நரேந்திர மோடி
ஒவ்வொரு தனிமனிதருக்கும் சுதந்திர சமுதாயத்தின் ஜனநாயகக்கொள்கை கொடுக்கும் பாதுகாப்பைப் பயன்படுத்திக்கொண்டு குற்றங்களும் பயங்கரவாதமும் ஒன்றுக்கொன்று துணையாக தங்களது பாதிப்பையும் வீச்சையும் விஸ்தரித்துக்கொள்கின்றன. இந்த சுதந்திர சமுதாயங்கள் மற்றவர்களின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் மதிக்காதவர்களையும் கூட தங்களுக்குள் வரவேற்கின்றன. “எந்த ஒரு பாரபட்சமும் இன்றி எல்லோருக்கும் சம உரிமைகளையும் பாதுகாப்பையும் வழங்கும்” ஒரு முற்போக்கான ஜனநாயக சமூகம் உண்மையிலேயே பாதுகாப்பற்றது.
கடந்த இருபதாண்டுகளில், இந்தியா மேலும் மேலும் பயங்கரவாதத்துக்குள் முழுகி வருகிறது. முன்பு வெகுதூரத்தில் வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமேயாக இது இருந்தது. பிறகு பஞ்சாபிலும் பிறகு ஜம்மு காஷ்மீரிலும் பயங்கரவாதம் தலை தூக்கி, இன்று இந்தியாவின் எந்த பகுதியும் பயங்கரவாதத்திலிருந்து தப்ப முடியாது என்ற நிலைக்கு வந்திருக்கிறது. 1993, மார்ச் 12ஆம் தேதி மும்பையில், ஒரு எதிரிநாட்டின் உளவுத்துறையும் தாவூத் இப்ராஹிமின் மா·பியா கும்பலும் இணைந்து தொடர்ச்சியாக குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினார்கள். குஜராத்தில் பலவருடங்களாக குஜராத் போலீஸ் தொடர்ந்து இப்படிப்பட்ட சதித்திட்டங்களை முறியடித்து பல குற்றவாளிகளையும் பயங்கரவாதிகளையும் கைது செய்து வந்திருக்கிறார்கள். கோத்ரா துயரச்சம்பவம் நிகழ்ந்த பின்னால், அக்சர்தாம் கோவிலில் நடந்த பயங்கரவாத தாக்குதல், இந்த மாநிலம் தொடர்ந்து பயங்கரவாதத்தாக்குதலின் குறியாக இருக்கிறது என்பதை பலருக்கும் நிரூபித்திருக்கிறது. பயங்கரவாதத்தை முறியடிக்கவேண்டுமெனில் இந்திய பாதுகாப்புப்படைகள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அவர்களின் முன்னகர்வு நிலைப்பாடு கோரும் இந்த நிலை, அவர்கள் இந்தியாவுக்குள் எந்தெந்த பயங்கரவாதக்குழுக்கள் இருக்கிறார்கள் என்பதைப்பற்றிய அறிவை மட்டுமல்ல, இந்தியாவுக்கு வெளியே இருந்து இந்தியாவுக்குள் பயங்கரவாதச்செயல்களை செய்ய முனையும் குழுக்களைப்பற்றிய அறிவையும் கொண்டிருக்க வேண்டும் என்று கோருகின்றது. எந்த இடங்களில் பயங்கரவாதச்செயல்கள் தோன்ற முடியும் என்பதை மட்டுமல்ல, எந்த இடங்களில் பயங்கரவாதத்துக்கான தார்மீக பொருளாதார ஆதரவும் கிடைக்கிறது என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவேண்டும். உதாரணமாக, பயங்கரவாதிகளின் முக்கிய மையப்புள்ளியாக தாலிபான் இருக்கிறது என்பதும், அவர்கள் பல உதிரி பயங்கரவாதக்குழுக்களுக்கு உதவும் கரங்களாக இருக்கிறார்கள் என்பதும் கவனிக்க வேண்டும். அந்த