பாரதி இலக்கிய சங்கம்

This entry is part [part not set] of 25 in the series 20021013_Issue

சிவகாசி


அக்டோபர் மாத இலக்கிய சந்திப்பும் படைப்பரங்கமும், கவிஞரும் அன்னம் பதிப்பகத்தின் உரிமையாளருமான மீரா அவருக்கான அஞ்சலியுடன் இந்த மாத இலக்கிய சந்திப்பு ஆரம்பமானது . நிகழ்வுக்கு தலைமையேற்க சென்னையிலிருந்து கவிஞர் ஞானக் கூத்தன் அவர்கள் வந்திருந்தார்

கவிஞர் மீராவின் ‘கடவுளைத் தேடி, நவயுகக் காதல் ‘ கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் தொகுப்பிலிருந்தும் சில கவிதைகள் வாசிக்கப் பட்டு அன்னாரது நினைவு அங்கு நிறைக்கப் பட்டது.ஒரு படைப்பாளியை அவரது படைப்புகள் மூலமாக நினைவு கூர்ந்தது சந்தோசமான விசயமாக இருந்தது.இலக்கிய உப்பரிகையில் உலாவுவதை விட சமுதாய நடை பாதைகளை செப்பனிடுதலை நேசித்த மீராவின் நினைவுகளோடு படைப்பரங்கம் ஆரம்பமானது.

படைப்பரங்கத்தில் திருமதி,பொ.நா. கமலா அவர்கள் குற்றாலத்தில் வசித்து வந்த எழுத்தாளர் இந்திர பவானிக்கு

தன் அஞ்சலிக் கவிதையை வாசித்தளித்தார்.செம்மை நதி ராசா, மணி சங்கர், கதிரவன், சூர்யாசேட், ஸ்ரீபதி, சரஸ்வதி இரா.ஆனந்தி, அம்பிகா, திலகபாமா ஆகியோர் கவிதைகள் வாசிக்க தொடர்ந்து விவாதங்களும் நடந்தது.

அதைத் தொடர்ந்து ஞானக் கூத்தன் அவரின் 65 வது பிறந்த நாளை நினைவு கூர்ந்து அன்னாருக்கு பாரதி இலக்கிய சங்கத்தில் அனைவரும் வாழ்த்து தெரிவிக்க ‘ கவிதையின் வாழ்வும் வரலாறும் ‘ என்கிற தலைப்பில் அவரது உரை ஆரம்பமானது.

இன்று இலக்கியத்தின் தொன்மை என்று பேசப் போனோமானால் அது கவிதையைப் பற்றி கவிதையின் தொன்மையை பற்றி பேசுவதாகவே அமையும். கவிதையில் மாற்றங்கள் வந்து விட்டதாக அனைவரும் சொல்லுகின்றனர்.உண்மையில் கவிதை எந்த வித மாற்ரமும் அடையவில்லை. தொன்று தொட்டு அதே நிலையே நீடித்து வருகிறது.புத்தகத்தை படிப்பவர்கள் இருகிறார்களோ இல்லையோ மதிக்கிறார்கள் அதை நாம் வரவேற்போம் என்றார்.

புதுக்கவிதைகளில் மாற்றங்கள் வந்த போது மணிக்கொடி எழுத்தாளர்களின் பங்கு பற்றியும் வானம் பாடி எழுத்தாளர்களின் பங்கு பற்றியும், தமிழ் பேராசிரியர்களின் நிலை பற்ரியும் விரிவாக பேசினார்.கவிதை எப்படி பார்க்கப் படவேண்டும். எதைக் கொண்டு மதிப்பிட வேண்டும் என்றும் பேசினார் அதற்கு மேற்கோள்களாக பிச்சமூர்த்தி, மணி ஆத்மாநாம் போன்றோரது கவிதைகளை வாசித்து, விமரிசித்து பேசினார்.கவிதை பற்றி கற்றுக் கொள்பவர்களுக்கு பயன் தரக் கூடிய விசயங்களையும் தன் உரையில் பகிர்ந்து கொண்டார். கவிதை பற்றியதான , கவிதைக்கான நல்ல ஒரு சந்திப்பாக இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது..

***

mahend-2k@eth.net

Series Navigation

சிவகாசி

சிவகாசி