பூமணிக்கு ‘விளக்கு ‘ இலக்கிய விருது

This entry is part [part not set] of 20 in the series 20011111_Issue

விளக்கு தமிழிலக்கிய நிறுவனம்


அமொிக்கத் தமிழ் இலக்கிய ஆர்வலர்களின் அமைப்பான ‘விளக்கு ‘ நிறுவனம் எழுத்தாளர் பூமணி அவர்களுக்குப் புதுமைப் பித்தன் இலக்கிய விருதை வழங்க முடிவு செய்துள்ளது. சி. சு. செல்லப்பா, பிரமிள், கோவை ஞானி, நகுலன் ஆகியோர் வாிசையில் இரண்டாயிரம் ஆண்டுக்கான விருது பூமணிக்கு வழங்கப்படுகிறது. வெளி ரங்கராஜன், கவிஞர் இன்குலாப், எழுத்தாளர் கோ. ராஜாராம் ஆகியோரைக் கொண்ட நடுவர் குழு பூமணியைத் தொிவு செய்தது.

கதை, கவிதை, கட்டுரை, திரைப்படம் எனப் பரவலான இலக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தியவர் பூமணி. இயற்கையான நிகழ்வுகளையும் மாந்தர்களையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்தி மானுட முரண்பாடுகளைப் புலப்படுத்துவதில் முழு வெற்றியடைந்தவர் பூமணி. காிசல் நிலத்தின் கண்ணீரும் வியர்வையும் ஊற்றெடுக்கும் வாய்க்கால்கள் பூமணியின் கதைகளில் ஓடக் காணலாம். தலித் இலக்கியம் தமிழில் முழுமையான கருத்துருவக்கம் பெறும் முன்னரே அதன் கூறுகள் பூமணியின் படைப்புகளில் வளர்ந்து முற்றியிருக்கின்றன.

தீப்பெட்டித் தொழிலை மையப்படுத்தி இவர் எழுதி இயக்கிய ‘கருவேலம் பூக்கள் ‘ திரைப்படம் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பங்கேற்றதோடு பல விருதுகளையும் பெற்றிருக்கிறது. பூமணியின் படைப்புகள் ஆங்கிலம் இந்தி, வங்காளம் போன்ற மொழிகளில் மொழிபெயர்ப்பாகியுள்ளன.

தமிழ் இலக்கியத்துக்கு வாழ்நாள் பங்களிப்புச் செய்த தரமான இலக்கிய வாதிகளை அடையாளம் கண்டு சிறப்புச் செய்வதில் விளக்கு வெற்றி பெற்று வருகிறது. இதுவரை ‘விளக்கு ‘ விருது பெற்றவர்களின் பட்டியலே இதற்குச் சான்று.

பாிசளிப்பு விழாவும், அதையொட்டிய கருத்தரங்கும் விரைவில் சென்னையில் நடைபெறவுள்ளன.

நா. கோபால்சாமி

அமைப்பாளர்

விளக்கு தமிழிலக்கிய நிறுவனம்

மோிலாந்து, அமொிக்கா.

அக்டோபர் 27, 2001

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு