மறவன்புலவு செல்வமுத்து மாரி அம்பாள் பாலஸ்தாபனம்

This entry is part [part not set] of 33 in the series 20100919_Issue

மறவன்புலவு க. சச்சிதானந்தன்



மறவன்புலவு சைவ சமயிகளின் கிராமம்.
12.12.1999 அன்று மறவன்புலவில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் மக்களைத் திடீரென் வெளியேற்றிய சிங்களப்படையினர், அக்கிராமம் முழுவதையும் அழித்தனர். வீடுகள், கோயில்கள், பள்ளி யாவும் இடிந்தன, கூரைகள் இழந்தன, கதவுகள் நிலைகள் கழன்றன, களவாடியோரின் கைகளுள் சிக்கின. கால்நடைகள் சிதறின, அடுப்புகள் எரிந்தபடி, துணிகள் கொடிகளில் காய்ந்தபடி, இருந்ததை இருந்தவாறே விட்டு அச்சத்தில் ஓடினர் மக்கள்.

ஓராயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெல் விதைத்தனர் ஆவணியில். தையில் அறுவடை. கதிர் விரித்த நெற்பயிர்களை அப்படியே விட்டகன்றனர் மக்கள். அறுவடைக்குக் காத்திருக்க முடியவில்லை.

2009 ஆவணியில் மீண்டும் மக்களைத் தத்தம் வீடுகளுக்குச் செல்ல அனுமதித்தனர்.

10 ஆண்டு கால வனவாசம்.

வெறும் நிலத்துக்கு மீண்ட மக்களை நீண்டுயர்ந்த புல் புதர்கள், முள்ளுடன் வளர்ந்த காரைச் செடிகள், ஈச்சம் புதர்கள் என இயற்கை தந்த புதர்க்காடுகள் வரவேற்றன. இடிந்த வீடுகள் கட்டியம் கூறின. பாம்பு, கொடுக்கன், பூரான், அரணை, ஓணான், பெருச்சாளி, நரி என ஊர்வனனவும் காடை, புறா, காட்டுக்கோழி, அழுக்கணவன், நாரை எனப் பறவைகளும் வரவேற்றன. பற்றைகள், புதர்கள், முட்செடிகள், பாம்புப் புற்றுகளைத் தாண்டி மக்கள் தம் வாழ்விடங்களைத் தேடி அடைந்தனர்.

கடந்த சில மாதங்களில் ஓரளவு சுதாகரித்த மக்கள், ஆவணியில் விதைத்து, தையில் அறுவடையைக் கண்டபொழுது பூரித்தனர்.
கோயில்கள் திறந்தன. இடிபாடுகளுக்கிடையில் கருவறை, களவுபோன கோயிற் சாமான்கள்,
ஆனாலும் தளரவில்லை.

மறவன்புலவில் உள்ள பின்தங்கிய மக்களின் கோவில்களுள் ஒன்று அருள்மிகு செல்வ முத்துமாரியம்மன் கோயில்.
அந்தக் கோயிலை 10.9.2010 அன்று பாலஸ்தாபனம் செய்து திருப்பணி தொடங்கியுள்ளனர்.
இணைப்பில் அழைப்பிதழ் பார்க்க. அதிலேயே முகவரியும் பார்க்க.

இலங்கை ரூபாய் 20 இலட்சம் வரை (இந்திய ரூபாய் 8 இலட்சம் வரை) நிதி தேவை.

யாழ்ப்பாணத்தில் இடிந்த இசுலாமியப் பள்ளிவாசல்களை அரபு நாட்டு அரசுகள் துணை கொண்டு கட்டுகிறார்கள்.
கிறித்தவ தேவாலயங்களை கிறித்தவ நாடுகள் வாரி வழங்கிக் கட்டுவிக்கின்றன.
புத்த கோயில்களைப் புதிது புதிதாகச் சிங்களப்படையினரே தமது செலவில் கட்டிவருகின்றனர்.
சைவ சமயக் கோயில்கள் கட்ட யாரிடம் போவோம்.
அருள்மிகு செல்வ முத்துமாரியம்மன் கோயில் திருப்பணிக்குரிய 8 இலட்சம் ரூபாயைத் தருவது இந்தியாவில் ஒரு கார் வாஙகும் செலவு.
அந்தக் கோயிலின் முகவரிக்கே நிதி அனுப்புவீர்களா?
திருப்பணிக்கு நிதி தருவீர்களா? கோயிலாகவே கட்டி அங்கிருந்து அனுப்புவீர்களா?

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. Sachithananthan

Series Navigation

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்