எச்.முஜீப் ரஹ்மான்
இன்றைய பின் நவீனத்துவ சிந்தனை மொழியை ஒரு ஊடகமாக கருதாமல் ஒரு நிறுவனமாக கருதுகிறது.மொழி நிறுவனம் ஆகும் போது நிறுவன வக்கிரíகள் யதார்த்தமாக தோன்றிவிடுகிறது.மொழியின் பரிணமíகளான படைப்புகளும்,கலைகளும் சூழல் சார்ந்து அரசியல் மயமாக்கப்பட்டிருக்கும்.வாசிப்பின் மூலம் இவற்றைப் புரிந்து கொண்டு எதிர்வினைகளாக முன்வைக்கப்படும் வினைகள் அனைத்தும் ஒருவித கலகத்தை,மீறலை மொழிக்கும் உள்ளும் புறமும் நிகழ்த்துகிற போது அதிகாரத்தின் குரலை கேட்கமுடியும்.தமிழ் சூழலில் மொழியின் சாத்தியப்பாடுகளில் அல்லது வடிவíகளில் அதிகாரத்தை கட்டுடைப்பதும்,கலகம் செய்வதும் தலித்திய நீதியாக முன்வைக்கப்பட்டது.தலித்தியத்தின் தவறுகளில் இருந்தும் படிப்பினைகளில் இருந்தும் அதன் தொடர்ச்சியான பின்னை தலித்தியம் வேறுப்பட்டிருக்கிறது.தலித்தியத்துக்கும்,பின்னை தலித்தியத்துக்கும், வேறுபாடுகளும், விலகல்களும், ஒட்டுதல்களும் உள்ளன என்பது முக்கியமாகும்.கலையில் கலகம் செய்கிற போது கலை இலக்கிய வடிவíகள் கலகத்தை,நீதியை நிலைநாட்டும் என்கிற எண்ணமானது,நேர்மாறாக கலை,இலக்கியத்தை அச்சுறுத்தி அதிகாரத்தின் கீழ் கொண்டுவரச்செய்யும். கலை,மொழி எனும் போது தவிர்க்க இயலாமல் அர்த்தமும்,படைப்பாளியும் உருவாகி விடுகின்றனர்.நீதி,கலகம் என்று கணிக்கைப்படுபவைகளுக்கு கலையும், மொழியும் பயனாகிற போது மீண்டும் அதே தவறு நிகழ்கிறது.அதாவது கலகம் செய்கின்றவனின் அதிகாரமும்,அச்சுறுத்தலும் நீதியாகி கலை,இலக்கிய மொழியில் ஏற்கனவே இருக்கும் நீதிக்கு இணையாக இணைநீதியாக மாறிப்போகிறது.கலைமொழியானது அதிகாரத்தையும்,கட்டுப்பாட்டையும் செலுத்துகிறது என்பது பொது விதியாகும்.இதை ஆதிக்கவாதிகள் செய்தாலும் சரி,கலகவாதிகள் செய்தாலும் சரி ஒரே நீதியாகத் தான் இருக்கும்.இந்த இடம் தான் கலைமொழியில் தலித் நீதி என்ற அடிப்படையில் செய்த அனைத்து முயற்சிகளும் மேலாண்மை நீதியோடு ஒத்து போனது.ஆக கலைமொழி ஆதிக்கவாதிகளுக்கும்,நசுக்கப்பட்டவர்களுக்கும் ஒரே புள்ளியில் தொட்டு சென்றது.இந்த கலைமொழி தன்னால் அதிகாரத்தையும், அச்சுறுத்தலையும் பொதுவானதாக மாற்ற முடியும் என்று நிரூப்பித்தது.கலைமொழிக்கான ஒரு நீதி இருக்கிறது.அந்த நீதியை எவர் கையில் எடுத்துக் கொண்டாலும் அது ஒரேவித வினையை தருவதாகவே அமையும்.எதிர் நடவடிக்கை என்றும்,கலகம் என்றும்,மீறல் என்றும் தலித் நீதி இயíகியதால் அதை செயல் படுத்தும் கலைமொழி ஏற்கனவே இருக்கிற ஓர் உள் அமைப்பில் பíகெடுத்து இணைநீதியாக செயல்படவே தலித் நீதி அநீதியாகி போனது.கலைமொழியில் நியாயம்/அநியாயம், உண்மை/பொய்,அதிகாரம்/பணிவு போன்ற முரணெதிர் எதிர்வுகள் அநேகம் இருக்கின்றன.ஆகவே தான் கலைமொழியும் ஒரு நிறுவனமாகவே இருக்கிறது.இது மேலாண்மைக்கும்,எதிர்ப்புக்கும் சரிசமமாக வாய்பளித்து மேலாண்மையை முடிவில் நிலை நாட்டுகிறது.எதிர்வினையை இல்லாமல் ஆக்குகிறது.ஆக கலை,இலக்கிய மொழியில் தலித் நீதி என்ற எதிர்வினைகள் தலித்துகளுக்கு எதிரான பாதையிலே இருக்கிறது.அíகு செயல் படும் கலாச்சார சார்பு வாதம் இணையான நீதிக்கே வாய்ப்பளிக்கிறது.
