மாற்றமும் மடமையும் – வஹ்ஹாபி அவர்களுக்கு சில வரிகள்

This entry is part [part not set] of 35 in the series 20080227_Issue

நேச குமார்



திரு .வஹ்ஹாபி அவர்களின் ‘இன்னும் ஒரு இஸ்லாமிஸ்ட்’ என்ற தலைப்பிலான கடிதத்தை சென்ற திண்ணை இதழில் கண்டேன் (1).
நான் எனது கடிதத்தில் (2) சுட்டியிருந்தது, பார்ப்பனர் போன்ற பதங்களை பயன்படுத்திக்கொண்டே தங்களை முகமதியர் என்றழைப்பவர்களை சாடும் இரட்டை மனப்பான்மையை.

அதை எழுதும்போது மிகத் தெளிவாகவே ‘எழுதுகிறார்’ என்பதற்கு பதிலாக ‘பயன்படுத்துகிறார்’ என்ற வார்த்தையை தேர்வு செய்து எழுதியிருந்தேன்:

//

ஜனவரி 10, 2008 தேதியிட்ட தனது கட்டுரையில் முகமதியர்கள் என்று மலர்மன்னன் குறிப்பிட்டதைப் பற்றி புலம்பிக் கொண்டே வஹ்ஹாபி இத்தகைய வாசகங்களைப் பயன்படுத்தியுள்ளார்
//

இப்படி மற்றவர்கள் எழுதிய வார்த்தைகளை பயன்படுத்தும் வஹ்ஹாபி தமக்கு என்று வரும்போது மட்டும் எப்படி வித்தியாசமான அளவுகோளை முன்வைக்கிறார் என்பதை எனது கட்டுரையில்(2) குறிப்பிட்டிருந்தேன்.
தற்போது , மேற்கோளிட்டுக் காட்டியதற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை , தான் எழுதியது அல்ல என்று தெரிவித்துள்ளார். மேற்கோள் காட்டும் விஷயத்தில் ஒப்புமை இல்லை என்று தெரிவிக்காதபோது அது மேற்கோள் காட்டுபவரின் கருத்துக்களை/மனப்பான்மையையே பிரதிபலிக்கின்றது என்பது கட்டுரை எழுதுவதன் பாலபாடம்.
இது சகோதரர் வஹ்ஹாபிக்கு தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று நான் நம்பவில்லை. ஏனெனில், ஹெச்.ஜி.ரசூல் மேலைநாட்டு ஆராய்சியாளர்களை மேற்கோளிட்டு எழுதிய ‘இஸ்லாத்தில் மதுவருந்துதல்’ தொடர்பான கட்டுரையைக் கண்டு வெகுண்டு, அக்கட்டுரைக்காக ரசூல் பாதிக்கப்பட்டது கண்டு குதூகலம் கொண்டு, ‘ரசூல் உளறியிருக்கிறார்’, ‘மேற்கத்தியர்களால் மோசம் போனேன் என்று இப்போது புலம்புகிறார்’ என்றெல்லாம் இஸ்லாமிஸ்டுகளுக்கே உரிய வழக்கமான கிண்டலுடன் எழுதியவர்தான்(3) இதே வஹ்ஹாபி.
இப்போது இந்த இரட்டை மனப்பான்மை படிப்பவர்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். ஆனால், இந்த விஷயம் குறித்தெல்லாம் எழுதும் சகோ.வஹ்ஹாபி, நான் கேட்ட கேள்விகளுக்கு இன்னும் பதிலளிக்கவே இல்லை. மீண்டும் கேள்வியை முன்வைக்கிறேன்:

**

முஸ்லீம்களை ஏனையோர் முகமதியர்கள் என்று அழைப்பது அவர்களது மனதைப் புண்படுத்துகிறது என்றால், அகமதியாக்களையும் பஹாய்களையும் முஸ்லீம்கள் என்றழைக்கலாமா? ஏனெனில், ஈரானில் அரசே பஹாய்கள் தங்களை முஸ்லீம்கள் என்றழைத்துக் கொள்வது தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவித்துவிட்டது, பாகிஸ்தானில் அஹமதியாக்கள் தங்களை முஸ்லீம்கள் என்றழைத்துக் கொள்வது தண்டனைக்குரிய குற்றம். முஹமது உருவாக்கிய மதத்தைச் சார்ந்தவர்களை முஹமதிக்கள் என்றழைப்பது தவறு என்றால், அஹமதி உருவாக்கிய மதத்தைச் சார்ந்தவர்களை, பஹாவுல்லாஹ் உருவாக்கிய மதத்தைச் சார்ந்தவர்களை பஹாய்கள் என்றழைப்பதும் தவறுதானே? இவர்களையெல்லாம் முஸ்லீம்கள் என்று வஹ்ஹாபிகள் ஒப்புக் கொள்வார்களா? ஏனெனில், இந்த மதநிறுவனர்களும் தங்களை பாரம்பரிய நபிமார்கள் வழியில் வந்து தூய்மையான இஸ்லாமிய மதத்தை அதன் தூய வடிவில் போதித்தவர்களாகவே சொல்லிக் கொள்கிறார்கள். **

