அகரம்.அமுதா
நரகத் திடையே
துறக்கம் போல
நகரத் திடையே பூங்காக்கள் -அதில்
சிரிக்கும் பூக்களைத்
திருடா திருக்கத்
திறனுடன் காக்கும் கூர்க்காக்கள்! (1)
சின்னப் பூக்கள்
சிரிக்கும் அழகில்
சிந்தும் தேனின் சுவைகண்டு -மிகக்
கன்னம் வைத்துக்
கவின்மலர்த் தேனைக்
கவர்ந்து போகும் பொன்வண்டு! (2)
திங்கள் தவழும்
தென்றல் உலவும்
சிவந்த மாலைப் பொழுதினிலே -மணம்
தங்கும் பூங்கா
தன்னைச் சார்ந்து
தங்கிக் களிப்பார் தனிமையிலே! (3)
விரித்த பாய்போல்
விளங்கும் பாதை
விளிம்பில் இருக்கை நிறைந்திருக்கும் -அதில்
இருக்கும் மனம்விடுத்(து)
இடையிடை மறைவில்
இருக்கும் வகையால் உளமுவக்கும்! (4)
அமைதி தேடி
அலையும் கூட்டம்
அமர்ந்து பொழுதைக் கழிக்கிறது -அதில்
அமைதி தேட
அமைத்த பூங்கா
அமைதி இழந்து தவிக்கிறது! (5)
மாலை வந்தால்
மக்கள் வந்து
மலிவார் அமைதி பறிபோகும் -சிலர்
மாலை வந்தால்
மனத்துயர் விடுத்து
மறுபடி கிளப்ப இரவாகும்! (6)
பின்னல் தலையில்
பிஞ்சுப் பூக்கள்
பிறங்கப் பூங்கா சிரிக்கிறது -அட
புன்னகை சிந்தும்
பூக்களை மெல்லப்
பூவிரல் நாடிப் பறிக்கிறது! (7)
சிரித்து மகிழ்ந்து
சிலபொழு திருந்து
செலவே சிலபேர் வருகின்றார் -உளம்
வருத்தும் நினைவின்
வளர்முளை கிள்ளி
மறக்கச் சிலபேர் வருகின்றார்! (8)
போகாப் பொழுதைப்
போக்கித் தொலைக்கப்
பூங்கா சேரும் சிலருண்டு -உடல்
வாகாய் விளங்க
வடிநற் காற்று
வாங்க வருவார் சிலருண்டு! (9)
முந்தியை விரித்து
மூலையில் படுத்து
மூழ்கிடும் கனவில் ஒருகூட்டம் -அட
குந்திய இடத்திற்
கொஞ்சிக் குலவிக்
குடித்தனம் நடத்தும் ஒருகூட்டம்! (10)
ஓவ்வொரு மரமும்
ஓவ்வொரு கல்லென
உணர்ந்து மரச்சிலை அவர்வடித்தால் -அதில்
அவ்வவர் துணையொடு
அண்டிக் களித்து
அனைத்துக் கலைகளும் இவர்படிப்பார்! (11)
கொணர்ந்த பொருளைக்
குதப்பித் தின்றுக்
குப்பை யாக்கச் சிலர்வருவார் -மலர்
மணக்கும் பூங்கா
மணத்தைக் குளைக்க
வாயிற் புகையொடு சிலர்வருவார்! (12)
நகைக்கும் பூங்கா
நாடி மகிழ்ந்து
நடையைக் கட்டல் பீடாகும் -சுருள்
புகைக்கும் அரங்கெனப்
புகைத்தாற் ப+ங்கா
புகழ்தனை இழந்து காடாகும்! (13)
விழுப்ப மெல்லாம்
விளங்கும் ஒழுக்கம்
வீரிட் டழுவுது பூங்காவில் -இவ்
ஒழுக்கக் குறைகள்
ஒழித்து விழுப்பம்
உயர்ந்து விளங்க யார்காவல்? (14)
சீருடை அணிந்த
சிறார்கள் போலச்
சிரிக்கும் பூங்கா வெடிக்கிறது -பெரும்
பேருடை தன்னின்
பெரும்புகழ் குறைத்தல்
பிழையெனச் சாடி முடிக்கிறது! (15)
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! அசுரக் காந்த ஆற்றலுள்ள பூத வலு பெற்றக் காந்த விண்மீன்கள்.
- மே 2009 வார்த்தை இதழில்…
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399)மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -2
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -36 << குடிவாழ்வு >> மலையும் நதியும்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << பூவின் கானம் >> கவிதை -8
- வ.ந.கிரிதரனின் “நான் அவனில்லை”
- மலேசிய தீவிர இலக்கிய சிற்றிதழ் – அநங்கம் மே 2009
- சான்ஃபிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கிய விரோதி ஆண்டு சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சி
- நேசக்குமார் அவர்களின் கட்டுரை
- பொ.கருணாகரமூர்த்தியின் படைப்புக்கள் ஆய்வும் அறிமுகமும்
- தலைவாசல்
- ஒளிந்துகொண்டு பேசுபவர்களுக்கு
- பூக்களின் சரம், ஒரு கல், தொட்டுக் கொள்ள நாகூர்!
- நீயும் பொம்மை நானும் பொம்மை -சிறுகதை
- நேசகுமாருக்கு என் பதில்
- Call for Submissions for the 8th International Tamil Short Film Festival
- அ.முத்துலிங்கம் ஐம்பது ஆண்டுகள் இலக்கியப்பணி- ஒரு நிகழ்வு
- ஃப்ராய்டுக்கு முன்பே கனவுகள் இருந்தன
- சங்கச் சுரங்கம் : மதுரைக் காஞ்சி
- புத்தக விமர்சனம் : பாரி பூபாலனின் ஓவியத்தின் குறுக்கே கோடுகள்
- தூரதேசத்திருந்து
- புத்திஜீவிகள்
- மரணம் பேரின்பம்
- ஐந்து கவிதைகள்
- அதிரூபவதிக்கு…..
- பூங்கா!
- வேத வனம் – விருட்சம் 34
- ஞாயிற்றுக்கிழமை ஒரு மழை நாளில் கடவுள் இறந்துவிடுவார்
- மனச்சுமை
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தைந்து
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – மூன்றாவது அத்தியாயம்
- மூர்த்தி எங்கே?