கலைமொழியின் திசையமைவுகளை தற்போது உள்ள சூழலில் பார்க்கிற போது தலித் நீதிக்கான போராட்டத்தை குலைக்கிற அமைப்பாகவே இருக்கிறது,கலையும்,இலக்கியமும் கலைமொழியினால் தலித் நீதி என்ற பெயரில் இயíகுவது தலித்துகளுக்கு விரோதமான பாதையாகும்.தலித் மக்களுக்கும் அவர்களை ஒடுக்குபவர்களுக்கும் இடையில் நடுநிலையுடன் நிறுவனமாக இருக்கும் கலைமொழி செயல்படமுடியும் என்பது தவறான அவிப்பிராயமே.மாறாக தலித்துகளிடமிருந்தும் அதன் இலட்சியíகளிலிருந்தும் தனது சொந்த பழிதீர்த்தலை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு விலகிச் செல்லும் ஒரு நபருக்கும்,தலித்துகளின் எதிரியாக அடையாளம் காணப்படக்கூடிய இன்னொரு நபருக்கும் இடையில் நிற்ப்பது தலித் நீதி என்பது மட்டுமே.கலைமொழியின் மூலம் கலகம் செய்ய முற்படுகிற போது கலைமொழியே கருத்தியலாக மாறி கலகத்தை அடக்கி ஒடுக்குகிறது.அனுபவíகளும்,அதிர்ச்சிகளும்,எதிர்ப்புகளும் சரியான தளத்தில் செயல்படுகிற போது தான் எதிர்கலைமொழி தோன்ற வாய்பிருக்கிறது.
இந்த இடத்தில் இருந்து தான் பின்னை தலித்தியம் எவ்வகையான கலைமொழியை ஊக்குவிக்கிறது என விவாதிக்கலாம்.தலித்திய அனுபவíகள் எதார்த்த வகை கதைகளாக உருமாறிய பின்பு எதார்த்தவாத கதைகள் காலாவதியானதை கவனித்திருக்கவில்லை.நவீனத்துவ எழுத்து முறையும்,மொழியும்,கலையும் நீர்த்து போயிருந்த வேளையில் நவீனத்துவ எழுத்துக்கு தலித் இலக்கியம் சுவடுவைக்கவில்லை.ஆனால் மார்க்சிய முன்மாதிரியை அடிப்படையாக வைத்து எதார்த்தவாதத்துக்கு வந்தது அதன் பெரிய பேரிழப்பாகும்.எதார்த்தவாத கதையில் கூட முன்பு இருந்த சாதனைகளை அது கடக்கவில்லை.முதலில் பலரின் கவனிப்பை இவ்வகை கதைகள் பெற்றாலும் நாளடையில் ஒரே மாதிரியான,அனுபவíகள்,ஒரே மாதிரியான தளம் என்று இருந்ததால் மக்கள் இக்கதைகளை ரசிக்க முடியாமல் போய்விட்டது.தலித் இலக்கிய முன்னோடிகள் பலரும் இதை ஒத்துக்கொண்டுள்ளனர்.ஆனாலும் பதிவு செய்வதை மாத்திரமே குறிக்கோளாக கொண்டு இக்கதைகள் தொடர்ந்து இயíகியதால் அதன் நீர்ப்பை அது சொல்லிக்கொள்ள துவíகியது.மேலும் தலித்துகள் தான் தலித் இலக்கியத்தை படைக்க முடியும் என்று சொல்லிக்கொண்டதால் எழுத்தின் தன்மை குறித்த பார்வை பாலகீனத்தினை சொல்லியது.தன்னுடைய அனுபவத்தை பிறரின் அனுபவமாக மாற்றிக்காட்டும் எழுத்தின் வலிமையை அது உணரவில்லை.இதனால் தலித் இலக்கியம் தலித் மக்களை கூட சரியாக சென்றடையாமல் போய்விட்டது.
