மூலக்கூறு விவசாயம் (பயிர்கள் மூலம் மருந்துகளை உற்பத்தி செய்தல்)

This entry is part [part not set] of 20 in the series 20011111_Issue

ஏன் இதற்கு எதிர்ப்பு ?


மரபணு தொழில்நுட்பம் மூலம் தாவரங்களை மாற்றி அவைகளை பல விஷயங்களை உற்பத்தி செய்ய வைப்பதை தாவர மூலக்கூறு விவசாயம் (Plant molecular farming) என்று அழைக்கிறார்கள். இதன் முக்கிய உபயோகமாக, சோளம் போன்ற தாவரங்களை மரபணு மாற்றி அவைகளை கான்ஸர், டயபட்டாஸ் என்னும் சர்க்கரை வியாதி போன்றவற்றுக்கு தடுப்பு மருந்து உற்பத்தி செய்யும்படி ஆணையிடுவது. தாவரங்களைக் கொண்டு மருந்துகளை தயாரிப்பது என்ற கருத்தே பல போராட்டக்காரர்களை கொதித்தெழ வைத்திருக்கிறது.

மருந்து உற்பத்தி ஆரம்பித்தவுடன், இப்படி மாற்றப்பட்ட தாவரங்கள் சாதாரண உணவுபகுதிக்குள் வந்துவிடலாமென்றும், இப்படிப்பட்ட தாவரங்களிலிருந்து மகரந்தத்துகள்கள் சுத்தமான தாவரங்களில் பட்டு அந்த தாவரங்களும் தேவையில்லாமல் மருந்து உற்பத்தி செய்யலாம் என்று கூறுகிறார்கள். சென்ற வருடம் StarLink ஸ்டார்லிங் என்ற நிறுவனத்தின் சோளத்தாவரம் விபத்தாக தாவி சாதாரண சோளத்தில் காணப்பட்டு பெரும் பிரசினையை உருவாக்கியதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். ‘மருத்துவர் உங்களுக்கு இந்த வியாதி இருக்கிறது என்று ஆராய்ந்து அவர் சீட்டு எழுதித்தான் நீங்கள் இந்த மருந்துகளைச் சாப்பிடவேண்டும். சும்மா உங்கள் சப்பாத்தியில் இருக்கிறது என்பதற்காகச் சாப்பிடக்கூடாது ‘ என்று கூறுகிறார் கிரீன் பீஸ் என்னும் அமைதி நிறுவனத்துக்கு ஆலோசனை கூறும் மரபணு நிபுணர் டோரீன் ஸ்டாபின்ஸ்கி. அமெரிக்காவில் மெயின் மாநிலத்தில் இவர் பணி புரிகிறார்.

மரபணு மாற்றப்பட்ட தாவரங்களுக்கு வந்த எதிர்ப்பை விட பல மடங்கு எதிர்ப்பு இவ்வாறு மரபணு மாற்றப்பட்டு மருந்துகள் தயாரிக்கும் தாவரங்களுக்கு ஏற்படும் என்று கூறுகிறார் ஸ்டாபின்ஸ்கி. ‘இது இன்னும் ஆபத்தானது. என்னுடைய சாதாரண உணவில் மருந்துகள் போடப்படுகின்றனவா ? ‘ என்று கோபப்பட வேண்டும் என்று கூறுகிறார். மருந்து நிறுவனங்கள் இந்த விஷயத்தில் ஈடுபட்டிருப்பதால், இது இன்னும் தீவிரமான பிரச்னை என்றும் கூறுகிறார். ‘இவைகள் மருந்துகள். இவை மக்களின் மன நலத்தையும் பாதிக்கக்கூடியவை ‘

தாவர மூலக்கூறு விவசாயம் மிகப்பெரிய தொழில். 2004இல் சுமார் 28.6 பில்லியன் டாலர் பொறுமானமாக அமெரிக்காவில் மட்டும் இப்படிப்பட்ட தாவர மூலக்கூறு விவசாய மருந்துகளுக்கு தேவை இருக்கும் என்று கணக்கிடுகிறது CFIA நிறுவனம். ஏற்கெனவே, பிரோடிஜென், அப்ளைடு பிஸியாலஸிக்ஸ் இன்க்கார்ப்பரேட்டட் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் தாவர மூலக்கூறு பயிர்களைப் பரிசோதனை செய்து வருகின்றன. அப்ளைடு பிஸிடோலாகிக்ஸ் நிறுவனம் அரிசியில் மனித புரோட்டான்களை (லாக்டோஃபெரின் போன்றவை) உருவாக்க திறந்த வெளியில் அரிசியைப் பயிரிட்டுக்கொண்டிருக்கிறது.

Molecular Farming Under Fire 2:00 a.m. Nov. 6, 2001 PST (page 2)

Series Navigation

செய்தி

செய்தி