பரிமளத்திற்குப் பதில்மடல்

This entry is part [part not set] of 41 in the series 20050415_Issue

விஸ்வாமித்ரா


அண்ணாவுக்கும், ஈவேராவுக்கும் பரிந்து, அப்படியே ஈவேராவின் அவமரியாதைத்

திருமணத்துக்கும் சப்பைக்கட்டு கட்டி நண்பர் பரிமளம் எழுதியுள்ள மடலைக் கண்டு

சிரிப்புதான் வருகிறது.

முதலில் இந்தத் திருமணத்தை அண்ணாவே எதிர்த்தது ஊரறிந்த உண்மை. அது

‘கட்சித்தலைவரின் கொள்கைகளைக் குழி தோண்டிப் புதைத்துவிட்ட செயல்’

என்றே அண்ணா பல மேடைகளில் பேசியிருக்கிறார். ஆனால் பரிமளத்துக்கு

மட்டும் இதில் எந்த முரண்பாட்டையும் காண முடியவில்லை என்றால் அவரின்

‘பகுத்தறிவு’ குறித்தே நமக்கு ஐயம் எழுகிறது.

மணியம்மையார் ஈவேராவிடம், (அண்ணாவின் சொற்படி) ‘பணிவிடை

செய்யவந்த பாவை’. அப்போது அவருக்கு இருபது வயது. கிட்டத்தட்ட ஆறு

வருடங்கள் வெளியுலகுக்கு ‘தந்தை, மகள்’ என்றே ஈவேராவும் மணியம்மையும்

தம்மைக் காட்டிக் கொண்டனர். பின்னர் திடாரென ஒருநாள் பதிவுத்திருமணம்

செய்ய முடிவெடுத்தனர். இதன் பின்னணி விவரங்கள் மற்றும் சில விரசமான தகவல்களை எழுதக்கூசி விட்டுவிடுகிறேன்.தேவைப்பட்டால் ஈவேராவின் சீடர் ஆனைமுத்து அவர்கள் எழுதிய ‘பெரியார் கொள்கைக்குக் குழிதோண்டிய திராவிடர் கழகம்’ என்ற நூலில் தேடிக்

கொள்ளுங்கள்.

சுயமரியாதைத் திருமணம் அரசால் அங்கீகரிக்கப் பட்டது 1968’ல்.

ஈவேராவின் இரண்டாவது திருமணம், ஒருவாரம் நோட்டிஸ் கொடுத்து நடந்த

பதிவுத்திருமணம், நடந்தது 1949’ல். அதற்கு முன்னும் பின்னும் தன் தொண்டர்

பட்டாளத்தில் பலருக்கும் ஈவேராவே சுயமரியாதைத்திருமணம் நடத்தி

வைத்திருக்கிறார். ஆனால் ‘தமிழர்தந்தையார்’ மட்டும் ஏன் பதிவுத்திருமணம்

செய்து கொண்டார் என்பதே அன்றும் இன்றும் கேள்வி.

சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ளவே இந்தப் பதிவுத்திருமணம் என்று அவரை

விட்டுப் பிரிந்து வந்தவர்களே சொல்வது. அப்படி தனக்குப்பின் தன்

வாரிசுக்காக சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ள சுயமரியாதைத்

திருமணக்கொள்கையைக் காற்றில் விட்டது எப்பேர்க்கொத்த முரண்பாடு!

1967 வரை சட்டப்படி செல்லுபடியாகாத சுயமரியாதைத் திருமணத்தைத் தன்

இயக்கத்தைச் சார்ந்த பலருக்கும் செய்துவைத்தது எப்படி ? அவர்கள் சொத்து

எக்கேடாவது கெட்டுப் போகட்டும், என் சொத்து மட்டும் என் கையில் இருக்க

வேண்டும் என்ற எண்ணப்படிதானே அன்று சட்டப்படி செல்லுபடியாகாத சுயமரியாதைத்

திருமணத்தை மற்றவர்களுக்கு, செல்லுபடியாகும் பதிவுத்திருமணத்தை தனக்கு என்று

வகுத்துக் கொண்டார்!

இதுதானா கொள்கைப்பிடிப்பு! ?

அன்புடன்

விஸ்வாமித்ரா

—-

viswamitra12347@rediffmail.com

Series Navigation

விஸ்வாமித்திரா

விஸ்வாமித்திரா