புஹாரி, கனடா
எங்கிருந்து வந்தது
இந்த வேதனை… ?
முதலில்
இது
வேதனைதானா… ?
அல்லது சுகமா… ?
இல்லை…
இது ஒரு
சுகமான வேதனை…!
நீ என்
நெஞ்சத்தில்
நடக்கிறாய் என்பதற்காக
நான்
மூச்சுவிடாமல்
தம்
கட்டிக்கொண்டிருக்கிறேனே
இதுவும் ஒரு
சுகமான வேதனைதானே… ?
உன்
பெயரை உச்சரிக்கும்போதே
என் ரோமங்கள்
சிலிர்த்துக் கொள்கின்றனவே
உன்னையே உச்சரித்தால்… ?
உன்
விழிச்சுடரைத் தொடும்போதே
சுற்றுப் புறங்கள்
இருண்டு விடுகின்றனவே
உன்னையே தொட்டால்… ?
நீ என்
நெஞ்சவீணையில் வாசிக்கும்
ராகத்திற்குப் பெயர்தான்
காதலா… ?
உன்னிடம் அப்படி
எதைக் கண்டுவிட்டு
இப்படி நான்
என்னை மறந்திருக்கிறேன்… ?
உன்னிடம்
வெளிச்சம் போட்டுக் கிடக்கும்
அந்த அழகா… ?
தூசு
தொடமுடியாத
அந்த உள்ளமா… ?
ஏன்
என் நினைவுகளை இப்படி
மொத்தமாய் எடுத்துக்கொண்டாய்… ?
அன்பே…
எனக்குள் நீ எழுதுவது
தேவ கவிதைதானே… ?
எழுது… எழுது…
ஆனால்
எல்லா கவிதைகளையும் போல
இதற்கும் ஒரு
முற்றுப்புள்ளி வேண்டும்
என்றுமட்டும் எண்ணிவிடாதே.
***
buhari2000@hotmail.com
- இவள் யாரோ ?
- பனி பொழுதில்…
- வழித்துணை
- சொன்னார்கள்
- இந்திய நரகம்
- திரைப்பட விமர்சனம் – பம்மல் கே சம்பந்தம்
- விஷ்ணுபுரம் விவாதமும் மீட்புவாதமும்.
- விஷ்ணுபுரம் பற்றி கோ ராஜாராமின் கருத்துக்கள் பற்றி…
- ஆப்பிள் சாஸ்
- வானலைத் தொடர்பு வல்லுநர் மார்க்கோனி
- ஆப்பிரிக்காவின் மிக வினோதமான மரம்
- ‘புது மரபு ‘
- காண்பமோ வன்னி மண்ணில் வசந்தமே.
- ஒத்திகைகள்
- நண்பா…..
- வெற்றிடம்
- காத்திருக்க வேண்டுமன்றோ
- குட்டாஸ்
- மன்னிப்பே தண்டனை…
- முடிக்கக் கூடாத கவிதை
- மலேசிய தமிழ் பள்ளிக்கூடங்களின் மோசமான நிலைமை
- சூத்திர பார்ப்பனர்களும், பார்ப்பன சூத்திரர்களும்
- இந்த வாரம் இப்படி – பிப்ரவரி 3- 2002
- இந்தியாவின் மெதுவான நிலையான பொருளாதார முன்னேற்றம்.
- ரத்தமும் சோகமும் பெருகிய இந்தோனேஷியாவின் வருடம் 2001
- நிறையக் கடவுள்கள் கொண்ட ஓர் அமைதித் தீவு – பாலி
- என் தமிழ் திரைப்பட ரசனையும் தங்கர் பச்சானின் அழகியும்
- வழித்துணைவன்
- ஒரு நாள் கழிந்தது