***

இனி

அடுத்தது, வஹ்ஹாபி என்னை எழுத அனுமதிக்கக் கூடாது என்று திண்ணை ஆசிரியருக்கு வேண்டுகோள் (பத்துவா இல்லையே?) வைத்திருக்கிறார்.
நான் எழுதுவதை சரியாகப் படிக்காமல், நான் கேட்டிருந்த கேள்விகளுக்கு பதில் சொல்லவும் முடியாமல், என்னை எழுத அனுமதிக்கும் திண்ணையை சாடி, இனிமேல் என்னை எழுத அனுமதிக்கக் கூடாது என்ற ரீதியில் எழுதியுள்ள வஹ்ஹாபி அவர்களின் இந்த மனோபாவமும் நான் தொடர்ந்து நான்காண்டுகளாக இஸ்லாமிஸ்டுகளிடம் பார்த்து வருவதுதான். மரத்தடி, தமிழோவியம், சிஃபி, திண்ணை என்று நான் எழுதும் ஒவ்வொரு இடத்திலும் வந்து அங்கே இதையே முறையிடுவதை தொடர்ச்சியாக செய்துவருகின்றனர் இஸ்லாமிஸ்டுகள்.
ஆம் , என்னதான் செய்வார்கள் பாவம். ‘எங்கள் சாமி உங்கள் சாமி அல்ல’, ‘எங்கள் சாமி கையாலாகாத சாமி அல்ல’ (4), ‘எங்க சாமி காபாவை நேரடியாக ஏழு வானங்களுக்கு மேலிருந்து கண்காணித்து, காத்து வருகிறது’ (5) என்றெல்லாம் எழுதிவிட்டு, திடீரென்று 1979ல் நிகழ்ந்த காபா மீதான தாக்குதலை எழுதும்போது, அத்தாக்குதலில் மெக்காவில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எழுதும்போது இந்த மூடநம்பிக்கை உடையும்போது கோபமும், இயலாமையும் சேர்ந்து முஃமீன்களை வாட்டுகிறது – ஆனால்,இன்றைய ICT புரட்சியில் இந்த இயலாமையை சென்ஷார்ஷிப் எனும் பர்தாவைக் கொண்டு மறைத்துக் கொண்டு இதுவரை(14 நூற்றாண்டுகளாக) இருந்தது போன்று இனியும் இருக்க முடியாது என்பது வஹ்ஹாபிகளுக்கு புரியமாட்டேன் என்கிறது.
யாரைச் சொல்லி குறைபட்டுக்கொள்வது, ‘கையாலாகாத’ கடவுள்கள் எல்லாம் சேர்ந்து கூட்டுச் சதி செய்து ஏக இறைவனுக்கெதிராக இண்டர்நெட்டை கொண்டு வந்துவிட்டார்கள் போலிருக்கிறது :-). அதனால்தான் இத்தனை நூற்றாண்டுகளாக கடவுள் பற்றி, ஆன்மீகம் பற்றி நிலவிய கொள்கைகள், கருத்துக்கள் எல்லாம் இன்று தகவல் பரிமாற்றம் சுதந்திரமான நிலையில், மதவாதிகளின் பிடி தளர்கிற நிலையில் மாற்றமடைகின்றன. மாற்றமடைய மறுப்பவை மடிந்தும் போகின்றன. வாழ்க்கையின் எல்லா முகங்களைப் போன்றே ஆன்மீகம் பற்றிய கருத்துக்களும், மனித குல முன்னேற்றத்தினூடே மாற்றம் பெறுவதைத்தான் வரலாறு காட்டுகின்றது. மாற்றங்கள் பித்அத் என்று கருதினால், உலகம் மறுத்து தன் வழியில் முன்னேறிக்கொண்டே போய்விடும் என்பது இந்த பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பான மனோபாவம் கொண்டிருக்கும், தூய்மையான இஸ்லாத்தை நிறுவ முயலும் புரட்சியாளர்களுக்கு புரியமாட்டேன் என்கிறது.
வஹ்ஹாபி சொன்னாலும் சொல்வார் அடுத்து
, இந்த இணையமே தஜ்ஜால்களின்(கடவுளுக்கெதிரான சைத்தான்கள்) கூடாரம் என்று. ஏனென்றால், எங்கள் ஊருக்கருகில் கிராமங்களில் அடிக்கடி இது போன்று டிவிக்கெதிராகவெல்லாம் ஃபத்வா பிறப்பிக்கப்படும். சவுதியில் நெடுங்காலமிந்த ஃபத்வா டிவிக்கு, ரேடியோவுக்கு எதிராக நீடித்தது (இதெல்லாம் உண்மையைச் சொல்வதால், ஷைத்தானின் கருவிகள் என்பது முல்லாக்களின் முடிவு).
திண்ணை ஆசிரியருக்கு எனது வேண்டுகோள் ஒன்றிருக்கிறது, அது என்னவென்றால், இப்படிப்பட்ட கடிதங்கள், கட்டுரைகள் அனைத்தையும் தயவு செய்து பிரசுரியுங்கள். அப்படியாவது இவர்களே தங்களது முகத்தை இணையக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளட்டும். அப்படியாவது இவர்கள்/இது போன்ற சித்தாந்தங்கள் சீர்திருத்தமடையட்டும்.
***

