முனைவர் கதிரவன் கிருஷ்ணமூர்த்தி
பூகோள இடநிலையை உணர்த்தும் அமைப்புகள் பற்றிய எனது கட்டுரையில் பிழைகள் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார், வாசகர். திரு. சித்தார்த்தமுத்து விஜயன். இவர் எனக்கு நேரடி மடல் வாயிலாகக் என் கவனத்துக்கு பிழைகளை கொண்டு வந்தள்ளார்.
திரு. சித்தார்த்தமுத்து விஜயன் மடல் (தமிழாக்கம் என்னுடையது)
திரு. கதிரவன்!
GPS அமைப்பு கணிக்கும் இடநிலையின் துல்லியத்தை மேம்படுத்தும் ஆய்விலும், புவியிறப்பியல் (Geophysics) மற்றும் வானிலையியல் (Meteorology) களத்தில் GPS அமைப்பை பயன்படுத்தும் ஆய்விலும் ஈடுபட்டுள்ளேன்.. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களைத் தமிழில் கொண்டு வருவதில் தங்கள் முயற்சி பாராட்டுதற்குரியது. எனினும், சில பிழைகளை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகின்றேன்.
1. முதல் பக்கம், அய்ந்தாம் பத்தியில் GPS துணைக்கோள்களின் கோளப்பாதை (orbit) Geosynchronous என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். துணைக்கோள்கள் 12 மணிநேரம் சுற்றும் நேரம் எடுக்கும் வட்டப்பாதையில் அமைந்துள்ளன.
2.GPS கட்டிடங்களுக்குள்ளோ, மரங்கள் நிறைந்த இடங்களிலோ, நீரிலோ வேலை செய்யாது! GPS சைகையின் திறன் மிகவும் குறைவு. வலுக்குன்றிய GPS சைகையால் முன்குறிப்பிட்ட தளப்பரப்புகளுக்கு கீழ் ஊடுருவ இயலாது. இங்கிலீஷ் கால்வாய் குடையும் பணியில் GPS யின் பயன்பாடு பற்றிய வாக்கியம் சரியில்லை எனப்படுகின்றது. இந்தத் தகவல் எங்கிருந்து உங்களுக்கு கிடைத்தது என்று சொல்ல
வேண்டுகிறேன் ?
பிழைகளை திருத்தி வெளியிட்டால் தங்கள் கட்டுரை வலுப்பெறுவதோடு, வாசகர்களுக்கு சரியான பொருண்மைகள் (facts) சென்றடைய உதவும் என நம்புகிறான்.
மீண்டும், தமிழுக்கு அறிவியற் செல்வம் சேர்க்கும் தங்கள் சேவை தொடர என் உளமார்ந்த வாழ்த்துகள்!
M. Siddhartha Muthu Viyayan,
CSIR Center for Mathematical Modelling and Computer Simulation,
Wind Tunnel Road,
Belur, Banglaore-37.
கட்டுரை ஆசிரியர் பதில்
தங்கள் மடலுக்கு நன்றி! பூகோள இடநிலை உணர்த்தும் அமைப்பான GPS பற்றிய நேரடி அனுபவமோ, அதன் பயன்பாட்டுக்
களத்தில் ஈடுபாடோ எனக்கு இல்லை! ரேடியோ தொடர்பாடல் (Radio Communication) அமைப்புகளிலும், ரேடியோ அதிர்வெண் தொகுப்புச் சுற்றுக்களை (Radio Frequency Integrated Circuits) வடிவமைக்கும் களத்திலும், பொது அனுபவம் எனக்கு உண்டு.
சில மூல ஆவணங்களை வைத்துக் கொண்டு GPS கட்டுரையில் தமிழாக்கம் செய்துள்ளேன். GPS துணைக்கோள்களின் சுற்றுப் பாதை பற்றிய தவறான தகவலை திருத்திக் கொள்கின்றேன். நம் அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், பிழைகளைத் திருத்திக் கொள்ளவும் இந்த வாசகர் மடல்கள் அவசியம் தேவை. மீண்டும் நன்றி!
1. பிழையும் திருத்தமும்
தொலைகாட்சிச் சைகைகளை கண்டம் விட்டு, கண்டம் தாண்டி, ஒலிபரப்ப உபயோகிக்கப்படும் துணைக்கோள்களின் பாதை புவியின் சுழற்சிக்கு இணையானதாக அமைத்துள்ளதை அறிவோம். பூமி சுழலும் போது, துணைக்கோள், அதே இடத்தில் எப்போதும் இருக்கும் வண்ணம் அமைக்கபட்ட பாதையை, ‘Geosynchronous ‘ அல்லது ‘Geostationary ‘ என அறிவியல் அடைச் சொல் வழங்குகின்றது. தமிழில்,
புவியியல் இணையமைவு-Geosynchronous, Geostationary-புவியியல் நிலையமைவு என்று ஆக்கி வழங்குகின்றோம்!
