பிரபல எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களின் மூன்று புத்தம்புதிய நூல்கள்

This entry is part [part not set] of 46 in the series 20090108_Issue

அறிவிப்பு/செய்தி


2008 ஆம் ஆண்டில் பிரபல எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களின் மேலும்
மூன்று புத்தம்புதிய நூல்கள் பிரசுரமாகியுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக் கொள்கிறோம்.

நூல் விவரங்கள்/ குறிப்புகள்

1)

மனிப்பிரிகை

(நாவல்)

அவனுக்கும் அவளுக்கும் ஒருவரையொருவர் பிடித்துப் போகிறது. ஆனால்,
இருவருமே ‘திருமணம்’ எனும் வாழ்நாள் கமிட்மெண்டுக்குத் தயாராகவில்லை
என்று கருதுகிறார்கள். அவ்வாறான வாழ்நாள் பந்தத்துக்கு ஒருவருக்கொருவர்
சரியானவர் தானா என்று எப்படித்தான் தெரிந்து கொள்வது என்று
யோசிக்கிறார்கள். ஒரு உடன்படிக்கைக்கும் வருகிறார்கள். என்ன உடன்படிக்கை?
சந்தியாவும் கோபியும் சேர்ந்தார்களா? திருமணத்திலா? என்னதான் நடந்தது?
நிறைய கிளைக்கதைகளுடன் சிங்கப்பூரில் நடக்கும் இந்தக்கதை புதிய
மொழியிலும் வடிவிலும் சொல்லப்பட்டுள்ளது.

பக்கம்- 275
சந்தியா பதிப்பகம்

2)

திரைகடலோடி

ஆசிரியரின் ஐந்தாவது சிறுகதைத் தொகுதியான ‘திரைகடலோடி’ யில் 10
சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ரவி சுப்ரமணியம் எழுதியிருக்கும்
முன்னுரையின் ஒருபகுதியிரிலிருந்து (பின் அட்டை) — ‘இந்தக்கதைகளில்
வரும் மனிதர்கள் நம் மனிதர்கள். இரண்டாயிரம் வருஷமாய் பொருள் தேடப்
பிரிந்து செல்லும் மரபுடைய நம்மினத்தின் வாரிசுகள். கதைகளைத் திறம்படச்
சொல்வதில் தேர்ச்சி பெற்றிருக்கும் உள்ளடக்கத் தேர்வில் செலுத்தும்
கவனம் அசாத்தியமானதாக இருக்கிறது. மொழியையும் உணர்வுகளையும்
சம்பவங்களையும் சம்பாஷணைகளையும் ஊடுபாவாய் இவர் இணைக்கும் விதம்,
கதைக்குள் தென்படும் தற்காலத் தன்மை போன்றவை இவரைத் தனித்துக்
காட்டுகிறது.

(சிறுகதைகள்)

பக்கம் – 130
மதி நிலையம் வெளியீடு

3)

மீன் குளம்

(சிறார் சீனக் கதைகள் – ஆங்கிலம் வழி)

அரிசி வீதி, இந்த மருத்துவமனையில் பேய் இருக்கிறது, நீர்ச் சக்கரம்,
டிராகனின் முத்து, மீன் குளம், தவளையின் கால்கள் உள்ளிட்ட 33
சிறார்கதைகள் அடங்கிய இந்த நூல் சிறார்கள் படிக்கக்கூடிய எளிய மொழியில்
ஆங்காங்கே கோட்டோவியங்களுடன் அழகிய வண்ண அட்டையில் அமைந்துள்ளது. சீனக்
கலாசாரத்தில் சிறார்களுக்கு ருசியும் ஈடுபாடும் ஏற்படக்கூடிய சுவாரஸியம்
நிறைந்த கதைகள்.

பக்கம் – 160
மதி நிலையம் வெளியீடு

மேலதிக விவரங்களுக்கு தொடர்புகொள்ள booklaunch@gmail.com
நூலாசிரியரின் வலைப்பதிவுக்கு http://jeyanthisankar.blogspot.com/

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு