தேவையான பொருட்கள் (இரண்டு பேருக்குத் தேவையான அளவு)
மிளகு 1 தேக்கரண்டி
ஜீரகம் 1 தேக்கரண்டி
புளி தேவையான அளவு கரைத்துக்கொள்ளவும் (சிறிய எலுமிச்சை அளவு)
கொத்தமல்லித் தூள் 2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் 1/2 தேக்கரண்டி
தேங்காய்தூள் 1/2 கோப்பை
பூண்டு 15 பற்கள் (அதிகமாவும் போடலாம்)
தக்காளி 1
தாளிக்க ( வெந்தயம், கொஞ்சம் வெங்காயம் நறுக்கியது, இருந்தால் சிறிது மணத்தக்காளி வத்தல், நல்லெண்ணெய் )
உப்பு தேவையான அளவு
செய்யும் முறை
1) கால்கரண்டி எண்ணெயை வாணலியில் ஊற்றி மிளகையையும் சீரகத்தையும் வறுத்துக்கொள்ளவும்
2) அதை தேங்காயுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்
3) கரைத்த புளித்தண்ணீருடன் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சிறிது சேர்த்துக்கொள்ளவும்
4) வாணலியில் ஒரு இரண்டு மேஜைக்கரண்டி நல்லெண்ணெயை ஊற்றி, காய்ந்தவுடன் வெந்தயம் போட்டு பிறகு வெங்காயம் போட்டு வெங்காயம் வதங்கியவுடன் பூண்டு பற்களையும் போட்டு வதக்கி பிறகு மணத்தக்காளியையும் போட்டு வதக்கவும்
5) பிறகு அதில் புளித்தண்ணீர் கரைச்சலை ஊற்றி, தேங்காய் கரைச்சலையும் ஊற்றி கொதிக்கவிடவேண்டும். இப்போது ஒரு தக்காளியை நறுக்கிப் போடலாம்.
6) நன்றாகக் கொதித்தவுடன் இறக்கி சாதத்துடன் பறிமாறலாம்.
***
முட்டைக்குழம்பு
பூண்டும் மணத்தக்காளியும் போடாமல் முட்டையை ஊற்றி முட்டைக்குழம்பு செய்யலாம்
முட்டைக்குழம்பு செய்ய வேண்டுமெனில், நன்றாகக் கொதித்துக்கொண்டிருக்கும் போது, தீயை சிறிதாக்கி ஒவ்வொரு முட்டையாக உடைத்து மெதுவாக ஊற்றவேண்டும். ஒரு முட்டை வெந்தவுடன் அடுத்த முட்டையை ஊற்றவேண்டும்.
- பத்து செட்டி
- குருவி வர்க்கம்
- இனியும் விடியும்….
- புதுமைப் பித்தன் யாருக்குச் சொந்தம் ?
- இந்த வாரம் இப்படி – மே 20- 2001
- கணினி யுகத்திற்கான இன்றியமையாச் சமூகச் சிந்தனை – 3 (இறுதிப்பகுதி)
- மாண்டூக்யோபநிஷதம்.
- கவலைபடாதே
- எங்கே போனது ஜனநாயகம் ?
- வாழ்க்கை என்னும் லாட்டரி
- மிளகு பூண்டுக் குழம்பு (அல்லது முட்டைகுழம்பு)
- புதுமைப் பித்தன் யாருக்குச் சொந்தம் ?
- விஷ்ணுபுரம் சில விளக்கங்கள்