புவியியல் இணையமைவுப் பாதை பூமத்திய ரேகையிலிருந்து (Equator) 22,000 மைல் உயரம் உள்ளது என அறிகிறோம். இப்பாதையில் உள்ள துணைக்கோள் 24 மணிநேரத்துக்கு ஒரு சுற்று வருகின்றது. இந்தப் பாதையில் துணைக்கோள் இருப்பதால் நம் தொலைக்காட்சி
அன் டெனாவுக்கு சைகை, குறிப்பிட்ட ஒரு துணைக்கோளே இடைவிடாமல் வழங்குகின்றது.
பன்னிரண்டு மணிக்கு ஒரு முறை சுற்றி வரும் பாதையில் தான் GPS துணைக்கோள்கள் இருக்கின்றன என்று தாங்கள் சுட்டிக்காட்டியபடி
பார்த்தால் சுற்றிப்பாதை அல்லது கோளப்பாதையின் (orbit) உயரம் சுமார் 11,000 மைல் இருக்கவேண்டும். GPS அமைப்பில், ஒரே
துணைக்கோள் பூமியில் ஒரு இடத்துக்கு சைகையை வழங்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை! மூன்றுக்கும் மேற்பட்ட
துணைக்கோள்கள் பூமியில் எந்த இடத்திலிருந்தும் நோக்கக் கிடைப்பதால் புவிக்கு இணையாக சுழல வேண்டிய அவசியம் இல்லை
என்று அறிகிறோம்!
2. அய்யமும் தெளிவும்
தாங்கள் சாதாரண GPS ஏற்பி (Receiver) பற்றிச் சொல்வது உண்மைதான். ஏற்பி எப்போதும் துணைக்கோளின் ‘கண்ணுக்கு எட்ட வேண்டும் ‘. [Line of Sight] சட்டைபையில் எடுத்துச் செல்லும் அளவுக்கு சிறிய ஏற்பியின் அலையுணைர்வியும் (Antenna) மிகவும் சிறியது. அதனால் சைகையை உணரும் திறனும் குறைவே! அன்டெனா, துணைக்கோளைப் பார்க்க இயலும் வண்ணம் வைக்க வேண்டும்; அவ்வளவு தான். குகைக்கு வெளியே வைக்கலாம். பிறகு சைகையை அன்டாவிலிருந்து வடம் (cable), அதுவும் குறைவான சைகை இழப்புடன் (low-loss) செயல்படும் இணையச்சு வடம் (coaxial cable) கொண்டு வீட்டுக்குள்ளே இருக்கும் தொலைக் காட்சி பெட்டிக்கு எடுத்துச் செல்வதைப் போல, நல்ல ஒரு அன்டெனாவைக் கொண்டு சைகையை ஏற்ற பிறகு, இணைப்பு வடம் கொண்டு குகைக்குள் சைகையை எடுத்துச் செல்லலாம். அவ்வாறே, இங்கிலிஷ் கால்வாயில் குகைப்பாதையின் கட்டுமானத்தின் போது GPS பயன்படுத்தப் பட்டதாக கொள்ள வேண்டும்!
திரு. சித்தார்த்த முத்து விஜயன் நம்மிடம் பகிர்த்து கொள்ளும் தகவல்:
சுனாமியால் இந்தியத் தட்டு இடம் பெயர்ந்தது! GPS உதவியுடன் கண்டறிந்தனர் இந்திய நிபுணர்கள்.
பூமியின் தளத்தில் ஏற்படும் உருத்திரிபுகளைப் (crustal deformations) படிக்க GPS பயன்படுகின்றது. பூதள நகர்வை மில்லிமீட்டர் துல்லியத்துக்கு அளக்க முடிகிறது. அண்மையில் நடந்த ஆய்வின் படி, இந்தியப் பூதளவிசைத் தட்டு (tectonic plate), ஆண்டுக்கு 53+/-0.15 மில்லிமீட்டர் என்ற வீதத்தில் நகர்வதைக் கண்டுள்ளனர். வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி, 50 டிகிரி கோணத் திசையில் பூதளத் தட்டு நகர்ந்து வருகின்றது என்று அறித்துள்ளனர். இமயமலைப் பகுதியில் குவியும் போது, நகர்வின் வீதம் ஒரு ஆண்டுக்கு 20 மில்லிமீட்டர். இந்தக் தகவலைக் கொண்டு இமயமலைப் பகுதியில் இழுவிசையைின் திரட்சியை (strain accumulation) கணிக்க இயலும்.