குழுக்களில் பலவும் காஷ்மீரிலும் உலகெங்கும் பயங்கரவாதச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். இஸ்லாமிய அரசாங்கம் அல்லாத அரசாங்கங்களையும், தாராளவாத இஸ்லாமிய அரசாங்கங்களையும் கவிழ்த்து அங்கு இஸ்லாமிய மத அடிப்படைவாத அரசாங்கங்களை தோற்றுவிக்க முனையும் அல்குவேதா அமைப்பு ஆப்கானிஸ்தானத்திலிருந்து கொண்டு பல பயங்கரவாத அமைப்புகளுக்கு பதுங்கு குழியாக இருக்கிறது என்பதும் எதேச்சையானது அல்ல. அதே போல பாகிஸ்தானும் உலகத்திலேயே ஆபத்தான இடமாக ஆகி வருகிறது. ஏனெனில், அங்கு இருக்கு ஆபத்தான சக்திகளை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பது அந்த அரசாங்கத்துக்குப் புரியவில்லை. அந்த சக்திகளை கட்டுக்குள் வைக்க எந்த ஒரு கொள்கையும்கூட இல்லை. இந்த நாடு அணுசக்தி ஆயுதங்களை வைத்துக்கொண்டு, பயங்கரவாத இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களின் விளைநிலமாக இருந்து கொண்டு, உலகெங்கும் தீமையைப்பரப்பும் ஹெராயினை விநியோகித்துக்கொண்டும் இருக்கிறது. பயங்கரவாதிகளை பயிற்றுவிக்கும் முகாம்களையும் அவர்களை இந்தியாவுக்குள் அனுப்பும் அமைப்புகளையும் கொண்டுள்ள இந்த நாடு, அந்த நாட்டினுள் இந்த பயங்கரவாதிகள் சுதந்திரமாக உலவுகிறார்கள் என்பதையே காட்டுகிறது. இதனால் அந்த நாடு அரசாங்கமும் நாடும் எதிர்கொள்ளும் ஆபத்தை மேலும் வலியுறுத்த முடியாது. மேலும், முக்கியமாக, சமூகத்தை பலவீனப்படுத்தும் இந்த சக்திகள், இந்த அணு ஆயுதம் கொண்ட நாட்டுக்கு கொடுக்கும் ஆபத்தையும் மேலும் வலியுறுத்தி கூற முடியாது.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும், தொலைத்தொடர்பின் வளர்ச்சியும், பயங்கரவாதம் குற்றம், பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றுக்கும் இடையேயான நெருங்கிய தொடர்பை வளர்த்திருக்கின்றன.
பணம், பணப்பட்டுவாடா மூலங்கள், மின்னணு ஆவணங்கள் ஆகியவை இன்று உலகெங்கும் சில வினாடிகளுக்குள் அனுப்ப ஏதுவானவையாக இருக்கின்றன. மேலும், குற்றத்தை வெளிக்காட்டும் ஆவணங்களும் மிக எளிதாக அழித்துவிடக்கூடியவையாக இருக்கின்றன.
கறுப்பு பணத்தை வெள்ளைப்பணமாக்கும் வேலைகள் ஒருவழிப்பாதை அல்ல. இது ஒரு தீய சுழலாக, ஏராளமான பணம் நாட்டிலிருந்து ஒரு வழியே வெளியே அனுப்பப்பட்டு, சில வினாடிகளுக்குள் மறுவழியே மறுவடிவத்தில் உள்ளே வருகின்றன. மா·பியா கும்பல்கள் இன்று ஏராளமான அசையா சொத்துக்களை நிலங்களை வீடுகளை வாங்குவதை முற்றுமுடிவாக வைத்திருக்கின்றன. இஇதனால்இப்படிப்பட்ட மா·பியா கும்பல்கள் சட்டப்பூர்வமான வழிமுறைகள் மூலமாகவே அரசாங்கத்தையும் சமூகத்தையும் பாதிக்க முடியும் அளவுக்கு வலிமை பெறுகின்றன.
