வஹ்ஹாபி
அல்குர்ஆன் என்ற இறைவேதம், அரபியருக்கோ ஏனைய முஸ்லிம்களுக்கோ மட்டுமான தனிச் சொத்தன்று (081:027) என்பதைக்கூட அறியாமல், ‘முஸ்லிம்களின் அல்குர்ஆன் அரபுமொழி சார்ந்தது ‘ என்று எழுதித் தம் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுதல் சூபிக்குத் தேவைதானா ?
மேற்காண்பது திண்ணையின் 30 மார்ச் 2006 பதிப்பில் வெளியான எனது கடிதத்தின் http://www.thinnai.com/le03310612.html ஒரு சொற்றொடர்.
‘அல்குர்ஆன் அரபு மொழி சார்ந்தது இல்லை என்று கூறி எவ்வளவு அப்பட்டமாக வாசகர்களை வகாபி குழப்பப் பார்க்கிறார். ‘
இது வபியின் http://www.thinnai.com/le0407062.html குற்றச்சாட்டு.
‘இந்தக் குர் ஆனை அரபு மொழியில் அருளியிருக்கிறோம் – நீங்கள் நல்லறிவு பெறுவதற்காக ‘ – அல் குர் ஆன் 012:002.
இலண்டன் ரெவரெண்ட் பாதிரியார் வீட்டுப் பிள்ளை மர்மட்யூக் பிக்தால் http://www.modjourn.brown.edu/mjp/Bios/Pickthall.htm என்பாருக்கு அரபு மொழிப் பயிற்றுவிக்கப் பட்டது. எதற்காக ? குர் ஆனைக் குறை காண வேண்டும் என்பதற்காக!
குர் ஆனில் பிழை தேடப் புகுந்த அவர்தாம், பின்னாளில் இஸ்லாத்தைத் தழுவியதோடு மட்டுமின்றி குர் ஆனுக்கு ஆங்கிலத்தில் விரிவுரையும் எழுதினார் என்பது பலருக்கும் தெரியும்.
சூபி எழுதியிருப்பதுபோல், அல்குர்ஆன் அரபு மொழி ‘சார்ந்தது ‘ ( ?) இல்லை; வஹ்ஹாபின் வார்த்தைகள் ‘தெளிவான அரபு மொழி ‘யில் அருளப் பெற்றவைதாம் என்பது ‘வரியன் ‘ நக்கீரன் வரைக்கும் http://www.sooriyan.com/index.php ?option=content&task=view&id=2971&Itemid=32 தெரிந்த வெள்ளிடை மலை செய்தியாகும்.
நான் சூபியை இடைமறித்தது ‘முஸ்லிம்களின் அல்குர் ஆன் ‘ என்று அவர் குறிப்பிட்டதைத்தான். அதற்காகத்தான் 081:027 வசனத்தையும் சான்றாக வைத்திருந்தேன். குர் ஆனை மேற்கோள் காட்டினாலே சூபிகளுக்கு மிரட்சி ஏற்பட்டு விடும். அதற்காக சொல்ல வேண்டியதைச் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லாமல் விட முடியுமோ ? ‘… இது மிகத் தெளிவான அரபு மொழியில் (அருளப் பெற்று) உள்ளது ‘ 016:103.
ஒரு கருப் பொருள் குறித்த முழு அறிவும் அடிப்படை அறிவும் யாவை என்பதற்கு ஓர் உவமையைப் பார்ப்போமா ?
‘தமிழில் எழுதுதல் ‘ என்ற ஒரு கருவுக்குத் தமிழின் உயிர் எழுத்துகள் 12ஐயும் மெய் எழுத்துகள் 18ஐயும் உயிர்மெய் 216ஐயும் ஆய்தம் 1ஐயும் சேர்த்து 247 எழுத்துகள் பற்றிய ‘முழு அறிவு ‘ கட்டாயம் தேவை. தமிழைச் சீரிய முறையில் தெளிவாக எழுத, அடிப்படை அறிவுக்கு மேற்கொண்டு இலக்கணங்கள் தெரிந்திருக்க வேண்டும். சூபியைவிடச் சிறப்பாக எழுத அடிப்படை அறிவே போதும்.
காலத்திற்கேற்றவாறு வேதங்களில் அல்லாஹ்வால் ஏற்படுத்தப் பட்ட மாற்றங்களை, ‘அல்லாஹ்வுக்கே முழு அறிவு இல்லை ‘ என்றுக் கூற விழைதலைவிட அறியாமை ஏதுமுண்டா ?.
‘ … இன்றைய நாளில் உங்களுடைய மார்க்கத்தை நிறைவு செய்து விட்டேன்; என்னுடைய அருட்கொடை(இறைமறை)யையும் முழுமையாக்கி விட்டேன்; உங்களுடைய வாழும் வழியாக இஸ்லாமை ஏற்றுக் கொண்டேன். ‘ என்று அல்லாஹ் கூறுகிறான் [005:003].
