மனஹரன்
சாயம் போகாத ஆடை
ரொம்ப நாளாகிவிட்டது
இன்னும்
காயாமல் ஈரமாகிறது
தொழிற்சாலை சுவரில்
நண்பன் வரைந்த
சிறுநீர்க்கோலம்
புதர் மறைவில்
இரண்டுக்கு இடம் தேடிய
அந்திம வேளைகள்
இடைத்துண்டோடு
சைக்கிளோட்டிவரும்
பெரிசுகள்
வராதவளுக்கு
மரத்திலேறி
ஓசையெழுப்பி அழைக்கும்
இளவட்டங்கள்
கள்ளுக்கடைக்கு
வரிசைபிடிக்கும்
முதியவர்கள்
ஆலய பிராஞ்சாவில்
சீட்டாட்டமும்
அஞ்சடி நிழலில்
தாயமும்
இருளில்
பிரேக் இல்லாமல்
எதிரொலிக்கும்
ஜாக்கிறதை விசில்கள்
இன்னும்
பெளர்ணமியில்
இனங்களை மறந்த
பாரியும்
மழை திட்டியில்
போத்தையடியும்
திரைப்பட முடிவில்
எதிரியின் வருகைக்கான
எதிர்ப்பார்ப்பும்
ரொம்ப நாளாகிவிட்டது
கத்தியோடும்
சங்கிலியோடும்
இரும்புக்காப்போடும்
மிரட்டும் விழிகளோடும்
தடித்த வார்த்தைகளோடும்
கைகோத்த பிறகு
– மனஹரன்
எச்சில் மழை
இம்முறையும்
மிக சாமர்த்தியமாய்
வென்றுவிட்டதாய் நினைக்கிறாய்
தினமும் மனமுழுக்க
அழுக்குச்சேரும்போது
உனக்கு மட்டும் எப்படி ?
புன் சிரிப்போடு
பொழுது புறப்படுகின்றது
எத்தனை எத்தனை
சாபங்கள்
ஒப்பாரிகள்
மண் வாரி தூவி…
இன்னும்கூட
உன்னால்
தலை நிமிர முடிகின்றது
உனக்கும் கணக்குத்தெரியும்
உன்னுள்
அழித்தழித்து எழுதியவை
எத்தனையென ?
ஒவ்வொரு குனிவிற்குப்பின்னும்
பூகம்பமாய்
வெடித்துச் சிதறிடுவாய்
நாலுகால் பிராணியாய்
தத்தளிக்கும் காட்சி
நிறைவேறாமலே போகின்றது
போகட்டும் நீயும் போ
நாளைய
அறிவாளிகூடவா
முட்டாளாய் இருப்பான்
முள்ளோடு பிடுங்கிவந்து
எச்சில் துப்பி
ஈரமாக்கி
சானமடித்து
இன்னும் என்னென்னவொ….
காத்திரு
-மனஹரன்
பிறப்பின் ஆயுதம்
ம் … ஆரம்பமாகிவிட்டது
இதுதான் புதிய மூலதானம்
மாதரின் விழிக்குள்
சிக்கியிருந்ததை
எப்படியோ களவாடிவிட்டார்களே!
விண்ணளந்த வார்த்தையின்
இலக்கு வென்றிட
கண்ணில் எச்சிலோடு
இன்னொரு முறை
மீட்டுக்கொடுப்பதாய்
சுய புலம்பல்
ஈனப்பிறவிகளின்
கைத்தட்டலில்
ஏகாந்த பிரமிப்பில்
மன நமச்சலை
சொரிந்துகொள்ள
விதண்டாவாதங்கள்
தகவல் ஊடகங்களின்
உள்ளார்ந்த ஆராதனையில்
வெற்றி வாளோடு
புறப்பட்டது
நம்பிக்கைகளைக்
காயடிக்கத்தானா ?
உச்சந்தலையில்
எரிச்சல்
இனி, ஆள வேண்டும்!
ஆழுகை வத்திகளை
அணைத்துவிடாதீர்கள்
இதுதான்
அரசியல் கண்டுகொடுத்த
புதிய ஆயுதம்
மனஹரன் –
kabirani@tm.net.my
- பெரியபுராணம் – 44 ( திருக்குறிப்புத்தொண்டர் புராணம் தொடர்ச்சி )
- அஞ்சலி -பிரபல எழுத்தாளரும் மருத்துவத்துறை பேராசிரியருமான அமரர் செல்லத்துரை சிவஞானசுந்தரம் (நந்தி)
- தலைமுறைகள் கடந்த வேஷம்
- பெண்கள் சந்திப்பு மலர் விமர்சனக் கூட்டம் ஜூன் மாதம் 26ம் திகதி ஸ்காபுரோ சிவிக் சென்றர் அறிவித்தல்.
- புலம் பெயர்ந்த கடவுளர்கள்
- மலேசிய இலக்கியங்களின் சுய அடையாளம்.
- பிரதிக்கு எதிரான கலகம்
- தமிழ் சினிமாவில் ‘படித்தவர்கள் ‘
- அனைத்துலக தமிழிலக்கிய அடையாளத்தை முன் வைத்து தமிழவனின் மலேசிய, சிங்கப்பூர் குறித்த கருத்துக்கள்
- ஜப்பானிய யந்திர மனித உடை மனித சக்தியை அதிகரிக்கிறது
- ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (1847-1922) வான ஊர்திக்கு முன்னோடிச் சோதனைகள் (பாகம்-3)
- ஊக்கும் பின்னும்
- கீதாஞ்சலி (27) கதவு திறந்திருக்கிறது! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- யாமறிந்த மொழிகளிலே…
- 2 மதியழகன் சுப்பையா கவிதைகள்
- கேட்டாளே ஒரு கேள்வி
- நிழல்களின் எதிர்காலம்
- மனஹரன் கவிதைகள்
- அவுஸ்திரேலியாவில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள்
- ஈ.வே.ராமசாமி நாயக்கரைப் பற்றி ப.ஜீவானந்தம்
- நூல் அறிமுகம் – தொல்காப்பியத் தமிழர் – சாமி சிதம்பரனார்
- புலம் பெயர் வாழ்வில் தமிழ்ப் பெண்களின் எதிர்காலம்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (நான்காம் காட்சி தொடர்ச்சி பாகம்-3)
- திருவண்டம் – 4
- ஆண்டச்சி சபதம்
- செருப்பு
- அமானுஷ சாட்சியங்கள்..
- ஒரு சாண் மனிதன்
- குடும்பப் புகைப்படம்
- கண்மணியே! நிலாப்பெண்ணே!