மானசரோவர் டாட்காம்

This entry is part [part not set] of 31 in the series 20030406_Issue

பா. ராகவன்


அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்.

ஏப்ரல் 14, 2003 (திங்கட்கிழமை) தமிழ்ப் புத்தாண்டு தினம் தொடங்கி எமது மானசரோவர் டாட்காம் – www.manasarovar.com விண்ணேறுகிறது.

உலகெங்கும் பரவி வசிக்கும் இலட்சக்கணக்கான தமிழ் வாசக அன்பர்களின் புத்தகத் தேவைகளைத்

தீர்த்துவைப்பதே மானசரோவர் டாட்காமின் தலையாய நோக்கம். அமேசான் டாட்காம் போல் தமிழுக்கு ஒரு தளம் என்கிற எமது நீண்டநாள் கனவின் செயல் தொடக்கம் இது.

பல்லாயிரக்கணக்கான புதிய / அரிய தமிழ் நூல்களை மானசரோவரில் சுலபமாகப் பார்வையிடலாம்; குறிப்பிடத்தக்க நூல்களைப்பற்றிய சிறப்பு விவரங்களைப் படித்து அறியலாம்; விருப்பமான நூல்களை மிக எளிதாக வாங்கலாம் (பேமெண்ட் கேட் வே வசதி செய்யப்பட்டிருக்கிறது); புத்தக விமரிசனங்கள், மதிப்புரைகள், ஆசிரியர்களைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள், வாசகர் போட்டிகள், வார இதழாக தனி சேனல்…. என வாசிப்பில் ஆர்வமுள்ள யாரும் நேசிக்கக் கூடிய விதமாக மானசரோவர் டாட்காம் வடிவம் பெற்றிருக்கிறது.

புத்தக விற்பனைத் தளமாக இருப்பினும் மானசரோவர் டாட்காமில் வேறுபல சிறப்புப் பகுதிகளும் உண்டு. சிறந்த தமிழிலக்கியப் படைப்பாளிகள் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்கச் சம்மதித்திருக்கும் ‘ரீடிங் ரூம் ‘ சேனல் அவற்றுள் பிரதானமானது.

நூறு வருடகாலத் தமிழக சரித்திரத்தை உள்ளடக்கிய பிரபஞ்சனின் புதிய நாவல் ஒன்று முதல் தினம் தொடங்கி (ஏப்ரல் 14) மானசரோவரில் வெளியாகிறது. தமிழுலகம் நன்கறிந்த மற்றொரு சிறந்த படைப்பாளியான

பாவண்ணனின் ‘தோட்டத்தில் சில பூக்கள் ‘ – கட்டுரைத் தொடரும் வாசகர்களை அள்ளிக்கொள்ளப்போவது உறுதி.

கடல் கடந்து வாழும் தமிழ் படைப்பாளிகளின் புத்தக வெளியீட்டுக் கனவுகளை எளிய முறையில் நனவாக்கும் புதிய திட்டமொன்றை மானசரோவர் டாட்காம் தனது சகோதர நிறுவனமான சபரி பப்ளிகேஷன்ஸ் மூலம் முன்வைக்கிறது. ஏற்கெனவே நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த தமிழ்ப் படைப்பாளிகளின் கவனத்தைக் கவர்ந்து செயலாற்றத் தொடங்கிவிட்ட இத்திட்டம், அனைத்துக் கவிஞர்கள், எழுத்தாளர்களின் அன்பையும் அரவணைப்பையும் அவசியம் பெறும் என்பதில் சந்தேகமே இல்லை.

தமிழ் வாசகர்களின் சோதிடச் சந்தேகங்களுக்காக ஒரு தனி சேனல், புத்தகம் வாங்குவோரின் நியாயமான கேள்விகளுக்கு உரிய பதில் சொல்லவென்றே உருவாக்கப்பட்டிருக்கும் 24 மணிநேர லைவ் சாட் வசதி, புத்தகம் தேடும் பணியை மகிழ்ச்சிகரமாக்கும் எளிய, இனிய டிஸ்ப்ளே வசதி, எந்த ஃபாண்ட் (எழுத்துரு)டையும் இறக்கிக் கொள்ளத் தேவையின்றி கையாளப்பட்டிருக்கும் உயர் தொழில்நுட்பங்கள் …

போதும். தமிழ் வாசகர்கள் அனைவரையும் மானசரோவர் டாட்காம் இருகரம் நீட்டி அன்புடன் வரவேற்கிறது. மறக்காதல்லவா ? ஏப்ரல் 14 முதல்…

அன்புடன்,

பா. ராகவன்

ஆசிரியர், மானசரோவர் டாட்காம்.

writerpara@yahoo.com

Series Navigation

பா. ராகவன்

பா. ராகவன்