மார்க்சிய இலக்கியம் சாதித்ததில் ஒரு பíகினை கூட அது செய்ய இயலாமல் போனது.இத்தகைய தவறுகளை இல்லாமலாக்கி கொண்டு பின்னை தலித்தியம் கலைமொழியை தமது நீதியின் இலக்காக கொண்டு செயல்பட எத்தனிக்கிறது.தலித்துகளது வேதனை,அவமானíகள்,அவர்களுக்கு எதிரான சூழ்ச்சிகள்,அமைப்புகள் என்று பரந்து பட்ட தளத்தில் இருக்கிற தலித்துக்கு விரோதமான கலைமொழியை இல்லாமல் செய்யவேண்டும்.நவீனத்துவமும்,எதார்த்தவாதமும் ஆதிக்க சக்திகளின் கையில் இருக்கிறது.மார்க்சியம் சோசலிச எதார்த்தவாதம் என்ற பெயரை சொல்லிக் கொண்டு தப்பித்துவிட்டது.நவீனத்துவத்தின் வீழ்ச்சியும்,எதார்த்தவாதத்தின் மரணமும் ஆதிக்க வாதிகளை பின் நவீனத்துவத்தின் பக்கம் திருப்பியது.ஆனால் அவர்களால் பின் நவீனத்துவத்தை சிலாக்கிய இயலவில்லை.இதனால் நவீனத்துவத்துக்கே திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.நவீனத்துவ எழுத்துமுறை தாண்டிய எழுத்து அவர்களிடம் இன்னும் இல்லை.தமிழ் சூழலை எடுத்து கொண்டால் ஆதிக்கவாதிகளின் கைகளில் தலித் எழுத்தாளர்கள் சிக்கிக்கொண்டார்கள். கலையில்,மொழியில் பின்னை தலித்தியம் தலித்தியத்தை காப்பாற்றவேண்டிய சூழலில் உள்ளது.பின்னை தலித்திய நீதி என்பது கலை மொழியில் இடஒதுக்கீடோ அல்லது உரிமையையோ,வாய்ப்பையோ கோருவதல்ல.மாறாக இருக்கிற கலைமொழியை நீர்த்து போகச் செய்யவேண்டும்.புதிய கலை மொழியை படைக்கவேண்டும்.கலையை,இலக்கியத்தை பயன்படுத்துவது குறித்த தீவிர பிரக்ஞை உருவாக வேண்டும்.ஆதிக்கவாதிகளின் கலை இலக்கிய வடிவíகளை வைத்து கொண்டு தலித்துகளால் சாதிக்க இயலாது.உள்ளடக்கத்தில் மாத்திரம் வித்தியாசப்பட்டுக்கொண்டால் போதும் என்றால் உள்ளடக்கம் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கிறது.அதை ஒன்றும் செய்ய இயலாது.ஆகவே உருவத்திலும்,உள்ளடக்கத்திலும் மாற்றுக்கள் தேவை.எம்மாதிரியான மாற்றுக்கள் தேவை?
இதாலோ கால்வினோவின் தெரசா என்று கத்தியவன் என்ற கதையை எடுத்துக் கொள்வோம்.
சாலையில் போய்கொண்டிருக்கும் ஒருவன் அடுக்குமாடிக் கட்டிடíகள் நிறைந்த ஒரு பகுதிக்கு போகிறான்.அíகேயுள்ள அடுக்கு மாடிக்கட்டிடíகளில் ஒன்ரை பார்த்து தெரசா,தெரசா என்று கத்துகிறான்.பதில் ஏதும் வரவில்லை.மீண்டும் அவன் தெரசா,தெரசா என்று கத்துகிறான்.இவன் இவ்வாறு கத்துவதைப் பார்க்கும் வழிபோக்கர்களில் சிலர் உதவ முன்வருகின்றனர்.அவர்களும் இவனோடு சேர்ந்து கொண்டு தெரசா,தெரசா என்று கத்துகிறார்கள்.அப்போதும் பதில் ஏதும் வரவில்லை.