வளர்ந்து வரும் நாடுகளும், வளர்ந்து வரும் ஜனநாயகங்களும், இந்த நாடுகளின் அரசாங்க அமைப்புகள் பலவீனமாகவையாக இருப்பதும், இந்த அரசாங்க அமைப்புகள் இன்னும் உறுதியாக கட்டப்படவேண்டியது தேவையாக இருப்பதாலும், இன்று எல்லை கடந்த மா·பியா கும்பல்களுக்கு ஒரு வசதியாகிவிட்டன. இந்த மா·பியா கும்பல்களின் துல்லியமான அணுகுமுறையை எதிர்கொள்ளக்கூடிய வலிமை இந்த நாடுகளின் குற்றவியல் அமைப்புகளுக்கு இல்லை. இந்த நாடுகள் அயல்நாட்டு மூலதனத்தை மிகவும் எதிர்பார்ப்பதாலும் குற்றவாளிகளின் பணங்கள் இந்த நாடுகளுக்குள் வருவதன் நீண்டகால பாதிப்புகளை இஇந்த நாடுகள் அதிகம் ஆராய்வதில்லை. குற்ற மா·பியா குழுக்களும் இந்த நாடுகளை விரும்புவதன் காரணம், குறைந்த ஆபத்துக்களே. இந்த குற்ற மா·பியா கைகளில் இருக்கும் ஏராளமான பணம், தங்களுக்கு எதிராக இருக்கும் போட்டியை வன்முறை மூலமாகவும் பயமுறுத்தல் மூலமாகவும் தீர்த்துக்கட்டவும் உபயோகப்படுகிறது. இதன் மூலமாக குற்றப் பணம் சட்டப்பூர்வமானதாக ஆக்கப்படுகிறது. இவ்வாறு குற்ற மா·பியா குழுக்களை அனுமதிப்பது, அந்த நாடுகளுக்கும், எதிர்காலத்தில் உலக நாடுகளுக்கும், அந்த நாடுகளின் ஸ்திரத்தன்மைக்கும் ஆபத்தானது.
பன்னாட்டு வியாபார நிறுவனங்கள் போலவே இந்த குற்ற மா·பியாக்களும் தங்களது வியாபார அமைப்புக்களை பல வழிகளில் பல துறைகளில் விஸ்தரித்துக்கொண்டே போகின்றன. இது மிகவும் ஆபத்தானது.
பாரம்பரிய தொழில்களை கைக்கொண்டபோதிலும், இப்படிப்பட்ட குற்றம் புரியும் மா·பியாக்கள் புதுப்புது வழிகளில் போலீஸை ஏமாற்றி விளிம்பு நிலை பொருளாதார முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதன் பலன்கள் ஏராளமானவை. பல வியாபார வழிகளில் பணம் பண்ணி, அது எங்கே யாருக்குப் போகிறது என்று புலன் விசாரணை வரும் முன்பேயே, பணத்தை தீய வழிகளில் ஈடுபடுத்தி விடுகிறார்கள். யாரும் இது குற்றம் என்று உணர்வதற்கு முன்னர், இந்த விளிம்புநிலை பொருளாதார முயற்சிகளில் பணம் ஈட்டப்பட்டு அது பல சுற்றுகளுக்குச் சென்றுவிடும்.
இறுதியாக, இப்படிப்பட்ட வேலைகள் அரசியல் அதிகாரத்தையும் பெற்றுத்தருகின்றன. குற்ற மா·பியக்கள் தங்களுக்கு அரசியல் அதிகாரம் வந்தால் வேண்டாமென்று சொன்னதில்லை. நவீன சமுதாயங்களுக்கு இப்படி குற்ற மா·பியாக்கள் பெறும் அரசியல் அதிகாரம் மிகவும் ஆபத்தானது. பொருளாதார குற்றங்களுக்காக கைது செய்யப்படும் குற்றவாளிகளை தந்திரம் மிக்கவர்கள் அல்லது தைரியமானவர்கள் என்று பொதுமக்கள் பார்க்கிறார்கள். குற்றம் செய்தவரைப்பற்றிய விமர்சனம் இல்லாமல், அவர் நீதியிலிருந்து தப்பிக்கமுடியாமல் மாட்டிக் கொண்டானே என்று தான் விமர்சனம் வருகிறது. இப்படிப்பட்ட விமர்சனங்கள், சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் அழிவுச்சிந்தனையின் விளைவே. இப்படிப்பட்ட அணுகுமுறை மாற்றப்படவேண்டும். இந்த அணுகுமுறை குற்றங்களை விட தீயது.
இவ்வாறு குற்றங்கள் செய்வதன் மூலம் பெறப்பட்ட சட்டத்துக்கு புறம்பான பணம் (கருப்புப்பணம்) மேலும் குற்றங்கள் செய்யவே பயன்படுகிறது. இது மேலும் குற்றவாளி மா·பியாக்கள் உலகளாவிய முறையில் குற்றங்களைத் தொடர்வதையுமே குறிக்கிறது. பொதுமக்கள் பாதுகாப்பும், தேசிய பாதுகாப்பும் இதனால் அழிவதையே இதன் விளைவாக பார்க்கவேண்டும். இதன் முக்கிய பயனாளர்கள் பயங்கரவாதக் குழுக்களே.