வஹ்ஹாபி ஒவ்வொருமுறையும் கடிதம் எழுதும்போது பிறர் தம்மால் அவமானப்படுத்துக்குள்ளானதாக உணர்கிறார். இது ஒரு அடிப்படை இஸ்லாமிய மனோபாவம் – மாற்று மதத்தவர்களை இழிவு படுத்தப்போவதாக அல்லாஹ்வே அறிவிக்கும்போது(6), அதையே முஹமது அவர்களும் செய்திருக்கும்போது(7) இந்த இருவரையும் வழிபடும் வஹ்ஹாபி இப்படிப்பட்ட மனமயக்கத்தில் ஆழ்ந்திருப்பதில் அதிசயம் என்ன? வஹ்ஹாபிகளின் தலைவரை வழிபடும் , Hero Worship செய்யும் உணர்ச்சி மிகுந்த அடிமை அல்லவா அவர்.

வஹ்ஹாபியும் என்றாவது ஒரு நாள் மனந்தெளிவார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது . அதற்கவர் நான் கேட்ட கேள்விகளுக்கு குறைந்த பட்சம் பதில் சொல்லவாவது முயற்சிக்க வேண்டும். அவரைப் போன்று அடுத்த வார திண்ணைக்குள் பதில் சொல்ல வேண்டும் என்றெல்லாம் நான் நிபந்தனை விதிக்கப்போவதில்லை. பதில் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, இந்த விவாதங்களை படிக்கும் பல நூறு தமிழர்கள் பதில்களை சொல்வார்கள், இன்றில்லாவிட்டாலும் நாளை என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நேச குமார்
http://nesamudan.blogspot.com
http://islaamicinfo.blogspot.com
http://nesakumar.blogspot.com
http://islaam.blogdrive.com

சுட்டிகள்

:
(1) http://www.thinnai.com/?module=displaystory&story_id=80802213&format=html

(2) http://www.thinnai.com/?module=displaystory&story_id=80802145&format=html

(3) http://www.thinnai.com/?module=displaystory&story_id=80708236&format=html

(4) http://www.thinnai.com/?module=displaystory&story_id=80611303&format=html

(5)

http://www.tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=nalladiyar1&taid=6
(6)

அல்லாஹ்வையே கடவுள், முஹமதே அந்த உண்மையான கடவுளால் அனுப்பப்பட்ட தூதர் என்று ஏற்காதவர்கள் கடவுளால் இழிவு படுத்தப்படுவார்கள் என்று குரானில் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு:
குரான்

3:112 – அவர்கள் முஸ்லீம்களிடம் உடன்படிக்கை செய்துகொள்ளாதவரை மிகவும் இழிவுபடுத்தப்படுவார்கள் என்கிறது இந்த வசனம் (உடன்படிக்கை = திம்மியாக, இரண்டாம் குடிகளாக மதம்மாற மறுப்பவர்கள் இருக்க வேண்டும்).

