நம்பி.
அது மூன்றாமாண்டு கல்லூரிக் காலம். முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் பயம் தெளியாத நிலையில், இறுதியாண்டு மாணவர்கள் அரியர்ஸை முடிக்கும் முயற்சியில் இருக்க இந்த மூன்றாமாண்டு நேந்துவிட்ட கோயில் மாடுகள் போல இஷ்டத்துக்கும் லூட்டி அடிக்கும் காலம்.
இரண்டாவது ஆட்டம் சினிமா என்பது கல்லூரி காலத்தில் கட்டாயப் பாடம். அது என்ன படமாக இருந்தாலும் சரி. பாவ மன்னிப்போ, பாவம் கொடூரனோ, ஃபைவ் மேன் ஆர்மியோ படத்தைவிட பாடம் பார்க்கச் செல்லும் அனுபவம்தான் முக்கியம். சினா. தானா. கடையில் சைக்கிளை வாடகைக்கு எடுக்கவேண்டும். ஒரு வண்டியில் இரண்டு பேர் கட்டாயம் போகவேண்டும். சிக்கனம். பின்னால் இருக்கை இருக்காது. முன்னால் வைத்து ஓட்ட வேண்டும். கும்மிருட்டாயிருக்கும். விளக்கு இருக்காது. அதுவும் குறுக்கு வழியில்தான் போவோம். ஒற்றையடிப் பாதை. எங்கே முள் செடி, எந்த இடத்தில் சரேலேன்று வளையும் என்பதெல்லாம் அத்துப்படி. சில இடங்களில் கொஞ்சம் பிசகினாலும் சறுக்கி விடும். ஆனாலும் ஆறு, ஏழு சைக்கிள் ஒன்றன் பின் ஒன்றாக போகும்போது மெதுவாகவும் ஓட்ட முடியாது. பின்னால ஓட்டுறவன் லந்து வுடுவான். ‘மச்சிக்கு மாலைக் கண்ணு டோய் ‘. கொஞ்சம் சில்லரை பெயர்ந்தால் கணேஷ் கடையில் ஆளுக்கு ரெண்டு பரோட்டா தொட்டுக்க கொஞ்சம் பீர். அப்படியே போய் ராமவிலாஸிலோ, நடராஜாவிலோ உட்கார்ந்து ‘உய்…. உய்….. ‘னு வாய் வலிக்க விசில் வுட்டுட்டு திரும்பினா பிறவிப் பயன் கிடைச்சிடும்.
இப்படி கலக்கலா போய்கிட்டு இருக்குறப்பா புதுசா வந்த முதல்வர் பதினோரு மணிக்கெல்லாம் விடுதி கதவ சாத்தனும்னு சட்டம் போட்டு செயல்படுத்தியும்ட்டாரு. இன்னாங்கடா இது ?. பார்லிமெண்ட்ல ஒரு சட்டம் திருத்தம் பண்ணவே பத்து வருஷம் ஆவுது. அதுக்கும் மேல அப்பீல், ஸ்டேன்னு எத்தனையோ தகிடுதித்தம் இருக்கு. ஆனாக்க நம்ம ஆளு – நேத்திக்கு மழையில இன்னைக்கு முளைச்சா காளான் நம்மளுக்கு சட்டம் போட்டு அதை செஞ்சும் காட்டிட்டாரேன்னு உஷ்ணமாயிடுச்சு. கும்பல் கும்பலா கூடி நின்னு பேசுனாலும் மனசு ஆறல. எப்படி ஆறும் ?. சாயங்காலாமா ‘மரண விலாஸ் ‘ல சொப்ன சுந்தரி போஸ்டர் ஒட்டிட்டு போயிருக்கான். சுவர் ஏறிக் குதிச்சு போன பசங்க இருட்டுல ஏறுறப்போ கைகால் முட்டில சிராய்ப்பு ஏற்பட்டு அதுக்கு வேற டிஞ்சர் போட்டு அலறுனது ரொம்ப ஃபீலிங் ஆயிடிச்சு.
‘மச்சி இதுக்கு இன்னைக்கு ஒரு வழி பண்ணாம விடக்கூடாதுடா ‘ன்னு ஆவேசப்படான் அடுப்புவாயன் அழகுராஜ். ‘உஷ்ணப்படாத. ஒரு திட்டம் இருக்கு ‘ மர்மமா சிரிச்சான் க.உ.ம (கல் உளி மங்கன்) பிரகாஷ்.