இன்னொரு பிரபலமான தொழில், போதைமருந்து பயங்கரவாதம் (narco-terrorism). இது பயங்கரவாதத்துக்கும் போதைமருந்துக்கும் இருக்கும் உறவைக் குறிக்கிறது.
பயங்கரவாதத்தை ஆதரிப்பது மிகவும் விலை அதிகமான, பணம் செலவழியும் வேலை. கொலை செய்யவும், ஆள் கடத்தல் செய்யவும், ரயிலில் குண்டு வைப்பது போன்ற வேலைகளைச் செய்ய நிறையப்பணம் தேவை. இது சட்டத்துக்குப் புறம்பான, அதிகாரப்பூர்வமற்ற வழிகளின் மூலம் வருகிறது. வேறெந்த மக்கள் உபயோகிக்கும் பொருளை விட மிக விலையுயர்ந்தது போதைப்பொருள்களே.
பயங்கரவாதம் தனது வேலைகளைச் செய்ய ஏராளமான பணத்தை வேண்டுகிறது. அதிகாரப்பூர்வமான வழிகளில் பணம் பெறுவதற்கு கடினமாக இருப்பதால், போதைமருந்து கடத்தும் வேலைகள் மூலமும் பணத்தை சேர்க்கிறது. உலக வர்த்தக மையங்கள் மீது நடந்த தாக்குதலை அடுத்து ஐக்கிய நாடுகள் சபை, செப்டம்பர் 12, 2001இல் பயங்கரவாதத்தையும், பயங்கரவாதத்துக்கு துணை போகும் அமைப்புக்களையும் அழிக்க ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. செம்டம்பர் 20 ஆம் தேதி, பயங்கரவாதத்துக்கு துணை போகும் நாடுகளை கண்டித்தும் ஒரு தீர்மானம் (No.1373 condemning states sponsors terrorism) நிறைவேற்றியது.
கடந்த காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை பலமுறை அரசாங்கங்கள் ஆதரிக்கும் பயங்கரவாதத்தினை எதிர்த்து தீர்மானங்கள் போட்டிருக்கின்றது. பாகிஸ்தான் செய்யும் மறைமுகப்போரின் முக்கிய அங்கமே இப்படிப்பட்ட பயங்கரவாதம்தான். ஆனால், 1373க்கு முன்னர் இது போன்ற கடுமையான வார்த்தைகள் அடங்கிய தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. இந்தியாவுக்குள் பாகிஸ்தான் செய்யும் தொடர்ந்த பயங்கரவாதங்களையும், இந்தியாவை நிலைகுலைக்க செய்யும் அதன் வேலைகளையும் பட்டியலிட்டு, உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் பிரபலப்படுத்தி அந்த தீர்மானத்தின் படி பாகிஸ்தானை “பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடாக” அறிவித்திருக்க வேண்டும்.
1950இலிருந்து பாகிஸ்தான் இந்தியாவின் வட கிழக்கில் தீவிரவாதத்தையும் பிரிவினைச்சக்திகளையும் ஆதரித்து வந்திருக்கிறது. பஞ்சாபில் 1981இலிருந்து பிரிவினைச்சக்திகளை ஆதரித்து வந்திருக்கிறது. 1989இலிருந்து ஜம்மு காஷ்மீரில் பிரிவினைச்சக்திகளை ஆதரித்துவந்திருக்கிறது. 1993இலிருந்து உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதத்தை பின்லாடன் ஆதரவு பயங்கரவாத அமைப்புகள் மூலம் உருவாக்கி வந்திருக்கிறது. தாவூத் இப்ராஹிம் போன்ற பன்னாட்டு குற்ற மா·பியா குழுக்களை ஆதரித்து 1993இல் நடந்த பொருளாதார பயங்கரவாதம் போன்றவற்றை செயல்படுத்துதி வந்திருக்கிறது.
