பேரரசிற்கொரு வேண்டுகோள்!

This entry is part [part not set] of 20 in the series 20011001_Issue

வ.ந.கிாிதரன்


உயர்ந்த கோபுரத்தில்
உயிர்கள் தொலைந்த போது
துடித்தெழும் பேரரசே!
மத்திய கிழக்கில் ஆயிரக் கணக்கில்
மனிதர் மாித்தபொழுது
மெளனமாகவிருந்ததேன் ?
உயிர்களிற்குள்ளும்
பலவுயிர்கள்.
மூன்றாமுலகவுயிர்கள்,
ஐரோப்பிய உயிர்கள், கிழக்கு
ஐரோப்பியவுயிர்கள்,
ஆபிாிக்கவுயிர்கள்,
அரேபியவுயிர்கள்,
தெற்காசியவுயிர்கள்,
தென்கிழக்காசியவுயிர்கள்,
..இவ்விதம் பலப் பல.
மண்ணிற்கேற்றபடி
மனிதவுயிர்கள்.
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு எடை.
ஒவ்வொரு விலை.
உனக்கொன்றென்றால்
உயிர்களெல்லாம் துடிக்கின்றனவே!
தோள்கள் கொடுக்கத் துடிக்கின்றனவே!
அவற்றிற்கேதாவதொன்றென்றால்
உன்னாலவ்விதம் துடிக்க
முடிகின்றதா ?
உலகிலுயிரெல்லாமொன்றென
உணர்ந்து நீ சட்டங்களும்
திட்டங்களும் போடுவதெப்போது ?
உன் நலன்களிற்காக மட்டும்
வாிந்தெழும் நீ! மற்றவர்க்காகவும்
வாிந்தெழுவதெப்போது ?
சாய்ந்த கோபுரத்தில்
மாய்ந்தவர்கள் உன்
மண்ணின் மக்கள் மட்டும் தானா ?
உனக்காக
அறுபத்து நான்கு நாட்டு மக்களுமல்லவா
உயிர் கொடுத்திருக்கின்றார்கள். நீ
உணர்வது தானெப்போது ?
காரணத்தைக் கண்டு களைவதை விட்டு
நீயோ
குண்டுமாாி பொழிந்து
களையெடுக்க முனைகின்றாய்.
களையினை அகற்றுவதற்குப் பதில்
கழனி முழுவதனையும்
கருவறுக்க முனைகின்றாய்.
முறையா ? உன் அமைதிக்காக
இன்று
தெற்காசியாவின் அமைதியினையே
சிதைத்திடப் போகின்றாய்.
ஒட்டகத்திற்கிடம் கொடுத்த கதையினை
உணராதவாின் அறியாமையில்
குளிர்காண நினைக்கின்றாய்.
வளைகுடாவிற்குள் நுழைந்த நீ!
வெளியேறினாயா ?
தெற்காசியாவினுள் நுழைந்ததும்
வெளியேறுவதெப்போ ?
அன்று யப்பான், ஐரோப்பா, வளைகுடா..
இன்று தெற்காசியா.
உலகம் முழுவதும் உனது
இரும்புப் பிடியில்.
உணராவாிருக்கும் வரை
உன்பாடு கொண்டாட்டம்தான்.
உலகம் ஒன்று. அதில்
உயிர்களும் ஒன்றே! நீ
உணரும் வரை
போரற்றதொரு உலகம்
பிறப்பதாிதே!

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்