புனித வெள்ளி.

This entry is part [part not set] of 29 in the series 20020324_Issue

சேவியர்.


சமாதானப் புறா
ஒன்று
சமாதியான நாள்.

பாரம்பாியத்தை
எதிர்த்ததால்
பலியிடப்பட்டது
பாிசுத்த நதி ஒன்று.

வலக்கை செய்வதை
இடக்கைக்கு ஏன்
விளம்பரம் செய்கிறாய்
என்றதால்
இரு கை நடுவிலும்
அறையப்பட்டன ஆணிகள் !

ஏனிந்த ஏற்றத் தாழ்வு ?
சிறியோன் என்று
தன்னைத் தாழ்த்துவோனே
பொியோன்!!
தாழ்மைப் போதனைக்காய்
தலையில் கிாீடம்.

உனக்குள்ளதை விற்று
ஏழைக்கு வழங்கு !
சமத்துவப் போதனைக்காய்
சாட்டையடி.

அன்பு செய்
அனைவரையும்,
என்ற
பாசத்தின் போதனைக்காய்
பாதத்தில் ஆணி.

வறியோருக்கும்
வாழ்வென்பதை
வலுவாய் சொன்னதால்
சிலுவை பாரம்.

தனக்காய் வாழாத
தவறுக்காய்,
உருகித் தீர்ந்தது
ஓர் மெழுகுவர்த்தி.
வீதிகளில் வெளிச்சத்தை
நிரப்பிவிட்டு.

இது,
உரசியதும்
பஞ்சுக்குள் பதுக்கப்பட்ட
தீக்குச்சி,
உள்ளுக்குள் உலராத
நாளைய
நம்பிக்கைகளோடு.

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்