JKLF (Jammu & Kashmir Liberation Front)
ULFA (United Liberation Front of Assam)
KLF (Khalistan Liberation Front)
KCF (Khalistan Commando Force)
HUM (Harkat-ul-Mujahideen)
LeT (Lashkar-e-Toiba)
CIRA (Continuity Irish Republican Army)
UDFB (United Democratic Front of Bodoland)
UPDS (United Peoples Democratic Solidarity)
ACF (Adivasi Cobra Force)
PWG (People’s War Group)
LTTE (Liberation Tigers Tamil Elam)
விடுதலை, ஒற்றுமை, கொமோண்டோ, ·போர்ஸ், ஐக்கிய போன்ற வார்த்தைகளை கொண்டு அமைக்கப்படும் தீவிரவாதக்குழுக்களுக்கு, ஆதார சுருதி வன்முறையும் மனித உரிமைகள் பற்றி அலட்சியமுமே என்பதையும், அவைகளுக்கு அரசியல் நோக்கங்களே முக்கியமே அன்றி மனித உரிமைகள் அல்ல என்பதையும் காணலாம்.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவேண்டிய அரசாங்க அமைப்புகள் இத்தகைய சவாலை எதிர்கொண்டே ஆகவேண்டும். வெறும் வார்த்தைகள் போதுமானவை அல்ல. நமது பாதுகாப்பில் மிகவும் பலவீனமான பகுதி, ஆழ்ந்து செயல்படும் உளவுத்துறைதான். சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசாங்கத்தின் பொறுப்பில் வருகிறது. மாநில அரசாங்கமே என்ன நடக்கப்போகிறது என்பதை எதிர்பார்த்து அதனைத் தடுக்க முனையவேண்டும். துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான மாநில அரசாங்கங்களில் உளவுத்துறை மிகவும் பலவீனமாக இருக்கிறது. எல்லாவற்றையும் ரகசியம் என்று அறிவித்திருப்பதை நீக்கி, இந்த உளவுத்துறைகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதைப்பற்றிய பொது விவாதம் நடைபெற வேண்டும். பணிக்கு உண்மையிலேயே அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட அதிகாரிகளை உருவாக்க அனைத்திந்திய அமைப்பு ஒன்றை, இந்தியன் இண்டெலிஜென்ஸ் சர்வீஸ் போன்ற ஒன்றை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன். ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ், ஐ.எ·ப்.எஸ் போன்றே இந்த சர்வீசும் இருக்கவேண்டும் என்றும் விரும்புகிறேன். எந்த ஒரு மாநிலத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் தேவைப்பட்டால் அனைத்திந்திய சர்வீஸில் பணியாற்ற முடியும் வண்ணம் இருக்க வேண்டும். உறுதியான உளவுத்துறையை அப்போதுதான் உருவாக்க முடியும்.
இன்னொரு மிகவும் தேவைப்படும் விஷயம், நமது சட்டம் ஒழுங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிஇருக்கும் துறைகளுக்கு சட்டரீதியான பாதுகாப்பு தேவை. பழங்காலத்திய 303 ரக ரைபில்களை விட்டுவிட்டு இப்போது காலத்துக்கு ஏற்ற ஏகே56 ரைபிள்களை கொடுத்திருக்கிறோம். இது பயங்கரவாதிகளைக் கொல்லும் ஆயுதம். ஆனால், அப்படிப்பட்ட சக்திவாய்ந்த ஆயுதங்களை கொடுத்திருக்கும் நாம், நமது சட்டம் ஒழுங்கு துறைகளுக்குத் தேவையான சட்டங்களை கொடுக்கவில்லை. பழங்காலத்திய சட்டங்களைக் கொண்டு நவீன காலத்திய பயங்கரவாதங்களை அழிக்க முனைகிறோம். போடா போன்ற ஒரு உருப்படியான சட்டம் போடப்பட்டால், எந்த காரணமும் இல்லாமல் அந்த சட்டங்கள் நீக்கப்படுகின்றன. ஏன் நீக்கப்பட்டன என்று யூகிக்கத்தான் முடிகிறது. செப்டம்பர்11க்குப் பிறகு அமெரிக்காவிலும் இது போன்ற கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாட்டினுள்ளே நுழையும் சட்டங்களை கடுமையாக்கியது மட்டுமல்ல, புதிய “ஹோம்லேண்ட் செக்யூரிட்டி”ஐயும் உருவாக்கியிருக்கிறார்கள். அதே போன்ற விஷயங்கள் இந்தியாவில் நடந்தாலொழிய பயங்கரவாதத்தை எதிர்கொள்வது கடினம்.