‘இன்றைய நாளில் ‘, ‘நிறைவு ‘, ‘முழுமை ‘ ஆகிய சொற்கள் உணர்த்துவது யாதெனில், ‘இதற்கு முன்னர் முழுமை பெற்றிருக்கவில்லை ‘ என்பதைத்தான். இது, புதுக் கண்டுபிடிப்பன்று. 1400 ஆண்டுகளுக்கு முன்னர் வஹ்ஹாபே கூறியவைதாம்.
ஹஜ்ஜின்போது பலி கொடுத்தல், முடி மழித்தல் ஆகிய அனைத்தும் அரபுவகைப் பட்டதல்ல என்று முன்பே நிறுவியிருக்கிறேன். ஏனெனில், அவையனைத்தும் அண்ணல் இபுராஹீம் நபி அவர்களின் வழிமுறை; அண்ணல் இபுராஹீம் அரபியரா ? என்று கேட்டிருந்தேன். என் கேள்விக்கு பதில் தராமல் தன்னுடைய அறியாமையை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் சூபி உறுதியாயிருக்கிறார். அவருடைய உறுதியை எண்ணி வியக்காமலிருக்க முடியவில்லை.
புதிதாக சூபி புகுத்தியிருப்பது ‘இஸ்லாமிய ஆடை விதிகள் ‘ (Dress Code) அரபுவகைப் பட்டன ‘ என்பதாகும்.
உலகில் வாழும் முஸ்லிம்கள் எல்லாரும் அரபியரைப் போன்று உடையணிந்து திரிவதாகக் கனவு கண்டிருக்கிறார். கிருத்துவப் பாதிரியார்களும் கன்னிகளும்தாம் அரபியரைப் போன்று உடையணிகின்றனர். கிழித்துக் கொண்டு திரிவது வபிகளின் வழக்கமென்பதால் முழுக்க அணிவது முட்டாள்தனமாகத் தெரிகிறது போலும்.
மாறுபட்ட மொழிகள் பேசுவோர் வாழும் நம் நாட்டுக்கான தேசியப் பாடலாக, வங்கக் கவிஞர் தாகூரின் ‘ஜன கன மன ‘வை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம் – அது பிறந்த சூழலைக் கருத்திலெடுக்காமலேயே.
முஸ்லிம்களின் இறைவணக்கத்தில் குர் ஆனுடைய வசனங்கள் ஓதப் படுவதன் காரணம், அரபு வகைப் பட்டுப் போவதோ அல்லாஹ்வுக்கு அரபியைத் தவிர வேறு மொழி தெரியாது என்பதோ உலகில் சிறந்த மொழி அரபிதான் என்பதோவல்ல.
1- ‘… தொழுகையில் குர்ஆனிலிருந்து உங்களுக்கு இயன்றதை ஓதிக் கொள்ளுங்கள் … ‘ [073:020] என்பது அல்லாஹ்வின் கட்டளை.
2- அல்லாஹ்வுடைய குர்ஆன் வசனங்கள் அரபு மொழியில் அருளப் பட்டவை – காரணம்,
3- குர்ஆனை உலக மாந்தருக்கு அறிமுகப் படுத்திய நபிகள் நாயகத்துக்கு அரபு மொழி மட்டும்தான் தெரியும்.
4- ஒருவருக்குத் தெரிந்த மொழியில் வேதம் அருளப்பட்டால்தான் மற்றவர்களுக்கு அதை எடுத்துச் சொல்ல முடியும்.
உலகளாவிய ஓர் இறைவணக்கம் என்பது ஒரு மொழியில்தான் இருக்க முடியும். நபிகள் நாயகம் தமிழகத்தில் பிறந்திருந்தால் குர் ஆன் தமிழில்தான் அருளப் பட்டிருக்கும். உலக முஸ்லிம்கள் தமிழ் மொழியில் தொழுகை நடத்திக் கொண்டிருப்பர். அப்போதும் சீனாவில் பிறந்த ஒரு பிறவி மேதாவி, ‘சீன மொழியில் தொழுகை நடத்த தயாரா ? ‘ என்று வலையில் சவால் விட்டுக் கொண்டிருப்பார்.
அடுத்து,
‘ஒரே நேரத்தில் நான்கு பேர் வரை திருமணம் செய்து கொள்ளலாம் ‘ என்பது , ‘காலங்கடந்த ஆணாதிக்க சிந்தனை ‘யன்று. மாறாக, வஹ்ஹாப் வஹ்ஹாபிகளுக்கு வழங்கியிருக்கும் அதிகளவில் வழக்கிலில்லாத அனுமதி – ஆம்; அனுமதிதான்; ஆணையன்று. கூடுதல் விபரங்களுக்கு:
1-http://suttuviral.blogspot.com/2005/11/blog-post.html
2-http://irainesan.blogspot.com/2006/03/1.html
‘நினைத்த நேரத்தில் முத்தலாக் சொல்லி பெண்ணை ஒடுக்குமுறை ‘ செய்ய முடியாது. பாஸ்டன் பாலா http://etamil.blogspot.com/2005/05/blog-post.html அறிந்து வைத்திருப்பதைக்கூட அறியாத சூபியின் பார்வைக்கு: http://abumuhai.blogspot.com/2005/05/1.html
என்னுடைய சொத்தில் என் விருப்பத்திற்கு, நானே யாருக்கும் பங்கு கொடுக்க முடியாது. யாருக்கு எவ்வளவு என்று என் இறைவன் தன் மறையில் வகுத்திருக்கிறானோ அதன்படி அவரவர் எடுத்துக் கொள்வர் – நான் இறந்த பின்னர். அதில் சூபிக்குப் பங்கில்லை.
