பாரதியின் நினைவுநாள் செப் 11 – பாரதி

This entry is part [part not set] of 34 in the series 20080911_Issue

ரஜித்



பதினோறே வயதுதான்
அந்தப் பாலகவிக்குக் கிடைத்தது
‘பாரதி’ பட்டம்

பனிரெண்டு வயதில்
பண்டிதர்க்கும்¢ பாவலர்க்கும்
இவன்தான் தமிழ்ப் பட்டறை

எட்டயபுரத்தில் நடந்தது
ஓர் எட்டாம் அதிசயம்
தணல்மலை அங்குதான்
தமிழ் கக்கியது

சுதேசிகளுக்குச்
சூடேற்றியது ‘சுதேசமித்திரன்’
இரத்தம் ஏற்றியது
‘இந்தியா’ பத்திரிக்கை
பட்டிதொட்டிகளை இவன் பாடல்
தட்டியெழுப்பியது

முப்பது ஆண்டுகளில்
இவன் தமிழ்
முத்துக்குளித்தது சிலசமயம்
தீக்குளித்தது பலசமயம்

இறுதியில்
யானையுருவிலே
இவன் இறுதி யாத்திரை
வல்லிக்கேணியில் நடந்தது நெஞ்சில்
கொள்ளித்தீயோ எரிந்தது

அந்த யானைக்கு
தள்ளியபின்தான் தெரிந்தது
அவன் பாரதியென்று
அது அழுதது பின் தொழுதது

செப்டம்பர் 11 1921
உலகெங்கும் விதை தௌ¤த்துவிட்டு
உலர்ந்து சாய்ந்தான் பாரதி


rajid_ahamed@yahoo.com.sg

Series Navigation

ரஜித்

ரஜித்