அடுத்து, இந்தியாவின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இருக்க வேண்டியது அவசியம். நாடு எந்த எந்த முறைகளில் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இருக்கிறது என்பது பற்றிய அறிவு பரப்பப்பட வேண்டும். எந்த அமைப்புகள் இப்படி ஜனநாயகத்தை உபயோகப்படுத்திக்கொண்டு பயங்கரவாதத்தை வளர்க்கின்றன என்பது பற்றிய அறிவும் மக்களிடம் இருக்க வேண்டும். மேற்கில், இப்படிப்பட்ட விஷயங்கள் ஆராயப்பட்டு அவைகளை எதிர்கொள்ள திட்டங்கள் வகுக்கப்பட்டு, ஊடகங்களும் இதனை ஆக்கப்பூர்வமான வழிகளில் மக்களிடம் கொண்டு சென்று பயங்கரவாதத்தைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் வளர்த்தெடுக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு ஒருங்கிணைப்பு மக்களிடமும், அரசாங்கத்திடமும், ஊடகங்களிடமும் இந்த நாட்டில் உருவானால் மிகச் சிறப்பானதாக இருக்கும்!
முற்றும்
( நரேந்திர மோடி குஜராத் மானில முதலமைச்சர் )
- அறிவிப்பு
- மொகித்தே – நாஞ்சில் நாடன் – தொகுப்பு – மும்பாய் சிறுகதைகள்
- கலை இலக்கியம் எதற்காக?
- புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (21-43)
- அய்யனார்
- வணக்கம் துயரமே – 1
- இங்க்புளூ சாரியும், மிட்டாய் ரோஸ் பனியனும்
- தந்தையாய் உணர்தல்
- புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
- மடியில் நெருப்பு – 1
- வலி
- புதுப்பட்டிச் செப்பேடு
- பெரியபுராணம் – 102 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- இஸ்ரேல்: எஸ். வி. ராஜதுரை கட்டுரை : பொய்களும் பாதி உண்மைகளும்
- வந்தே மாதரம்- தவறான நிலையில் பாரதிய ஜனதா கட்சி
- தீவிரவாதத்திற்கான தீர்வு!
- மூவேந்தரும் முக்குலத்தோரும் – சில விளக்கங்களுக்குப் பதில்
- திரும்பவும் வெண்மணிச் சோகம் எனும் பழங்கதை
- கடித இலக்கியம் – 20
- மார்க்க வழி நடந்த மௌலானா முகமது அலி
- விடுதலைக்கு முன் புதுக்கோட்டை
- குறைபட்ட என் பதில்கள்
- நியூ ஜெர்சி திரைப்படவிழா – தேதி : செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 6 மணி வரை
- இந்த இஸ்லாமிய இளைஞரின் பாதம் பணிந்து…
- ஜோகிர்லதா கிரிஜா அவர்களது தொடர்கதை
- துவக்கு இலக்கிய அமைப்பு மாற்று கவிதையிதழோடு இணைந்து நடத்திய மாபெரும் கவிதைப் போட்டி முடிவு
- ஜிகாத் மார்க்ஸீயத்திலிருந்து வந்ததா?
- Painting Exhibition of V.P.Vasuhan
- கடிதம்
- பாலஸ்தீனத்தை முன்வைத்து பின்நவீனத்துவ பெருங்கதையாடலாக ஒரு ஜிகாத்
- பயங்கரவாதம் – பல தலையுள்ள பாம்பு – தேவை பலமுனை யுத்த தந்திரம், ஆயத்தம்
- மேமன்கவியின் நான்கு கவிதைகள்
- கையடக்க ஓவியங்களில் ‘கீத கோவிந்தம்’
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 13. மொழி
- வேட்டையாடு விளையாடு
- புதுச்சேரிப் பழமொழிகள் – அடையாளப்படுத்துதல்
- பூட்டானிலிருந்து யாத்திரிகர்களும், மந்திரவாதிகளும், கோப்பையும்
- கீதாஞ்சலி (88) பாழடைந்த ஆலயம்!
- பிறைசூடிய ஹவ்வா
- நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு! அத்தியாயம் பத்து: பண்டைய தமிழர்களின் ஆலய, துறைமுக, கோ நகரங்கள்!
- யாரைத்தான் நம்புவதோ தோழா !