லுங்கிய தொடைக்கு மேல ஏத்தி கட்டிகிட்டு சட்டையில்லாம தோள்ள துண்ட போட்டுகிட்டு வெளிச்சம் மங்குன நேரம் பாத்து சின்னதா தகர டப்பா எடுத்துகிட்டு போனான் க.உ.ம. ‘சரி. வேலை ஆயிருச்சுன்னு நெனச்சுகிட்டு ‘ நிம்மதியா சாப்டுட்டு தூங்க போயாச்சு.
காலையில பாத்தாக்க விடுதியே அல்லோல்படுது. காவலாளி பூட்ட திறக்க முடியாம முதல்வருக்கு தகவல் சொல்ல போயிட்டாரு. ‘இன்னைக்கு விடுப்பு , அடிச்சாண்டா ஆப்பு ‘ விடுதிக்கு உள்ள அடி தூள் பறக்குது டப்பாங்குத்து.
ஒரு வழியா எட்டரை மணிக்கு முதல்வர் வந்தாரு. பூட்டு பூரா தார் ஊத்தி கெட்டியா இறுகிப்போயி கிடக்கு. கொஞ்சம் நேரம் எல்லாரையும் பாத்தாரு. ‘இவனுங்கள இப்படியே சாப்பாடு தண்ணியில்லாம இன்னக்கி முழுசா அடச்சி வச்சிடலாமா ‘ன்னு நினைச்சிருக்கலாம். என்ன இருந்தாலும் முதல்வர் இல்லையா ?. சரிக்கு சரி வம்பு பண்ணா மரியாத இருக்காதுல்ல. பூட்ட உடைக்க சொல்லிட்டு, ‘மத்தியானத்துக்கு மேலே எல்லாரும் வகுப்புக்கு போங்கன் ‘னு சொல்லிட்டு போயிட்டாரு.
அரை நாள் விடுப்பு அதுக்கும் மேல பூட்டு தொல்லயும் அத்தோட ஒழிஞ்சது.
*****
nambi_ca@yahoo.com
- மக்களை முட்டாளாக்கும் சினிமாக்காரர்கள் – பித்தனின் கோபங்கள்.
- தோள்களை நிமிர்த்திடு
- தராசு
- கேடயங்கள்
- பொய் – என் நண்பன்
- காதல்கள்…
- விண்கோள் செவ்வாயிக்கு 2001 விண்வெளித் தீரப் பயணங்கள் [2001 Mars Odyssey, Mars Express & Mars Rover Flights]
- கசப்பும் கற்பனையும் ( ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை ஸ்பானிஷ் சிறுகதைகள். ஃபெர்னான்டோ ஸோரன்டினா, ஆங்கிலம் வழியாகத் தமிழில் எம
- புரிந்துகொள்ள முடியாத புதிர் -ஜெயந்தனின் ‘அவள் ‘ – (எனக்குப் பிடித்த கதைகள் – 78)
- குமரிஉலா 4
- வெங்காயம்! வெடிகடுகு! வெட்கம், சீச்சீ!
- குறிப்புகள் சில செப்டம்பர் 25 2003 மருத்துவ கல்வியும்,மருத்துவ தொழிலும்,-இணையம்,இந்திய அரசு,இறையாண்மை-நகலாக்கம் சர்வதேச தடை முயற
- முடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு நவீன விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை
- சங்கராச்சாரியாரின் தத்துவ ஒழுக்கக்கேடு
- அவன் அவனாக!
- தேரழுந்தூர் கம்பன் அதோ-!
- க்ருஷாங்கினி கவிதைகள்
- இந்தியா
- ஊடல் மொழி.
- சிக்கல்
- யாகூ குழுமங்களை இந்திய அரசு தடை செய்துள்ளது.
- ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 3 சென்ற இஇதழ் தொடர்ச்சி..
- ஒரு சுமாரான கணவன்
- பிழைப்பு
- அக்கரைப் பச்சை
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தைந்து
- விடியும்! நாவல் – (15)
- காத்தவராயனுக்கு காத்திருப்பது
- மீண்டும் அணுசக்தி பற்றிக் கல்பாக்கம் ஞாநியின் தவறான கருத்துகள்!
- கடிதங்கள்
- ஹே, ஷைத்தான்!
- தமிழில் குழந்தைப் பாடல்கள்
- பாரதி நினைவும் காந்தி மலர்வும்
- வாரபலன் (குந்தர் கிராஸ், பெண்மொழி, கல்கத்தாவின் சென்னைவாசிகள் பற்றி பாரதி) செப்டம்பர் 20, 2003
- ஈகோவும் வெற்றியும்
- பூட்டு
- இரு கணினிக் கவிதைகள்
- இரு தலைக் கொள்ளி எறும்புகள்!
- அதிர்ஷ்டம்