தெரசா வெளியே போயிருப்பாளோ? என்கிறான் ஒருவன்.
ஒரு வேளை இது தெரசாவின் வீடு இல்லையோ? என்று கேட்கிறான் வேறொருவன்.
இருக்கலாம் என்கிறான் இவன்.அவர்கள் எரிச்சலடைகிறார்கள்.
இப்போது என்ன செய்யப் போகிறாய்?
வேறு இடத்தில் போய் முயற்ச்சிப்பேன் என்கிறான் இவன்.அனைவரும் எரிச்சலுடன் கலைந்து போகிறார்கள்.இவனும் போகிறான்.
தொலைவில் இன்னமும் சிலர் தெரசா,தெரசா என்று கத்துவது கேட்கிறது.
எழுத்தாளர்கள் என்ற முறையில் நமது கடமை உலகை பிரதிநிதிபடுத்துதலும் அதன் சாட்சியாக இருப்பதும் ஆகும்.மேலும் அவர்,ஒரு எழுத்தாளர் மண்வெட்டியை மண்வெட்டி என்று தான் எழுதவேண்டும் என்று சாத்தர் ஒருமுறை கூறினார்.இது தான் யதார்த்தவாத கதையின் நிலைபாடு.ஆனால் ரோலன்பார்த் இதை மறுத்தார்.யதார்த்தம் தனது நிலைபாடான வெளிப்படுத்த முடியாததை கூட வேளிப்படுத்தும் தன்மை [Express the unexpressible] என்பதை மறுத்து வெளிப்படுத்த முடிந்ததை கூட வெளிப்படுத்தாமல் இருப்பது [Unexpress the expressible] தான் சிறந்த இலக்கியமாகும் என்றார் ரொலன் பார்த்.அவர் சொல்லிய கருத்து சிறந்த மாற்றாக இருக்கிறது.
பின்னை தலித்தியம் மாற்றுக்களை தமது நீதியாக கொண்டு தலித்துக்களுக்கான போராட்டத்தை துரிதப்படுத்துகிறது.அந்த வகையில் பின்னை தலித்திய கலைஇலக்கியத்தின் பாய்ச்சல் இனிவரும் காலíகளில் தனிமொழியை உருவாக்கும் என்றால் மிகையொன்றுமில்லை.
- எஸ் வைதீஸ்வரனுக்கு “விளக்கு” விருது
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூர்வத் தோற்றப் பிரபஞ்சத்தில் நீர்மயச் செழிப்பு (Water Abundance in the Early Universe
- பின்னை தலித்திய நீதி:மாற்றுக்களை நோக்கி
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -17 << எப்படி வந்தான் என் மகன் ? >>
- தாகூரின் கீதங்கள் – 62 அவனைத் தேடும் பயணத்தில் !
- ‘வாசந்தி கட்டுரைகள்’ தரும் புதிய தரிசனங்கள்
- லூயி ப்ரெயிலின் 200ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்
- முக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் !(பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -5)
- மாவோவை மறத்தலும் இலமே.
- அண்ணா – ஒரு SWOT(சுவாட்) – அனாலிசிஸ்
- வார்த்தை ஜனவரி 2009 இதழில்…
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -2 பாகம் -5
- கதைகதையாய் சொல்லத் தெரிந்தவள்
- மாயமான் விளையாட்டு…
- மரணப்படுக்கையில் இருந்து ஒரு கடிதம்
- விடைபெறமுன்
- சாஸ்தாப் பிரீதி
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தொன்று
- இலங்கு நூல் செய்த எழுத்தாளர்கள்: – ‘புயலிலே ஒரு தோணி’ – ப. சிங்காரம்
- காலி செய்கிறேன்
- தீயின்மீது ஒரு உரையாடல்
- ‘தொகை இயல்’ – அ. பாண்டுரங்கன்: தொட்டனைத்தூறும் ஆய்வு மணற்கேணி
- தொல்காப்பியக் கவிதையியலும் தமிழ்ச்செவ்வியல் இலக்கியங்களும் கருத்தரங்கம்
- சதுரங்கம் என்னும் சர்வதேச மொழி