மேலும்,
தன் பிள்ளைகளின் அப்பன் பெயர் தெரியாத அம்மாப் பட்டியலை உள்ளடக்கிய ‘பெண்ணிய இஸ்லாம் ‘ போன்று இன்னும் எத்தனை இஸ்லாம்களை அறிமுகப் படுத்தினாலும் வஹ்ஹாபின் சட்டப்படி [003:019] இஸ்லாம் என்பது ஒன்றுதான் – ஒன்றே ஒன்று!
ஃஃஃ
to.wahhabi@gmail.com
- சூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம்,உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-2
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -5 (சென்ற வாரத் தொடர்ச்சி)
- சித்திரையில்தான் புத்தாண்டு
- பெரியபுராணம் – 84 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- வாழும் என் கவிதைகளில் ( மூலம் : அந்தானாஸ் ஜோன்யாஸ் )
- மிஸ்டர் இந்தியா !
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-16) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- கீதாஞ்சலி (68) பன்னிற வடிவப் படைப்புகள் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- ஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… -1
- ஆத்மா, அந்தராத்மா, ம ?ாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 2
- புதிய காற்று & இஸ்லாமிய இலக்கியப் பேரவை இணைந்து நடத்தும் இஸ்லாமியக் கருத்தியல்-கலந்துரையாடல் இருநாள் அமர்வு—2006 மே இறுதிவாரம்
- மலர்மன்னனின் உள்ளுணர்வும், உண்மைக்கு மாறானதும்
- கடிதம் – ம வெங்கடேசன் அவர்கள் எழுதிய ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்
- அவுரங்கசீப்
- அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பரே…நண்பரே.. நண்பரே….! – 1
- சிற்றிதழ்களின் சிறந்த படைப்புகள் – 2004
- ‘காலத்தின் சில தோற்ற நிலைகள் ‘ : ‘ரிஷி ‘ யின் நான்காவது கவிதைத்தொகுப்பு
- எது உள்ளுணர்வு ?
- ஐந்தாவது தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா ஆவணி 2006
- மீண்டும் வெளிச்சம்
- இரவுகள் யாருடையவை ?
- என் பார்வையில் : ஊடகங்களின் அரசியல் நடுநிலைமை – ஒரு கேள்விக்குறி – ?
- புதிய பெயர், புதிய தோற்றம், புதிய குடும்பம் ஏன் ?
- கற்று மறத்தலும், முன் நோக்கிச் செல்லுதலும் ( மூலம்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் )
- கோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 2
- புலம் பெயர் வாழ்வு (7) – தலைமுறை இடை….வெளி
- வேலையின்மை கிளர்ந்தெழும் பிரான்சு இளைஞர்கள்
- தனுஷ்கோடி ராமசாமி யின் ‘தீம் தரிகிட ‘- சிறுகதைத் தொகுப்பு சுட்டும் மனித உரிமை மீறல்களும், அதற்கான தீர்வுகளும்.
- ‘நல்லூர் இராஜதானி:நகர அமைப்பு ‘ – அத்தியாயம் எட்டு: பண்டைய நூல்களும் கட்டடக்கலையும்!
- கன்னி பூசை
- பறவை
- திரவியம்
- விஞ்ஞானியின் வினோத நாக்கு
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 16
- தவ்ஹீது பிராமணீயம்
- எடின்பரோ குறிப்புகள் -11
- இன்னும் ஒரு ரத்த சாட்சி – காத்தாடி மலையில் இருந்து
- எங்கே செல்லுகிறது இந்தியா ?
- கோட்டில் குந்தியிருந்த எண்ணற்ற புள்ளிகளின் மனப்பொழுதின் பகிர்வுகள்
- உயர் கல்விக்கூடங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு.
- காந்தியும் சு.ரா.வும்
- சரத்குமார் விலகல் -திமுகவின் கெஞ்சல்
- ஆக்டே ரிபாத்தும் அடியேனும்
- கடித இலக்கியம்
- ராகு கேது ரங்கசாமி – 5 ( முடிவுப் பகுதி )
- அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ! நண்பரே….நண்பரே ….நண்பரே…! – 2
- நானும், கஞ்சாவும்
- தேவதைகளின் சொந்தக் குழந்தை — விமர்சன கூட்டம்(பன்முக விமர்சனங்கள்)