பின்னை காலனிய எழுத்தும்,மொழிபெயர்ப்பும்

This entry is part [part not set] of 36 in the series 20090129_Issue

எச்.முஜீப் ரஹ்மான்



இலக்கிய பிரதிகளை ஆய்வு செய்யும் போது காலனியாதிக்கத்தில் அல்லது ஒடுக்கப்பட்டவர்களது குரல் மெளனமாக,மைய விளிம்பை கொண்டுள்ளதாக,ஒடுக்கப்பட்டகுரலாக மாத்திரமே இருக்கிறது.பின்னை காலனிய எழுத்தில் முக்கிய இடம் வகித்திருப்பது மொழிக்குள் மொழி என்பதாகும்.பொருளுக்கும்,செயலுக்குமான வித்தியாசத்தை பரிசயமல்லாத,புது நிகழ்வாக மொழி மாற்றிகாட்டும் போது மரபான மொழியில் இருந்து புது மொழி பிறக்கிறது.உருவக பேச்சுவழக்கை பின்காலனிய எழுத்தில் அதிகமாக பொதிந்திருப்பதை நாம் காணமுடியும். அமெரிக்க எழுத்தாளரான ஜாண் டெம்சேயின் பதிலடிக்கு ஒரு வாய்ப்பு:அறிவொளியின் ஒரு தருணம் என்ற ஆíகில கவிதையின் தமிழ் மொழிப்பெயர்ப்பை பார்ப்போம்.

பதிலடிக்கு ஒரு வாய்ப்பு:அறிவொளியின் ஒரு தருணம்

பியரை கொண்டு வருமாறு கூறிவிட்டு
இருந்தேன்
என்னருகில் வெளிர்நிறமுடைய முடியை கொண்ட கூட்டம் ஒன்று
வெளிர்நிற ஒளியில் இருந்தனர்
கொஞ்சம் சதை
கொஞ்சம் ரத்தம்
கொஞ்சம் எலும்புகள்
பற்களுடன்.,
ஒருவன் ஆழத்திலிருந்தெழும்பி மூன்று வார்த்தையை உதிர்த்தான்
அவை எரிந்து கொண்டிருக்கிறது.
காவி நிற பாட்டில் எனக்கெதிரே நுரைந்து வழிந்தது
குதிக்கும் ஜெட்லைனை நினைவூட்டியது.
நான் அந்த பெரிய போர்டை பார்த்தபோது
அதன் எழுத்துக்கள் மின்னியது
அந்த பெரிய போர்டு இரயில் வருகை,புறப்படும் நேரம்
வழித்தடíகளை மின்னிக்காட்டுகிறது.
மேலும் போய்ச் சேரும் இடíகளையும் கூட
நான் பாரில் இருந்தேன்
நான் பென் நிலையத்தில் இருந்தேன்
நான் நியூயார்க்கில் இருந்தேன்
இருபது நிமிடíகளை கொல்வதற்க்காக
ஒரு கூட்டம் நானிருக்கும் திசை நோக்கி வந்தது.
எனது சர்ட்டின் கலரில் இருந்தனர்
இரயில் எரிகிறது.
நிலையம் எரிகிறது
பஸ்கள் எரிகிறது
வழிகள் எரிகிறது
நியூயார்க் எரிகிறது
லாஸ் ஏஞ்சல்ஸ்
வாஷிíடன்
அலாஸ்கா
எல்லாமும் எரிகிறது
நான் நுறையை உறிஞ்சினேன்
அது பாட்டிலின் கழுத்து வழியாக
பொíகி வழிந்து கொண்டிருந்தது.
பேíகுகள் எரிகிறது
பள்ளிகள் எரிகிறது
மருத்துவமனைகள் எரிகிறது
எல்லா கம்பியூட்டர்களும் எரிகிறது
மைக்ரோ ஓவன்கள்
வாட்சுகள்
எல்லாமும் எரிகிறது
நான் பியரை பாதி குடித்திருந்தேன்
எனது சர்ட்டில் பெரிய போர்டில் மின்னும் வழித்தடம்
21க்கானது இருந்தது
போலீஸ் எரிகிறது
இராணுவம் எரிகிறது
ஏர் போர்ட் எரிகிறது
தேசிய படை
ஏர் பேஸ்
காலம் எரிகிறது
ஐந்து மணி ஒன்பது நிமிடíகளும் எரிகிறது
உíகள் குடும்பம் எரிகிறது
எல்லாமும் எரிகிறது
எனது பேண்டில் இருந்த சாவிக்கொத்து
காலை குடைந்து கொண்டிருந்தது.
நான் பியரை முடித்து விட்டேன்
புறப்படுவதற்க்கு இன்னும் ஐந்து நிமிடíகள்
இப்போதும் தாகம்
நியூயார்க் பென்நிலையத்தில் இருந்தேன்
அடுத்த ரவுண்டுக்காக நான் அவரிடம் சமிக்ஞை காட்டினேன்
கிறிஸ்துமஸ் எரிகிறது
காதலர் தினம் எரிகிறது
ஹனுக்கா எரிகிறது
எல்லாமும் எரிகிறது
இன்னொரு ஜெட்லைனர் என் எரிரே வந்து நின்றது
நுரை எப்படி புகைபோலிருக்கிறது என்று யோசித்தேன்
ரெட் லேபில் எரிகிறது
பொன்னிற லிக்கர் ஆன்மாவை சுற்றி இழுத்து
இறந்தவர்களிடம் கொண்டு சேர்த்தது
பயணிகள்
அவர்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்
டெலிபோன் பூத் எரிகிறது
ஆட்டோமொபைல் பிளாட்சாக்கள் எரிகிறது
சூப்பர்மார்க்கெட்டுகள் எரிகிறது
எல்லாமும் எரிகிறது
நான் சூழப்பட்டேன்
மக்கள் பாருக்கு வெளியே நடந்தனர்
ஆனால் ஒரு வளையமாக அந்த புளோரில் சுற்றிக்கொண்டிருந்தனர்
எனது இரயில் பிளாட்பார்ம் 21ல் நிற்கிறது
பென்நிலையத்தில்
நியூயார்க்கில் இருக்கிறேன்
மூன்று வார்த்தைகளை ஒருவன் நினைக்கிறான்
அவை எல்லாமும் எரிகிறது
வெளிர்நிறமுடைய கும்பலை நோக்கி திரும்பினேன்
கொஞ்சம் சதையும்,கொஞ்சம் ரத்தமும்,கொஞ்சம் எலும்புகளும்
பற்களும் உடைய கும்பல்
அவன் என்ன குடிக்கிறான் என்று கேட்டனர்
அவன் கதவை திறந்து
லிக்கரை எடுத்து குடித்து கொண்டே
உட்காருகிறான்
விஸ்கி
நான் அவரிடம் இரண்டு கிளாஸ் விஸ்கி
கொண்டுவருமாறு கூறினேன்
நான் அடுத்த இருபது நிமிடíகளை
கொல்ல வேண்டும்.

