கே.கே …
சொல் என்னிடம்
பேச என்ன தயக்கம்.
சொல் …. நீ எப்போதாவது சிரித்தால் சொல்
அது என்ன ஒரு சந்தோஷமென்று சொல்
சிரி …சிரிப்போம்.
உன்னுடைய வருத்தங்கள் பேசு
புரியாத சோகங்களையும் …
எதிர்பாராத நேரத்தில் உன் நெஞ்சடைப்பதென்னவென்று சொல்.
மனதுடைந்த நாட்களை மற
நீ காதலினால் எழுதியன உரக்கப் படி
பயங்களைச் சொல்..
நீ பார்த்த அதிசயங்களைச் சொல்
கதவடிக்கும் கோபங்களைச் சொல்
ஆத்திரங்கள்,ஆர்வங்கள்,அழுகைகளைப் பகிர்.
பேச எதுவுமில்லையெனில் ?
பாடு …மெல்லிய குரலில்.
அல்லது குழந்தைகளுக்குக் குளிப்பாட்டி,தலைசீவி சட்டை அணிந்து விடு.
அவர்களுடன் நடை பயில்
இப்படியாக எதுவும் செய்த பின்
தூங்கிப்போ…
சூரியனுக்கு முதுகைக் காட்டியபடி.
- கூட்டம்…
- மெளனியின் சிறுகதைகள் – மரணமும் மகத்துவமும்
- இறால் பஜ்ஜி
- சிக்கன் ஃபிரைடு ரைஸ்
- தென்னாப்பிரிக்க மூலிகைச் செடி எய்ட்ஸ் நோய்க்கு மருந்தாக இருக்கிறது
- அதிவேகத்தில் அணுகுண்டுச் சோதனைகள் – கணினி மூலம்
- உதிர்ந்த இசைமலர்
- பொழுது சாயும் வேளை
- என்ன செய்யலாம் சக புலவீரே!
- கண்ணீர் முத்துக்கள்…
- ஆச்சியின் வீடு
- மொழிபெயர்த்த மெளனம்
- ஒரு பாளை கள்ளு..
- ‘ க்ராஃபிக்ஸ் ‘
- போடோவை முழுக்க நிராகரியுங்கள்
- இந்த வாரம் இப்படி – டிசம்பர் 1, 2001 (மலிவு சாராயம், விலைவாசி, பெனசீர், ஆஃப்கானிஸ்தான்)
- காபூல் நாட்குறிப்பு – வாழ்க்கையே ஒரு திரைப்படம்
- இதுவும் சாத்தியம்தான்
- ஒளவை – 6
- நினைவலைகள்