பல பருப்பு கார கூட்டு

This entry is part [part not set] of 31 in the series 20020217_Issue


தேவையான பொருட்கள்

1/2 கோப்பை கடலைப்பருப்பு

1/2 கோப்பை பாசிப்பருப்பு

1/2 கோப்பை துவரம்பருப்பு

1/2 கோப்பை உளுந்தம்பருப்பு

1 தேக்கரண்டி மஞ்சள் பொடி

உப்பு தேவைக்கேற்ப

10 அல்லது 12 காய்ந்த சிவப்பு மிளகாய்கள்

10 பல் பூண்டு

1 தக்காளி

1 வெங்காயம் தூளாக நறுக்கியது

1 பிரியாணி இலை

கொத்துமல்லி சிறிதளவு நறுக்கியது

சிறிதளவு எண்ணெய்

செய்முறை

எல்லா பருப்பையும் இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் ஒரு பிரஷர் குக்கரில், உப்பு, மஞ்சள் பொடி போட்டு வேகவைத்துக்கொள்ளவும்.

சிவப்பு மிளகாயை எண்ணெயில் போட்டு வறுத்து பூண்டுப்பற்களுடன் ஒரு மிக்ஸியில் வைத்து அரைத்துக்கொள்ளவும். இந்த கலவையை வேகவைத்த பருப்புடன் சேர்த்துக்கொள்ளவும்.

எண்ணெயை காயவைத்து, அத்துடன் பிரியாணி இலையையும் வெங்காயத்தையும் சேர்த்து, அத்துடன் தக்காளியை சேர்த்து வதக்கவும். இந்த வதக்கலை பருப்புடன் சேர்த்து, பச்சை கொத்துமல்லி இலைகளை மேலே தூவி சப்பாத்தியுடன் பறிமாறவும்.

Series Navigation