பின்னைகாலனிய எழுத்தில் பின்நவீனத்துவத்தின் தாக்கம் அதிகம் இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும்.பன்முக கலாச்சாரíகள் நிறைந்த ஒரு நாட்டில் குடிபெயர்ந்து அந்த நாட்டின் பண்பாடுகளுடன் முரண்பட்டு வாழ்ந்த போதிலும் நமக்கான இருப்பு என்ன என்ற கேள்வி குறி முக்கியமானதாக இருக்கிறது.

In this sense post-colonial writing might be imaged as a form of translation (attended with much ceremony and pomp, to be sure) in which venerable and holy (historical, mythic and literary) relics are moved from one sanctified spot of worship to another more central and more secure (because more powerful) location, at which the cult is intended to be preserved, to take root and find new life. There is, of course, much in this metaphor that bears reflection (mirroring again) in relation to many works emanating from former colonies, and the metaphor is suggestive of certain perils faced by writers in these circumstances.

மொழிபெயர்ப்பு என்பது சாதரணதொனியில் சொல்லப்படும் மொழிப்பெயர்ப்பை பற்றியதல்ல.ஆனால் தனது சொந்த பண்பாட்டின் மிச்ச அடையாளíகளை அப்படியே கொண்டு செல்வது மொழிப்பெயர்ப்பாக பின்னை காலனிய எழுத்தில் இருக்கிறது.ஆகவே தான் பின்னைகாலனிய பிரதிகளை மெட்டாபிரதிகள் என்றழைக்கின்றனர்.ஒவ்வொரு மொழியிலும் அதனதன் பண்பாட்டு கூறுகள் அதன் பழமை நினைவுகளை சுமக்கின்றன.காலனிய ஆதிக்கத்தால் மேனாட்டு பழக்க வழக்கíகள் மொழியை நிலைகுலைய செய்துவிட்டன.காலனிய பார்வையுடன் தொடர்ந்து மொழி செயலாற்றுவதால் அதன் தனித்த நிலைத்த கூறுகள் சேதமாயின.தனது கடந்த காலத்தின் மீது மறு உரிமை கோருவது முக்கியமானதாக இருக்கிறது.காலனிய அந்நியமயமாதலும்,போன்மை செயல்பாடும் பொதுஜன உளவியலை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளதால் அது குறித்த தீவிரமான பிரக்ஜை ஊட்டுவதும் முக்கியமாகும்.காலனியாதிக்கம் முடிவுக்கு வந்த போதிலும் உலகமயமாதல் காலனியாதிக்கமாக செயலாற்றுகிறது.சிறு இனக்குழுக்களின் பண்பாட்டை அழித்தொழிப்பது,அடையாள நெருக்கடிகளை தீவிரபடுத்துவது ,மொழியை சிதைப்பது என்ற பன்முக நோக்கில் உலகமயமாதல் புதிய காலனியாதிக்கமாக இருந்துவருகிறது.

பின்காலனித்துவத்தின் பன்மையியம்,பல்பண்பாட்டியல் போன்ற கருத்தாக்கíகள் ஒற்றைநிலைபாட்டுக்கெதிரான திசைவழிகளை காட்டியது.அடையாள நெருக்கடியைப் பேசும் அமெரிக்க நீக்ரோ கவிதாயினி ரீடா டோவின் உதைப்பது என்ற கவிதையை பார்ப்போம்.

