலும் பிற இடங்களிலும், தமிழரல்லாதவர்கள் மத்தியில் வாசித்துக் காட்டி, தமிழ்க் கவிதைக்குச் சிறப்புச் சேர்ப்பவர். கனடாவில் வெளியான ஈழத்துத் தமிழ்க் கவிதை, புனைகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்பான டுரவநளழபெ யனெ டுயஅநவெஇல் இவர் மொழிபெயர்த்த கவிதைகள் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பழந்தமிழ் இலக்கியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரு காவியங்களையும் வசனநடையில் ஆங்கிலத்தில் ஆக்கி வழங்கியிருப்பமை இவரது மொழிபெயர்ப்புப் பணியின் மற்றுமொரு பரிமாணமாகும். நவீன தமிழ் இலக்கியங்கள் பற்றியும் பல கட்டுரைகளை ஆங்கில இதழ்களில் எழுதியுள்ளார்.
பாமாவின் கருக்கு, அம்பையின் காட்டில் ஒரு மான் ஆகியவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புக்காக Hutch Crossword Book Award, இனை (இது இந்தியாவின் Booker Prize எனக் கருதப்படுவது) முறையே 2000, 2006ஆம் ஆண்டுகளில் பெற்றவர்.
தமிழுக்கு அவர் ஆற்றிய, ஆற்றிவரும் வாழ்நாள் பங்களிப்பிற்காக, கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டம், அவருக்கு 2007ஆம் ஆண்டுக்கான இயல் விருதையும் 1,500 டொலர் பரிசையும் வழங்கிக் கௌரவிப்பதில் பெருமை அடைகிறது. அவருக்கு எம் வாழ்த்துக்கள்.
2001ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே. இதுவரை ‘இயல் விருது’ பெற்ற வாழ்நாள் சாதனையளர்கள்: சுந்தர ராமசாமி, கே. கணேஷ், வெங்கட் சாமிநாதன், இ. பத்மநாப ஐயர், ஜோர்ஜ் ஹார்ட், ஏ. சீ. தாஸிசியஸ்.
விருது வழங்கும் விழா வழமைபோல் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் 2008ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறும்.
இம்முறை விருதுக்கான தெரிவுக் குழுவில் பங்காற்றியவர்கள்: பேராசிரியர் எம். ஏ. நுஃமான், பேராசிரியர் ஆ. இரா. வெங்கடாசலபதி, கவிஞரும் எழுத்தாளருமான மு. பொன்னம்பலம், பதிவுகள் இணையத்தள ஆசிரியர் வ. ந. கிரிதரன் ஆகியோர். நெறிப்படுத்தியவர் காலம் ஆசிரியர் செல்வம் அருளானந்தம்.
அறிவிப்பவர்: செல்வம் அருளானந்தம்
- அம்மா
- எல்லையைக் கொஞ்சம் நீட்டுவது — குறித்து….!!!
- அக்கினிப் பூக்கள் – 6
- திண்ணைப் பேச்சு – அசுரன் மறைவு
- ‘பயணி’ (The passenger – A film by Michelangelo Antonioni)
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் !விண்மீன் தோற்றமும் முடிவும் (கட்டுரை: 9)
- Last Kilo Bytes
- எவனோ ஒருவன் – திரைப்பட விமர்சனம்
- கிறிஸ்தவம்? கோகோ கோலா?
- கிழிசல்கள்
- எழுத்துக்கலைபற்றி ……..5 கி.சந்திரசேகரன்
- கிழக்கிலங்கையின் கவிகள்
- ஜெகத் ஜால ஜப்பான் -5 சுமிமாசென்
- புதுச்சேரியில் புத்தகக் கண்காட்சி
- கடிதம்
- கலாமோகனின் கதைகள் குறித்து… ஒரு முன்குறிப்பு
- நாஞ்சில்நாடன் அறுபது வயது நிறைவு நூல் வெளியீடு
- மொழிபெயர்ப்பாளர் திருமதி. லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம்; ‘இயல் விருது’ பெறுகின்றார்
- நூல்கள் அறிமுக நிகழ்வு – அழைப்பிதழ்
- லா.ச.ரா. நினைவாக : எழுத்தாளருக்கு எழுத்தாளர்கள் எடுத்த விழா
- ஈழத்துமண்ணும் எங்கள் முகங்களும்- வ.ஐ.ச. ஜெயபாலனின் கவிதைக் காவியம்
- அனார் கவிதைகள் : எனக்குக் கவிதை முகம்
- உயிர்மை புத்தக வெளியீடு – மணா , தமிழச்சி தங்க பாண்டியன் நூல்கள்
- கவிதைகள்
- பெருஞ்சுவர் சூழ்ந்த பெண் : (பெருஞ்சுவருக்கு பின்னே [சீனப்பெண்களின் வாழ்வும் வரலாறும்] ஜெயந்தி சங்கர்.)
- “பழந்தமிழ்ப் பாக்கள்- மரபுவழிப் படித்தலும் பாடுதலும்” – சில எண்ணங்கள்
- நாடக வெளியின் ‘வெளி இதழ்த் தொகுப்பு’ – புத்தக அறிமுகக்கூட்டம்
- குறிப்பேட்டுப் பதிவுகள் – 6 !
- ரௌத்திரம் பழகு
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 4 (இறுதிக் காட்சி)
- தைவான் நாடோடிக் கதைகள் 6 பெண்புலி மந்திரக்காரி (ஹொ கொ பொ)
- பிரம்மரிஷி
- ராலு புடிக்கப்போன டோனட் ஆன்ட்டி
- அப்பாவின் தாங்க்ஸ்கிவ்விங் – ஒரு பெரிய சிறுகதை
- இலக்கிய விசாரம் : மரபு மீறலும் மரபு சிதைத்தலும்
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 13 நம்பிக்கை எனும் நீர் குமிழ்
- தமிழிலிருந்து தமிழாக்கம்: நூற்கடல் தி.வே.கோபாலையர் தமிழாக்கிய பெரியவாச்சான் பிள்ளையுரை
- சம்பந்தம் இல்லை என்றாலும் – விநோத ரச மஞ்சரி (ஆசிரியர் அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார்)
- அதிகார வன்முறைக்கு எதிரான ஜிகாத்
- பாலியல் கல்வி,சிறார்கள் மற்றும் நாடாண்மை
- கொலையும் செய்யலாம் பத்தினி!!!
- தாகூரின் கீதங்கள் – 9 ஆத்மாவைத் தேடி !
- விருது
- வலி தந்த மணித்துளிகள்
- மாத்தா ஹரி அத்தியாயம் -42