குரான்

3:192 – காஃபிர்கள் எரிகிற தீயில் வாட்டப்படுவார்கள், அவர்கள் இழிவுபடுத்தப்படுவார்கள் என்கிறது இந்த வசனம்.

குரான்

6:93 – முஹமதுவுக்கு வஹி வந்தது போன்று தங்களுக்கும் உண்மை கடவுளிடமிருந்து இறங்கியது என்று சொல்லி இஸ்லாத்தை ஏற்க மறுக்கும் காஃபிர்களை மலக்குகள் (தேவதை/பிசாசு/கடவுளின் அடியாட்கள்) துன்புறுத்தி இழிவு படுத்துவர் என்கிறது இந்த வசனம்.

இந்த இழிவு என்பது இஸ்லாத்தில் மரணத்தைவிடக் கொடியதாக வலியுறுத்தப்படுகிறது. எனவே மோசமான தண்டனையான இது முஸ்லீம்கள் சொல்வதை மறுப்பவர்களுக்கு (காஃபிர்களுக்கு) தரப்படுகிறது என்பது இஸ்லாத்தின் முக்கிய நம்பிக்கைகளுள் ஒன்று.
(7)

பனு குறைழா ஜாதி யூதப் பெண்களை முஹமது பிடித்து அடிமைகளாக விற்றுவிட்டார். பலரை தமது நண்பர்களுக்கு அடிமைகளாக கொடுத்து யூதக்குலத்தை இழிவில் தள்ளினார். இந்த அடிமைகளிடம் பாலியல் வல்லுறவு கொல்வதை அல்லாஹ்வும் அனுமதிக்கின்றார் என்று முஹமது தன்னை நம்பியவர்களிடம் சொன்னார் .பார்க்க குரான் வசனங்கள் : 33:50(போரில் பிடிக்கப்பட்ட அடிமைகளிடமும், மனைவிகளிடமும் முஹமது பாலியல் உறவு கொள்ளலாம்), 23:6 (தாழ்த்தப்பட்ட பெண்களிடம் உறவு கொள்ளலாம்), 4:24 கல்யாணாம் ஆகாத பெண்களை எடுத்துக் கொள்ளாதீர்கள், ஆனால் இந்த விஷயத்தில் (கல்யாணம் ஆன, ஆனால்) அடிமைகளாக உள்ள பெண்கள் அனுமதிக்கப்பட்டவர்கள், இன்னபிற.

முஹமது கடவுள் தன்னிடம் சொன்னதாக சொன்னதும்(குரான்), தனிப்பட்ட நடத்தையும் (சுன்னாஹ்) இந்த இழிவை இஸ்லாத்தின் அங்கமாக, ஷரீயத்தாக (கடவுளின் சட்டம்) ஆக்குகிறது. இதை அடியொற்றியே இஸ்லாமிய அறிஞர்கள் காலம் காலமாக எப்படி முஸ்லீமல்லாதவர்கள் நடத்தப்பட வேண்டும் என்பதை வரையறுக்கின்றார்கள். இது குறித்து ஆண்ட்ரூ போஸ்தம்(Author of The Legacy of Jihad) கூறுகிறார்:

The classical Muslim jurist al-Mawardi (a Shafi’ite jurist, d. 1058) from Baghdad was a seminal, prolific scholar who lived during the so-called Islamic “Golden Age” of the Abbasid-Baghdadian Caliphate. He wrote the following, based on widely accepted interpretations of the Qur’an and Sunna (i.e., the recorded words and deeds of Muhammad), regarding infidel prisoners of jihad campaigns:

“As for the captives, the amir [ruler] has the choice of taking the most beneficial action of four possibilities: the first to put them to death by cutting their necks; the second, to enslave them and apply the laws of slavery regarding their sale and manumission; the third, to ransom them in exchange for goods or prisoners; and fourth, to show favor to them and pardon them. Allah, may he be exalted, says, ‘When you encounter those [infidels] who deny [the Truth=Islam] then strike [their] necks’ (Qur’an sura 47, verse 4)”….Abu’l-Hasan al-Mawardi, al-Ahkam as-Sultaniyyah.” [The Laws of Islamic Governance, trans. by Dr. Asadullah Yate, (London), Ta-Ha Publishers Ltd., 1996, p. 192. Emphasis added.].

Series Navigation

நேச குமார்

நேச குமார்