என்மகள் கால்களை விரித்து குனிந்து
மயிர்களற்றிருக்கும்
தன் யோனியை பார்க்கிறாள்
எப்போதும் முகத்தை சுளிக்க வைக்கும் இந்த துணுக்கு
அவளுடைய வீறிடல் இல்லாமல்
அந்நியர் எவரும் தொட்டு விடமுடியாத ஒன்று
அவள் என்னுடையதை பார்க்க கேட்கிறாள்
சிதறி கிடக்கிற பொம்மைகளுக்கு நடுவே ஒரு நொடி நேரம்
நாíகள் அருகருகே எதிரெதிரே
இரட்டை நட்சத்திரíகளைப் போல நிற்கிறோம்
மழிந்து ஒதுíகிய அவளுடைய முத்து மணிக்கு முன்னால்
பெருத்த எனது வரிச்சோழி
இருந்தும் அதே பளிíகு புழை,விரிந்த மடிப்புகள்
மூன்று வயது அவளுக்கு
அவளுடைய அறியாமையைச் சொல்லும் அது
உணர்வுகளின் உச்சத்தில் நாíகள்
சிறு ஊதா மொட்டுகளாக
அவள் வீறிட்டு பின்னால் நகர்ந்து போகிறாள்
ஒவ்வொரு மாதமும் இது எனக்கு எíகே நேர்கிறது
என் கால்களுக்கிடையில் அது என்ன சுருக்கம் விழுந்து கயிறு
என்று கேட்கிறாள்
இது நல்ல இரத்தம் என்று
நான் சொல்கிறேன்
ஆனால் அது சரியில்லை
முழு உண்மையில்லை
என்ன செய்ய நான்
நான் கருப்பு தாயாகவும் அவள் பழுப்பு குழந்தையாகவும்
நாíகள் ஊதாவுக்குள்ளும்
ஊதா எமக்குள்ளும்
இருப்பது எல்லாம் இதனால் தான்
என்பதை நான் அவளுக்கு எப்படி சொல்ல?

பின்காலனிய மொழிப்பெயர்ப்புகளை பார்க்கிற போது பொதுவான சில அம்சíகளை பேசியாக வேண்டும்.அவை

தனது மொழியின் மூலக்கூறுகளை சிதையாமல் பாதுகாக்கிறது
பொது மொழியை ஒரு கருவியாக மாத்திரம் பயன்படுத்துகிறது
எதிர்ப்புணர்வும்,தடுப்புணர்வும் முக்கியமனதாகிறது
அந்நிய படுத்துதலை எதிர்ப்பது மட்டுமல்லாது ஒரு போராட்டமாக அது வினையாற்றுகிறது
எல்லாவகையான அழகியல்களையும் அது தகவமைத்துக்கொள்கிறது
எதிர் இலக்கியமாக செயலாற்றுகிறது
மரபுக்கும்,பழமைக்குமான உன்னத விஷயíகளை மாத்திரமே அது கவனப்படுத்துகிறது.
புதுமையையும் பழமையையும் ஒரு போல கருதுகிறது
மெளனமொழியை சிறந்த மொழியாக காட்டுகிறது
அதிகாரத்தை சீர்குலைக்கிறது
அடிமைத்தனத்தை கேட்விக்கேட்கிறது

ஆகவே, கீழ்திசையியல்,பின்னை கீழ்திசையியல் போன்ற கருத்தாக்கíகள் பின்னை காலனித்துவத்தின் வீச்சை அதிக பலமுள்ளதாக ஆக்குகிறது.மொழிப்பெயர்ப்பை பொறுத்தவரையில் காயத்திரி ஸ்பிவாக் பின்னைகாலனித்துவத்தை பெண்ணிய சட்டகத்தில் இணைக்கிறார்.ஆíகில மொழி மேலாண்மையை அரசியலாக்கினார்.அதே சமயம் பெண்ணிய தளத்தில் செயலாற்றும் மொழிப்பெயர்ப்பையும் செய்தார்.முதல் உலக பெண்ணிய பண்பாட்டு திரிபை கேட்விக்குட்படுத்திக்கொண்டு ஆíகில மொழியின் மேதாவித்தனத்தை தோலுரித்தார்.அமெரிக்க நீக்ரோ எழுத்தாளர்களின் ஆíகில நூற்கள் ஆíகில மேலாண்மையை தகர்த்தது.மேலும் கீழ்திசையியல் நாடுகளின் ஆíகில நூற்கள் கவனம் பெற்றன.அமெரிக்க,இíகிலாந்து நாட்டவரின் ஆíகிலமே சிறந்தது என்ற மாயை உடைபடத்தொடíகியது.கருப்பு இலக்கியம் ஒரு வகைமாதிரியாக உருகொண்டு மேனாட்டு தந்திரíகளை அம்பலப்படுத்தியது.


mujeebu2000@yahoo.co.in

Series Navigation

எச்.முஜீப் ரஹ்மான்

எச்.முஜீப் ரஹ்மான்