மட்டன்(கைமா) –1/2கிலோ
கடலைப்பருப்பு –150கிராம்
வெங்காயம் –2
பச்சைமிளகாய் –8
இஞ்சி –1துண்டு
பூண்டு –8பற்கள்
கிராம்பு –2
பட்டை –1துண்டு
ஏலக்காய் –2
கொத்துமல்லித்தழை –தேவையான அளவு
சோம்பு –1/2ஸ்பூன்
கைமாக்கறியை சுத்தம் செய்யவும்.
கடலைப்பருப்பை நீரில் ஊறவைக்கவும்.
கறியை உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
இஞ்சி, பூண்டை தட்டிக் கொள்ளவும்.
வெங்காயம், கொத்துமல்லித்தழையைப் பொடியாக நறுக்கவும்.
பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு இவைகளைத் தூள் செய்து கொள்ளவும்.
கடலைப்பருப்புடன், பச்சைமிளகாய், நறுக்கிய வெங்காயத்தில் பாதி, வேகவைத்த கைமாக்கறி, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். கலவை கெட்டியாக இருப்பது அவசியம். அரைத்தெடுத்த மசாலாத்தூள், இஞ்சி, பூண்டு சேர்த்துப் பிசைந்து உருண்டையாக உருட்டி, வடை தட்டுவது போல் தட்டி எண்ணெயில் முறுகலாகப் பொரித்தெடுக்கவும்.