டிசம்பர் 2004 ஆம் ஆண்டு நிகழ்ந்த நிலநடுக்கமும், அது கிளப்பி விட்ட கடல் வீங்கலைகளுக்குப் (Tsunami) பிறகு தமிழகத்தின் பெயர்ச்சி 1.6 செ. மீ கிழக்குச் திசையில் என்றும் அந்தமானின் பெயர்ச்சி (displacement) 6மீ தென்மேற்கு திசையில் என்றும் GPS வைத்து கண்டுள்ளனர். ‘திரளும் இழுவிசை ஆற்றலின் திடார் கொந்தளிப்பே நிலநடுக்கம் ‘ என்று நாம் அறிவதால், பூதளவிசைத் தட்டுகளையும்
நிலநடுக்க இயங்கியலையும் மேலும் புரிந்து கொள்ள வழிவகுக்கும் ஒரு கருவியாக GPS பயன்படும் என நம்பப்படுகின்றது.
மேலும் படிக்க:
1. http://www.cmmacs.ernet.in/~gps/ and Sridevei Jade, Sithartha M. Vijayan et al, ‘ ‘Effect of M 9.3 Sumatra-Andaman Islands Earthquake of 26th December 2004 at some permenant and campaign GPS stations in the Indian continent, International Journal of Remote Sensing.
2. திரு. ஜெயபாரதன், ‘ இமயமலைச் சரிவுகளில் நடந்த அசுரப் பூகம்பம் ‘, www.thinnai.com/sc1021051.html
—-
kathirk@mxim.com
- நான் கண்ட சிஷெல்ஸ் – 3.வரலாறு
- தனுஷ்கோடி ராமசாமி நினைவரங்கு
- ஜோஜ் ஓர்வெலின் விலங்குப் பண்ணை
- வியாக்கியான இலக்கியம்
- நெய்தலின் மெய்யியல்:ஜோ டி குரூசின் ‘ ‘ஆழிசூழ் உலகைச் ‘ ‘ சிறப்பித்து!
- ‘நிலாக்கீற்று ‘ தொகுப்பு-2
- பாரதிதாசன் காட்டும் குடும்ப மகளிர்துயரம்
- சிருங்காரம்: தமிழ்த்திரைப்படம் – மலையாளிகளின் சிம்மாசனங்களுக்கு மத்தியில்….
- நைல் நதி நாகரீகம், பிரமிடைக் காணவந்த பிரெஞ்ச் தளபதி நெப்போலியன், சூயஸ் கால்வாய்த் திட்டம் – 11
- படிக்க என்ன இருக்கு ?
- கடிதம்
- பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி காவ்யா அறக்கட்டளை சென்னை இணைந்து நடத்தும் சி. க நினைவரங்கு
- துவக்கு இலக்கிய அமைப்பு -கவிதைப் போட்டி- இறுதி நாள்: 15. ஜனவரி .2006
- ‘ஈ வே ரா – ஒரு முழுமையான பார்வை முயற்சியில் ‘ – எதிர்வினை
- சுந்தர ராமசாமியின் படைப்புகளின் நாடகமாக்கம் – 25-12-2005 மாலை 6:30
- கடிதம் ( ஆங்கிலம் )
- இலவச வெளிச்சம்
- ஆறாம் விரலும் அர்த்தமான இரவும்
- முருகனும் சிம்ரனும்..
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 1
- சம்மதம்
- சிதறும் நினைவுகள்
- நியு யார்க் நிறுத்தம்
- இதையும் அவசியம் அறிந்து கொள்வோம்
- எடின்பரோ குறிப்புகள் – 4
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-2) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- 70.பெரியபுராணம்
- கீதாஞ்சலி (54) – கடற்கரையில் கூடும் பாலகர்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- இறைவா நீ இறந்துவிட்டால் ?
- உணர்வும் மனசும்
- இப்போது ?
- பூகோள இடநிலை உணர்த்தும் அமைப்பு [GPS]: வாசகர் எதிரொலி
- பூகோள இடநிலை உணர்த்தும் GPS அமைப்பின் மற்றுமொரு பயன்பாடு