முட்டை மசாலா

This entry is part [part not set] of 13 in the series 20010408_Issue

எழிலரசி பழனிவேல். நெதர்லாந்து.


தேவையானவை

முட்டை -4

வெங்காயம்-1(பொியது)

தக்காளி -2 (நடுத்தர அளவில்)

இஞ்சி&பூண்டு விழுது -1 டாஸ்பூன்

மிளகாய் பொடி -1ஸ்பூன்

மிளகுப்பொடி -1டாஸ்பூன்

மஞ்சள் பொடி- 1/4 டாஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கடுகு -1/4 டாஸ்பூன்

எண்ணெய் – 1 ஸ்பூன்

செய்முறை

* முட்டைகளை வேகவைத்து ஒட்டை நீக்கிவிட்டு லேசாக கீறி வைக்கவும்.

* வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்கவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளிக்கவும்.

* வெங்காயம்,இஞ்சி-பூண்டு விழுது,தக்காளியை வதக்கவும்.

* மிளகாய்ப்பொடி,மஞ்சள் பொடி,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

* 1/4 டம்ளர் தண்ணிர் விட்டு மூடிவிடவும்.

* நீர் சுண்டி வெங்காயம் மிருதுவானதும் கீறிய முட்டைகளைப் போட்டு மிளகுப்பொடி தூவி கலந்து இறக்கிவிடவும்.

இந்த மசாலா சாம்பார்,ரசம் சாதத்திற்கும் சப்பாத்திக்கும் பொருத்தமாக இருக்கும்.

Series Navigation

எழிலரசி பழனிவேல், நெதர்லாந்து.

எழிலரசி பழனிவேல், நெதர்லாந்து.