டீன்கபூர்
திரை விலகி
ஒரு நாள் திரை மூடும்.
வருந்தி கண்கள் அகழ்ந்த அருவியில்
அமிழும்.
தேசங்களின் மீதம்;; கரைக்கப்படும்.
தவறியது மிதமாகி
பனியாகி உருகிய சுதந்திரம்
கொல்லன் வசைத்த இரும்பாகி இரும்பாகி.
ஆயினும் உத்தரவோடு காய்ந்த புண்
தாக்கப்பட்டு தகர்க்கப்பட்டு.
தேசத்தின் பூச்சியின்
இடுப்பிலும் ஒரு காயம்.
நாவுகளை நனைக்கும் ஆடுகள்
மேய்ந்து
மேய்ந்து
நாடுகள் நாடுகளாய்
கடிக்கின்ற
தளிரில் சுதந்திரம் காயப்பட்டு
சாவடிக்கப்பட்டு
புதைக்கப்பட்டுக்;கிடக்கிறது.
மன்னிப்பு எங்கு.
மனிதம் எங்கு.
மகிமை எங்கு
வண்டுகளும் குண்டுகளைக் கொட்டும்
தும்பிகளும் போட
கற்கும் இனி பாடசாலை ஒன்றில்.
ஒரு பூனையை வதைத்தமைக்கு
சிறைவாசம்.
பகுத்தறிவில் வாழ்வதற்கு.
நஞ்சுப் புகை வதைப்பது யாரை?
அணுக்குண்டு யாருக்கு என்று
பூமியோ,
புனிததலமோ,
என்று வாகனம் ஓட்டும்
பாணிக்கொண்டை போர்ச் சேவல்
கூவுவது யாருக்கும் கேட்கிறதா?
மூக்கை நுழைக்க
மூளைக்குள் யாரும்
முனைய வேண்டியது இல்லை.
குண்டும்
வானு}ர்தியும்
நாட்டின் உயர்வாய் பறக்கின்றன.
நாளை மற்றொரு நாட்டின்,
ஒரு ஊரின்
முதுகு முள்ளைக் கழற்ற.
தாயே!
பொறுக்கு கற்களை.
உன் குழந்தை எழுந்து நிற்கிறான்.
நாளை பாதங்களை வரிசைப்படுத்துவான்.
ஜனனித்த தெருவில்.
மண் மனிதன்;
கலைந்த தென்றலில்
இறகு உயிர் பறந்து செல்ல
வழி தவறி
ஒரு மர நிழல் அழுதது.
சுவர்ப்; பூனை
அரைக் கண்ணில் ஓய்வு பெற
நிலா வந்து
ஓடு பிரித்து
து}க்கத்தைக் கொத்தியது.
ஓசையற்று
ஏதிரியின் எச்சில்
உலகமே அயராத உயிரின் தோளில் கழிந்தது.
நாய்க் கயிறு
அறுந்ததில்
உயிரின் பெறுமானம்
ஒரு குண்டுக்கும் தெரியாமல் எழுதப்பட்டுவிட்டது.
மண் மனிதன்,
மண்ணுக்கு அனுப்பிவிட
யுத்த விலாசம் பொறிக்கப்படுகிறது.
விமானம் வெளிக்கிட்டு.
திக்குத் தெரிந்த
ஒரு பூவன நாட்டைத்தேடி
நகரத்தைத் தேடி….
எல்லா மாளிகைகளும் நடுங்கத் தொடங்கும்.
எல்லா மலர்களும் வாடத் தொடங்கும்.
எல்லா உயிர்களும் ஒதுங்கப் பார்க்கும்.
மண் மனிதன்
இங்கிருந்தும் அனுப்பப்படுவான்.
குழந்தையும்
தாயும்
அழும் ஓசை
வானத்தைப் பிளந்து
கிரக வழிப் பயணத்தில்.
ஆக,
தணலான மண்ணுக்குள்ளேயே
கசியுமா சுதந்திரம்.
நரி ஊளையிடும் நாட்டில்.
டீன்கபூர்
deengaffoor7@yahoo.com
- கற்கோவில்கள்
- நான்கு வருணக் கோட்பாடு, தமிழகம் ஒரு சிறப்புப் பார்வை – பகுதி 2
- எண்ணச் சிதறல்கள் – சுதந்திர இந்தியா, இராணுவம், சட்டை-செரீன் – சாருநிவேதிதா, தாஜ், சின்னக்கருப்பன்
- நம்மை உறுதியற்றவர்களாக, விட்டுக்கொடுப்பவர்களாக, எல்லாவற்றையும் சகித்துக்கொள்பவர்களாகப் பார்க்கிறார்கள்
- யுக தர்மம் அறியாதவரா சின்னக் கருப்பன்?
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 12. திருநாட்கள்
- பயங்கரவாதம் – பல தலையுள்ள பாம்பு – தேவை பலமுனை யுத்த தந்திரம், ஆயத்தம்
- கடிதம்
- வேளாளரின் வரலாற்றுத் திரிபுகள் என்ற தலைப்பில் ப்ரவாஹன் எழுதியதற்கு
- சூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, மேலேறும் கடல் மட்டம், தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-9
- சின்னக் கருப்பனுக்கு நன்றி!
- கீதாஞ்சலி (86) – மரண தேவனுக்கு வரவேற்பு .. !
- தேசிய பாரம்பரியக் கலை பாதுகாப்பு மையம்
- அர்ச்சகராகும் உரிமை மற்றும் வெங்கட்சாமிநாதனின் கேள்வி
- கடிதம்
- கலை இலக்கிய ஒன்று கூடல் – நளாயினி கவிதை நூல்கள் அறிமுகம்
- தஞ்சை பிம்பங்கள் – சொல்லாமலே
- கடித இலக்கியம் – 18
- பெண்ணின் உள்மன வெளிப்பாடு 2006இலும் 1984இலும்
- ஆழியாள் கவிதைத் தொகுதி
- அன்பின் வழியது உலகம் – ( வழிப்போக்கன் கண்ட வானம் – பாவண்ணனின் கட்டுரைத் தொகுதி அறிமுகம் )
- கடிதம்
- பருவ மழை
- போர்ச் சேவல்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 34
- வாழ்க்கையை மாற்று தாயே!
- எங்கள் தாயகமே…
- பெரியபுராணம்- 100 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- நீயும் காத்திரு
- ஜிஹாத் எனும் இஸ்லாமிய கடமை!
- மஞ்சுளா நவநீதன் கட்டுரையை முன்வைத்துச் சில கருத்துகள்
- எரிகிறதாம் அங்கு. ஈரமில்லை இங்கு.எம்மவர்க்கே அழுதழுது இதய ரத்தம் தீர்ந்து போச்சு.
- சின்னக்கருப்பனுக்கு சில விளக்கங்கள்
- மெழுகுவர்த்தி
- (அ) சாதாரணன்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-14)