ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
புதுக்கவிதையின் விரிந்த பரப்பில் படைப்பாளிகள் சுய இலக்கணத்தை உருவாக்கிக் கொண்டு எழுதுவது போலவே வாசகர்களும் தாங்கள் படிக்க வேண்டிய கவிதைகளைத் தெரிவு செய்கிறார்கள். உவப்பானவற்றை ரசித்துப் போற்றுவதும் தம் ரசனைக்கு ஒத்து வராத கவிதைகளைப் புறந்தள்ளுவதும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
கிருபாவின் ‘நிழலின்றி ஏதுமற்றவன’; தொகுப்பில் கவிதைகள் சுயசிந்தனையின் வெளிப்பாடாக இருக்கின்றன. இத்தொகுப்பில் என் நோக்கில் முதலிடம் பெற்ற கவிகை ‘உளி விலகும் தருணம’; ஆகும். தன் கூற்றாக அமைந்த இக்கவிதையின் கரு காதல்பார்வை!. ‘என் கண்களைக் கல்லாக்கி’ஃ நீ நனவுகள் வனைகையில் ஃ எனக்கு வலிக்கவில்லை என்பதும், ‘மேலும் இதுஃ நான் விரும்பி ஏற்ற காயம’; என்பதும் நல்ல வெளிப்பாடு. எண்ணத்தில் ஓராயிரம் மின்னல்கள் மற்றொரு நல்ல கவிதை. ‘வெள்ளிச் சாட்டையாய் வீசுகிறாய் ’ என்பது பொருத்தமான உவமை!.
‘மழைக்குத் தெரியாமல் ஃ குடைக்குள் புன்னகைக்கிறாய் ஃ கண்ணடித்து மன்னிக்கிறது மின்னல’; என்ற மூன்று வரிக்கவிதை (மலரினும் மெல்லிய…) அழகாக இருக்கிறது.
‘வானீரில் ஊற வைத்த ஃ சொற்களின் தோலை உரித்து மெல்ல மெல்ல மென்று’ என்ற வரிகள் (உங்களுக்கென்ன?) படுசெயற்கையாகக் காணப்படுகின்றன. ‘எங்கும் ஒரே மொழி’ கவிதை, ‘உலகமெங்கும் ஒரே மொழி கண்கள் பேசும் காதல் மொழி’ என்ற சினிமா பாடல் வரிகளை நினைவூட்டுகிறது. ‘மிளகிலுள்ள மேடு பள்ளங்களஃ; கடுகில் இல்லை’ என்பது கடுமையான ஆராய்ச்சி முடிவாக இருக்கிறது.
‘ரத்தத்தின் ரசவாதம்’ காமத்தை கருவாகக் கொண்டது. கவிதையின் தொடக்கப் பகுதியில் நல்ல சொல்லாட்சி நிலவுகிறது. ‘உலகம் ஒரே மரமாகி ஃ வெளி இருகிளைகளாகி;’ என்னும் படிமம் ரசிக்கும்படி இல்லாமல் வெற்றுச் சொல் மருட்டலாக இருக்கிறது. ரத்தம் கண்ணீரானது என்ற ரசவாதம் பொருத்தமே!
‘ஒரு கிண்ணத்தில் ஏறி நின்று’ ஃ எண்ணெய் ஊற்றித் திரியாக தன்னையே ஃ பற்ற வைத்துக் கொள்ளத் தூண்டிய குளிரில் என்ற வரிகள் (உங்களுக்கென்ன?) கவிதையின் இயல்பைப் புரட்டிப் போட்டு விடுகிறது. ‘இரவில் மிருகம’; பூடகத்தன்மைக் கொண்ட பாலியல் கவிதை. ‘கிழியக் கிழியத் ஃ தன்னைத் தைத்துக் கொள்கிறது ஃ தளராத இரவு’ என்பது நயமான வரிகள்.
‘பாலை நிலத்தில் பயிரிடும் மோகினி’ கருத்துச் சிதறல் என்றே சொல்லத் தோன்றுகிறது. ‘நேராகக் கிடந்த வரப்புகள் ஃ பாம்புகளாய் வளைந்து நெளிந்தன’ என்ற படிமம் கவிதைகளோடு எந்த அளவு பொருந்துகிறது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அதர்க்கம் கவிதையின் இயல்பு என்றால் நாம் எதையுமே கேள்விக் கேட்க முடியாமல் போகிறது.
போதுவாக இவரது கவிதைகளில் ஒருவகையான சொல் திணிப்பு காணப்படுகிறது. உரிய இடங்களில் பத்தி பிரிக்காமல் இருப்பது வாசகர் மனத்தில் ஓர் அயர்ச்சியை உண்டாக்குகிறது. கவிதை இன்பம் காண முற்படுவோர் மலையைக்கெல்லி எலி பிடிப்பது போன்ற ஒரு நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
sri_sowri09@yahoo.in
- அறிவியலும் அரையவியலும் -2
- உன்னைப்போல் ஒருவன்
- பிரான்சிஸ் கிருபா கவிதைகள் – ஒரு பார்வை
- நினைவுகளின் தடத்தில் – (35)
- சாகித்திய அகாதமி: ரஸ்யாவில் உலகப்புத்தகக்கண்காட்சியில் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன்
- பாடிப்பறந்த ‘வானம்பாடி’ கவிஞர் பாலா
- வடமராட்சி இலக்கிய நிகழ்வுகள்
- தமிழ்ஸ்டுடியோ குறும்படவட்டம் (பதிவு எண்: 475/2009)-தொடக்க விழா
- மலேசியாவின் கலை இலக்கிய இதழ் ‘வல்லினம்’.
- 15 வது கவிஞர் சிற்பி இலக்கிய விருது 2010
- அன்புள்ள ஆசிரியருக்கு
- நவீனத்துவம் – பின்நவீனத்துவம் கேரள மாநிலத்தில் தேசிய கருத்தரங்கம்
- என் வரையில்…
- தொடரும்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 55 << சொந்த இல்லம் நோக்கி >>
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -3
- வேத வனம் விருட்சம் 54
- உள்வெளிப்பயணங்கள்
- தனிமையிலிருந்து தப்பித்தல்
- உயிரின் துடிப்பு
- இது(ரு) வேறு வாழ்க்கை
- தினேசுவரி கவிதைகள்
- அடைக்கலப் பாம்புகள்
- ஆகு பெயர்
- அறிவியல் புனைகதை-9: நித்யகன்னி ரூபவாஹினி
- நினைவுகளின் பிடியில் ..
- மழைச்சாரல்…..
- தெய்வம் நீ என்றுணர்
- ஒரு புகைப்படத்தைப் பொருள்பெயர்த்தல்
- அந்த ஏழுகுண்டுகள்…..(1)
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -2
- தொடர்பில்லாதவை
- சுழற்றி போட்ட சோழிகள்
- புரிய இயலாத உனது அந்தரங்கம்
- சாயங்கால அறை
- சேரா துணை..
- பாத்திரத் தேர்வு
- முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ (1564-1642)
- அகில நாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கி மனிதரில்லா ஜப்பான் விண்வெளிப் பளு தூக்கி !
- குறுக்கெழுத்துப் புதிர் – அக்டோபர் 2009
- படம்